January 12, 2010

கலெக்ஷன் டல்லடிக்குதே??!!

வேட்டைக்காரன் பாடல்களை முதன்முறையாக சன் டிவியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். கரிகாலன், சின்னத் தாமரை பாடல்களில் விஜயின் கெட்டப்பை பார்த்து கொஞ்சம் ஜெர்க்கானது உண்மை. பார்த்துக்கொண்டிருந்த அம்மா சொன்னது "இந்த கெட்டப்பெல்லாம் பார்த்து யாரும் படம் பார்க்க வரமாட்டாங்கன்னு பயந்து தான் இவ்வளவு நாள் கழிச்சு டிவில போடறானோ?"
**********

சட்டக் கல்லூரி மாணவன் அடிவாங்கிய சம்பவத்தின் போது வேடிக்கை பார்த்தார்கள் என வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்த தமிழக மீடியாக்கள் ஒரு எஸ்.ஐ உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது மற்றவர்கள் காட்டிய அலட்சியத்தை கண்டுக்கவேயில்லை. அது சரி பொங்கலுக்கு நமீதாவையோ தமன்னாவையோ பேட்டி எடுக்கனுமில்ல. காவல் துறை மந்திரி ஒரு கண்டன அறிக்கையோ/துக்கம் தூக்கலாக இருக்கிறதென்ற அறிக்கையோ கூட விடவில்லை. அது சரி முறுக்கிக்கொ(ல்லு)ள்ளும் மூத்தவரை சமாதானப் படுத்துவாரா இல்லை பெண் சிங்கம் ப்ரிவ்யூ பார்ப்பாரா. அவருக்கு ஆயிரெத்தெட்டு வேலை. 5 லட்சமோ பத்து லட்சமோ அரசு நிதியில் இருந்து கொடுக்கலாம். இறந்தவர் குடும்பம் அதை கையில் வாங்குவதற்குள் செத்தவருக்கு பத்தாவது வருச திவசம் வந்துடும். அப்புறம் அந்த குற்றவாளி பெண் எஸ்.ஐ பாரதி கண்ட புதுமை பெண். வாழ்க பெண்ணியம்.
***********

ரொம்ப நாள் கழித்து கிண்டி சிறுவர் பூங்காவிற்கு ஜூனியருடன் சென்றிருந்தோம். அவுத்துவுட்ட குதிரை மாதிரி ஒரே ஒட்டம். பின்னால் ஓடி நாக்குத் தள்ளிவிட்டது (மதியம் ரத்னா கஃபேவில் மீல்ஸ் முடித்தவுடனே). மான் இருந்த இடத்துக்கு சென்று "மான் தாப்பித்தியா (சாப்பிட்டியா)". வான்கோழியிடம் "ஆச்டிச் மந்து தாப்பித்தியா?" (ஆஸ்ட்ரிச் மருந்து சாப்பிட்டியா?). நீர் நாய் இருந்த இடத்தில் "ம்மா நாய் ஜோஜோ". ஆமாண்டா ஜோ குளிக்கிது என்றேன். "ம்மா தோப்(சோப்) காணோம்" என்றான் இரண்டு கையையும் விரித்து காமித்தான். Felt great. நிறைய குழந்தைகள் விளையாடுமிடங்கள் சரியான பராமரிப்பு இல்லாத உடைந்த நிலையில் இருக்கிறது. கவனித்தால் புண்ணியமாய் போகும்.
***********

அண்ணாநகர் பக்கம் செல்வோர் பார்க் ரோடில் இருக்கும் சிவா விஷ்ணு கோவிலுக்கு எதிரே இருக்கும் பானி பூரி/ மசாலா பூரி ட்ரை பண்ணுங்கள். பானி பூரி செம ஹாட். காரம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கே மூக்கிலும் நாக்கிலும் தண்ணி கொட்டுது. தயிர்/பருப்பு//நெய் வகையறாக்கள் மசாலா பூரி சாப்பிடலாம். கட்லெட்/சமோசா/பூரி போட்டு என நிறைய ஆப்சன்கள். பேல் பூரியும் கிடைக்கிறது. இவர்களுடைய ப்ராஞ் வண்டி SBOA ஸ்கூல் அருகிலிருக்கும் ICICI பேங்க் வாசலில். டோண்ட் மிஸ்.
***********

போன வருடத்தைவிட இந்த வருடத்துக்கான பொங்கல் கலெக்ஷன் கொஞ்சம் டல்லடிக்குது. தம்பி காசிற்கு பதிலாக சல்வார் எடுத்துக்கொடுத்தது கலெக்ஷனை பெருவாரியாக குறைத்துவிட்டது. மற்ற அண்ணன்மார்களும் மணியார்டர், பெரியம்மாவிடம் குடுத்தனுபுதல் என செய்ததால் அப்பிடி இப்பிடி குறைஞ்சிருச்சு. நேரில் பார்த்திருந்தால் கழுத்தில் கத்தி வைத்து வசூல் செய்யலாம். ஆளுக்கொரு மூலையில். என்னத்த செய்ய? அடுத்த வருஷம் சரிபண்ணிடனும்.

அனைவருக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்.

34 comments:

sathishsangkavi.blogspot.com said...

என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

Raju said...

பொங்கல் வாழ்த்துக்கள்..எப்புடி கழுத்துல கத்தி வைக்காமயே சொல்லிட்டோம்ல.

pudugaithendral said...

போன வருடத்தைவிட இந்த வருடத்துக்கான பொங்கல் கலெக்ஷன் கொஞ்சம் டல்லடிக்குது. //

same blood எனக்கு இருப்பது ஒரே தம்பிதான். சாரும் பவளம், 1 டச் கோல்ட் செட்னு வாங்கி கொடுத்திட்டாரு. கலெக்‌ஷன் செம டல்.’

வந்தா கழுத்தில கத்திதான்.

பொங்கல் வாழ்த்துக்கள்

Anonymous said...

தீபாவளிக்குதான கலெக்ஷன் இருக்கு பொதுவா!!! உங்க வீட்ல பொங்கலுக்கா

pudugaithendral said...

தீபாவளிக்குதான கலெக்ஷன் இருக்கு பொதுவா!!! உங்க வீட்ல பொங்கலுக்கா//

விவரம் தெரியாதா சின்ன அம்மிணி,

தீபாவளி, கார்த்திகை, பொங்கல் இது 3ம் கலெக்‌ஷன் டயம் :))))

நர்சிம் said...

பொங்கல் வாழ்த்துக்கள்

Vidhya Chandrasekaran said...

நன்றி சங்கவி.
நன்றி ராஜூ.

நன்றி கலா அக்கா (என் தம்பியும் கோல்ட் ஆப்ஃர் பண்ணினான். நாந்தான் வேண்டாம்னு சல்வார்
ஆட்டய போட்டுட்டேன்)

நன்றி அம்மிணி (பொங்கலுக்கு மட்டும்தான் பெருசா தேறும்:)))

நன்றி நர்சிம்.

மணிகண்டன் said...

நைஸ் துணுக்ஸ். ஹேப்பி பொங்கல்.

R.Gopi said...

//"இந்த கெட்டப்பெல்லாம் பார்த்து யாரும் படம் பார்க்க வரமாட்டாங்கன்னு பயந்து தான் இவ்வளவு நாள் கழிச்சு டிவில போடறானோ?"//

நீங்க மட்டும்னு தான் நெனச்சேன்..... இப்போ அம்மாவுமா.... சரி சரி நடத்துங்க......

//5 லட்சமோ பத்து லட்சமோ அரசு நிதியில் இருந்து கொடுக்கலாம். இறந்தவர் குடும்பம் அதை கையில் வாங்குவதற்குள் செத்தவருக்கு பத்தாவது வருச திவசம் வந்துடும்.//

நிதர்சனமான உண்மை.... ஆனாலும், வெட்கப்பட வைக்கிறது..... எங்கே போச்சு மனிதாபிமானம் என்று கேட்க தோன்றுகிறது....

//ரொம்ப நாள் கழித்து கிண்டி சிறுவர் பூங்காவிற்கு ஜூனியருடன் சென்றிருந்தோம். அவுத்துவுட்ட குதிரை மாதிரி ஒரே ஒட்டம். பின்னால் ஓடி நாக்குத் தள்ளிவிட்டது//

பிள்ளையை கூட்டிக்கொண்டு போனோம்... நாமும் மழலைகள் ஆனோம்..... அவர்கள் அவற்றை கண்டு ரசிக்க, நாம் அதை கண்டு ரசிக்க, காண கண் கோடி வேண்டும்.... கூடவே நல்ல ரசனையும்....

//நேரில் பார்த்திருந்தால் கழுத்தில் கத்தி வைத்து வசூல் செய்யலாம். ஆளுக்கொரு மூலையில். என்னத்த செய்ய? அடுத்த வருஷம் சரிபண்ணிடனும்.//

யப்பா... பெரிய டெர்ரர்...... கூடவே என்னா வில்லி (!!!) தனம்.......

//அனைவருக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்.//

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் மற்ற தோழமைகளுக்கு என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... என் பொங்கல் வாழ்த்து இதோ இங்கே.... ஒரு கவிதையாக.....

பொங்கலோ பொங்கல்
http://jokkiri.blogspot.com/2010/01/blog-post.html

பின்னோக்கி said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கழுத்துல கத்தி வெச்சு வசூலா ? பாவங்க உங்க அண்ணனுங்க.

ஹுஸைனம்மா said...

//மற்ற அண்ணன்மார்களும் மணியார்டர், பெரியம்மாவிடம் குடுத்தனுபுதல் என செய்ததால் அப்பிடி இப்பிடி குறைஞ்சிருச்சு. //

//பவளம், 1 டச் கோல்ட் செட்னு வாங்கி கொடுத்திட்டாரு.//

//தீபாவளிக்குதான கலெக்ஷன் இருக்கு பொதுவா!!!//

ஹூம்..ஹூம்...ஹூம்... (பெருமூச்சு!!) :-0

ஹும், என்னையும் அக்கா, லாத்தான்னு பதிவுலகத்துல கூப்பிடற (கூப்பிட மட்டும் செய்யற) அண்ணந்தம்பிகளும் இருக்காங்களே!!??

Raghu said...

ஒரு மினி 'கொட்டிக்க‌லாம் வாங்க‌' எழுதிட்டீங்க‌, பொங்க‌ல் போன‌ஸா?

பொங்க‌ல் வாழ்த்துக்க‌ள்!

விக்னேஷ்வரி said...

அம்மா கமெண்ட்டு சூப்பரு.

வாழ்க பெண்ணியம்.//
:(
முழு மேட்டர் என்ன வித்யா...

ஜூனியருக்கு கிரேட் டைம்ஸ். வளர்வதைப் பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது.

அடுத்த முறை சென்னை வரும் போது அவசியம் கையேந்தி பவன்களுக்கு கூட்டிட்டுப் போங்க வித்யா.

ஹாஹாஹா. எனக்கு இங்கே லோஹ்ரி கலெக்ஷன். :)

குக்கர் பொங்கல் வாழ்த்துக்கள் வித்யா. :)

Rajalakshmi Pakkirisamy said...

பொங்கல் வாழ்த்துககள்.

adanga matreenga neenga!

Chitra said...

"இந்த கெட்டப்பெல்லாம் பார்த்து யாரும் படம் பார்க்க வரமாட்டாங்கன்னு பயந்து தான் இவ்வளவு நாள் கழிச்சு டிவில போடறானோ?" ............ha,ha,ha,........ super comment.

S.A. நவாஸுதீன் said...

///"இந்த கெட்டப்பெல்லாம் பார்த்து யாரும் படம் பார்க்க வரமாட்டாங்கன்னு பயந்து தான் இவ்வளவு நாள் கழிச்சு டிவில போடறானோ?"///

செம டைமிங். ஹா ஹா ஹா

---------------------------------

அதைவிட முக்கியமான வேலை திருட்டு விசிடியை ஒழிக்கனும். பெண்சிங்கம் அதுல வந்துரக்கூடாதெ.

----------------------------------

இனிய பொங்கல்/தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கலையரசன் said...

//பானி பூரி/ மசாலா பூரி//

இப்டியெல்லாம் எழுதி.. இங்க இருக்குறவங்க வயிதெரிச்சலை கிளப்பாதீங்க!!

அப்படியே உங்களுக்கும்.. பொங்கல், இட்லி, வடை, சட்னி, சாம்பார் வாழ்த்துக்கள்!!!
:-)

Unknown said...

//அண்ணாநகர் பக்கம் செல்வோர் பார்க் ரோடில் இருக்கும் சிவா விஷ்ணு கோவிலுக்கு எதிரே இருக்கும் பானி பூரி/ மசாலா பூரி ட்ரை பண்ணுங்கள்//

noted

- ஹாட் பானிப்பூரி ரசிகன்

பொங்கல் வாழ்த்துகள்

pudugaithendral said...

ஹும், என்னையும் அக்கா, லாத்தான்னு பதிவுலகத்துல கூப்பிடற (கூப்பிட மட்டும் செய்யற) அண்ணந்தம்பிகளும் இருக்காங்களே!!??//

ஆஹா அப்பிடில்லாம் வருத்தப்படக்கூடாது. காணும் பொங்கலுக்குள்ளாவது உடன் பிறப்புக்க சீர் கொடுத்திடுவாங்க

ஹுஸைனம்மா said...

//புதுகைத் தென்றல said:

ஹும், என்னையும் அக்கா, லாத்தான்னு பதிவுலகத்துல கூப்பிடற (கூப்பிட மட்டும் செய்யற) அண்ணந்தம்பிகளும் இருக்காங்களே!!??//

ஆஹா அப்பிடில்லாம் வருத்தப்படக்கூடாது. காணும் பொங்கலுக்குள்ளாவது உடன் பிறப்புக்க சீர் கொடுத்திடுவாங்க //

காணும் பொங்கல்னா, மாட்டுப் பொங்கலையா சொல்றீங்க? ஆஹா, மை டியர் பிரதர்ஸ், ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்!!

க.பாலாசி said...

//அவருக்கு ஆயிரெத்தெட்டு வேலை//

அங்கண வேடிக்க பாத்தவங்களுக்கும்....

Vidhya Chandrasekaran said...

நன்றி மணிகண்டன்.
நன்றி கோபி.
நன்றி பின்னோக்கி.
நன்றி ஹுஸைனம்மா (ஆசைதான்).
நன்றி குறும்பன்.

நன்றி விக்னேஷ்வரி (நீங்க முதல்ல சென்னைக்கு வாங்க).

நன்றி ராஜி (நோஓஓஒ).
நன்றி சித்ரா.
நன்றி நவாஸுதீன்.
நன்றி கலையரசன்.
நன்றி கேவிஆர்.

மீள் வருகைக்கு நன்றி அக்கா & ஹுஸைனம்மா. காசு கண்ணால பார்க்கிறதனால தான் காணும்பொங்கல்ன்னு பேர் வச்சாங்களான்னு எனக்குள்ள இருக்க சயிண்டிஸ்ட் ரிசர்ச் பண்ண சொல்றாங்க:))

shortfilmindia.com said...

ஏற்கனவே அந்த பூச்சாண்டி கெட்டப்பை பார்த்துட்டு மிரண்டு போய் தியேட்டர்ல படமே பாக்காம இருக்கேன்
நீங்க வேற் திருமப் ஞாபகபடுத்திகிட்டு

பொங்கல் வாழ்த்துக்கள்

கேபிள் சங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பொங்கல் வாழ்த்துக்கள்

குசும்பன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

தலைவர் பாராட்டுவிழாக்களில் பிஸியாக இருப்பதால் விரைவில் அவை முடிந்ததும் இதை சரி செய்வார்:)

My days(Gops) said...

//தம்பி காசிற்கு பதிலாக சல்வார் எடுத்துக்கொடுத்தது கலெக்ஷனை பெருவாரியாக குறைத்துவிட்டது//
காசு கொடுத்து இருந்தா மட்டும் என்ன? அதுவும் சல்வாரா தான் மாறி இருக்கும்… உங்களுக்கு வேலை மிச்சம் பண்ணின உங்க தம்பிக்கு ஒரு "ஓ" ..
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

உண்மைத்தமிழன் said...

வசூல் பண்றதுலேயே குறியா இருக்கீங்களேம்மா..!!!

உண்மைத்தமிழன் said...

உங்களுக்கும், சீனியருக்கும், ஜூனியருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு.

பொங்கல் வாழ்த்துகள்.

Anonymous said...

வித்யா பொங்கலோ பொங்கல் :))

Vidhya Chandrasekaran said...

நன்றி பாலாசி.
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி குசும்பன்.
நன்றி My days.
நன்றி உண்மைத் தமிழன்.
நன்றி அக்பர்.
நன்றி மயில்.

"உழவன்" "Uzhavan" said...

பொங்கல் நல்வாழ்த்துகள்.

Sakthi said...

happy pongal

Vidhya Chandrasekaran said...

நன்றி உழவன்.
நன்றி சக்தி.