December 13, 2011

கல்கியில் ஜூனியர் அப்டேட்ஸ்

நேற்றிரவு:

“அம்மா மிக்ஸி ஆஃப் பண்ணு.”

“ஏண்டா?”

“சத்தமா வருதும்மா”

“அதனால என்னடா?”

“ஃபிஷ்ஷெல்லாம் தூங்குதுல்ல. முய்ச்சிக்கும்ல்ல. ஆஃப் பண்ணு”

இன்று காலை:

பால்கனியில் ஒரு காக்கா உட்கார்ந்திருந்ததைப் பார்த்து...

“டேய்... அங்க உக்காச்சிக்காதடா. கீல தொப்புக்கட்டீர்ன்னு வீந்துருவ. அடிபட்டுச்சுன்னா உவ்வா வலிக்கும். மெதுவா ஜம்ப பண்ணனும் சரியா?”

ஸ்டாப்பிங்கில் வேனுக்காகக் காத்திருக்கும்போது:

படுத்துக்கொண்டிருந்த நாயைச் சுத்தி ஈக்கள் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து...

“அம்மா, நாயைக் கொசு கடிக்குதும்மா. ஏய் கொசு. கடிக்காத போ. டாக் ஏந்திரும்ல்ல. கடிக்காதச் சொல்றேன் இல்ல. அப்பும் நான் அட்சிருவேன். ஓடிப்போ.”

# பாசக்கார பய :)
============================

“சஞ்சு ரைம்ஸ் சொல்லலாமா?”

“அப்புறமா...”

“இப்ப சொல்லாம்டா.”

“வேணாம்மா. பெத்தா பெத்தா பார்க்கலாம்.”

#எவண்டி உன்ன பெத்தான் பாடற வயசாடா இது. அவ்வ்வ்வ்வ் :(
=======================

டி.வி.யில் வேங்கை படப் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஜூனியர் என்னிடம்..

“அம்மா இந்த தனுஷ் இருக்கான்ல தனுஷ். அவன்தான் மாப்ள படத்துலயும் வருவான். அதுல ராசி ராசி பாட்டுதான் நல்லாக்கும். படம் மொக்கையா இக்கும்.”

“யார்றா சொன்னா இதெல்லாம்.”

“அந்த ஆதித்யா நாராயணன் இக்கான்ல. அவன் சொன்னான்.”

# எல்.கே.ஜி. படிக்கிற புள்ளைங்க பண்ற டிஸ்கஷனாடா இது. அவ்வ் வ்வ்வ் :(
======================

“டேய் கொந்தைய மங்கி கட்சிறும்டா. தூக்குடா. ஏண்டா நிக்கற? பேபிக்கு வலிக்கும்டா. பேபி பாவம்டா.. அம்மா அவன் கொந்தைய விடவே மாட்டானா. நான் கன் எத்து சுடவா?

பேபிஸ் டே அவுட், ஜூனியரின் ரன்னிங் கமெண்ட்ரியோடு :)
=======================

“போதும்மா.”

“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.”


“தொப்ப ஃபுல்லாச்சும்மா. போதும்.”

“நாலு வாய் தானடா வாங்கின. அதுக் குள்ள தொப்ப எப்படி ஃபுல்லாகும்.”

ப்ச்ச்ச். நாலு வாய் இல்லம்மா. நாலு ஸ்பூன். எனக்கே ஒன் வாய்தான் இருக்கு.

#ஙே!!!
================================

இன்னைக்கு என்ன டே?"

பிள்ளையார் சதுர்த்தி."

அப்படின்னா?"

”ம்ம்ம்ம். பிள்ளையார் உம்மாச்சிக்கு இன்னைக்கு பர்த்டே."

ஹாப்பி பர்த்டேவா?"

ஆமாம்."

உம்மாச்சி எப்ப கேக் கட் பண்ணும்?"

# ஜூனியர் கொஸ்டீன்ஸ்:)
==============================================================

மாமனார் - மாமியார் : அம்மனை அழைக்கணும். சஞ்சு ஒரு பாட்டு பாடு...

ஜூனியர் : எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்..கைல கிடைச்சா செத்தான் செத்தான்.

# கேப்பியா? கேப்பியா...கேப்பியா

-கூகிள் பஸ்ஸில் பகிர்ந்த ஜூனியர் அப்டேட்ஸ். செப்டம்பர் மாத கல்கி இதழில் வெளியானது.

7 comments:

CS. Mohan Kumar said...

பஸ்ஸிலே வாசித்துள்ளேன். அம்மாவுக்கு பிள்ளை தப்பாம .....

வருங்கால பதிவர் வாழ்க !!

விஜி said...

ஹஹஹா :))செம :)) நானும் பப்புவோட பல்பு போடனும்னுதான் இருக்கேன் :)))

CS. Mohan Kumar said...

அலோ பதிவு போட்டுட்டு எங்கே காணாமே போயிடுறீங்க? எங்க கமென்ட் எல்லாம் பப்ளிஷ் பண்ணாம..... என்னங்க இது !! சிஸ்டம் ஷட் டவுன் பண்ணிட்டு நாவல் எழுதுறீங்களோ? :))

Vidhya Chandrasekaran said...

நன்றி மோகன் (இது நல்லாருக்கே. பொட்டி பக்கத்துலயே உட்கார்ந்திருந்தா பொழப்ப யார் பார்க்கிறது?)

நன்றி விஜி (போடுங்க. அது இன்னும் பளிச்சுன்னு எரியும்).

தமிழச்சி said...

உங்க பையன் ரொம்ப பாசக்கார பயலா இருக்கனே :) உங்க ரியாக்சன் ரொம்ப நல்ல இருக்கு :)

பால கணேஷ் said...

நிறைய சமயங்கள்ல ஜூனியர்ஸ் நம்மளை பல்பு வாங்க வெச்சுடும். ஒவ்வொரு அப்டேட்ஸ்ம் ரசிக்கும் படியா இருந்தது. அருமை.

Vidhya Chandrasekaran said...

நன்றி தமிழச்சி.
நன்றி கணேஷ்.