எழுதறத நிறுத்திட்டாலும், நம்ம எழுத்துப்பணிய தொடர சொல்லி ஆயிரம் அழைப்புகள், சரி சரி ஒன்னு ரெண்டு ரெக்வெஸ்ட்டுகள் வருது. நீ மொக்கையா மொக்கை போட்டாலும் பரவால்ல. இந்த வாரம் யுடான்ஸ் நட்சத்திரமா இருன்னு கேபிள் சங்கர் ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டார். இப்பல்லாம் நான் ரொம்ப பிஸி, எழுதறதுக்கு டைமே இல்லைன்னாலும், ஒரு பன்முக எழுத்தாளர், இவ்ளோ தூரம் வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டார்ங்கற ஒரே காரணத்துக்காக இந்த வாரம் ஸ்டாரா இருக்க சம்மதிச்சிருக்கேன். வழக்கம்போல உங்ககிட்ட வேறென்ன கேட்கப் போறேன். உங்க ஆதரவும், ஊக்கமும் தொடர்ந்து குடுங்க சாமிங்களா..
*****
முன்பெல்லாம் படம் ரிலீஸாகி ஒரு வாரத்திற்குள் பார்த்து விடுவோம். இப்போ நிலைமை தலைகீழ். காரணம் ஜூனியர். அவருக்கு பிடித்த படமாய் பார்க்க ஆரம்பித்திருக்கோம். மங்காத்தாவிற்குப் பிறகு எந்த தமிழ்படமும் தியேட்டரில் பார்க்கவில்லை. ZooKeeper, Adventures of tin tin, happy feet 2 என வரிசையாக ஜூனியர் டிக்கடிக்கும் படங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் மயக்கம் என்ன பார்த்தோம். சில சீன்களைத் தவிர்த்து படம் எனக்குப் பிடித்திருந்தது. தனுஷின் நடிப்பு அட்டகாசம். குறிப்பாக நண்பனிடம் அறை வாங்கிக்கொண்டு நீ அடிச்சது சரிதாண்டா என்பது போல் தலையாட்டும்போது, குடிச்சது போதும்டா எனும் நண்பனின் கையைத் தட்டி விட்டு கோவப்படும்போதும் அசத்துகிறார். அவரின் தங்கையாய் வருபவரின் கேரக்டரைசேஷன் நன்று. எனக்கென்னவோ, தனுஷிடமிருந்து இயல்பான, குறிப்பிடும்படியான நடிப்பை வெளிக்கொணர்வது இரண்டு பேர் தான். ஒன்று செல்வராகவன். மற்றொருவர் வெற்றிமாறன். குட் வொர்க் தனுஷ்.
**************
டிசம்பர் முதல் தேதி நண்பனின் திருமணத்திற்காக தென்காசிக்கு செல்வதாய் இருந்தது. அப்படியே இரண்டு நாட்கள் குற்றாலம் ட்ரிப் என பக்காவாய் ப்ளான் செய்து வைத்திருந்தோம். சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து ஜூனியருக்கு சளி, இருமல். உடல்நலமில்லாத குழந்தையை அம்மாவிடம் விட்டு செல்ல மனதில்லை. மிகுந்த வருத்தத்துடன் ட்ரிப்பை கேன்சல் செய்தேன். நண்பர்கள் ஒரே திட்டு. வெகேஷன் எடுத்து ரொம்ப நாட்கள் (infact வருடங்கள்) ஆச்சுன்னு ரங்ஸ் காதுல ஓதினா, அதுக்கென்ன கிண்டி பார்க் போய்ட்டு வரலாம்ன்னு கடுப்பேத்தறார். ஆண்டவா சீக்கிரம் ரங்ஸ் மனச மாத்தி ஒரு 3 நாள் ட்ரிப் அடிக்க வைப்பா.
***************
எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் அபார்ட்மெண்ட்டில் நிறைய பூச்செடிகள் உண்டு. சென்ற வாரம் அங்கு குடியிருக்கும் ஒரு ஆண்ட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ராத்திரி மொட்டு வைக்கறதப் பார்க்கிறேன். ஆனா காலைல பூவக் காணமாட்டேங்குது என புலம்பிக்கொண்டிருந்தார். சென்ற வாரத்திலிருந்து காலை 5.30 மணிக்கெல்லாம் (என்னக் கொடுமை சார் இது?) எழுந்துவிடுகிறேன். அப்படி ஒரு நாள் காலை டீ கப் சகிதமாக பால்கனியில் நின்றுக்கொண்டிருக்கும்போது, எங்கள் தெருவிலே குடியிருக்கும் ஒரு லேடி கையில் பெரிய்ய்ய ப்ளாஸ்டிக் பையோடு வந்து வரிசையாக எல்லா வீட்டிலும் பூக்களை சேகரித்துக்கொண்டார். வாக்கிங் வருபவர் போலும். நான் மாடியிலிருந்து “ஹல்லோ, ஓனர் பெர்மிஷனில்லாம ஏன் பூவெல்லாம் பறிக்கறீங்க?” என்றேன். அதுக்கு அவர் “பூவெல்லாம் காம்பவுண்ட் கேட்டுக்கு வெளில தானே இருக்கு. அவங்களுக்கு மட்டும் எப்படி சொந்தமாகும்?”ன்னு பயங்கர புத்திசாலியா கேள்வி கேட்டாங்க. “நீங்க கார் வீட்டுக்கு வெளில தான நிறுத்தறீங்க”ன்னு கேட்டேன். முறைச்சிட்டு போய்ட்டாங்க. சொந்த வீடு, கார்ன்னு இருந்தாலும் பத்து ரூபா கொடுத்து பூ வாங்க மனசு வரல அவங்களுக்கு. ஹும்ம்ம்:(
****************
விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, இன்ன பிற குடும்ப செலவுகள்ன்னு செலவு எகிறிகிட்டே போகுது. செலவைக் கட்டுப்படுத்த ரங்ஸ் கை வச்சிருக்கிறது ஹோட்டல் விசிட்களில் தான். காஸ்ட் கட்டிங்காம். ஏற்கனவே எல்லாரும் கண்ணு வச்சி வச்சி, வாரயிறுதிகளில் குறைந்தது மூன்று/நான்கு வேளை ஹோட்டல் சென்றது, மொத்தமே ஒன்றாக குறைந்துவிட்டது. இப்ப அதுக்கும் ஆப்பு:(( நோ மோர் fine dining. இனிமே மாதத்திற்கு ஒரு முறை தான் fine dining/speciality restaurants. பரவால்ல. உடம்புக்கு பர்ஸுக்கும் நல்லதுதான்னு மனச தேத்திக்க வேண்டியதுதான். அதான் மாசத்துக்கு ஒரு விசிட் உண்டே. அப்ப வித்யாசமான ரெஸ்டாரெண்டுகள் போய் பதிவாப் போட்றவேண்டியதுதான்.
December 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
இந்த பூ விசயம் எங்க வீட்டிலும் நடக்குது. திருடி கும்பிட்டத்தான் சாமி ஒத்துக்கும் போல :)
அப்பாலிக்கா ஸ்டாருக்கு வாழ்த்துகள் :)
//செலவைக் கட்டுப்படுத்த ரங்ஸ் கை வச்சிருக்கிறது ஹோட்டல் விசிட்களில் தான். காஸ்ட் கட்டிங்காம். //
இதை படித்தவுடன் வாய் விட்டு சிரித்தேன் என்பதை சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்
வாழ்த்துக்கள் Yudaz ஸ்டார். இந்த மாதிரி தொகுப்பு வாரா வாரம் எழுதலாமே.
உங்க பஸ் தத்துவங்களையே ஒரு புக்கா கூட போடலாம். சீரியஸா யோசிங்க ( ஸ்மைலி போடலை பாருங்க)
//செலவைக் கட்டுப்படுத்த ரங்ஸ் கை வச்சிருக்கிறது ஹோட்டல் விசிட்களில் தான். காஸ்ட் கட்டிங்காம். //
இதை படித்தவுடன் வாய் விட்டு சிரித்தேன் என்பதை சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்
வாழ்த்துக்கள் Yudaz ஸ்டார். இந்த மாதிரி தொகுப்பு வாரா வாரம் எழுதலாமே.
உங்க பஸ் தத்துவங்களையே ஒரு புக்கா கூட போடலாம். சீரியஸா யோசிங்க ( ஸ்மைலி போடலை பாருங்க)
விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, இன்ன பிற குடும்ப செலவுகள்ன்னு செலவு எகிறிகிட்டே போகுது. செலவைக் கட்டுப்படுத்த ரங்ஸ் கை வச்சிருக்கிறது ஹோட்டல் விசிட்களில் தான்.//
நல்ல விஷயம். சீரியஸாவே ஹோட்டலுக்குப் போனதா நினச்சி ஒரு அமவுண்ட் ஜூனியர் பேர்ல சேமிச்சிப் பாருங்க.
இணையத்துல இருந்துகிட்டு அட்டகாசமான உலகரெசிபில்லாம் வீட்ல செய்யாம, ஹோட்டல்லாம் வேஸ்டுங்க :))
வாழ்த்துக்கள். !!!
நட்சத்திர வாழ்த்துகள்.
//ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டார்//
நீங்க எளகின மனசுக்காரவுகளாச்சே, உடனே ஒத்துகிட்டீங்க, இல்லேஏஏ?
//செலவைக் கட்டுப்படுத்த ரங்ஸ் கை வச்சிருக்கிறது ஹோட்டல் விசிட்களில் தான். காஸ்ட் கட்டிங்காம். //
எல்லாருக்கும் இது ஒன்றுதான் “காஸ்ட் கட்டிங்” வழி போல!! ஆக, நான் மட்டும் தனியா புலமபலை அப்படினு நினைக்கும்போது சந்தோஜமா இருக்குது. ஆனாலும், நான் உங்க ஹோட்டல் கட்டானதுக்கு, நான் (one among the readers) கண்ணு போட்டதும் ஒரு காரணமோன்னு குற்ற உணர்வா இருக்குது. :-(((
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
இணையத்துல இருந்துகிட்டு அட்டகாசமான உலகரெசிபில்லாம் வீட்ல செய்யாம...//
வொய் திஸ் கொலவெறி? :-))))
உடான்ஸ் நட்சத்திர வாழ்த்துக்கள்
யுடான்ஸ் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள். ஸ்க்ரிப்ளிங் பேட் ரொம்பவே கலர்ஃபுல்லா இருக்கு. ஹோட்டலுக்குப் போற விஷயத்துல எங்க வீட்டுலயும் இதே முடிவுதான் என் துணைவியால எடுக்கப்பட்டிருக்கு. (வொய் பிளட்? ஸேம் பிளட்!) ஹி... ஹி...
வாழ்த்துகள் :
நன்றி விஜி.
நன்றி மோகன் குமார் (எப்படிங்க சிரிக்காம காமெடி பண்றீங்க?).
நன்றி ஷங்கர் (அதுசரி).
நன்றி இல்யாஸ்.மு.
நன்றி ஹுஸைனம்மா (ஆஹா. நீங்களும் அந்த கருப்பாட்டுக் கூட்டத்துல ஒருத்தரா?).
நன்றி முரளிகண்ணன்.
நன்றி கணேஷ்.
நன்றி T.V.ராதாகிருஷ்ணன் சார்.
நன்றி அமுதா அக்கா.
. “நீங்க கார் வீட்டுக்கு வெளில தான நிறுத்தறீங்க”ன்னு கேட்டேன். முறைச்சிட்டு போய்ட்டாங்க. சொந்த வீடு, கார்ன்னு இருந்தாலும் பத்து ரூபா கொடுத்து பூ வாங்க மனசு வரல அவங்களுக்கு. ஹும்ம்ம்:(
- Super question :)
நன்றி ஆகாயநதி.
Post a Comment