April 20, 2009

அப்பவே சொல்லிருக்கனும்

உன்னை முதன் முதலில் HOD அறையின் முன் பார்த்த போது ஒரே டிபார்ட்மெண்ட் என்ற தெரிந்தபின் நீ உதிர்த்த அந்த சினேகமான புன்னகையின்போதே சொல்லிருக்கனும். மெல்ல நண்பர்களான பின்னொருநாளில் தொழிற்சாலை பயிற்சிக்கு சென்றபோது பேசிய ஸ்வீட் நத்திங்ஸின் போதே சொல்லிருக்கனும். உன்னையும் என்னையும் இணைத்து நண்பர்கள் கேலி செய்தபோது உள்ளலவில் மகிழ்ந்தாலும், வேற ஆளே கிடைக்கலயாடா என்று கேட்டபோதே சொல்லிருக்கனும்.

கல்லூரி ஆண்டு விழாவின் போது புடவை கட்டிக்கொண்டு வந்து எப்படியிருக்கு என்று நீ கேட்டதற்க்கு தேவதைகள் புடவை கட்டினால் நன்றாகத் தான் இருக்குமென என சொல்ல வாய்திறந்து பேரலுக்கு துணி சுத்தினமாதிரி இருக்குன்னு சொன்னேனே அப்பவே சொல்லிருக்கனும். மருதாணி வைத்த கைகளைக் காட்டி நல்லாருக்கான்னு கேட்டபோது உன் உள்ளங்கைகளில் முத்தம் பதிக்க நினைத்தாலும் பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்குன்னு சொன்னேனே அப்பவே சொல்லிருக்கனும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என நீ பாடிமுடித்தபோது எனக்காகத்தானே பாடினே என்று கேட்க நினைத்து காக்கா கத்தினத இன்னிக்கு தான் லைவ்வா கேட்டேன் என்றேனே அப்போதே சொல்லிருக்கனும். கொலை பசியோடு கேண்டீன் சென்றபோது இரண்டாவது தோசை கொஞ்சம் லேட்டாகுமென தெரிந்து முதல் தோசையை உன்னை சாப்பிட சொன்னேன். என் மேல அவ்ளவு அக்கறையான்னு நீ கேட்டபோது நான் அக்கறை காட்டாம வேற யார் காட்டுவா என மனதினுள் நினைத்தாலும் வெளிக்காட்டாமல் முதல்ல நீ சாப்பிடு. உனக்கு எதுவும் ஆகலைன்னா நான் சாப்பிடறேன் என்றேனே அப்பவே சொல்லிருக்கனும்.

விபத்தில் கை எலும்பு முறிந்து கட்டோடு நீ வகுப்புக்கு வந்தபோது எல்லாரும் get well soon என்றெழுதிய கட்டை காமித்து நீ எதுவும் எழுதலையா என்று கேட்டாய். வேண்டாம் உனக்கு வலிக்குமென்று சொல்லாமல் ரெண்டு கையும் உடைஞ்சிருந்தா நல்லாருந்திருக்கும்னு சொன்னேனே அப்பவே சொல்லிருக்கனும். ஒரே கம்பெனியில் இருவருக்கும் வேலை கிடைத்ததால் நம் வாழ்க்கைப் பயணம் தொடர்வதை எண்ணி சந்தோஷப்பட்ட நான் உன்னிடம் கர்மம் காலேஜ் முடிச்சும் உன் மூஞ்சிய பார்க்கும்படி ஆகிடுச்சே என்றேனே அப்பவே சொல்லிருக்கனும். என் அம்மாவைப் பார்க்க வந்திருந்த உன்னை உன் மருமகள பாருமா என சொல்ல நினைத்து காலேஜ்லிருந்து என் உயிரெடுக்கற பிசாசு இதுதான்மா என சொல்லிமுடித்தேனே அப்பவே சொல்லிருக்கனும்.

மின்னஞ்சலில் உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என நீ சொன்னபோது அவர்களை வரவேண்டாமென சொல். நானிருக்கும்போது வேற எவன் உன் கழுத்துல தாலி கட்டுவான்னு பார்க்கிறேன் என சொல்ல தைரியம் வராமல் பாவம் அந்த பையன் என சொன்னேனே அப்பவாவது சொல்லிருக்கலாம். உன் கல்யாணத்துக்கு வராத காரணத்திற்காக நீ கோபித்துக் கொண்டாயே அப்பவாவது சொல்லிருக்கலாம். ஒவ்வொரு முறை உன்னிடமிருந்து அழைப்போ அஞ்சலோ வரும்போது அடித்துக்கொள்கிறதென் மனது. சொல்லித் தோற்ற காதலை விட சொல்லாமல் தோற்கும் காதலில் வலி அதிகமாம். உணர்கிறேன் உன்னால்.

60 comments:

அ.மு.செய்யது said...

இது நகைச்சுவை பதிவா..இல்ல சீரியஸானு யோசிச்சுக்கிட்டே படிக்க ஆரம்பிச்சேன்.

கடைசியில மனச டச் பண்ணிட்டீங்க..

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க. இத எப்பவோ நீங்க சொல்லி இருக்கணும்.

அ.மு.செய்யது said...

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அழகான பதிவை படித்த திருப்தி !!!

அருமை வித்யா.

S.A. நவாஸுதீன் said...

பழைய பாலச்சந்தர் படம் பார்த்த ஒரு Feelings. அருமை

டக்ளஸ்....... said...

அடிக்கடி..அப்டின்னு"அப்பவே சொல்லிருக்கனும்" வரும்போதெ நினைச்சேன்..
இது காதல்தான்னு நினைச்சேன்..!
ஆனா நீங்க கடைசியில் டுவிஸ்டு வச்சுருப்பீங்கனு நினைச்சு ஏமாந்ததுதான் மிச்சம்..!

நாகை சிவா said...

:::)))

வித்யா said...

நன்றி அ.மு.செய்யது.

நன்றி நவாஸுதீன்.

ட்விஸ்ட் வைக்கிற அளவிக்கெல்லாம் நான் இன்னும் எழுதப் பழகலீங்க டக்ளஸ்.

நன்றி சிவா:)

Truth said...

நல்லாருக்கு வித்யா...

அபுஅஃப்ஸர் said...

அருமையான பதிவு வித்யா

உள்ளுணர்வை டச் பண்ண வலி உங்க பதிவில்

ஸ்ரீமதி said...

Akka romba super... Kalakkitteenga... :))Kalangavenchitteenga...

வித்யா said...

நன்றி truth.

நன்றி அபுஅஃப்ஸர்.

நன்றி ஸ்ரீமதி.

மணிகண்டன் said...

பையன் யாரு ? :)-

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க வித்யா.

Cable Sankar said...

நல்லா போயிகிட்டெயிருந்தது. திடீர்ன்னு இறங்கிருச்சு வித்யா..

வித்யா said...

நன்றி மணிகண்டன். குதுகலமா இருக்கற குடும்பத்துல கும்மி அடிச்சிடாதீங்க:)

வாங்க சங்கர்ஜி. எப்படி முடிக்கறதுன்னு தெரியல. அதான்:)

மணிகண்டன் said...

**
குதுகலமா இருக்கற குடும்பத்துல கும்மி அடிச்சிடாதீங்க:)
**

இவ்வளவு சீரியசா ஆயிட்டேங்க :)- மன்னிச்சிடுங்க !

சின்ன அம்மிணி said...

நல்லா இருக்குங்க வித்யா.

வித்யா said...

ச்சே சே சீரியஸா எடுத்துக்கல மணிகண்டன்.

நன்றி சின்ன அம்மிணி:)

சென்ஷி said...

:-))

நல்லாயிருக்குங்க

சந்தனமுல்லை said...

:-) நல்லாருக்கு வித்யா!

விஜய் said...

வாவ்!!!!!

மிகவும் அருமை.

ஆனா, கவிதைன்ன்னா, மடிச்சு மடிச்சுல்ல எழுதணும், நீங்க என்ன இப்படி நேரா எழுதிட்டீங்க???

கவிதை மிக அருமை :-)

எம்.எம்.அப்துல்லா said...

//ஸ்ரீமதி said...
Akka romba super... Kalakkitteenga... :))Kalangavenchitteenga...

//

எனக்குத் தெரிந்து உங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசு. அக்கான்னு கூப்பிட்டு யூத்தாக பாக்குறியா ஸ்ரீ

:))

எம்.எம்.அப்துல்லா said...

அருமை வித்யா. நான் எழுத வேண்டிய பதிவு இது.

SK said...

வாழ்க வளமுடன். :)

வித்யா said...

நன்றி சென்ஷி.

நன்றி முல்லை.

நன்றி விஜய். இது கவிதை இல்ல. எனக்கு கவிதை எழுத வராது. கவுஜ தான் வரும்:)

வித்யா said...

ச்சே கல்யாணமாச்சின்னாலே வயசானவங்களாக்கிடுறாங்க அண்ணே. ரெம்ப நன்றி அண்ணே:)

நன்றி SK:)

விக்னேஷ்வரி said...

முதல்ல கொஞ்சம் போர் அடிக்கற மாதிரி இருந்தது. ஆனா, கடைசில டச் வச்சுட்டீங்க. Great. Superb...

ராமலக்ஷ்மி said...

'அப்பவே வந்திருக்கணும்' உங்க எழுத்துக்களை வாசிக்க. சரி, இப்பவாவது வந்திட்டேனே:)!

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க வித்யா!

வித்யா said...

நன்றி விக்னேஷ்வரி.

நன்றி ராமலக்ஷ்மி

ஆதிமூலகிருஷ்ணன் said...

கிளைமாக்ஸ் படிச்சப்புறமும் புரியல எனக்கு இது சீரியஸ் பதிவா காமெடிப்பதிவான்னு.. அவ்வ்வ்..

Arun Kumar said...

அருமையான பதிவு.
பழைய ஆட்டோகிராப் நினைவுகள் எல்லாம் அப்படியே ஓடியது போல இருந்தது.

வித்யா said...

ஆதி எழுதன எனக்கே தெரியல. உங்களுக்கு எப்படி தெரியும்:)

நன்றி அருண்:)

ச்சின்னப் பையன் said...

நல்லாயிருக்குங்க

Deepa said...

வாவ்! அருமை வித்யா. ரொம்ப ரசித்தேன். இப்படித்தான் ஈகோவினால் அன்பை வெளிப்படுத்தத் தெரியாமல் சிலர் ப்ரிதாபமாகத் தோற்று விடுகிறார்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ப்ரொபைலில் மெயில் ஐடி தேடிப்பார்த்தேன் இல்லையே.. எனது : thaamiraa@gmail.com

மணிநரேன் said...

சந்தர்ப சூழ்நிலைகளை நழுவவிட்டுவிட்டால் பின்னர் கிடைக்காது என்பதை மிக அழகாக கூறியுள்ளீர்கள்.

வித்யா said...

நன்றி ச்சின்னப்பையன்.

நன்றி தீபா.

நன்றி மணிநரேன்.

தராசு said...

//சொல்லித் தோற்ற காதலை விட சொல்லாமல் தோற்கும் காதலில் வலி அதிகமாம். உணர்கிறேன் உன்னால்.//

உண்மை, உண்மை, உண்மை.
அனுபவிச்சவுங்களுக்குத்தான் தெரியும்.

ஸ்ரீமதி said...

//எம்.எம்.அப்துல்லா said...
//ஸ்ரீமதி said...
Akka romba super... Kalakkitteenga... :))Kalangavenchitteenga...

//

எனக்குத் தெரிந்து உங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசு. அக்கான்னு கூப்பிட்டு யூத்தாக பாக்குறியா ஸ்ரீ

:))//
//வித்யா said...
ச்சே கல்யாணமாச்சின்னாலே வயசானவங்களாக்கிடுறாங்க அண்ணே. ரெம்ப நன்றி அண்ணே:)//

அச்சச்சோ என்னதிது எனக்கு தெரியாதே... :(( இப்போ தான் முதல்முதல்ல வந்தேன் உங்க தளத்திற்கு... வந்ததும் வித்யான்னு கூப்ட்டா நல்லா இருக்காதேன்னு அக்கான்னு சொன்னேன்... ஏன் அண்ணா இந்த கொலைவெறி?? :))

வித்யா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தராசு.

ஸ்ரீமதி நீ பேர் சொல்லியே கூப்பிடலாம். தப்பா எடுத்துக்க மாட்டேன்:)

narsim said...

//வாங்க சங்கர்ஜி. எப்படி முடிக்கறதுன்னு தெரியல. அதான்:)//

நல்லாத்தானே முடிச்சு இருக்கீங்க.. இன்னும் ஒரு படி மேலே போய்..

“ நீ இருக்கும் பொழுது சொல்ல வார்த்தைகள் இல்லை.. இப்போ இத்தனை வார்த்தைகள் இருக்கு.. நீ இல்லாமப் போன..”

" உழவன் " " Uzhavan " said...

பெரும்பாலும் நம்மாளுங்க எல்லாமே இப்படித்தான்.. எதை எப்ப பண்ணனுமோ அப்ப பண்ணுறது இல்லை. அப்புறம் கெடந்து குய்யோ முறையோனு இப்படி பீல் பண்ணி புலம்பவேண்டியது.
சரியான திட்டமிடாத காதலாக இருக்கும். இல்லையேல் சரியான பருவ முதிர்ச்சியில் வராத காதலாக இருக்கும்.

" உழவன் " " Uzhavan " said...

பெரும்பாலும் நம்மாளுங்க எல்லாமே இப்படித்தான்.. எதை எப்ப பண்ணனுமோ அப்ப பண்ணுறது இல்லை. அப்புறம் கெடந்து குய்யோ முறையோனு இப்படி பீல் பண்ணி புலம்பவேண்டியது.
சரியான திட்டமிடாத காதலாக இருக்கும். இல்லையேல் சரியான பருவ முதிர்ச்சியில் வராத காதலாக இருக்கும்.

Deepa said...

வித்யா.. நேற்று தூங்கும் முன் உங்கள் பதிவை மறுபடியும் நினைத்துப் பார்த்து அசைபோட்டென். இதோ மறு வாசிப்பு செய்ய வந்து விட்டேன்.

சொல்ல நினைத்ததும் ஆனால்!
சொல்லி முடித்ததும் இரண்டுமே ரொம்ப அழகு! முன்னது லயிப்பு. பின்னது குறும்பு!

வித்யா said...

நன்றி நர்சிம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உழவன்.

ஊக்கத்திற்க்கு நன்றி தீபா. அந்தளவுக்கா நல்லாருக்கு.

Suresh said...

உங்க பதிவு மிக அருமை ...

After Reading this post i have become ur follower,

If you like my posts you can follow me ;) hope u like it

இராம்/Raam said...

அருமை... :)

வித்யா said...

நன்றி சுரேஷ். நான் உங்கள் பதிவுகளைப் படித்திருக்கிறேன். பின்னூட்டமிட்டதில்லை.

நன்றி இராம்.

SK said...

கல்யாணம் ஆச்சுனாலே எல்லா பெண்களும் ஆன்டி (aunty) தான் .. :) :) :)


உரக்க சொல்வோம் உலகுக்கு :) ..

இனிமே கல்யாணம் ஆகா போறவங்க எல்லாம் புரிஞ்சுகட்டும் ..

ஸ்ரீமதி, இங்கே அண்ணே சரியான பாயிண்டா புடிச்சுட்டாரு :) :)

வித்யா said...

SK பொறாமை உனக்கு.

வித்யா said...

பின்னூட்ட கயமைத்தனம்:)

jothi said...

Good style - Keep it up

பூக்காதலன் said...

நானும் அப்பவே சொல்லியிருக்கணும்.
பல முறை தங்களின் பதிவுகளை படித்தாலும்..
தங்கள் நடை (அதை சொல்லலப்பா)
உங்கள் எழுத்து நடை. நன்றாக உள்ளது என்பதை.

jothi said...

ஹி ஹி,.. நானும் அப்பவே சொல்லி இருக்கணும். என் நடை கொஞ்சம் பலவீனமானது என்பதை,..

வித்யா said...

நன்றி ஜோதி.

நன்றி பூக்காதலன்.

குசும்பன் said...

நல்லா இருக்கு சொல்லாத காதல் கதை!

வித்யா said...

நன்றி குசும்பன்:)

ஊர் சுற்றி said...

பின்னிட்டீங்க போங்க.
அருமையா இருக்கு... அப்படியே சி்லபேர் கண்முன்னால வர்றமாதிரி இருக்கு.

வித்யா said...

நன்றி ஊர்சுற்றி:)

நான் ஆதவன் said...

ஆஹா பதிவு சூப்பர்.

ஆனா நான் இத அப்பவே சொல்லியிருக்கனும். கொஞ்சம் லேட்டாயிடுச்சு

bhupesh said...

நீண்ட நாட்களுக்குப் பின் புல்லரிப்புக்கு உள்ளானேன். நல்ல பதிவு.