இதோ அதோன்னு ஆட்டம் காட்டிட்டு ஒருவழியா கூகிள் பஸ்ஸ மூடிட்டாங்க. ரொம்ப நாள் கூடப் பழகின ஒருத்தர் திடீர்ன்னு இல்லாமப் போனா மாதிரி வெறுமையா இருக்கு. ப்ளஸ் இருக்குன்னாலும், பஸ்ஸின் இடத்தை வேற எந்த தளத்தாலும் ஆக்ரமிக்க முடியாது. கொஞ்ச நஞ்ச லூட்டியா? என்னா ஆட்டம்? என்னா கும்மி? ப்ளஸ் ரொம்ப கொசகொசன்னு சந்தைக்கடை மாதிரி இருக்க ஃபீலிங்:( இப்போதைக்கு அங்க போற ஐடியா இல்ல. பொறுத்திருந்து பார்ப்போம். மிஸ் யூ கூகிள் பஸ்.
***********
பஸ் போனதின் நீட்சியாய் (இதப் பார்றா)ரொம்ப நாள்/மாசம்/வருஷம் கழிச்சு போனவாரம் தான் தொடர்ந்து அஞ்சு நாள் பதிவு போட்டிருக்கேன். தொடர்ந்து அந்த மாதிரி பதிவு போட்டு உங்களை கொல்ல முடியாது. அட இந்த ஒரு வாரத்துக்கு பதிவுக்கு மேட்டர் தேத்தறதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு. இந்த லட்சணத்துல ஒன்னு மீள் பதிவு வேற. இனிமே அட்லீஸ்ட் வாரத்துக்கு ரெண்டு பதிவாவது போட்டு எல்லாரையும் கொல்லலாம்ன்னு இருக்கேன். பார்ப்போம்.
***********
2010ல் வெளியாகி ஒரு வருஷமா எல்லா சேனல்லயும் ஹிட்டடிச்ச ஷீலா கி ஜவானிக்குப் போட்டியா, சிக்னி சமேலி வந்திருக்கா. காத்ரீனா கைஃப் கொலக்குத்து குத்தியிருக்கும் இந்தப் பாட்டு இப்போ ஹிட்ன்னு சொல்றாங்க. எனக்கென்னவோ, ஷீலா தான் இன்னும் டாப்ல இருக்கா மாதிரி தோணுது. நீங்களே பார்த்து சொல்லுங்க:)
************
அப்பப்போ ட்விட்டர் பக்கம் எட்டிப்பார்க்கிறேன். பின்ன அத மட்டும் விட்டுவச்சா நல்லாவா இருக்கும்? அங்கே போட்ட மொக்கைகளிலேயே ஆகச்சிறந்த மொக்கைகளை மட்டும் இங்கே அப்டேட் பண்ணும் எண்ணமிருக்கு. அப்படியாகப்பட்ட மொக்கை ஒன்னு
மத்தவங்க நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு நினைச்சு கவலப்படறது நம்ம வேலை இல்ல #தத்துபித்துவம்
***********
இந்த வட்டார மொழியால அடிக்கடி பல்பு வாங்கறேன். அப்படி சமீபத்துல என் மாமனார் கொடுத்த பல்பு.
கார் ரோட்ல விடுவியாம்மா?
எதுக்குப்பா? நம்ம வீட்ல தான் பார்க்கிங் இருக்கே.
பார்க் பண்றதப் பத்தி கேக்கலம்மா? ரோட்ல விடுவியா?
கவர்ட் கார் பார்க்கிங் இருக்கும்போது ரோட்ல எதுக்குப்பா விடனும். வண்டி டேமேஜ் ஆகிடாது?
அய்யய்யோ அதக் கேக்கலாமா? ரோட்ல, ட்ராஃபிக்ல ஆக்சிடெண்ட் பண்ணாம விடுவியான்னு கேட்டேன்.
ஹி ஹி வண்டி ஓட்டுவியான்னு கேக்கறீங்களா?
ஆமா. என்னமா இதுகூட புரியல உனக்கு?
ஙே!!!!
எங்கூர்ல வண்டி ஓட்றதுன்னு சொல்வோம். தஞ்சாவூர் பக்கம் அத விடறதுன்னு சொல்லுவாங்க போல. என்னமோ போடா மாதவா.
*********
December 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஆமாம் பஸ்ஸை நினைச்சா அலுவாச்சியா வருது
ஆமாங்க, பஸ் போனது ரொம்பவே வருத்தமாத்தான் இருக்கு. அதனால பதிவெழுதி கொல்ற ஐடியால தான் நானும் இருக்கேன். பார்க்கலாம்.
வட்டார வழக்கு :)
மோட்டார் சைக்கிள் விடுவியா என்பது எல்லாம் சுதந்திரத்திற்கு முன்பு உள்ள பேச்சுப் பழக்கம்.
என் தாத்தா சொல்லிக் கேட்டு இருக்கிறேன்
:)) Enga thalaivi Kathreenaa thaan.
பஸ் :((
நேரடியாக அதிகம் பங்கெடுக்காவிட்டாலும், அப்துல்லா அவர்களின் பஸ்ஸை நான் ரொம்பவே ரசித்துக்கொண்டிருந்தேன். அடுத்து அவர் எங்கே ஆட்டத்தை ஆரம்பிக்கறார்னு பார்க்கணும்!
சிக்னி சமேலி ஒருமுறைதான் பார்த்தேன். அந்தளவுக்கு ஈர்க்கவில்லை. பார்ப்போம் பார்க்க பார்க்க பிடிக்குதான்னு. ஷீலா கி ஜவானி..சுனிதி செளஹான்னு நினைக்கறேன். சூப்பரா பாடியிருப்பாங்க. ம்யூசிக்கும் ஆட்டம் போடவைக்கும்.
நன்றி விஜி.
நன்றி சரவணக்குமார்.
நன்றி ராம்ஜி_யாஹூ.
நன்றி மோகன் குமார்.
நன்றி அண்ணா.
நன்றி ரகு.
பஸ்ஸை நான் உபயோகப் படுத்தியது இல்லை. ஆனாலும் என்ன, பஸ்ஸை பயன்படுத்திட்டு இருந்தவங்க எல்லாம் பதிவுலகத்திற்கு வந்தால், பதிவுலகம் கொஞ்சம் சுறுசுறுப்பாகும்னு சந்தோசப் படலாம்.
”சைக்கிள் விடுவியா, பைக் விடுவியா..” தஞ்சாவூர்ப் பக்கம் அப்படித்தான் சொல்லுவோம். :-)
Post a Comment