December 31, 2009

திரும்பி(யும்) பார்க்கிறேன்

பல காரணங்களால் 2009ஆம் வருடம் மறக்க முடியாத ஆண்டுகளில் ஒன்றாக அமைந்துவிட்டது. பொறுமை, மனிதர்களைப் புரிந்து கொள்ளும் திறன் என நிறைய நல்ல விஷயங்களை பழக ஆரம்பித்திருக்கிறேன். ஆகஸ்ட் மாதம் தொடங்கிய அலைச்சல் சென்ற மாதம் தான் ஒரு நிலைக்கு வந்தது. வீடு மாற்றல், மாமனாரின் ஆஸ்பத்திரி வாசம், ஜூனியர் உடல்நிலை, அம்மாவின் உடல்நிலை, அப்பப்போ எனக்கு என மருத்துவ ரீதியாக நிறைய அலைச்சல்கள். எல்லாவற்றிர்கும் பழகிவிட்டது. முக்கியமாக ஜூனியர் ப்ளே ஸ்கூல் போக ஆரம்பித்து இப்போது நிறைய வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கூட்டி கழித்து பார்த்தால் 2009 நிறைய மகிழ்வான விஷயங்களையும், பொறுப்புகளை நேர்த்தியாக கையாளும் திறனையும் கொடுத்திருக்கிறது.
*********

இந்த முறை நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். நகைச்சுவை பிரிவில் கேப்டனின் காவியத்தை சேர்த்துவிட்டுள்ளேன். கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சாமீங்களா.
*********

நேற்றிலிருந்து 33வது புத்தக கண்காட்சி செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த வாரயிறுதிக்குள் செல்லும் திட்டமிருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நடந்தால் சில புத்தகங்களை வாங்கும் அதிர்ஷ்டம் கிட்டும். ஆண்டவன் அருள் புரிவாராக. இது வாங்குங்கள் என பரிந்துரைக்கும் அளவிற்கு இல்லை என் வாசிப்பு. ஆனால் நிதானமாக புரட்டிப் பார்த்து, தேவையெனில் வாங்குக.
*********

2010 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்திற்கான என் ஷெட்யூல் உறவுகளாலும், நண்பர்களாலும் வடிவமைக்கப்பட்டுவிட்டது. புத்தக கண்காட்சி, பொங்கல் கொண்டாட்டம், தோழியின் திருமணத்திற்காக வெளியூர் பயணம் என நான் ரொம்ப பிஸி:) ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அடுத்த ஆண்டை. புத்தாண்டு சபதம் எடுக்கும் பழக்கம் இல்லை. எடுத்தாலும் முழுசாக நிறைவேற்றுவேனா என தெரியாது. பேஸிக்கலி ஐ'ம் அ சோம்பேறி. ஆனால் சென்ற ஆண்டு சில இலக்குகளை இலக்குகள் என தெரியாமல் அடைந்தது ஆனந்தமாக இருந்தது. இந்தாண்டும் அதுவா அமையுதான்னு பார்ப்போம்.
***********

உங்களனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த வருடத்தின் அழகான நினைவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு வலிகளை அங்கயே விட்டுவிட்டு, புது வருடத்தை புத்துணர்ச்சியுடன் ஆரம்பியுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. தொடர் ஆதரவிற்கு நன்றி.

24 comments:

அமுதா கிருஷ்ணா said...

பதிவு நல்லாயிருக்கு...புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி...

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Rajalakshmi Pakkirisamy said...

Wish u a very happy New Year Mam!!!

Anonymous said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மணிகண்டன் said...

&&&&
இந்த முறை நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். நகைச்சுவை பிரிவில் கேப்டனின் காவியத்தை சேர்த்துவிட்டுள்ளேன். கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சாமீங்களா.
&&&&

campaign கொஞ்சம் முன்னாடி பண்ணி இருக்கலாம். நான் எல்லா பிரிவுகளிலும் முதல் என்ட்ரிக்கு வோட் போட்டுட்டேன் :)-

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வித்யா

///பொறுமை, மனிதர்களைப் புரிந்து கொள்ளும் திறன் என நிறைய நல்ல விஷயங்களை பழக ஆரம்பித்திருக்கிறேன்.//// ரொம்ப நல்ல விஷயம்.

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வித்யா.

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

நர்சிம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்.

"உழவன்" "Uzhavan" said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Vidhya Chandrasekaran said...

நன்றி அமுதா கிருஷ்ணா.
நன்றி பேநா மூடி.
நன்றி ராஜி மேடம்.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி மணிகண்டன்.
நன்றி நவாஸுதீன்.

Vidhya Chandrasekaran said...

நன்றி ராமல்க்ஷ்மி அக்கா.
நன்றி கலா அக்கா.
நன்றி தாரணி பிரியா.
நன்றி நர்சிம்.
நன்றி உழவன்.
நன்றி டி.வி.ஆர். சார்.

அக்னி பார்வை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

நேசமித்ரன் said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

Raghu said...

உங்க‌ளுக்கும், உங்க‌ள் குடும்ப‌த்தின‌ற்கும் இனிய‌ புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்க‌ள்

புத்த‌க‌ க‌ண்காட்சிக்கு நான் "எஸ் சார்" போட்டாச்சு

SK said...

Happy New year Vidhya :-)

R.Gopi said...

நல்ல விரிவான பதிவு.... “கேப்டன்” பதிவு வெற்றி பெற வாழ்த்துக்கள்....

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் மற்ற வலையுலக தோழமை அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய 2010 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

என் புத்தாண்டு சிறப்பு பதிவு படிக்க இங்கே செல்லுங்கள்....

சந்திரமுகி (ரீவைண்ட் 2005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம் http://jokkiri.blogspot.com/2009/12/2005.html

2009 – 2010 சிறப்புப் பார்வை – (பகுதி – 2) http://edakumadaku.blogspot.com/2009/12/2009-2010-2.html

Ganesan said...

வலையுலகப்படைப்பாளிகள்-- தினமணி கட்டுரை

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_31.html

Anonymous said...

வித்யா, ஓட்டு போட்டுவிடுகிறேன். தனியா கவனிங்க..

புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

Vidhya Chandrasekaran said...

நன்றி அக்னிபார்வை.
நன்றி சங்கவி.
நன்றி நேசமித்ரன்.
நன்றி சந்ரு.
நன்றி குறும்பன்.
நன்றி SK.
நன்றி கோபி.
நன்றி காவேரி கணேஷ்.

நன்றி மயில். (கிர்ர்ர். நாந்தான் உங்களுக்கு போட்ருக்கேன்)

Priya said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!