அப்பாவிற்கு மாற்றல் வந்ததால் அண்ணா நகரில் குடியேறினார்கள். பழைய வீட்டை காலி பண்ணிவிட்டு அண்ணா நகருக்கு வர ஒரு டூரிஸ்ட் கார் ஏற்பாடு பண்ணிருந்தோம். டிரைவர் தெரிந்தவர் தான். வேலை முடிந்து திரும்புகையில் என்னிடம் கேட்டார்.
"ஏன்க்கா ஐயர வச்சி பூஜை எதுவும் பண்ணாமலே புது வீட்டுக்கு போறாரே அப்பா."
"வாடகை வீட்டுக்கு எதுக்குங்க அதெல்லாம். நாளைக்கு காலைல பால் காய்ச்சுவாங்க. அது போதும்."
"வாடகை வீடா? நான் சொந்த வீடுன்னுல்ல நினைச்சேன்."
"அண்ணாநகரில் சொந்த வீடு வாங்குற அளவுக்கு வசதி இருந்தா எங்கப்பா ஏன் வாடைக்கு உங்ககிட்ட கார் எடுக்கிறாரு? சொந்தமா அவரே ரெண்டு வண்டி வாங்கிருக்கமாட்டாரு?"
"அதுவும் சரிதான்"
********
ஆனந்த தாண்டவம் படத்தில் வரும் கனா காண்கிறேன் பாடல் தான் இப்போதைக்கு என் ஹிட் லிஸ்டில் உள்ளது. கண்ணோடு காண்பதெல்லாம் (ஜீன்ஸ்) பாட்டிற்க்குப் பிறகு நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில் அட்டகாசமான பாடல். பாடல் தொடங்கும்போதும் முடியும்போதும் வரும் சுபா முட்கலின் குரலும் சூப்பர். நல்ல சாய்ஸ் GVP:)
**********
அண்ணன் குழந்தைகளோடு கோயிலுக்குப் போயிருந்தோம். பிரசாதமாய் கொடுத்த சர்க்கரைப் பொங்கலைப் பார்த்த அண்ணன் மகள் கேட்டாள். "ஏன் அத்த எப்பபாரு சாமிக்கு ரைஸே சாப்பிட தர்றாங்களே. போரடிக்காதா? சாமி பிட்ஸா சாப்பிடாதா?"
*********
SK, கார்க்கியோட வயித்தெரிச்சலோ என்னமோ தெரியல. நல்ல ரெஸ்டாரெண்ட் போய் ரொம்ப நாளாச்சு. ரொம்ப நல்லாருக்கும்டான்னு என் தம்பிய அழைச்சிகிட்டு போன ரெஸ்டாரெண்ட் சொதப்பினதுல அவன் செம டென்ஷனாய்ட்டான். ரொம்ப நாளா போகனும்னு நினைச்சிட்டிருந்த உணவகத்துக்கு ரகுவும், நாத்தனார் கணவரும் சர்ப்ரைஸாக அழைத்துக்கொண்டு போனாலும், அது சூப்பர் விக்கெட் ஆகி கடுப்பை கிளப்பிவிட்டது. அதப் பத்தின டீடெய்லான பதிவு அப்புறமா:)
*******
Times Now, NDTV, CNN IBN என எல்லா சேனல்களிலும் தேர்தல் ஸ்பெஷல் debate என்கிற பெயரில் குழாயடி சண்டை நடத்திக்கொண்டிருக்கின்றன. ராகுல் காந்தி ரசகுல்லா சாப்பிடதிலிருந்து, மோடி வாக்கிங் போறது வரை லைவ் கவரேஜ். நல்லவேளை நம்மூர் சேனல்களெல்லாம் வெறும் பிரசார ஒளிப்பரப்போடு தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டுள்ளன. இவனுங்களும் debate ஏதாவது ஆரம்பிச்சாங்க முடிஞ்சுது கதை. தேர்தல் வர்றதுக்குள்ள ஒரு வேட்பாளரும் உயிரோடு இருக்கமாட்டாங்க. எல்லாம் வெட்டிக்கிட்டு செத்துடுவானுங்க.
**********
April 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
Me the first !!
//
SK, கார்க்கியோட வயித்தெரிச்சலோ என்னமோ தெரியல. நல்ல ரெஸ்டாரெண்ட் போய் ரொம்ப நாளாச்சு. //
திரை விமர்சனம்,புத்தக விமர்சனத்திற்கு முதன் முறையாக ஓட்டல் விமர்சனம் எழுதி டிரெண்ட் செட்ட பண்ண நீங்களே இப்படி சொல்லலாமா ?
பிள்ளையாரே எலில போய்ட்டு இருக்கும் போது பூசாரிக்கு புல்லட் கேட்குதா புல்லட்?
வித்யா.. ஆனந்த தாண்டவம் பாடல் நித்யஸ்ரீ பாடவிலலை என்று தெரிகிறது ரெண்டு வாரத்துக்கு முன் விகடனிலோ... குமுதத்திலோ.. அந்த பாடகியின் பேட்டி வந்திருந்தது.. அருமையான பாட்டு..
:-)))
நன்றி செய்யது.
கார்க்கி. சரி வேணாம் விடு.
சங்கர்ஜி நிதய்ஸ்ரீ, சுபா மற்றும் வினித்ரா என மூவர் பாடிய பாட்டு அது. ஆனா மெயின் வாய்ஸ் நித்யஸ்ரீயினுடையது என நினைக்கிறேன். தவறெனில் திருத்திவிடுகிறேன்.
நன்றி சென்ஷி.
துணுக்ஸ் சுவாரசியம்!
நன்றி வித்யா, தவறாமல் என் பதிவிற்கு வருவதற்கும், பின்னுட்டம் இடுவதற்கும்.
அந்த பாடல், நித்யஸ்ரீ, விநித்ரா, சுபா பாடியது.
sk வோட வயிதெரிச்சல் சதவிகிதம் அதிகமா இருக்கும்.
நன்றி முல்லை.
நன்றி மயில்.
:)
//திரை விமர்சனம்,புத்தக விமர்சனத்திற்கு முதன் முறையாக ஓட்டல் விமர்சனம் எழுதி டிரெண்ட் செட்ட பண்ண நீங்களே இப்படி சொல்லலாமா ?
//
haa...haa..haa..
\\"அண்ணாநகரில் சொந்த வீடு வாங்குற அளவுக்கு வசதி இருந்தா எங்கப்பா ஏன் வாடைக்கு உங்ககிட்ட கார் எடுக்கிறாரு? சொந்தமா அவரே ரெண்டு வண்டி வாங்கிருக்கமாட்டாரு?"\\
:-))))
வித்யா, ஹி ஹி ஹி .. அப்பா இப்போ தான் சந்தோஷமா இருக்கு :)
மயில், இங்கே வந்து போட்ட தர்றீங்கோ :)
"அண்ணாநகரில் சொந்த வீடு வாங்குற அளவுக்கு வசதி இருந்தா எங்கப்பா ஏன் வாடைக்கு உங்ககிட்ட கார் எடுக்கிறாரு? சொந்தமா அவரே ரெண்டு வண்டி வாங்கிருக்கமாட்டாரு?"
"அதுவும் சரிதான்" //
ரொம்ப சரி தான்க்கா.
ஆனந்த தாண்டவம் பாடல்கள் இன்னும் கேக்கல. :(
"ஏன் அத்த எப்பபாரு சாமிக்கு ரைஸே சாப்பிட தர்றாங்களே. போரடிக்காதா? சாமி பிட்ஸா சாப்பிடாதா?" //
இங்கே கோவில்களில் பிஸ்கட் குடுக்கும் பழக்கம் உண்டு. உங்கள் மருமகளோடு டெல்லி வாங்க.
SK, கார்க்கியோட வயித்தெரிச்சலோ என்னமோ தெரியல. //
நீங்க போடலேனா என்ன வித்யா, சீக்கிரமே நான் போடுறேன். :)
Times Now, NDTV, CNN IBN என எல்லா சேனல்களிலும் தேர்தல் ஸ்பெஷல் debate என்கிற பெயரில் குழாயடி சண்டை நடத்திக்கொண்டிருக்கின்றன. //
ஐயோ தாங்க முடியல வித்யா. டிவில நியூஸ் பாக்குறதையே நிறுத்தியாச்சு.
***
வித்யா, ஹி ஹி ஹி .. அப்பா இப்போ தான் சந்தோஷமா இருக்கு
****
me too happy !
விக்னேஷ்வரி, என்னது வித்யா உங்களுக்கு அக்காவா :) :) ஜூப்பரு :)
இதுக்கு எல்லாரும் கூட்டு செர்ந்துடுவீங்களே :) :)
மணி, நான் தனி மரம் இல்லைன்னு நிரூபிச்சதுக்கு நன்றிகள் :) :)
துணுக்ஸ் கலக்ஸ்
வழக்கம் போல சூப்பரப்பு
கணா காண்கிறேன் பாட்டு என்னோட favorite கூட
//அண்ணன் குழந்தைகளோடு கோயிலுக்குப் போயிருந்தோம். பிரசாதமாய் கொடுத்த சர்க்கரைப் பொங்கலைப் பார்த்த அண்ணன் மகள் கேட்டாள். "ஏன் அத்த எப்பபாரு சாமிக்கு ரைஸே சாப்பிட தர்றாங்களே. போரடிக்காதா? சாமி பிட்ஸா சாப்பிடாதா?"//
சிரிச்சு சிரிச்சு பக்கத்துல உட்கார்ந்து இருக்கிறவங்க எல்லாம் ஒரு மாதிரியா பார்க்குறாங்க..ஏதாச்சும் பிரச்சனைன்னா உங்க பேரை போட்டு கொடுத்துடுவேன் ஓகே தானே
//"ஏன் அத்த எப்பபாரு சாமிக்கு ரைஸே சாப்பிட தர்றாங்களே. போரடிக்காதா? சாமி பிட்ஸா சாப்பிடாதா?"//
கலக்கல்....
கலக்கல்
நன்றி அமித்து அம்மா.
அண்ணே என்னாதிது சின்னப்புள்ள மாதிரி சிரிச்சுகிட்டு?
நன்றி விஜய்.
//அது சூப்பர் விக்கெட் ஆகி கடுப்பை கிளப்பிவிட்டது. அதப் பத்தின டீடெய்லான பதிவு அப்புறமா:)
//
ஏன் என்ன ஆச்சு, வெயிட்டிங்..
SK, இதுக்கெல்லாம் அசரமாட்டோம்ல. நான் இல்லன்னா விக்னேஷ்வரி.
வாங்க விக்னேஷ்வரி. ரொம்ப நன்றி.
மணிகண்டன் SK கூட கூட்டு சேராத.
நன்றி தராசு.
நன்றி அருண்.
நன்றி மணிநரேன்.
நன்றி அபுஅஃப்ஸர்.
நர்சிம் அந்த சோகக் கதையை போட்டோவோடு தனி பதிவா போடறேன். தனி பதிவா போடற அளவுக்கு அவ்ளோ சோகம்:)
சூப்பரா இருக்கு!
எசூஸ்மி.. நம்ம ஊர்ல சாராயம் கேக்குற சாமியெல்லாம் இருக்குதுங்க :-)
நன்றி அபி அப்பா.
நான் சொல்றது வெஜிடேரியன் சாமி உழவன்:)
அதப் பத்தின டீடெய்லான பதிவு அப்புறமா:)
//
அதப்பத்தில்ல முதல்ல போட்டுருக்கணும்..
தேர்தல் வர்றதுக்குள்ள ஒரு வேட்பாளரும் உயிரோடு இருக்கமாட்டாங்க. எல்லாம் வெட்டிக்கிட்டு செத்துடுவானுங்க.//
ROTFL..!
துணுக்ஸ் சுவாரசியம்!
நல்லா இருந்திச்சி..
எங்க்ச் வீட்டுல நெஜம்மாவெ ஒரு நாள் பிட்சா நெய்வேத்தியம் பண்ணினோம். என்ன அது பிட்ஸா ஹட்டில் வாங்கி வந்தது.
இந்து மதத்தில் அது தான் ஒரு சவுகரியம். மற்ற மதத்தில் கேட்க முடியாது..
அன்புடன்
சீமாச்சு
நன்றி ஆதி.
நன்றி ச்சின்னப்பையன்.
நன்றி சீமாச்சு.
//சாமி பிட்ஸா சாப்பிடாதா?"//
:))
இரு நாட்களுக்கு முன்பு நாங்க பேசிக்கிட்டு இருந்தோம் :)
வாங்க சிவா:)
//தேர்தல் வர்றதுக்குள்ள ஒரு வேட்பாளரும் உயிரோடு இருக்கமாட்டாங்க. எல்லாம் வெட்டிக்கிட்டு செத்துடுவானுங்க.
//
தேர்தல் முடிஞ்ச பிறகு ஓட்டுப் போட்டவங்களை சாகடிப்பாங்க ;-)
\\KVR said...
//தேர்தல் வர்றதுக்குள்ள ஒரு வேட்பாளரும் உயிரோடு இருக்கமாட்டாங்க. எல்லாம் வெட்டிக்கிட்டு செத்துடுவானுங்க.
//
தேர்தல் முடிஞ்ச பிறகு ஓட்டுப் போட்டவங்களை சாகடிப்பாங்க ;-)
\\
:)))
Post a Comment