March 6, 2009

பூகம்பமும் சுனாமியும்

பூகம்பமும் சுனாமியும் ஒருசேர வந்தால் எப்படியிருக்கும்? அதனால் ஏற்படும் தாக்கங்கள் என்னவாக இருக்கும்? நீங்கள் அத்தருணத்தில் என்ன மனநிலையில் இருப்பீர்கள் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா? நான் அனுபவித்தேன். பூகம்பமும் சுனாமியும் ஒருசேர வந்தால் ஏற்படும் பிரளயம் நான் baby sitter வைத்துக்கொள்ளப் போகிறேன் என சொன்னவுடன் எங்கள் வீட்டில் ஏற்பட்டது. இத்தனைக்கும் மாலை இரண்டு மணிநேரம் தான் குழந்தையப் பார்த்துக்கொள்ள ஆள் வைக்கலாமென எண்ணினோம். ஐடியா குடுத்ததே ரகு தான். இரண்டு பேர் வீட்டில் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தார்கள். இருப்பவர்களோடு அபத்தமான ஒப்பிடு. அவளும் தான் குழந்தை வளர்க்கிறாள். அவளென்ன ஆளா வைத்துக்கொண்டாள்? ஏகப்பட்ட கம்பேரிசன்கள். மறுப்புகள். என்(ங்கள்) பக்க வாதங்களைக் கேக்ககூட தயாராக இல்லை.


குழந்தைய பார்த்துக்கணும்னு தான் வேலைய விட்ட. இப்ப அதுக்கு ஆள் வைக்கிறன்னு சொல்றீயே? அதே கேள்விய நான் திருப்பி கேக்கறேன். குழந்தைக்காக வேலைய விட்ட நானே ரெண்டு மணி நேரத்துக்கு ஆள் வைச்சுக்குறேன்னு சொல்றன்னா அப்ப என் நிலைமைய யோசிச்சு பாருங்க. குழந்தை பிறக்கும் வரை நானேதான் எல்லா வீட்டு வேலையும் செய்தேன். வளைகாப்புக்கு பாண்டி போற வரைக்கும் வீடு பெருக்கி துடைச்சு, பாத்திரம் தேய்கிற வரைக்கும் (ஆபிஸும் போய்கொண்டு). ஆனால் குழந்தையோடு வீட்டுக்கு வந்தப்புறம் ஒருவேளைக்கூட செய்யமுடியவில்லை. பாத்திரம் தேய்க்க, வீடு பெருக்க வேலைக்கு ஆள் வைத்துக்கொண்டேன். 24 மணி நேரமும் குழந்தைதான் உலகமாகிப் போனதெனக்கு.


காலையில் 9 அல்லது பத்து மணிக்கு அலுவலகம் செல்வதற்க்கு முன் அவசியமோ இல்லையோ இயற்கை உபாதைகளை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்க்கப்புறம் ரகு வீடு திரும்பும் வரை அங்கிங்கு அசைய முடியாது. ஜூனியருக்கு நான் அவனோடவே இருக்கவேண்டும். தலை மறைந்தால் கூட வீறிட்டு அழுவான். ஒரே ஆறுதல் எப்பொழுதும் தூக்கியே வைத்துக்கொள் என்ற அழுகை கிடையாது. மதியம் அவன் தூங்கும் அந்த 1 மணி நேரத்துக்குள் துணி மடிச்சு வைக்கறது, பாத்திரம் அடுக்கறதுன்னு கடகடன்னு மத்த சில்லறை வேலைகளை முடிக்கனும். சமையலறை கொஞ்சம் சின்னதென்பதால் அவனை அங்கு வைத்துக்கொண்டு சமையலும் செய்யமுடியாது. ரகு ஆபிஸிலிருந்து வரும் வரை பொறுத்திருந்து வந்தப்பின் தான் சோறு:(


குழந்தை எனக்கு முக்கியம்தான். ஆனால் சதா சர்வ காலமும் குழந்தையோடவே இருந்து தியாகி பட்டம் வாங்க நானொன்னும் சினிமா தாயல்லவே. எனக்கு என்னையும் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் நன்றாக இருந்தால் தான் ரகுவும் ஜூனியரும் நன்றாக இருக்கமுடியும் என்பதை வசதியாக இருவீட்டார்களும் மறந்தார்கள். நானென்ன குழந்தையை யாரிடமோ குடுத்துவிட்டு ஊர் சுற்றி கும்மாளமடிக்கவா போகப்போகிறேன். ரிலாக்ஸாக புத்தகம் படிக்க, உடற்பயிற்சி செய்ய, ஒரு கப் டீ குடிக்க, நண்பர்களுடன் தொலைபேசியில் பேச எனக்கே எனக்கென்று நேரம் தேவைப்படாதா? சரியான ஓய்வில்லாததால் கோபமும், படபடப்பும் அதிகரித்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை. இந்த விளக்கங்களெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காது கொடுத்து கேட்டால்தானே? கடைசியாக பிரம்மாஸ்திரத்தை எறிவது போல் ஒரே கேள்வி அவர்களை மடக்கியது "சரி. நாங்கள் பேபி சிட்டர் வைத்துக்கொள்ளவில்லை. நீங்கள் யாராவது வந்து கொஞ்ச நாளைக்கு கூட இருங்கள்". எங்களுக்கு கண்டிப்பாகத் தெரியும் அவர்களால் அது முடியாதென்று. ஒரிரண்டு நாட்களென்றால் பரவாயில்லை. அதற்கு மேலென்றால் அவர்களுக்கு இருக்கும் கமிட்மெண்ட்ஸ் ஆட்டம் கண்டுவிடும்.


அரைகுறை மனதோடு வேண்டாவெறுப்பாக சம்மதித்தார்கள். சாயந்திரம் 5 மணியிலிருந்து ஏழு மணி வரை ஜூனியரைப் பார்த்துக்க ஆள் வைத்தோம். நான் பேச்சுக்கு சொல்லவில்லை. நிச்சய பலன்கள் தெரிந்தன. நான் நானாக இருக்க முடிந்தது. அவர்களை ஜூனியரை வெளியில் அழைத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன். வேலை அவ்வளவாக இல்லாத நாட்களில் ஜூனியரை தூக்கிக்கொண்டு வாக் செல்லுவோம். என்னால் வேலைகளை ரிலாக்ஸாக செய்யமுடிந்தது. More important of all ஜூனியரோடு quality டைம் எந்தக் கவலையுமில்லாமல் செலவழிக்க முடிந்தது. ஒரு வருடத்துக்கு மேலாச்சு. இங்கு தாம்பரம் வந்து வேறு ஒருவர் பார்த்தோம். கடைக்கு போகனும், காய் வாங்கனுமென்றால் baby sitter கூட வருவார். பையையும் ஜூனியரையும் மாத்தி மாத்தி வைத்துக்கொள்வோம்.


கொஞ்ச நாள் முன்னாடி ஜூனியரை ஒரு பத்து நிமிஷம் பார்த்துக்க சொல்லி அப்பாவிடம் விட்டேன். அம்மாவிடம் சொன்னாராம் "பத்து நிமிஷம் என்னால சமாளிக்க முடியலடீ அவன. அவ எப்படித்தான் நாள் முழுக்க பார்த்துக்கறாளோ. Baby sitter வைத்ததில் தப்பேல்ல". போன வாரம் வந்த என் மாமனார் சொன்னது "எப்படிம்மா சமாளிக்கற. பயங்கர விஷமம் பண்றானே. உனக்கு ஏதாவது விழா எடுத்து சர் பட்டம் கொடுக்கனும்".


என்னால் புன்னைகையை மட்டுமே பதிலாக்க முடிந்தது:)


டிஸ்கி : ரொம்ப மாதங்களுக்கு முன் எழுதிய பதிவு. கொஞ்சூண்டு அப்டேட் பண்ணி பதிவிட்டிருக்கேன்.

33 comments:

நட்புடன் ஜமால் said...

கொடுமையான் இரண்டுமா !

நட்புடன் ஜமால் said...

\\உனக்கு ஏதாவது விழா எடுத்து சர் பட்டம் கொடுக்கனும்"\\

இதுல தெரியுது அனைத்தும் ...

நட்புடன் ஜமால் said...

மிக கஷ்ட்டமாகத்தான் தெரியுது

இதற்கு தீர்வுகள் தெரியலை

ஆனால் ...

உங்களுக்கு மருமகள் வரும்போது இவ்விடயங்களை ஞாபகத்தில் கொள்ளுங்கள்

நானும் தங்க்ஸுக்கு உதவி செய்யனும்.

முரளிகண்ணன் said...

இதே பிரச்சினையை என் மனைவியும் சொன்னார். ஆரம்ப காலங்களில் அவரது தாயார் வீட்டுக்கு சென்று அவர்களிடம் ஒப்படைத்து சிறிது நேரம் இளைப்பாறுவார். நான் மாலைகளில் பையனை தூக்கிக் கொண்டு சுற்றுவேன்.

என்றாலும் என் மனைவியின் பாடும் கஷ்டம்தான்.

பெண்கள் தின வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

//குழந்தை எனக்கு முக்கியம்தான். ஆனால் சதா சர்வ காலமும் குழந்தையோடவே இருந்து தியாகி பட்டம் வாங்க நானொன்னும் சினிமா தாயல்லவே. //

:-)

அ.மு.செய்யது said...

//"எப்படிம்மா சமாளிக்கற. பயங்கர விஷமம் பண்றானே. உனக்கு ஏதாவது விழா எடுத்து சர் பட்டம் கொடுக்கனும்".
//

உங்க கஷ்டம் தெரியுதுங்க...

கொயிந்த வளக்கறது அவ்ளோ கஸ்டமா...

அப்ப எங்க டாடி மம்மி ரெம்ப கஷ்டப் படுறாங்க போல..

Vidhya Chandrasekaran said...

வாங்க ஜமால். ஆமாம் தங்க்ஸ்க்கு நிறைய ஹெல்ப் பண்ணுங்க:)

முரளி மனைவியின் அம்மா வீடும் சென்னையிலா? நீங்க பரவாயில்ல. ரகு வீட்டுக்கு வர 9 10 மணியாயிடும்.

Vidhya Chandrasekaran said...

வாங்க முல்லை.

ஆமாம் அ.மு.செய்யது. அதுவும் உங்க அப்பா அம்மா ரொம்பவே கஷ்டப்படுவாங்கன்னு நினைக்கிறேன்:)

நட்புடன் ஜமால் said...

\\ஆமாம் அ.மு.செய்யது. அதுவும் உங்க அப்பா அம்மா ரொம்பவே கஷ்டப்படுவாங்கன்னு நினைக்கிறேன்:)\\

ஹா ஹா ஹா

ஆமா

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு என்னையும் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் நன்றாக இருந்தால் தான் ரகுவும் ஜூனியரும் நன்றாக இருக்கமுடியும் என்பதை வசதியாக இருவீட்டார்களும் மறந்தார்கள். நானென்ன குழந்தையை யாரிடமோ குடுத்துவிட்டு ஊர் சுற்றி கும்மாளமடிக்கவா போகப்போகிறேன். ரிலாக்ஸாக புத்தகம் படிக்க, உடற்பயிற்சி செய்ய, ஒரு கப் டீ குடிக்க, நண்பர்களுடன் தொலைபேசியில் பேச எனக்கே எனக்கென்று நேரம் தேவைப்படாதா?

மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

ஒரு ஏக்கப் பெருமூச்சுதான் விடமுடிகிறது வித்யா
இன்னமும் வீடு, ஆபிஸின் மிகப்பெரிய ஆறுதல் குழந்தை மட்டுமே.
அமித்து டைம்ஸ் தான் எனக்கான ரிலாக்ஸ் டைமும்.

முரளிகண்ணன் said...

நாங்க இப்போதானே சென்னை. பையன் மூணு வயசு வரைக்கும் மதுரை பக்கம் திருமங்கலத்தில இருந்தோம். அப்போ அவங்க வீட்டில பார்த்துக்கிட்டாங்க.

ஆ.ஞானசேகரன் said...

புரியல

மாதேவி said...

"எப்படிம்மா சமாளிக்கற. பயங்கர விஷமம் பண்றானே".
நிட்சயமாய்.மகிழ்ச்சியுடன் கூடியசிரமம்.

எம்.எம்.அப்துல்லா said...

இன்னோனு கூட சொல்லிருப்பாங்களே, "ஆம்பளப் புள்ளனா அப்பிடிதான் இருப்பான்...நாங்கள்லாம் உங்க அண்ணனை வளர்க்க படாத கஷ்டமா?? அவ்ளோ சேட்டை பண்ணுவான்"


இந்த மாதிரி லூசுத்தனமா பேசுறவங்களைப் பார்க்கும் போது எனக்குப் பரிதாபமா இருக்கு. அப்பிடி சொன்ன நிறைய பேரு இப்ப என் இரண்டாவது பெண்னைப் பார்த்து அவங்க கருத்தை மாத்திக்கிட்டாங்க

:))

தமிழ் அமுதன் said...

காலையில் எழுந்து குழந்தைகளை கவனித்து ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு ,கணவனை
வேலைக்கு அனுப்பிவிட்டு,தானும் வேலைக்கு சென்று ,மாலையில் வீடுதிரும்பி
வீட்டுவேலைகளை கவனித்து,அல்லல் பட்டு வாழும் பெண்களுக்கு மத்தியில் வீட்டிலேயே இருக்கும் உங்கள் கருத்தை கேட்டு பெரியவர்கள் சுனாமியையும்,பூகம்பத்தையும் ஒருசேர ஏற்படுத்தியதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

/// சரியான ஓய்வில்லாததால் கோபமும், படபடப்பும் அதிகரித்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை. ///

நியாயம்தான்!! இதெல்லாம் இன்னும் எவ்வளவு நாளைக்கு? பையனை ஸ்கூலில் சேர்க்கும் வரைதானே? அதன் பிறகு உங்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கும்.
அதுவரை சற்று பொறுத்து கொள்ளலாமே ?

////போன வாரம் வந்த என் மாமனார் சொன்னது "எப்படிம்மா சமாளிக்கற. பயங்கர விஷமம் பண்றானே. உனக்கு ஏதாவது விழா எடுத்து சர் பட்டம் கொடுக்கனும்".///

உங்க மாமனார் போன வாரம் சொன்னதை போன வருடம் சொல்லி இருக்கலாம்!
கிடைக்காத அந்த ''சர்'' பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள தோன்றி இருக்க கூடும்.

எது எப்படியோ? எந்தவித போலித்தனமும் இல்லாமல் உங்கள் மனதில் தோன்றியதை அப்படியே வெளிப்படையாக சொன்னதற்க்காக உங்களை பாராட்ட வேண்டும்.

Vidhya Chandrasekaran said...

நன்றி அமித்து அம்மா.

உங்களுக்கு என்ன புரியலைன்னு எனக்கு புரியல ஞானசேகரன்.

வாங்க மாதேவி. கண்டிப்பாய் எனக்கு மகிழ்ச்சிதான். சிரமத்தைக் குறைக்க பேபி சிட்டர்:)

ஆமாம் அண்ணே. என்னமோ பெண் குழந்தைகள் ரொம்ப அமைதின்னு எல்லாரும் நினைக்கறாங்க. எல்லாம் இப்ப ஒன்னுதான்:)

Vidhya Chandrasekaran said...

\\ஜீவன் said...
காலையில் எழுந்து குழந்தைகளை கவனித்து ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு ,கணவனை
வேலைக்கு அனுப்பிவிட்டு,தானும் வேலைக்கு சென்று ,மாலையில் வீடுதிரும்பி
வீட்டுவேலைகளை கவனித்து,அல்லல் பட்டு வாழும் பெண்களுக்கு மத்தியில் வீட்டிலேயே இருக்கும் உங்கள் கருத்தை கேட்டு பெரியவர்கள் சுனாமியையும்,பூகம்பத்தையும் ஒருசேர ஏற்படுத்தியதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.\\

என்ன சொல்ல வருகிறீர்கள் ஜீவன்? வீட்டில் இருக்கும் பெண்கள் சொகுசாக இருக்கிறார்கள் என்றா? அப்படியென்றால் அது கண்டிப்பா தவறான எண்ணம் என்பது என் கருத்து. வேலைக்கும் போயிருக்கேன் என்பதால் சொல்கிறேன். ரெண்டுமே equally difficult. வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஒரு விதமான பிரச்சனை. வீட்டிலிருப்பவர்களோடு கம்பேர் பண்ணுவாங்க. வீட்லருக்கவங்களை வேலைக்குப் போறவங்களோட கம்பேர் பண்ணுவாங்க.

\\நியாயம்தான்!! இதெல்லாம் இன்னும் எவ்வளவு நாளைக்கு? பையனை ஸ்கூலில் சேர்க்கும் வரைதானே? அதன் பிறகு உங்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கும்.
அதுவரை சற்று பொறுத்து கொள்ளலாமே ?\\

நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் இன்னும் 4 வருடங்களுக்கு dont spend time for u சொல்ற மாதிரி இருக்கு. என்னை கவனித்துக் கொள்ளவில்லையென்றால் எனக்கொரு aversion வந்துவிடாதா? Moreover ஒரே வேலையைத் தொடர்ந்து ரிலாக்சேஷன் இல்லாமல் செய்யும்போது வெறுப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதல்லவா?

\\எது எப்படியோ? எந்தவித போலித்தனமும் இல்லாமல் உங்கள் மனதில் தோன்றியதை அப்படியே வெளிப்படையாக சொன்னதற்க்காக உங்களை பாராட்ட வேண்டும்.\\

மிக்க நன்றி:)

மணிகண்டன் said...

me the 1st.

Vijay said...

குழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமான விஷயமா? என் தங்கைக்கு இரண்டு குழந்தைகள். ஆ ஊன்னா எங்கம்மாவுக்கு ஃபோனைப் போட்டு குழந்தைகளைப் பார்த்துக்க கூப்பிட்டு விடுவாள். இப்போது, அவளது இரண்டாவது குழந்தை, அம்மாவை விட பாட்டியில்லாமல் இருக்கவே இருக்காது. :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்...நல்லா சொல்லி இருக்கீங்க..

நான் வீட்டில் தான் இருக்கேன் .. ஆனா வேறு சில காரணங்களுக்காக இதே மாதிரி முன்பு ஒரு மாதிரி கருத்தும், பின்பு ஒரு கருத்துமா , பட்டமளிப்பு பின்பு கிடைத்த அனுபவம் இருக்கு.. :)

Vidhya Chandrasekaran said...

என்ன மணிகண்டன் கண்ண மூடிகிட்டு கமெண்ட் போடறீங்களா?

நன்றி முத்துலக்ஷ்மி:)

ஆமாம் விஜய். கொஞ்சூண்டு கஷ்டம்:)

மணிகண்டன் said...

****
என்ன மணிகண்டன் கண்ண மூடிகிட்டு கமெண்ட் போடறீங்களா?
****

ஹி ஹி ஹி

வேற விண்டோல போக வேண்டிய கமெண்ட் உங்களுக்கு விழுந்துடுச்சு.

நாகை சிவா said...

சவாலே சமாளி!

சின்னப் பையன் said...

//"எப்படிம்மா சமாளிக்கற. பயங்கர விஷமம் பண்றானே. உனக்கு ஏதாவது விழா எடுத்து சர் பட்டம் கொடுக்கனும்".
//

சர் பட்டம் ஆம்பளைக்கு, பொம்பளைங்களுக்கு 'சரி' பட்டம்தானே கொடுக்கணும்..???

Arun Kumar said...

பெண்கள் தின வாழ்த்துக்கள்
குழந்தையை வளர்பது சாதாரன காரியம் இல்லை

இதுக்கு தான் என்னமோ பல பேர் இப்ப 2.5 வயதில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து விடுகிறார்களா?

தாரணி பிரியா said...

சரியா சொன்னீங்க வித்யா. வீட்டுல சின்ன சின்ன வேலைக்கு ஆள் இருந்தாலும் குழந்தைங்க கூட பெரும்பான்மையான நேரம் செலவழிக்கப்படும்போது நம்ம மேல நமக்கே ஒரு எரிச்சல் வருமே. அது தேவையே இல்லாம வீட்டு ஆளுங்க மேலயும் குழந்தை மேலயும்தான் திசை திரும்பும். அதுவும் இல்லாம குழந்தை கொஞ்சம் வெளி ஆளுங்ககிட்டயும் ஒட்டணும். அதனால பேபிசிட்டர் தப்பே இல்லைங்க :)

Vidhya Chandrasekaran said...

சவால் எல்லாம் இல்ல சிவா. கொஞ்சூண்டு சிரமம் அவ்ளோதான்:)

ச்சின்னப்பையன் பாயிண்ட் நோட்டட். அடுத்த தடவை உங்க தங்க்ஸ்க்கு பட்டம் குடுக்கறேன் உங்கள சமாளிக்கரதுக்கு:)

வாங்க அருண். அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.

நன்றி தாரணி பிரியா.

Unknown said...

//ரகு வீட்டுக்கு வர 9 10 மணியாயிடும்.//

அதற்கு பிறகு தான் சமையலா? ஹ்ம்ம் கஷ்டம் தான். எங்க வீட்டு குட்டிம்மா 7 மாசம், கூடவே அம்மா இருக்கணும்ன்னு அடம் பிடிக்கறது இல்ல, ஆனா எது கிடைச்சாலும் வாய்ல வச்சுக்கணும்ன்னு நினைக்கிறாங்க. இப்போ கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்கலாம், தவழ நடக்க ஆரம்பிச்ச பிறகு தான் இருக்கு ரியல் ரகளை.

RAMYA said...

குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கஷ்டமான ஒன்று.

ம்ம்ம். இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து, வேண்டியதை செய்து
கண்களில் வைத்து சீராட்டி, பாராட்டி, உண்மையாகவே தாய்மார்கள்
அனைவரும் மிகவும் உயர்ந்தவர்கள்தான், பாராட்டப் படவேண்டியவர்கள்
வித்யா!!

RAMYA said...

என் அன்புத்தோழிக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள் பல!!

Vidhya Chandrasekaran said...

வாங்க KVR. எல்லா குழந்தைகளும் அப்படித்தான்:)

நன்றி ரம்யா:)

narsim said...

அலுவல் காரணங்களால் வேறுஊருக்கு வந்து விட்டதால் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாமல் போனதின் விளைவுகளில் முக்கியாமன் ஒன்று நீங்கள் எழுதிய இந்த பதிவு..

கிராமத்தில்,தெருவில் இருக்கும் யாராவது ஒருவர் குழந்தையை வைத்துக்கொண்டிருப்பார்கள்.. சொந்தங்களும் தான்.. பட்டிண வாழ்வில் பட்டுப்போன ஒன்று குழந்தை வளர்ப்பு..

விக்னேஷ்வரி said...

ஐயோ, குழந்தைய கவனிக்குறது இவ்வளவு கஷ்டமா....
என் அலுவலக நண்பர் கூட சொல்வார், "அடுத்தவங்க மடியில பார்க்கும் போது தான் குழந்தை அழகா இருக்கும். நமக்குன்னு வந்தா, எரிச்சலா தான் வரும்"னு. உண்மை தான் போல.