December 8, 2011

நினைவெல்லாம் நிவேதா - 3

நினைவெல்லாம் நிவேதா - 1
நினைவெல்லாம் நிவேதா -2

ஒரு வாரம் கழித்து அடையார் போட் கிளப்பிலிருந்த அந்த பிரமாண்ட பங்களா முன் கணேஷும் வசந்தும் நின்று கொண்டிருந்தனர்.

“வீட்டு கேட்டப் பார்த்தாலே மூச்சடைக்கறது பாஸ்”.

விவரம் சொல்லியபின் வேலைக்காரி கொண்டு வந்த காபியை குடித்தவாறு வீட்டை சுற்றி வந்தார்கள். மூன்று அறைகள். ஒரு கெஸ்ட் ரூம். ஹாலையும் கிச்சனையும் இணைக்கும் டைனிங் ஸ்பேஸ் என விசாலமாயிருந்தது வீடு. பளிச்சென அங்கங்கே மின்னிய அலங்கார இறக்குமதி சாமான்கள் உரிமையாளர்களின் ரசனையோடு காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் பொருட்கள் வாங்கிப் போடும் மனோபாவத்தையும் காட்டியது.

”எந்த ரூம்ல தூக்கு போட்டுகிட்டாங்க?”

“அதோ அந்த நடு ரூம்லங்கய்யா.”

மாஸ்டர் பெட்ரூமாக இருக்க வேண்டும் இரண்டு பேருக்கு ரொம்ப அதிகமாய் தெரிந்தது. பொருட்கள் எதுவுமில்லாத காரணமாகவும் இருக்கலாம்.

“ரூம் காலியா இருக்கே?”

“அம்மா போனதுக்கப்புறம் அய்யா எல்லா சாமானையும் பக்கத்து ரூமுக்கு மாத்த சொல்லிட்டாருங்க.”

ஒவ்வொரு ரூமாய் பார்த்துக்கொண்டே கணேஷ் வேலைக்காரியை விசாரிக்கலானான்.

“அம்மா தூக்கு போட்டுக்கும்போது வீட்ல யாரெல்லாம் இருந்தாங்க?”

“யாருமில்லீங்க. அய்யா அப்போ வெளியூர் போயிருந்தாருங்க.

“நீ எங்கிருந்த?”

“நான் 8 மணிக்கு வூட்டுக்குப் போய்டுவேனுங்க.”

“வாட்ச்மேன்?”

“அவன் வாச கேட்டுக்கு பக்கத்திலிருக்க ரூமுல இருப்பானுங்க.”.

“அய்யா அடிக்கடி வெளியூர் போவாரா?”

“மாசத்துக்கு ரெண்டு தபா போவாருங்க. ரெண்டு மூணு நாள்ல திரும்பிடுவாருங்க.”

“அம்மா வெளியூரெல்லாம் போமாட்டாங்களா?”

”இல்லீங்க. ஆபிஸ் மட்டும்தான் போயாறுவாங்க.”

“வீட்டுக்கு வேற யாரெல்லாம் வந்து போவாங்க?”

“மிலிட்டரி அய்யா மட்டும் தினம் வருவாருங்க. வேற யாருமே வரமாட்டாங்க.”

”அவர் வரும்போது அம்மாவும் அய்யாவும் வீட்ல இருப்பாங்களா?”

”இல்லங்க. அவங்க ரெண்டு பேரும் சுருக்க வேலைக்கு கிளம்பிடுவாங்க.”

“மிலிட்டரி அய்யா எப்ப வருவாரு? என்ன பண்ணுவாரு?”

”பதினோறு மணிக்கு வருவாருங்க. அய்யா வந்தாருன்னா அந்த மூணாவது ரூம்ல இருக்கிற பொட்டியப் பாப்பாருங்க. 11.30க்கு டீ குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு போய்டுவாருங்க. 12 மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டாருங்க.”

“அம்மாவோ அய்யாவோ இந்த ரூமுக்கு வருவாங்களா?”

“அம்மா மட்டும் தாங்க இந்த பொட்டியப் பார்ப்பாங்க. அய்யாக்குன்னு தனியா பொட்டி இருக்குங்க. இது அம்மாவோடதுங்க. மிலிட்டரி அய்யாவுக்காண்டி இங்க வச்சிருக்காங்க.”

“அய்யாவும் அம்மாவும் வீட்ல எப்படி?”

“புரியலீங்க."

”சண்ட போட்டுப்பாங்களா?”

“இல்லீங்க. நான் பார்த்த மட்டும் அய்யாவோ அம்மாவோ எதுக்குமே சண்டை போட்டுக்கிட்டதில்லீங்க. ரொம்ப நல்லவங்க. ஆனா ஏன் அம்மா இப்படி ஒரு முடிவெடுத்தாங்கன்னு புரியலீங்க.”

வெளியே வந்து இருவரும் சிகரெட் பத்த வைத்தனர்.

“என்ன பாஸ். தேறுமா? எனக்கென்னவோ நம்பிக்கயில்ல.”

“தெரியலடா வசந்த். வேலக்காரி சொல்றத வச்சு பார்த்தா தே வேர் ஹேப்பி. ஆனா சுசைட்?”

“விட்ருலாம் பாஸ். ஜெயராமன்கிட்ட போய் வேற வேலையிருக்குன்னு ஜகா வாங்கிடலாம்.”

கணேஷ் கண் மூடி புகையை இழுத்தான். புகை நுரையீரலை நிறைக்க, இதயத்தின் ஏதோவொரு மூலையில் அப்பழுக்கில்லாத நிவேதாவின் முகமும், மருண்ட இரு கண்களும் ப்ளாஷடித்தன.

“வசந்த். வி ஆர் கெட்டிங் இன் டு திஸ். அடுத்த வேலை அஷோக்கைப் பார்க்கனும்.”

6 comments:

விஜி said...

அட இதை நான் பார்க்கவே இல்லையே. முழுதும்படிச்சுட்டு வரேன்

Rathnavel Natarajan said...

அருமை.

sakthi said...

நல்லா இருங்குங்க...ஆனா வேகம் பத்தாது...

அட..கதை எல்லாம் விறுவிறு பா தான் இருக்கு..நீங்க எழுதற வேகம் தான்....

20௦ நாளைக்கு ஒரு பார்ட் லாம் மாலைமதி காலம் ங்க...இது டெய்லி 20 ௦சீரியல் காலம்...

sakthi said...

நல்லா இருங்குங்க...ஆனா வேகம் பத்தாது...

அட..கதை எல்லாம் விறுவிறு பா தான் இருக்கு..நீங்க எழுதற வேகம் தான்....

20௦ நாளைக்கு ஒரு பார்ட் லாம் மாலைமதி காலம் ங்க...இது டெய்லி 20 ௦ சீரியல் காலம் இல்லையா...
வண்டிய அடிச்சி ஓட்டுங்க...

Unknown said...

Vidhya, Recently I have started following your blog. It's really wonderful. I am very much addicted to Ganesh-Vasanath stories. Can you please post the story regularly without giving so much gap. Cheers

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜி. முழுசும் படிச்சிட்டு சொல்லுங்க.

நன்றி ரத்னவேல்.

நன்றி சக்தி.
நன்றி Unknown

இந்தத் தொடர் பண்புடன் இணைய இதழ்ல வெளி வருது. அங்க வெளிவந்தப்புறம் தான் என் தளத்தில் வெளியிட முடியும். அதான் லேட்டாகுது.