March 31, 2009

ஸ்ரீ ராஜஸ்தானி தாபா - அண்ணாநகர்

மிளகாய்ல காரம் கொஞ்சம் கம்மின்னு சொல்றவங்களுக்கு இந்த தாபா ஒத்து வராது. மிதமான சில சமயம் காரமே இல்லாத உணவுகளுக்கு பெயர் போன ராஜஸ்தான் உணவுகளை வழங்குகிறது ஸ்ரீ ராஜஸ்தானி தாபா. நேற்று மதிய உணவிற்க்கு நானும் தம்பியூம் சென்றோம். உள்ளே போகும்போது "ஈ ஓட்டிக்கிட்டிருக்கானேடா? மவனே சாப்பாடு நல்லால்ல செத்தடா நீ" என்று அவனை எச்சரித்துக்கொண்டே வந்தேன் (பின்ன அம்மாவின் இஞ்சி துவையலையும் தயிர் கீரையும் கஷ்டப்பட்டு மறுத்துவிட்டல்லவா வந்தேன்). ஆர்டர் குடுப்பதற்க்குள் திமுதிமுவென கூட்டம் சேர ஆரம்பித்துவிட்டது. Exclusive ராஜஸ்தானி உணவுகள். கூடவே கொஞ்சம் பஞ்சாபி சப்ஜிகளும் மெனுவில் இருக்கின்றன. இன்னொரு பெரிய ஆச்சரியம்/ஆறுதல் சப்ஜி/தால் வகைகள் அரை பிளேட்கூட தருகிறார்கள்.

80 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரை 3 thali வெரைட்டி இருக்கிறது. தம்பி 140 ரூபாய் ஸ்பெஷல் ராஜஸ்தானி thali ஆர்டர் செய்தான். 4 சப்ஜிகள், தால், கதி (kadi), ஆலு பராத்தா, பஜ்வார் ரொட்டி (கம்பு), புல்கா, வெஜிடபிள்ஸ், தயிர், சூப்/மால்புவா, லஸ்ஸி/குல்பி. இதுதான் ஸ்பெஷல் தாலியின் மெனு. இதில் கடைசி இரண்டு அயிட்டங்களைத் தவிர மற்ற அனைத்துமே unlimited. போன முறை நண்பர்களோடு வந்தபோது நல்லா கட்டினதா தம்பி சொன்னான்.

நான் மக்கி ரொட்டியோடு (மக்காச்சோளம்) அரை பிளேட் கதி ஆர்டர் செய்தேன். மக்கி ரொட்டி டக்கராக இருந்தது. கொதிக்க கொதிக்க கொஞ்சம் எண்ணைய் (நெய்யாகக் கூட இருக்கலாம். தெரியவில்லை) தடவிக் கொடுத்தார்கள். சைஸ் கொஞ்சம் சின்னது. கதி சுமாருக்கு கொஞ்சூண்டு மேலே. ரொம்பவே தண்ணியாக இருந்தது. அதுக்கப்புறம் ஒரு புல்காவும் அரை பிளேட் தாலும் ஆர்டர் பண்ணேன். தால் சொர்க்கம். இவ்வளவு டேஸ்டியாக நான் எந்த உணவகத்திலும் சாப்பிட்டது கிடையாது. உப்பு, காரம், மசாலா எல்லாமே சரியான அளவுகளில். புல்காவும் ரொம்ப சின்னது. அதனால் தாலை வேஸ்ட் பண்ண மனசில்லாமல் ஒரு ஸ்பூனை கேட்டு வாங்கி குடித்துவிட்டேன். பசி அடங்கினாற்போலவேயில்லை. அடுத்து போனது பனீர் பராத்தா. இது சுமார் தான். பராத்தாவில் உப்பு காரம் ரெண்டுமே கம்மி. ஆலு பராத்தா நன்றாக இருந்தது. மெனுவில் ஆலு, பனீர், மூளி (முள்ளங்கி), கோபி (காலிபிளவர்) என நான்கு வகை இருக்கிறது. இவற்றிற்க்கு நடுவே ரெண்டு கிளாஸ் ஜல்ஜீரா பானி ஸ்வாஹா:)
ஸ்வீட் சாப்பிடாமல் இருந்தால் உமாச்சி கண்ணைக்குத்தும்ன்னு பெரியவங்க சொல்லிருக்கறதால மால்புவா ஆர்டர் செய்தேன். Awesome. அளவான தித்திப்புடன் அட்டகாசமாக இருந்தது. கடைசியாக கிளம்புபோது வயிறும் உணவகம் போல நிரம்பியிருந்தது.
மேலதிக தகவல்கள்

உணவகம் - ஸ்ரீ ராஜஸ்தானி தாபா
இடம் - Second Avenue, அண்ணா நகர். இடத்தை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம். Second avenue ரோட்டில் வரிசையாக ஹாட் சிப்ஸ், பிட்ஸா ஹட், அடையார் ஆனந்தபவன் போன்ற உணவகங்கள் இருக்கும். காஞ்சி ரெசிடன்சி என்ற ஹோட்டலுக்கு முன்னாள் உள்ள ஒரு கட்டிடத்தின் (ஆந்திரா பேங்கின் எதிர்புறமுள்ளது) மூன்றாவது மாடியிலிருக்கிறது தாபா. கவனமாக பார்க்கவில்லையெனில் பெயர் பலகை கண்ணுக்குத் தெரியாது.
டப்பு - Thali வகைகள் 80லிருந்து 140 வரை. இருவருக்கு 300 ரூபாய் ஆனது.

பரிந்துரை - தாரளமாக ஒருமுறை போகலாம். ஆனால் மறுபடியும் சொல்கிறேன் காரம் விரும்புவர்களுக்கு கஷ்டம் தான். பர்ஸை பதம் பார்க்காத வித்தியாசமான உணவு:)

பிகு : இந்த முறை உங்களை வயிறெரிய வைக்கும் விதமாக புகைப்படங்கள் அமையவில்லை. அண்ணன் எப்ப எந்திருப்பான் திண்ணை எப்ப காலியாகுமென நாலு பேர் டேபிள சுத்தி நின்னாங்க. இதுல நான் போட்டோ வேற எடுத்துட்டுருந்தேன்னா என் நிலைமை ரெம்ப மோசமாயிருக்கும்:)

32 comments:

நட்புடன் ஜமால் said...
This comment has been removed by the author.
நட்புடன் ஜமால் said...

தாபான்னா

பஞ்சாபி தான் தெரியும்

ராஜஸ்தானியுமா

அதுவும் அண்ணாநகரா

ஏப்ரலில் 2 நாட்கள் அண்ணா நகரில் ஸ்டேயே இருக்கு

முயற்சி செய்கிறேன்

கார்க்கிபவா said...

வாழ்க அந்த நாலு பேர்

Vidhya Chandrasekaran said...

ஏப்ரல் எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க ஜமால் அண்ணே. முடிஞ்சா ஒரு மீட்டிங்க போட்டுவோம்.

கார்க்கி ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதே. அடுத்த இத்தாலியன் போலாம்ன்னு இருக்கோம். சாப்பிடறேன்னோ இல்லையோ. போட்டோவா போட்டுத் தாளிக்கறேன்:)

நட்புடன் ஜமால் said...

\\ஏப்ரல் எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க ஜமால் அண்ணே. முடிஞ்சா ஒரு மீட்டிங்க போட்டுவோம்.\\

சொல்றேன் சகோதரி ...

எம்.எம்.அப்துல்லா said...

//ஏப்ரல் எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க ஜமால் அண்ணே. முடிஞ்சா ஒரு மீட்டிங்க போட்டுவோம்.

//

என்னைய மறந்துடாத :)

எம்.எம்.அப்துல்லா said...

//ஏப்ரலில் 2 நாட்கள் அண்ணா நகரில் ஸ்டேயே இருக்கு

//

எங்கடா?? ராஜா ரூம்ல தங்க போறியா??

விக்னேஷ்வரி said...

அது கதி இல்ல வித்யா, கடி. நம்ம ஊர் மோர்குழம்பு தான், கொஞ்சம் வித்தியாசமான ஸ்டைலில்.

narsim said...

//மிளகாய்ல காரம் கொஞ்சம் கம்மின்னு சொல்றவங்களுக்கு இந்த தாபா ஒத்து வராது//

எஸ்கேப்

சந்தனமுல்லை said...

ஓக்கே..டிரை செய்துடலாம்! ;-)

Vidhya Chandrasekaran said...

நீங்க இல்லாமல அப்துல்லா அண்ணே.

வாங்க விக்னேஷ்வரி. மோர்குழம்பை விட காரம் கம்மி. தகவலுக்கு நன்றிங்க:)

Vidhya Chandrasekaran said...

நானும் நல்லா காரம் சாப்பிடுவேன் நர்சிம். ஆனா எனக்கு வெரைட்டி தேவைப்படும்போது அட்ஜஸட் பண்ணிப்பேன்.

கண்டிப்பா பண்ணுங்க முல்லை. விலையும் நியாயமாத்தான் இருக்கு.

நாகை சிவா said...

அட ஆந்திரா பேங்க் மாடியிலா? இது தெரியாம போச்சே இவ்வளவு நாளா? நம்ம ஏரியாவில் இருந்தும் இப்படி மிஸ் பண்ணியாச்சே.

சரி பரவாயில்லை. இந்த முறை சென்னை வரும் போது போயிட வேண்டியது தான்.

அண்ணாநகரில் கார்த்தி பவன் (???) ஒரு கையேந்தி பவன் இருக்கு தெரியுமா? அங்க சாப்பிட்டு இருக்கீங்களா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்களுக்கு காரமெல்லாம் வானாம்..வேற யாரு சூடா சமைச்சுப் போட்டாலும் சாப்பிடறது தான்... :)

Vidhya Chandrasekaran said...

வாங்க சிவா. ஆந்திரா பேங்க் மாடில இல்ல. அதன் எதிர்புறத்தில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடி. அப்புறம் கார்த்திக் டிபன் செண்டர் கையேந்தி பவன் என்ற அடையாளத்தை இழந்து கடை என்ற வடிவம் பெற்றாச்சு:) அங்கு தோசைகள் டாப்பு:)

வாங்க முத்தக்கா. அது சரி எல்லாருக்குமே அதே ஆசை தான்:)

அ.மு.செய்யது said...

சென்னையில இருந்த வரைக்கும் நாண்,ஷாயி பனீர்,பலக் பனீர்,ஆலு பராத்தானு தாபாக்கள் மேல ஒரு மோகமே இருந்துச்சு !!

இப்ப பூனே வந்த வுடனே நம்மூர் சாம்பார் சாதத்தோட அரும நல்லாவே புரிஞ்சுடுச்சி !!

அ.மு.செய்யது said...

//ஏப்ரலில் 2 நாட்கள் அண்ணா நகரில் ஸ்டேயே இருக்கு//

ஓ...அங்கயா ???

SK said...

நல்ல இருங்க மக்கா :) :)

Vidhya Chandrasekaran said...

வாங்க அ.மு.செய்யது. இக்கரைக்கு அக்கரை பச்சை:)

நன்றி SK:)

Unknown said...

அட...நம்ம ஏரியாவாங்க நீங்க.

இல்லேன்னா சாப்பிட அங்க வந்தீங்களா?

அன்புடன் அருணா said...

அட எங்க ஊர் ஐடமா??? வெளுத்து வாங்குங்க....
அன்புடன் அருணா

தமிழ் அமுதன் said...

//// இடத்தை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம். Second avenue ரோட்டில் வரிசையாக ஹாட் சிப்ஸ், பிட்ஸா ஹட், அடையார் ஆனந்தபவன் போன்ற உணவகங்கள் இருக்கும். காஞ்சி ரெசிடன்சி என்ற ஹோட்டலுக்கு முன்னாள் உள்ள ஒரு கட்டிடத்தின் (ஆந்திரா பேங்கின் எதிர்புறமுள்ளது) மூன்றாவது மாடியிலிருக்கிறது தாபா. கவனமாக பார்க்கவில்லையெனில் பெயர் பலகை கண்ணுக்குத் தெரியாத///

நீங்க மட்டும் எப்படித்தான் கண்டு புடிக்கிரீங்களோ??

Vidhya Chandrasekaran said...

நான் இருப்பது தாம்பரத்தில் ரவிஷங்கர். சமீபத்தில் தான் அப்பா மாற்றலாகி அண்ணாநகருக்கு வந்தார். உணவக உபயம் என் தம்பி.

ஹி ஹி போகனும்ன்னு முடிவு பண்ணிட்டா சந்திரனுக்கு போவோம் ஜீவன்.

நன்றி அருணா:)

Vijay said...

நீங்க ரசித்து சாப்பிட்டதை நான் ரொம்ப ரசித்தேன். உங்களுக்கு வயிற்று வலி வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல :-)

ஊர்சுற்றி said...

உங்களுக்கு சாப்பாடு என்றால் ரொம்ப பிடிக்குமோ?!!!

மணிகண்டன் said...

**
உங்களுக்கு சாப்பாடு என்றால் ரொம்ப பிடிக்குமோ?!!!
**

இல்லைங்கண்ணா. என்னைய மாதிரி ஆளுங்களோட வயத்தெரிச்சல்ல கிளப்பறது அவங்களுக்கு ரொம்ப புடிக்கும் !

தாரணி பிரியா said...

நல்லா இருங்க வித்யா.

சின்னப் பையன் said...

ஏஏஏஏஏஏஏவ்வ்வ்வ்வ்வ்வ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வெறும் பயத்தம்பருப்புலே கிச்சடி மாதிரி ஒன்னு தருவாங்க..ரொம்ப டேஸ்டா இருக்கும்

Vidhya Chandrasekaran said...

வருகைக்கு நன்றி விஜய்.

ஆமாம் ஊர்சுற்றி. வித்தியாசமான உணவுகளை ருசிப்பது பிடிக்கும்.

நன்றி தாரணிபிரியா:)

Vidhya Chandrasekaran said...

நல்லாருந்துச்சா ச்சின்னப்பையன்?

தகவலுக்கு நன்றி ராதாகிருஷ்ணன். அடுத்த தடவை போகும்போது அமுக்குறேன்:)

நானானி said...

நல்ல சாப்பாடு எங்கிருந்தாலும் ருசி பார்க்க ஆசைதான். இதுக்காகவே அண்ணாநகர்...ஏன்? தம்பிநகருக்கும் கூட போகலாம். விதவிதமான உணவுகளை டேஸ்ட் பார்க்கும் டேஸ்ட் பிரியை நான் இதையும் டேஸ்டீரலாம்.