தோழிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. வாழ்த்துகள் சொல்ல ஃபோன் செய்தேன்.
வெள்ளிக்கிழமை மதியம் பிறந்தாடி.
க்ரேட் டி. வெள்ளிக்கிழமை பொறந்தவங்க எல்லாம் பெரிய அறிவாளியா இருப்பாங்கடி.
(அவ்ளோ ஆர்வத்துடன்) நெஜம்மாவாடி.
ஆமாண்டி. நான் கூட வெள்ளிக்கிழமைல தான் பொறந்தேன்.
டொக்
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்
***********
நண்பன் : செல்வராகவன் ஏன் எல்லா ஃபங்கஷனுக்கும் வூட்டுக்காரம்மா கூடவே வர்றாரு?
மீ : புதுசா கல்யாணமாயிருக்குல்ல. அதான். போக போக சரியாயிடும்.
நண்பன் : அனுபவஸ்தங்க சொன்னா கேட்டுக்கனும்.
மீ : ஆமா. ஏன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நீ இந்த விஷயத்துல அனுபவஸ்தவனா ஆகவே முடியாது.
நண்பன் : வாயக் கழுவு. நல்ல நாள் அதுவுமா. நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டு.
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
*************
நண்பன் : தாலி கட்டு முடிச்ச கையோட, ஃபேஸ்புக்ல ஃபோட்டோஸ் அப்லோட் பண்ணிடறாங்க. மத்ததெல்லாம் அப்புறம் தான் போல. ஆனாலும் இம்புட்டு வேகம் கூடாது.
மீ : அதில்ல. எனக்குக்கூட கல்யாணம் ஆவுது பாருங்கடான்னு உலகத்துக்கு சொல்லவா இருக்கும். குறிப்பா உன்னை மாதிரி ஆளுங்களுக்கு.
நண்பன் : &^#$^*%$*
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
***************
தோழி : ஹாப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே.
நான் : தேங்ஸ். அப்புறம்.
தோழி : என்னடி அப்புறம்?
நான் : எத்தனை வருஷத்துக்குடி விஷ் பண்ணிட்டே இருப்ப. ஏதாவது கிஃப்ட் கொடுக்கலாம்ல. நாலு வருஷமா வெளிநாட்ல இருக்கன்னுதான் பேரு. ஒரு பவுன் தங்கம் வாங்கிகொடுத்திருப்பியாடி? வாயாலேயே வட சுடு.
தோழி : உனக்கு வாழ்த்து சொல்ல ஐஎஸ்டி போட்டுக் கூப்பிட்டேன் பாரு. என் புத்திய பிஞ்ச செருப்பாலேயே அடிக்கனும்டி.
நான் : இப்ப ஸ்டாக் இல்ல. நீ வெகேஷனுக்கு வர்றதுக்குள்ள பிச்சி வைக்கிறேன். ஒக்கேவா?
தோழி : ^&%(&(()^^% டொக்
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
****************
If a man wants to lead a purposeful life he needs faith research and an ideal. Research gives him the strength to climb the ladder of faith which will take him to the ideal. Faith without research is like a door without padlock. Research without an ideal is like a house without a door..
ஃப்ரெண்ட் ஒருத்தன் இத ஸ்டேடஸா ஃபேஸ்புக்ல போட்ருந்தான்.
வீடு கட்டினா கதவு வெச்சு கட்டனும். அதான சொல்ற?
இது நான் போட்ட கமெண்ட். இதுக்கு போய் ஃபோன் பண்ணி திட்றான்.
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
December 5, 2011
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நல்லது...
என்னோட வலைக்கும் வாங்க.
mydreamonhome.blogspot.com
:)) Interesting.
ஹி..ஹி..ஹி..
நானும் இன்னையிலேந்து திரும்ப பிளாக் எழுத ஆரமிச்சிட்டேன் :)
அதானே :)))
நீங்க தப்பாவே சொல்லல. ஆனா ரொம்ப லொள்ளு.
நன்றி வினோத்.
நன்றி மோகன் குமார்.
நன்றி அப்துல்லா அண்ணா (மறுபடியும் மொதல்லருந்தா).
நன்றி விஜி.
நன்றி நேசமித்ரன்.
நன்றி விச்சு .
ஹி..ஹி..ஹி...Nice...
சூப்பரப்பு!! இம்புட்டு அப்பாவியா படங்காட்டப்புடாது!!
அதானே.... என்ன தப்ப கண்டாய்ங்க அப்புடீ.... ரொம்ப மோசம்.. நல்லதைத்தானே சொன்னீக வித்யா...?
பொதுவா பெண்களுக்கு வாய் அதிகம்..அதுவும் தமிழ் பெண்களுக்கு சொல்லவா வேணும்:)
வாய கட்டினாலே வாழ்க்கைல பாதி பிரச்சினை தானா போய்டும்:)
உங்க Caliberக்கு ஃபர்ஸ்ட் மட்டும்தான். மத்தது இன்னும் ஆடிச்சு ஆடியிருக்கலாம்!
புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...
மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..
http://ithu-mangayarulagam.blogspot.com
நகைச்சுவைப் பதிவு ரொம்ப கொறஞ்சு போச்சின்னு நேத்து ஒருத்தர்கிட்டசொல்லிட்டு இருந்தேன். இன்னிக்கு உங்க பதிவு .. :)) வெகு நாள் கழிச்சு நல்ல பதிவு படிச்ச திருப்தி
நன்றி ரெவெரி.
நன்றி அருண்.
நன்றி சங்கரி மேடம்.
நன்றி மழை.
நன்றி ரகு (ஹி ஹி இன்னுமா இந்த உலகம் என்னைய நம்புது).
நன்றி இளா.
பஸ் டிக்கெட் விலை கூடிப்போச்சா?
Ha ha ha ha... very funny!! :)
Post a Comment