December 16, 2011

The Rock

The Rock - சென்னையில் மற்றுமொரு தீம் ரெஸ்டாரெண்ட். அடையார் ரெயின் ஃபாரெஸ்ட் போயிருக்கீங்களா. கிட்டத்தட்ட அதோட ஜெராக்ஸ் காப்பி தான் இது. ரெண்டு பெரிய வித்யாசம். ரெயின் ஃபாரெஸ்ட்டை விட நல்ல சுவையான உணவு வகைகள், குறைவான விலை. ஓரியண்ட்டல், தந்தூர் வகை உணவுகளை பரிமாறும் இந்த உணவகம் அடையார், அண்ணாநகர் மற்றும் வேளச்சேரியில் இயங்கி வருகிறது.

நான் இதுவரை மூன்று/நான்கு முறை சென்றுவிட்டதால், இது ஒரு mixed review. முதலில் ஆம்பியன்ஸ். More or less close to jungle theme. ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி செட்டப். அங்கங்கே காட்டு விலங்குகள், ஆதிவாசி பொம்மைகள் என ரெயின் ஃபாரெஸ்ட் போலவே இருக்கிறது. நண்பர்களோடு ஒரு முறையும், குடும்பத்தோடு இரு முறையும் சென்றேன். நண்பர்களோடு சென்றபோது ஸ்டார்டர்ஸாகவே தின்று தீர்த்தோம். ஒவ்வொரு முறையும் inhouse compliment என மலேஷியன் வெஜ் ரோல் தந்தார்கள். பெப்பர் சிக்கன், Pan griddled vegetables, சில்லி பனீர், புக்கெட் ஃபிஷ் என நாங்கள் சாப்பிட்ட அத்தனை ஸ்டார்டர்களுமே அட்டகாசமாய் இருந்தது. சூப் வகைகள் ஓக்கே. மெயின் கோர்ஸிற்கு மலேஷியன் நூடுல்ஸ் (ரிப்பன் டைப்), Thai fried rice, ஹாங்காங் ஃப்ரைட் ரைஸ், ப்ரெட் பாஸ்கெட் எல்லாமே சூப்பர். சைட் டிஷ் க்ரேவிகளும் upto the mark. டெசர்ட் செக்‌ஷன் இன்னும் கொஞ்சம் கான்சண்ட்ரேட் பண்ணலாம். ஐஸ்க்ரீம் தான் பிரதானமாய் இருக்கிறது. Sizzling Brownie ஆவரேஜ் ரகம் தான்.






குறையாகத் தெரியும் விஷயம் இடப்பற்றாக்குறை தான். சின்ன இடமாக இருப்பதால் ரொம்ப இரைச்சலாக இருக்கிறது.

மேலதிக தகவல்கள்

உணவகம் - தி ராக்
உணவு/Cuisine - Oriental, Tandoor Veg & Non-Veg. No buffet.
இடம் - அடையார் (பஸ் டிப்போ சிக்னல் அருகில். Next to Sony Center)
அண்ணாநகர் (3rd avenue. ஆர்ச்சிஸ், அமரான் பேட்டரி கடை அருகில்)
வேளச்சேரி. விஜயநகர் அடையார் ஆனந்த பவன் எதிரில் (நான் இங்கு சென்றதில்லை)
டப்பு - Moderate. ஒருவருக்கு வெஜ் - 350, நான் வெஜ் - 400 ஆகும். Value for money.

பரிந்துரை : Must try.

7 comments:

விஜி said...

வரும் போது கூட்டிட்டு போகனும். :)

கோவி.கண்ணன் said...

எங்க ஊரிலும் (சிங்கை) இருக்கு ஜங்கிள் ரெஸ்டாரென்ட் இன்னும் உள்ளே சென்றதில்லை

CS. Mohan Kumar said...

Velachery Rock is very average. I prefer Rain Forest Adyar taste better than this.

Raghu said...

வேள‌ச்சேரி ராக்தான் அடுத்த‌து ப்ளான் ப‌ண்ணியிருக்கேன். இங்கே Buffet இல்ல‌ன்னு சொல்லிட்டீங்க‌..ரொம்ப‌ எதிர்பார்த்தேன் :(

வேள‌ச்சேரியில் Buffet provide ப‌ண்ற‌ மாதிரி ந‌ல்ல‌ ரெஸ்டார‌ண்ட் இருந்தா சொல்லுங்க‌ வித்யா..If not Velachery, around Thiruvanmiyur?

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜி (கண்டிப்பா).

நன்றி கோவி.கண்ணன் (முயற்சி பண்ணிப் பாருங்க).

நன்றி மோகன் (ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்:))

நன்றி ரகு (Flamingo serves good veg buffet. வேறெதுவும் பஃபே இருக்கறதா எனக்கு தெரியல. தெரிஞ்சா கண்டிப்பா சொல்றேன்)

சுரேகா.. said...

யுடான்ஸ் வாழ்த்துக்கள்!

சுரேகா.. said...

யுடான்ஸ் வாழ்த்துக்கள்!