April 16, 2009

ஹேர் ஸ்டைல் - ஜூனியர் டைம்ஸ்

ஜூனியர் பிறந்தபோது தலை நிறைய முடி. ஆனால் சைடில் மட்டும் ஒன்னுமே இருக்காது. வீட்டிலிருப்பவர்களுக்கு அப்பவே கவலை. விளக்கெண்ணைய் தடவு அது இதுன்னு ஆயிரம் டிப்ஸ்.

ஒன்பது மாசத்துல எடுத்தது இது.
இது பெரியம்மா பண்ண வேலை
மொட்டை அடிக்கிறதுக்கு பத்து நாளுக்கு முன்னால எடுத்த போட்டோ இது. அம்மா வீட்ல வேலை செஞ்சவங்களோட கைங்கர்யம்.
அவனுக்கு காது குத்தினதுக்கப்புறம் எல்லாம் ரொம்ப பயந்தது மொட்டை அடிக்கதான். குலதெய்வம் கோயிலுக்கு மொட்டை அடிக்க போனபோது எக்ஸ்ட்ரா ஒரு வேண்டுதல வேற வெச்சிருந்தாங்க அம்மாவும் மாமியாரும். அது என்னன்னா மொட்டை அடிக்கும்போது குழந்தைக்கு ரத்த காயம் ஆகக்கூடாதுன்னு. எங்க வேண்டுதல்களுக்கெல்லாம் வேலையே வைக்காம ஜூனியர் நடந்துகிட்டார். போட்டோவ பாருங்க.


துளிகூட அசையல. ஒருவேளை அவர் எடுத்தது துரைக்கு சுகமா இருந்ததா தெரியல.


கரெக்டா முடிஞ்சவுடனே எழுந்துட்டான்.


அப்புறம் கோவில் குருக்கள் வீட்டிலேயே குளிப்பாட்டி சந்தனம் தடவியாச்சு.

இது மொட்டை அடிச்சு ரெண்டு மாசம் கழிச்சு எடுத்தது. ஸ்பைக்ஸ் ட்ரை பண்ணினேன்:)

அதுக்கப்புறம் ரகுவோட தாத்தா தவறிட்டதால பாக்கி இருக்கும் ரெண்டு மொட்டைகள் தள்ளி போச்சு. நிறைய முடி வளர்ந்துடவே வியர்வை சேர்ந்து ரொம்ப கஷ்டமா இருந்தது. அடிக்கடி சளி வேற. டாக்டர் கூட ஹேர் கட் பண்ண சொன்னார். சரி சிகை அலங்கார நிபுணரை வீட்டுக்கே கூட்டிட்டு வந்து ஹேர் கட் பண்ணிடலாம்னு முடிவு பண்ணோம். காலைல 7 மணிக்கு வந்தவர் ஒரு மணிநேரம் கழிச்சு "நானும் எவ்வளவோ குழந்தைகளுக்கு முடி வெட்டிருக்கேன். இந்தளவுக்கு கஷ்டப்பட்டதே இல்லை". பேசாம ஒரு ட்ரிம்மர் வாங்கி நீங்களே கட் பண்ணிடுங்கன்னுட்டு போய்ட்டார்.

அதுக்கப்புறம் ரெண்டு தடவை அவனுக்கு ஹேர்கட் பண்ணியாச்சு. எலக்ட்ரிகல் ட்ரிம்மர் வாங்கிட்டு வந்து துரை நல்லா தூங்கும்போது நான் பிடிச்சுக்க ரகுவே வேலையே முடிச்சிட்டார். மொட்டை அடிக்காதது தான் குறை. நல்லா ஒட்ட வெட்டியாச்சு. சம்மருக்கு ஜூனியருக்கும் வசதியா இருக்கு. அநேகமா இந்த ஜூன் மாதம் அவனுக்கு ரெண்டாவது மொட்டை போடுவாங்கன்னு நினைக்கிறேன். போடறபட்சத்தில் பயணக்குறிப்புகளோட போட்டோ செஷன் ஒன்னு வெச்சிடலாம்.

19 comments:

சந்தனமுல்லை said...

கலக்கல் படங்கள்!

சிலது முன்னாடியே சிலைடு ஷோவில் பார்த்த மாதிரி இருந்தது, எனக்கு! :-)

SK said...

juperu :) :)

மிஸஸ்.தேவ் said...

:)

வித்யா said...

நன்றி முல்லை. ஆமாம் கொஞ்சம் படம் ஏற்கனவே பார்த்தது தான்.

நன்றி SK.

நன்றி மிஸஸ்.தேவ்:)

புதுகைத் தென்றல் said...

:))

வல்லிசிம்ஹன் said...

எங்க பேஎரனுக்கு முடிவெட்டுவத்ஹூஎன்பது என் மகளுக்கும் மருமகனுக்கும் சிம்ம சொப்ப்பனம். இத்தனைஇக்கும் குழன்ந்தைகளுக்கான சலூன். குட்டிக் கார் ,பலூன், சாஃப்ட் டாய் எல்லாம் கொடுத்தும்,அவன் அழுகிறதைப் பார்த்துப் முக்கால் முடிந்ததூம் கிளம்பிட்டாஅங்க வீட்டுக்கு. இனி உங்க வழில வரவேண்டியதுதான் போல இருக்கு:)

எம்.எம்.அப்துல்லா said...

மாப்ள முடியோட முரட்டுக்காளை ரஜினி மாதிரி இருக்காரு. மொட்டையில சிவாஜி ரஜினி மாதிரி இருக்காரு

:))

கார்க்கி said...

ப்ளீஸ்.. ஒன்னுக்கு பத்து தடவ சுத்தி போடுங்க.. அவ்ளோ கண்ணு வச்சு இருக்கேன்..

Deepa said...

ஹைய்யோ நீங்க லக்கி. குட்டி தூங்கிட்டானே!
நேஹாக்கு போன சண்டே தான் மொட்டை போட்டோம். அழுது கத்திட்டா. விழுப்புண்கள் வேறு :-(

வித்யா said...

நன்றி சிஸ்டர்.

ட்ரை பண்ணி பார்க்க சொல்லுங்க வல்லிசிம்ஹன். முதல் தடவை ரொம்ப கஷ்டப்பட்டோம்ம் ரெண்டாவது தடவை அவனே சமர்த்தா வெட்டிக்கிட்டான்.

வித்யா said...

மாப்ள கிட்ட சொல்லிடறேன் அண்ணே.

கண்டிப்பா செய்றேன் கார்க்கி.

கஷ்டம் தான் தீபா:)

தாரணி பிரியா said...

super இந்த படத்துல ரெண்டை வச்சுதானே ஒரு நாலு மாசம் முன்னாடி எங்களை எல்லாம் ஒட்டுனிங்க :)

விக்னேஷ்வரி said...

Wow, very good pics. Nice Vidhya.

வித்யா said...

நன்றி தாரணிபிரியா. பயங்கர ஞாபக சக்திங்க உங்களுக்கு:)

நன்றி விக்னேஷ்வரி:)

மணிகண்டன் said...

ஜூனியர் சூப்பரா இருக்கான் வித்யா.

வித்யா said...

நன்றி மணிகண்டன்:)

Arun Kumar said...

பாஸ் மொட்டை பாஸ் :)

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை. மொட்டை அடிக்கையில் அழாமல் இருந்த ஜூனியர் என்றால் இவர் ஒருவராய்தான் இருக்க முடியும், நானறிந்து:))!

வித்யா said...

வாங்க அருண்.

நன்றி ராமலக்ஷ்மி:)