சரியா பத்து நாள் கழிச்சு பதிவு போடறேன். போன வாரம் இணையத்தின் பக்கமே வரமுடியாதபடி இருந்தது. பத்து நாளும் சரியான அலைச்சல்:(
ஒரு வாரம் நல்லா ரெஸ்ட் எடுக்கனும். ஆணிகளையெல்லாம் புடுங்கிட்டு நேரம் கிடைக்கும்போது விட்டுப்போன பதிவுகளையெல்லாம் படிக்கனும்.
எனக்கும் டிவிடி பேருந்துகளுக்கும் ராசியே இல்லை போல. இந்த தடவை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பினவுடனேவே படம் போட்டான். என்ன படம் தெரியுமா? நம்ம கேப்டன் நடிச்ச அரசாங்கம். முடியல. ஐ.பாட் எடுத்து மாட்டினவ அந்த படம் முடிஞ்சுதான் இயர்போனை கழட்டினேன். உடனே அடுத்த படம் போட்டான்.அதுக்கு அரசாங்கமே பரவாயில்ல. பரத் படுத்திய நேபாளி. திரும்பவும் ஐ-பாட். ஊர் வரப்போகுதுன்னு அப்பா சொன்னபிந்தான் நிம்மதியா இருந்தது. ஐ-பாட் மட்டும் இல்லைன்னா நான் இந்நேரம் ஏதாவது மெண்டல் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகிருப்பேன்:(
இனிமே தொடர் தாக்குதல்களுக்கு ரெடியா இருங்கப்பு. அடுத்த பதிவு என்னோட பேவரிட் செக்ஷன் கொட்டிக்கலாம் வாங்க. என்ன உணவகமாயிருக்கும்ன்னு யோசிச்சுக்கிட்டே இருங்க. சீக்கிரமா வலையேத்துறேன்:)
March 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
வாங்க வித்யா...
//
நான் இந்நேரம் ஏதாவது மெண்டல் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகிருப்பேன்
//
இன்னும் ஆகலயா? ஏன் பொய் சொல்லுறீங்க :)))
//
அடுத்த பதிவு என்னோட பேவரிட் செக்ஷன் கொட்டிக்கலாம் வாங்க
//
ஹி..ஹி.. இதுக்காக வெயிட்டிங்.. :)
வெல்கம் பேக்..வித்யா..
\\பரத் படுத்திய நேபாளி\\
ஹா ஹா ஹா
அடுச்சு விளையாடுங்க
வாங்க வாங்க
ஐபாட்ல பார்த்த படங்களை உணர்வுகளோடு பதிவிடுங்களேன்
வெல்கம் பேக்கு :))
ஆகா..வந்தாச்சா! பதிவைப்போட்டு கலக்குங்க!! :-)
//கார்க்கி said...
வெல்கம் பேக்கு :))
//
அப்படியா??? தெளிவானவங்கன்னுதானே நினைச்சேன் சகா..
நன்றி வெண்பூ. இல்லைங்க நான் கொஞ்ச நாளா டிவி பார்க்கறதில்ல. அதனால இன்னும் நல்ல மனநிலையில தான் இருக்கேன்:)
நன்றி சங்கர்ஜி.
நன்றி முரளிகண்ணன்.
ஜமால் அண்ணாத்தே என்கிட்ட இருக்க ஐ-பாட்ல பாட்டு கேக்க தான் முடியும். படம் நஹி.நீங்க வேணும்னா ஒரு ஐ-பாட் நேனோ வாங்கித்தாங்களேன். வேணாம்னு சொல்ல மாட்டேன்:)
கார்க்கி நீ கண்டிப்பா கஞ்சா கேஸ்ல உள்ளார போகப் போற:)
நன்றி முல்லை.
நர்சிம் நான் தெளிவாத்தான் இருக்கேன். கார்க்கி தான் ஏழு மாதிரி ஆயிட்டான்:)
//இனிமே தொடர் தாக்குதல்களுக்கு ரெடியா இருங்கப்பு. //
அப்ப நாங்க மெண்டல் ஆஸ்பிடலுக்கு ரெடி ஆகணுமா??
(ச்சும்மா...லூலூலாட்டிக்கி...ஹி..ஹி.)
வருக வருக!
நல்ல பதிவு தருக!
//ஜமால் அண்ணாத்தே என்கிட்ட இருக்க ஐ-பாட்ல பாட்டு கேக்க தான் முடியும். படம் நஹி.நீங்க வேணும்னா ஒரு ஐ-பாட் நேனோ வாங்கித்தாங்களேன். வேணாம்னு சொல்ல மாட்டேன்:)
//
ஜமால் சிங்கையில் இருந்து லீவுக்கு சிக்கிரம் வரப்போறான்.. விடாத..
****
அப்ப நாங்க மெண்டல் ஆஸ்பிடலுக்கு ரெடி ஆகணுமா??
****
:)-
பார்த்துங்க வித்யா,கேப்டனை விட ஐபோட் உங்க காதை பதம் பார்த்துவிடப்போகிறது.
/எம்.எம்.அப்துல்லா said...
//இனிமே தொடர் தாக்குதல்களுக்கு ரெடியா இருங்கப்பு. //
அப்ப நாங்க மெண்டல் ஆஸ்பிடலுக்கு ரெடி ஆகணுமா??
(ச்சும்மா...லூலூலாட்டிக்கி...ஹி..ஹி.
உண்மைய பயப்படாம சொல்லுங்கண்னே
\\அப்ப நாங்க மெண்டல் ஆஸ்பிடலுக்கு ரெடி ஆகணுமா??
(ச்சும்மா...லூலூலாட்டிக்கி...ஹி..ஹி.)\\
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
அப்துல்லா அண்ணே நீங்க வாங்கிக் கொடுத்தாக் கூட நான் வாங்கிப்பேன்:)
நன்றி நாகை சிவா.
வாங்க மணிகண்டன்.
வடுவூர் குமார் கேப்டன் பேச்சுக்கு ஐ-பாட் எவ்வளவோ தேவலாம்:)
கார்க்கி நீ நல்லாவே இரு:)
//இனிமே தொடர் தாக்குதல்களுக்கு ரெடியா இருங்கப்பு.//
அதுக்கு அந்த அரசாங்கம் படமே தேவலாங்க..
சும்மானாங்காட்டியும்ங்க...வெல்கம் பேக்....!!!!!
welcome back :)
விஜய்காந்த் பரவாயில்லை.. அவர் பேசும் வசனங்கள் ரொம்ப சிரிப்பாக இருக்கும்
தமிழ் நாடு அரசு பேருந்துகளில் இரவு நேரத்தில் எம் ஜி ஆர் படங்கள் போட்டு வெறி ஏற்றுவார்கள். ( சேலம் -> பெங்களூர் ) இதில் கொடுமை என்னன்னா சில ரசிகர்கள் ராத்திரி 3 மணிக்கு விசில் அடிச்சு ஒன்ஸ் மோர் கேட்டு வேற இன்னமும் கொடுமை படுத்துவானுங்க:)
நன்றி அ.மு.செய்யது.
நன்றி அருண்.
அடப்போங்க வித்யா. பத்து நாளா தினமும், உங்க ப்ளாக் வந்து உள்ள ஒண்ணும் இல்லைன்னு கடுப்பாகிப் போனேன். சீக்கிரம் கிறுக்குங்க.
ஆ விக்னேஷ்வர் என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலேயே? அடிக்கடி கடை பக்கம் வாங்க:)
அவ்வ்வ்வ்வ் சென்னைய நோக்கி புயல்ன்னு நீயூஸ் வந்துச்சு..உண்மை தான் போல
//
நான் இந்நேரம் ஏதாவது மெண்டல் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகிருப்பேன்
//
இனிமேவா???
Post a Comment