நீண்ட தொப்பி, அழுக்கான உடை, கருப்பு கோட், மண்டை ஓடு பொறித்த கிழிந்த/நைந்த கொடி, வாள் என பட்டியல் நீண்டுக் கொண்டே போகும் கடற்கொள்ளையர்களை விவரிக்க சொன்னால். கடறகொள்ளையனில்லாத கடலா? பெசண்ட் நகரிலும் ஒரு கடற்கொள்ளையன் இருக்கிறான். கடலில்லை. கடற்கரையில்:)
Once Upon a Pirate. பெசண்ட் நகரிலிருக்கும் இந்தியன், சைனீஸ், தந்தூர் (நல்ல வேளை காண்டினெண்டல்ன்னு போர்ட் போட்டு ப்ரெட் பட்டர் ஜாம் பரிமாறல)உணவுகளைப் பரிமாறும் உணவகம். பிஸ்டல்ஸ், ரம் பாட்டில், ட்ரெஷர் பாக்ஸ், கை விலங்குகள், நங்கூரம், சிம்னி விளக்குகள், கிளி் பொம்மைகள் என தீம் அட்டகாசமாய் இருக்கிறது. Above all வெயிட்டர்களின் ட்ரெஸ் கோட் பைரட்களைப் போலவே.
இரண்டு முறை சென்றதின் ரெவ்யூ. அட்டகாசமான மெனு. வெஜிடேரியனிலும் நிறைய ஆப்ஷன்ஸ் இருப்பது ப்ளஸ். வெஜ் வாங்டன் (Wontons) க்ளியர் சூப்பும், ஸ்ப்ரிங் ரோலும் ஆர்டர் செய்தோம். ரெண்டுமே அட்டகாசம். அதுவும் சூப்பில் நிறைய காய்கறிகள் (Crunchy and yummy). ஸ்ப்ரிங் ரோல்ஸும் எண்ணைய் அதிகமில்லாமல் போர்ஷனும் பெரிதாக இருந்தது. இரண்டாம் முறை சென்றபோது Hot & Sour soup, crispy fried vegetables, fried wontons, paneer tikka சாப்பிட்டோம். சூப்பும், க்ரிச்பி ஃப்ரைட் வெஜிடபிள்ஸும் ஆவரேஜ். மற்றவை எல்லாம் குட்.
மெயின் கோர்ஸிற்கு கார்லிக் நான், பட்டர் நான், Thai Fried rice, Punjabi Subji Makhanwale ஆர்டர் செய்தோம். ரைஸ் ஆவரேஜ் தான். மற்ற அனைத்துமே நன்றாக இருந்தது. இரண்டாம் முறை ரைஸைத் தவிர்த்துவிட்டு கார்லிக் நான், தந்தூரி ரொட்டி, கட்டக் ரொட்டி (நல்ல க்ரிஸ்பியாக, அப்பளத்துக்கும் ரொட்டிக்கும் இடையேயான கன்சிஸ்டென்சியில் நன்றாக இருந்தது), chow mein நூடுல்ஸ், வெஜிடபிள் சாஃப்ட் நூடுல்ஸ், thai fried நூடுல்ஸ், ஸ்டஃப்டு கேப்சிகம் க்ரேவி, புத்தாஸ் வெஜிடபிள்ஸ் ஆகியவை ஆர்டர் செய்தோம். Quantity & டேஸ்ட் நன்றாக இருந்தது.
Neat dessert menu. ஒவ்வொரு டெசர்ட்டுக்கும் பைரட் லேங்குவேஜில்??!! ஒரு பெயர். நாங்கள் Date pancake, Fried icecream மற்றும் chocolate souffle சாப்பிட்டோம். Fried icecream சுமார் ரகம் தான். Outer layer ரொம்ப திக்காக இருந்தது (இதுவரையில் நான் சாப்பிட்ட நான்கைந்து இடங்களில் Cascade மட்டுமே நல்ல fried icecream சர்வ் செய்கிறார்கள்). மற்றவை சூப்பர்.
மேலதிக தகவல்கள்
உணவகம் - Once Upon a Pirate
உணவு/Cuisine - Veg/Non-veg Indian and chinese. பஃபே உண்டு.
இடம் - எல்லியட்ஸ் பீச் ரோட், பெசண்ட் நகர். முருகன் இட்லி கடைக்கு பக்கத்தில்.
டப்பு - 700 + taxes (Complete வெஜ் மீல் 2.5 பேருக்கு. ஹி ஹி ஜூனியரையும் சேர்த்து)
பரிந்துரை : கண்டிப்பாக செல்லலாம். வித்யாசமான தீம். சுவையான உணவு. After all this pirate does not loot ur purse;)
December 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
After all this pirate does not loot ur purse;)
....Nice review comment. Super!
அட! இப்படி ஒன்னு இருக்கா??? கவனிக்காமக் கோட்டை விட்டுட்டேனே.....
ரிவ்யூ காமெண்ட் is BEST:-)))))
படிச்சாச்சு.. நெக்ஸ்ட்ட்ட்ட்ட்டு ( பொறாமையெல்லாம் இல்லை)
கொள்ளை அடிக்கலைனா சரி..
அட நீங்க வேற பசி நேரத்துல .......... அதுல போடோ வேற ..............
சூப்பரா இருக்கே!
ஹே நான் இந்த ஹோட்டலை பார்த்து இருக்கேன் :) ஆனா போனது இல்லை.. :) சாப்பாடு லுக்ஸ் செம.. பாக்கலாம்.. :)
Ok. will visit once for the theme they have. My daughter might enjoy.
ஓ சரி அடுத்த முறை விசிட் அடித்து விட வேண்டியதுதான்.......
சூப்பரா இருக்கே!
சரி அடுத்த வாட்டி சென்னை வரும்போது போயிட வேண்டியதுதான்
நல்லா எஞ்சாய் செஞ்சிருக்கீங்க. கமெண்ட் சூப்பர்
// வெயிட்டர்களின் ட்ரெஸ் கோட் பைரட்களைப் போலவே.//
Where is the photo??
இது எப்ப வந்துது:)
கட்டாயம் போகலாம். ஸ்ப்ரிங் ரோல்ஸ் இருக்கே. நல்ல ரெவியூ. உங்க ரெவியூவை அங்க ப்ரிண்ட் செய்து மாட்டணும். அவங்களுக்கு இதூ நல்ல விளம்பரம்.
நல்லா கொடுத்தீங்க பில்டப்பு. ரசித்தேன்... சாப்பாடு போட்டோல்லாம் நல்லாருக்கு!
நன்றி சித்ரா.
நன்றி துளசி மேடம்.
நன்றி விஜி.
நன்றி அமுதா கிருஷ்ணா.
நன்றி மங்குனி அமைச்சர்.
நன்றி எஸ்.கே.
நன்றி கவிதா.
நன்றி மோகன் குமார்.
நன்றி சங்கரி மேடம்.
நன்றி குமார்.
நன்றி கோபி.
நன்றி கலா அக்கா.
நன்றி எறும்பு (ஏன்ன்ன்?).
நன்றி வல்லிசிம்ஹன் (சரியாத் தெரியல. நான் இங்க வந்து ஆறு மாசமாகுது. ஒன்னு அல்லது ரெண்டு வருஷம்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்).
நன்றி விந்தைமனிதன்.
Post a Comment