வித்யாசமாய் ஆரம்பிக்கிறது டைட்டில் சாங். சரி படமும் சூப்பரா இருக்கும்ன்னு எதிர்பார்த்தால் எதிர்பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. சன் டிவியில் பெஸ்ட் சீன்ஸ் என்றொரு நிகழ்ச்சி வரும். ஒன்றோடு ஒன்று சம்பந்தமே இல்லாமல் ஒரு படத்தில் வரும் சிறந்த சீன்கள் ஒளிப்பரப்பாகும். தீஸ் மார் கானும் அப்படித்தானிருக்கிறது. பாரீஸில் கைதாகும் கான் மும்பையில் தப்பிக்கிறார். அவரை ரெண்டே ரெண்டு டம்மி சிபிஐ ஆபிசர்கள் மட்டுமே தேடுகிறார்கள். அதுவும் மொத்தம் ரெண்டே சீனில். படம் தொடங்கும்போது வரும் கமிஷனர் அண்ட் கோ படத்தை முடித்து வைக்கவும் வருகிறது. அது சரி. ஃப்ரா கான் படத்தில் லாஜிக் எதிர்பார்ப்பது 2ஜியில் ஊழலே நடக்கவில்லை என நம்புவதற்கு ஒப்பானது. முதல் இரண்டு படங்களான Main hoon na மற்றும் om shanthi om ஆகியவற்றில் நோ லாஜிக். அட்லீஸ்ட் ஸ்க்ரீன்ப்ளே ஒரளவிற்கு சுமாராக இருக்கும். இங்கு அதுவும் கிடையாது. பெரிய நடிகராம் ஆனா ஒத்தை கேமரா வச்சிகிட்டு ஷூட்டிங் நடக்குதுங்கறதைக் கண்டுக்கவே மாட்டாராம். காதுல பூ வைக்கலாம். பரவாயில்லை. ஒரு பூந்தோட்டத்தையே வைக்கிறாங்க. வெகு சில சீன்களே சிரிப்பை வரவழைக்கின்றன. உதாரணத்திற்கு மனோஜ் டே ராமலன்க்கான பெயர் விளக்கம். மற்ற சோ கால்ட் ஜோக்கெல்லாமே மொக்கையாய் இருக்கிறது.

அக்ஷய் குமார் அண்ட் கோ. எப்போப் பாரு அவரு உதிர்க்கும் பஞ்சும், அவர் அடிப்பொடிகளின் எசப்பாட்டும் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போகப் போக ஓவர் டோஸாகிவிடுகிறது. காத்ரீனா கைஃப். நம்ம தமிழ்ப்பட ஹீரோயின்கள் செய்த/செய்கின்ற வேலை. லூசுக் கேரக்டர். அதுவும் லூசு ஹீரோயின் கேர்க்டர்னா கேக்கவே வேணாம். செம்ம காட்டு காட்டிருக்காங்க;) ஏற்கனவே இருக்கிற கிறுக்குப் பட்டாளத்துக்கு மத்தில சல்மானும், அனில் கபூரும் கெஸ்ட் அப்பியரன்ஸ்.
படத்துல இப்பப் பாட்டு வரப்போகுதுன்னு சொல்லி ஒரு பாட்டு போடலாம். எல்லாப் பாட்டும் அப்படிப் போட்டா? கடுப்பாயிருக்கு. ஆனா ம்யூசிக் சூப்பர். ஹிந்தி மசாலா படத்துக்கு தேவையான இசை. விஷால் ஷேகர் அட்டகாசமா பண்ணிருக்காங்க. ஷீலா கி ஜவானியும், வல்லாரே வல்லா வல்லாவும் செம்மையா தாளம் போட வைக்குது. டைட்டில் சாங்கான தீஸ் மார் கான் பாட்டு ஷிரிஷ் குந்தர் (ஃபரா கானின் வூட்டுக்காரர்) இசையமைத்ததாம். குட். தமிழ்நாட்டுக்கு ஒரு டி.ஆர் மாதிரி வடக்குக்கு ஒரு ஷிரிஷ் குந்தர் போல. எடிட்டிங், கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசைன்னு எல்லாத்திலயும் இவர் பேர்தான். ஆனா ஒன்னும் உருப்படியா இல்லைங்கறதுதான் மேட்டரே. சொதப்பலான திரைக்கதை. திருட்டை வைத்து ஒரு ஜாலியான காமெடி குடுக்கலாம் என ஆரம்பித்து, படத்திற்குள் படம் என ஸ்பூஃபிற்குத் தாவி, தீடிரென கிராமத்திற்கு நல்லது செய்யலாமென முடிவெடுத்து, எமோஷன் வேண்டாமென பழையபடி ஸ்பூஃபிற்குத் தாவி, மீண்டும் எமோஷன் ட்ராமாவைக் கையிலெடுத்து, எந்த எழவும் வேண்டாமென ஹாப்பி எண்டிங் என முடிக்கிறார்கள். இதே கதையை ப்ரியதர்ஷன் ரசிக்கும்படிக் கொடுத்திருப்பார் என நினைக்கிறேன். நல்லவேளையாக இதில் காதல் கருமாந்திரத்தை உள்ளே கொண்டுவரவில்லை. இன்னொரு நல்ல விஷயமாக படத்தை ரெண்டு மணி நேரத்தில் முடித்துவிட்டார்கள்.
தீஸ் மார் கான் - மரண அடி:(
8 comments:
மேடம் இந்திப் படமெல்லாம் பாக்குறாக:)
அவ்ளோ மோசமாவா இருக்கு? இன்னைக்குப் போலாம்னு இருந்தேன். காப்பாத்தினதுக்கு டேங்கீஸ்:)
மேரா இந்தி நஹி மாலும் ஹை... ஹை.. ஹை...
அப்படியே படம் பார்க்கறா மாதிரி எழுதியிருக்கீங்க.. நல்ல விமர்சன எழுத்து. எப்படி வாரத்துக்கு ரெண்டு படம் பார்க்கறீங்க.. நம்மால முடியலையே.. நன்றி ;-)
venamnu mudivu panni vachirunthen.
me the ess :)))
நல்ல விமர்சன எழுத்து.
Who would watch AK's movies? Ivlo appavi neenga?
தெய்வமே, ஒரு நோட்டைக் காப்பாத்திட்டீங்க. நாளைக்குப் போறதா ப்ளான் இருந்தது. இப்போ கேன்சல்.
ennaiyum oruthar காப்பாத்துறாய்ங்கப்பா.. அதுக்கு தான் பெரியவங்க சொல்லியிருக்காங்க.. நாம் இன்னைக்கு செய்யற உதவி பின்னாடி நமக்கு வரும்னு.. நன்றி
//Cable Sankar said...
ennaiyum oruthar காப்பாத்துறாய்ங்கப்பா.. அதுக்கு தான் பெரியவங்க சொல்லியிருக்காங்க.. நாம் இன்னைக்கு செய்யற உதவி பின்னாடி நமக்கு வரும்னு.. நன்றி //
அப்படிப்போடு..
இந்தப்படமும் போச்சா? அக்சய்க்கு நேரம் சரியில்லன்னு நெனைக்கிறேன். இன்னொரு 'சிங் இஸ் கிங்'குன்னு சொல்லிட்டிருந்தாங்க.
விமர்சனம் அருமை.
Post a Comment