சமீபகாலமாக பதிவுகலில் என் நடமாட்டம் கொஞ்சம் குறைஞ்சு போச்சு. காரணம். பஸ். பஸ் ஓட்றதுல அதில நேரம் செலவிடறதனால பதிவுகள் எழுத முடியறதில்ல (அப்படியே எழுதிட்டாலும்). நிறைய கதைகள்???!!!! அரையும்குறையுமா எழுதி வச்சிருக்கேன் (நீ முழுசா எழுதினாலும் அப்படித்தான் இருக்கும்ங்கறீங்களா?). சீக்கிரமே பட்டி டிங்கரிங் வேலைப் பார்த்து பதிவேத்தனும். இன்னும் கொஞ்ச நாட்களில் முன்போல் பதிவுலகில் இயங்க முயற்சிக்கிறேன்.
*************
இரண்டுப் பிரபல பதிவர்கள் என்னை படி படின்னு டார்ச்சர் பண்றாங்க. ஸ்கூல்/காலேஜ் காலத்திலேயே படிச்சதில்ல. ஒரு பிரபல வளரும் இலக்கியவாதி புக் பேரெல்லாம் சொல்லி, படிங்க நல்லாருக்கும். படைப்புகளை எல்லாம் பத்திரிக்கைக்கு அனுப்பங்கன்னு சொல்றாங்க (அங்க அனுப்பிச்சு அவங்க காறித்துப்பி என்னை அசிங்கப்படுத்தறதப் பார்க்கிறதுல அம்மிணிக்கு அம்புட்டு சந்தோசம்). இன்னொரு பிரபலம் இப்போல்லாம் பதிவே எழுதறதில்ல. பஸ்லயே சுத்திக்கிட்டிருக்காங்க. அவங்க என்னாடான்னா ஒரு படுபயங்கரமான எழுத்தாளர் பேர சொல்லி அவர் எழுதின புத்தகத்தை வீட்டுக்கே வந்து கொடுக்கிறேன்னு கொலை மிரட்டல் விடறாங்க. என்னை நம்பி ஒரு குடும்பம் இருப்பது தெரிந்தும் இப்படி ஒரு பாதகச் செயலை செய்யத் துணிந்த அந்தப் பதிவர் மீது மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்ய நிபுணர்களிடம் ஆலோசனை செய்துக்கொண்டிருக்கிறேன். ராஜி பீ கேர்ஃபுல்.
************
தமிழ்மணம் 2010 விருதுகளுக்கான கோதாவுல நானும் குதிச்சிருக்கேன். கீழ்கண்ட இடுகைகளை விருதுக்கு என் சார்பா பரிந்துரைத்திருக்கிறேன். அப்படியே நீங்களும் உங்க பொன்னான வாக்குகளை அள்ளித் தெளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வலியின் மொழி
செக்கர் வானம்
மன்னிப்பு கேட்கிறார் ஆமிர்கான்
*****************
சென்ற சனிக்கிழமையிலிருந்து மழை பெய்துக்கொண்டே இருக்கிறது. நசநசன்னு மழை. ரோடுகள் கேக்கவே வேணாம். பெசண்ட் நகர் வண்ணாந்துறை ரோடு நல்ல காலத்திலேயே குண்டும் குழியுமாய் பல்லிளிக்கும். இப்போ கேக்கவே வேணாம். மழைநீர் தேங்கி எங்கு பள்ளமிருக்குன்னு தெரியவே மாட்டேங்குது. டெட் ஸ்லோ/இறங்கி வண்டியைத் தள்ளிக் கொண்டு போவது உத்தமம். பாண்டிச்சேரியிலும் சரியான மழையாம். ரெயின்போ நகர் என்ற ஏரியா மிதக்கிறது என்கிறார்கள். சென்ற மழைக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாயிரம் தந்தார்களாம். அதெப்படி மத்தவங்களுக்கு தராம விடலாம்ன்னு மத்தவங்க மறியெலெல்லாம் பண்ணிருக்காங்க. அதனால இந்த தடவை ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் தருகிறார்களாம். இதற்குப் பதிலாக வெயில் காலத்திலேயே நீர் நிலைகளை சரியாக தூர் வாரி, கால்வாய்களின் அடைப்பு நீக்கி, சரியான வடிகால் வசதி ஏற்படுத்தியிருந்தால் இந்தளவு பொருட்செலவு ஏற்பட்டிருக்காது. அது சரி கொள்ளை அடிக்கறதுல கொஞ்சம் பொதுமக்களுக்கும் கொடுத்து ஓரளவு புண்ணியம் தேடிக்கிறாங்க போல. இது சம்பந்தமா நான் முன்னமே எழுதியிருந்த (உருப்படியான ஒரே) பதிவு.
*****************
ரங்ஸுடன் வண்டியில் சென்றுக்கொண்டிருக்கும்போது நடந்த உரையாடல்
“வித்யா, ரோடெல்லாம் பள்ளமும் மேடுமா இருக்குன்னு சொல்றாங்க சரி. அதென்ன குண்டும் குழியுமா?”
“மொதல்ல ஒழுங்கா வண்டிய ஓட்டு. சில்லறை பொறுக்க வைக்காத. கேள்வியெல்லாம் அப்புறம் கேக்கலாம்”
“தெரியாதுன்னா சொல்லிடு. சும்மா இந்த சால்ஜாப்பெல்லாம் வேணாம்.”
”எனக்கா தெரியாதா. குழின்னா பள்ளம். குண்டுன்னா வீங்கினாப்புல இருக்கிறது. அதாவது மேடா இருக்கிறது. அதான் அப்படி சொல்றாங்க”
“அப்படியிருக்காது. குன்றும் குழியுமா இருக்குங்கறதுதான் இப்படி சேஞ்ச் ஆயிருச்சின்னு நினைக்கிறேன்.”
“ஹைய்யோ. எப்படிப்பா இப்படியெல்லாம்? தமிழ் எழுத்துக்கூட்டி படிக்கவே கஷ்டப்படுவியே. சூப்பரான எக்ஸ்ப்ளனேஷன். பேசாம நீ கூட ப்லாக் எழுதலாம்”
“ச்சே ச்சே. அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க செய்யறது”
மீ தி ஙே!!!
December 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
ரங்க்ஸ் கொடுத்த விளக்கம் சூப்பர்.. பேசாம அவரையும் ப்ளாக் உலகத்துல தள்ளிவுட்டுடுங்க :-))
ரைட்டுங்கோவ்.
“ச்சே ச்சே. அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க செய்யறது”
மீ தி ஙே!!!
...me too! அவ்வ்வ்வ்.....
அட கடவுளே......அப்படியா சொன்னார் உங்க அவரு.....இ.பி.கோ...அது எத்தனாவது செக்ஷனுபா......அதுல ஒரு ......என்ன வித்யா அடிக்க வராப்புலயா......மீ....த ஜீட்......
கடைசி வரி போட்டு எல்லாரையும் காலி பண்ணிட்டீங்களே
சீக்கிரமே பதிவுலகத்துக்கு இன்னொரு எழுத்தாளர் வரப்போறாருன்னு சொல்லுங்க.
// இன்னும் கொஞ்ச நாட்களில் முன்போல் பதிவுலகில் இயங்க முயற்சிக்கிறேன்
//
வேண்டாம்.பஸ்சே ஓட்டுங்க.
//பஸ் ஓட்றதுல அதில நேரம் செலவிடறதனால//
சென்னையிலயா பஸ் ஓட்டுறீங்க? மழையாச்சே, ஓட்ட கஷ்டமாயில்லியா? குண்டு, குழி பாத்து கவனமா ஓட்டுங்க, சரியா?
(ப்ளாக்குக்கு மீண்டு(ம்) வந்துடுவீங்களோங்கிற பயத்துலதான்... ;-))))) )
கடைசி வரி போட்டு எல்லாரையும் காலி பண்ணிட்டீங்களே.
அந்தப் பதிவர் மீது மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்ய நிபுணர்களிடம் ஆலோசனை செய்துக்கொண்டிருக்கிறேன்.
இது வேறா ::))
ரங்ஸ்=ஐ அப்படியே தள்ளி விட்டு இருக்கலாம்..ஒரு குண்டுல...
//ச்சே ச்சே. அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க செய்யறது//
வெட்டி ஆபீசர்ஸ் அப்படின்னு கொஞ்சமாவது மரியாதையா சொல்லியிருக்காலம்.. இதயம் நொறுங்கிருச்சு.... ;-) ;-) ஆட்டத்துல எல்லாம் உண்டுதான். ;-)
உங்க ரங்க்சை வ. வா. சங்கத்திற்கு நிரந்தர உறுப்பினர் ஆக்குவதற்கு நான் சிபாரிசு செய்கிறேன். இந்த மாதிரி கலாய்க்கிறாரே:)
//ச்சே ச்சே. அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க செய்யறது”//
unmaithan solli irukkar vidhyaa
வலியின் மொழி எனக்கு மிகவும் பிடித்த கதை.
ஒரு எட்டு வந்து பாத்துட்டுப் போயிடுங்க
http://vavaasangam.blogspot.com/2010/12/blog-post_08.html
நன்றி அமைதிச்சாரல் (அதச் சொல்லித்தான் பல்பு வாங்கினேன்).
நன்றி ராஜு.
நன்றி சித்ரா.
நன்றி சங்கரி மேடம்.
நன்றி மோகன் குமார்.
நன்றி கலா அக்கா (அது மட்டும் நடந்தா உலகம் அழிஞ்சிரும்).
நன்றி அண்ணே (ரைட்டு).
நன்றி ஹுஸைனம்மா (அவ்வ்வ். எல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்கீங்க போலயே).
நன்றி குமார்.
நன்றி சக்தி.
நன்றி அமுதா கிருஷ்ணா (அய்யோ. கணவனே ஐ லுக்கிங் காட்).
நன்றி RVS.
நன்றி கோபி.
நன்றி LK.
நன்றி உழவன் (அப்பாடி. ஒருத்தராவது நம்பிக்கை தர்ற மாதிரி கமெண்டிருக்கீங்களே. சந்தோஷம்).
ஒவ்வொரு பகுதிக்கும் சிரிக்காமல் கடப்பது கடினம். சுய எள்ளல் உங்கள் எழுத்துகளில் அழகு. இரண்டாவதும், குண்டு குழியும் கூடுதல் ரசனை.
//ச்சே ச்சே. அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க செய்யறது// விளக்கம் சூப்பர்...:)
Post a Comment