நீராவியாய் எழுந்து
மேகமாய் தவழ்ந்து
மழையாய் பொழிந்து
அருவியாய் விழுந்து
நளினமாய் நடக்கும்
நதியே
உன் நடையில் ஏனிந்த அவசரம்?
கடல் காதலனுடன் கூடச் செல்கிறாயே அதனாலேயா?
டிஸ்கி 1 : மணிகண்டனின் இந்தக் கவுஜையைப் பார்த்தது பழைய நினைவுகளை மீட்டெடுத்து (பள்ளிப் பருவத்தில் வடித்த கவுஜையிது) கவுஜை பதிந்திருக்கிறேன்.
டிஸ்கி 2 : திட்டறதுக்கு முன்னாடி லேபில பார்த்துடுங்கப்பு :)
32 comments:
பரவாயில்ல...நல்லா தான் எழுதியிருக்கீங்க...
//கடல் காதலனுடன் கூடச் செல்கிறாயே அதனாலேயா?//
இஸ்கூல்ல..அப்பவேவா ......????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........
//Labels: கொலைவெறிக் கவுஜைகள் //
இதுக்கு பேரு தான் ஆண்டிசிபேடரி பெயில்னு சொல்வாங்களோ !!!
லேபிள் எல்லாம் பார்க்க நேரமில்லை. உங்கள.........
தலைப்பே ஒரு கவிதைதான்
நல்லாத் தானே இருக்கு. அதையேன் கொலைவெறிக் கவுஜை என்று சொல்லறீங்க!!!!
;-))
வாங்க அ.மு.செய்யது. நான் அப்பவே பெரிய ரவுடியாக்கும்:)
ஏதோ அறியாப் பொண்ணு தெரியாம எழுதிட்டேன்னு மன்னிச்சு விட்டுடு கார்க்கி.
நன்றி ஜமால்.
விஜய் நான் என்னிக்குமே பொய் சொல்லமாட்டேன்.
வாங்க முல்லை.
நல்லாத்தானே இருக்கு தாரணி.
கொலைவெறி காணோமே. அமைதியான நதியினிலே ஓடும், பாட்டு மாதிரி அழகா இருக்கு. இன்னிக்கு என்ன நதி நாளா:)
நதி = பெண்
கடல் = ஆணா?
அவ்வ்வ்வ்வ்!
உண்மைதான்!
:)))))))))))))))))))))
நன்றி வல்லிசிம்ஹன். வழி மாறி நம்ம கடை பக்கம் வந்துட்டீங்க போல. நான் தாரணியில்ல:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோதிபாரதி.
அழகு நடை
இது கவுஜை அல்ல
(என் கருத்து)
இப்படி எல்லாம் கூட எழுதுவீயளா?
நெசமா நல்லாருக்கு புள்ள
ம்..ம்.
எனக்கும் தோன்றியது:
”ஸ்கூல்லியேவா?”
:-)
நல்லா இருக்கு. படமும் கூட.
நன்றி ஜமால்.
நன்றி Truth.
என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியல நர்சிம்.
நன்றி. படம் ஊட்டியில் நான் எடுத்தது தீபா.
அப்பவே நதி கூட நடக்க ஆரம்பிச்சாச்சா...
:)-
பள்ளிக் காலத்தில் எழுதியதுன்னா...ஓ.கே :)
அட, நல்லா இருக்கு வித்யா. பள்ளிக்கூட காலத்திலிருந்தே ஒரு திட்டத்தோட தான் இருந்திருக்கீங்க.
ஆமாம் அமித்து அம்மா:)
நன்றி அண்ணே.
நன்றி விக்னேஷ்வரி.
அப்பத்திலேந்தே ஒரு மார்க்கமாத்தான் இருந்துகீற...
:))
இலக்கியத்துக்கு எதிரா கொல வெறி கவுஜயா ! ஆண்டவா !
குட் ஒன் வித்யா.
வாரமலர், குடும்ப மலர், வசந்தம் இதுக்கெல்லாம் அனுப்பினீங்கண்ணா உடனே பிரசுரம் ஆகும்.
U too ????
//வாரமலர், குடும்ப மலர், வசந்தம் இதுக்கெல்லாம் அனுப்பினீங்கண்ணா உடனே பிரசுரம் ஆகும்.//
இதுக்கு வித்யாவை நேராவே திட்டி இருக்கலாம் ;)
//உன் நடையில் ஏனிந்த அவசரம்?//
அனைய போட்டுவெச்சிடாதீங்க அப்புறம்...?????? ஹி ஹி
நல்லாயிருந்தது
அண்ணன மாதிரி தான தங்கச்சியும்:)
ஹி ஹி மணிகண்டன் எப்படி நம்ம இலக்கியச் சேவை?
முரளிகண்ணன் ஏனிந்த கொலைவெறி. அதுக்கு நீங்க கெட்டவார்த்தைல என்ன திட்டிருக்கலாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
வாங்க நாகை சிவா. அதானே. பாவம் சின்னப்பொண்ணுன்னு உடாம எப்படியெல்லாம் டேமேஜ் பண்றாங்க.
வருகைக்கு நன்றி அபுஅஃப்ஸர்.
ஓட்டம் இல்லையேல்
என் ஓட்டம் நின்று விடும்
கடலை சேர்வதற்க்குள் நான்
கூவத்தில் கலந்து விடுவேன்
இப்படிக்கு நதி
ஹி ஹி அருண் கவிதை ஜூப்பர்.
இப்பலாம எங்கங்க வித்யா இப்படி அவசரமா போகமுடியுது? இந்த பாவிப்பய அரசியல்காரனுங்க ஆத்துல இருக்கிற எல்லா மண்ணையும் அள்ளி வித்துப்புட்டானுங்க. இப்ப ஆறு இருக்கிற லட்சணத்துல, என்னால நளினமாவும் போகமுடியல.. நாலு பேருக்கு உதவிகரமாகவும் இருக்க முடியல.
இப்படிக்கு
நதி
Post a Comment