கோபம் அழுகை
துக்கம் சந்தோஷம்
அனைத்தையும் நொடியில் வெளிபடுத்துகிறாய்
என் மீதான காதலைத் தவிர.
*************
காலை எழுந்தவுடன் படிப்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு என
பாரதி சொல் பின்பற்றிக்கொண்டிருந்தேன்.
இப்போதெல்லாம் காலை எழுந்தவுடன் காப்பி
பின் காதல் கொடுக்கும் உன் பேச்சு என்றாகிவிட்டேன்.
*************
சத்தமே எழுப்பாமல் பின்னிருந்து அணைக்கிறாய்
அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பில் அலறித் துடிக்கிறது இதயம்
****************
செல்போன்
ரூம் சாவி
பைக் கீ
பர்ஸ்
எல்லாம் இருக்கா என்கிறாய்.
ம் என்றவள் என்னை மறந்து
அங்கேயே விட்டுவிட்டு வருகிறேன்.
*****************
உன்னிடத்தில் சுலபமாய்
மனதை தொலைத்துவிட்டேன்
வெட்கம் தொலைக்க வெட்கமாயிருக்கிறது.
******************
மனம் கொள்ளா கோபம்
விழி கொள்ளா கண்ணீர்
அனைத்தும் சட்டென அடங்கிவிடுகிறது
உன்னிரு விழி பார்க்கையில்.
******************
உன் குற்றத்தையும்
என் கோபத்தையும்
மரித்துப் போகச் செய்கின்றன
நம் பிரிவு
******************
December 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
கவிதாயினி வித்யா வால்க வால்க:)
//மனம் கொள்ளா கோபம்
விழி கொள்ளா கண்ணீர்
அனைத்தும் சட்டென அடங்கிவிடுகிறது
உன்னிரு விழி பார்க்கையில்.//
ரசித்தேன். படம் அருமை வித்யா..
ஆஹா...
//கவிதாயினி வித்யா வால்க வால்க:) //
ஆங்கிலச் சொற்கள் கலக்காத தமிழ் வரிகள் அழகு வித்யா. கவிதாயினி அடிக்கடி இப்படி மடக்கி மடக்கிப் போட்டு எழுதுங்க. நல்லாருக்கு.
ஹைலி ரொமாண்டிக்.!
கோபம் அழுகை
துக்கம் சந்தோஷம்
அனைத்தையும் நொடியில் வெளிபடுத்துகிறாய்
என் மீதான காதலைத் தவிர.//
அது கொஞ்சம் லேட்டாத்தான் ஆவும். :-))
//பம் அழுகை
துக்கம் சந்தோஷம்
அனைத்தையும் நொடியில் வெளிபடுத்துகிறாய்
என் மீதான காதலைத் தவிர.//
உண்மை...
கவிதை நல்லா இருக்கு...
அன்புடன்
ரஜின்
நல்லாயிருக்கு வித்யா:)
comment section la nanga poda vendiyatha neenga thalaipa potutinkale
கவிதைகளை ரசிச்சுகிட்டு வந்தா அதைவிட சூப்பரா பின்னூட்டங்கள். :))
தலைப்பு உங்க ஜூனியர் சொன்னதா ??
கவித கவித :)
தலைப்பையும் கவிதைத்தனமாவே வச்சிருந்திருக்கலாம்!!
பாரதி பேச்சு கேக்காத அந்தக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு. அலறித்துடிக்கும் இதயமும், வெக்கங் கெடாத வெட்கமும் கூட அருமை. ;-)
வருவியா வருவியா.. இந்தப்பக்கம் வருவியா...நல்லாவெணும் உனக்கு...தேவையா தேவையா....
ஹிஹிஹ் நல்லாருக்கு :)))
எல்லாமே மிக அழகாக வந்திருக்கின்றன விதயா. “என்னை மறந்து அங்கேயே விட்டுவிட்டு வருகிறேன்” எப்படி இப்படி.. கலக்குறீங்க. பாராட்டுக்கள்.
கலக்கல் வித்யா... மனதை தொட்ட வரிகள்...
//வெட்கம் தொலைக்க வெட்கமாயிருக்கிறது.//
Nice. Feminine touch.
//உன்னிடத்தில் சுலபமாய்
மனதை தொலைத்துவிட்டேன்
வெட்கம் தொலைக்க வெட்கமாயிருக்கிறது.
//
கவிதாயினி வித்யாக்கா கலக்கல்.
நன்றி கோபி.
நன்றி எல் கே.
நன்றி அமுதா.
நன்றி விதூஷ்.
நன்றி விக்கி.
நன்றி ஆதி.
நன்றி ரஜின்.
நன்றி சக்தி.
நன்றி நவீன்குமார்.
நன்றி கலா அக்கா.
நன்றி பாலாஜி.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி RVS.
நன்றி விஜி.
நன்றி உழவன்.
நன்றி அப்பாவி தங்கமணி.
நன்றி மோகன் குமார்.
நன்றி குமார்.
superb, keep it up
Post a Comment