March 2, 2009

கருநாகமும் பதிமூனாம் நம்பர் வீடும்

1996ஆம் வருடம் என்று நினைக்கிறேன். வாலாஜாப்பேட்டையில் குடியிருந்தோம். அப்பா பணி நிமித்தமாக அரக்கோணத்திலிருந்தார். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் சன் டிவியில் நகைச்சுவை வாரம், காதல் வாரம், கண்றாவி வாரம் என திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு படங்கள் ஒளிப்பரப்புவார்கள். என் பெரியம்மாவின் இரண்டாவது பையன் எங்கள் வீட்டில் தங்கி லெதர் டெக்னாலஜி படித்துக்கொண்டிருந்தார். இந்த சம்பவம் நடந்தபோது சன் டிவியில் திகில் வாரம். அன்று 13ஆம் நம்பர் வீடு படம் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அண்ணாவும் நானும் அந்தப் படத்தைப் பார்ப்பதென்று முடிவு செய்தோம். அம்மாவும் தம்பியும் உறங்க போயாச்சு (வீட்டில் எல்லோரும் 8.30 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவோம்).

நான் வீட்டுப்பாடங்களை செய்துக்கொண்டிருக்க அண்ணா தோல் சாம்பிள்களை ஒழுங்கப்படுத்திக்கொண்டிருந்தார். படம் ஆரம்பித்து ஒடிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டு டீவியை ஹாலின் மூலையில் வைத்திருந்தோம். டீவியின் ஒரு பக்கம் சுவரும் மறுபக்கம் கண்ணாடி ஜன்னலும் (மூன்றும் முக்கோண வடிவிலிருக்கும். முக்கோணத்தின் base டீவி). எதேச்சயாக ஜன்னலைப் பார்த்த நான் கருப்பாக ஏதோ இருக்கவும் கேபிள் ஒயரென நினைத்தேன். கேபிள் ஒயர் வாசல் அருகிலிருக்கும் ஜன்னல் வழியாக தானே வருமென நினைத்து அம்மா கரித்துணியை (துடைக்க உபயோகப்படுத்தும் துணி) எங்க போட்ருக்கா பார் என திட்டிக்கொண்டே கையிலிருந்த பென்சிலால் அதை எடுக்கப் போனவள் அப்படியே ஷாக்காயிட்டேன். துணி நகர்ந்து கொண்டிருந்தது.

4 அடி நீளமுள்ள ஜன்னல் கம்பியில் மொத்த உடலையும் சுற்றிக்கொண்டு இருந்தது. மெதுவாக அண்ணாவிடம் "அண்ணா பாம்புன்னா" என்றேன்.

"ஏய் இந்தப் படத்துல பாம்பெல்லாம் வராதுடீ. நான் ஏற்கனவே படத்த பார்த்திருக்கேன். பயமா இருந்துதுன்னா நீ போய் படுத்துக்கோ"

"அண்ணா ஜன்னல் கம்பில பாம்பு சுத்திண்டிருக்குண்ணா"

"உளறாதே. வீட்டுக்குள்ள எப்படிடீ பாம்பு வரும்"

"அண்ணா நீங்க இங்க வந்து பாருங்க"

அண்ணா வந்து பார்த்துவிட்டு "நீ இங்கயே நில்லு. நான் போய் சித்திய எழுப்பி சொல்றேன்" (என்னா ஒரு வில்லத்தனம்)

"சித்தி ஹால் ஜன்னல்ல பாம்பு இருக்கு சித்தி"

"உளறாதே. வீட்டுக்குள்ள எப்படிடா பாம்பு வரும்?" (எனக்கு ரொம்ப சந்தோஷம்)

"இல்ல சித்தி நிஜமாத்தான். நீங்க வந்து பாருங்க"

அம்மா வந்து பார்த்துட்டு கத்த ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் அண்ணாவும் நானும் நீ போடுற சத்தத்துல பாம்பு டென்ஷனாகி நம்மள போடப்போறது வாய மூடிட்டு இருன்னு அம்மாவ திட்டி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிச்சோம் (போர்ட் மீட்டிங்க் போடற டைமா இது?)

நானும் அண்ணாவும் பாம்புக்கு காவலிருக்க அம்மா மத்த அறைகளை பூட்டினார். பின்னர் தம்பிய நாலு சாத்து சாத்தி (அவன் சரியான கும்பகர்ணன்) வெளியே உட்கார வைத்தார். அடுத்து பாம்ப எப்படி அடிக்கறதுன்னு விவாதம் (டெக்னிகல் டிஸ்கஷன்). பாம்படிக்க தோதான ஆயுதம் எங்களிடம் இல்லாததால் (resource deficiency) அருகில் குடியிருந்த சர்வேயர் அங்கிளிடம் ஆயுத உதவி கோரப்பட்டது. அங்கிளின் குடும்பத்தில் அனைவருமே ரொம்ப நல்லவர்கள். ரொம்ப helpful. அங்கிளும் அவர் பசங்களும் இரும்புக் கழியோடு வந்து சேர பாம்புக்கு பாடை கட்ட வியூகம் தயாரானது. என்ன பாம்பு என்று சரியாகத் தெரியவில்லை. கருப்பும் கோதுமையும் கலந்த நிறம். கண்டிப்பாக விஷப் பாம்புதான் என எனக்குத் தோன்றியது. உடல் பருமனும், பாம்பின் நீளமும் அப்படி (சயின்ஸில் நான் சூரப்புலி). இத்தனை களேபரத்திலயும் பாம்பு மோட்டாரில் காயில் சுற்றுவதை போல் (அட நாங்களும் டெக்னிக்கலா எழுதுவோம்ல) உடம்பை முறுக்கிக்கொண்டிருந்தது.

பாம்பு அடிக்கும்போது ஜன்னல் கண்ணாடி உடைஞ்சிட்டா என்ன பண்றதுன்னு அங்கிள் அம்மாவ கேட்டார். வீடே இடிஞ்சாலும் பரவால்ல சார் என்றார் அம்மா. இரும்பு கம்பியைக்கொண்டு பாம்பின் தலையை சுவற்றோடு அழுத்துவதென்றும், மற்ற இரண்டு பேர் அதை அடிப்பது என்றும் முடிவானது. இதனிடையில் எதிர்த்த வீட்டு மாமி "விளக்கு வெச்சப்புறம் பாம்ப அடிக்கறது பாவம். ஒருவேளை நல்லதா இருந்துட்டா இன்னும் மோசம்" என்றார். அவ்ளோதான் அம்மாக்கு இன்னும் பயம் ஜாஸ்தியாகிவிட்டது. "அதுக்குன்னு விடியற வரைக்கும் அப்படியேவா பார்த்துண்டிருக்க முடியும். நாளைக்கு உங்காத்துக்கு வந்துடுத்துன்னா கஷ்டம் மாமி" என்றார் அண்ணா.ஒருவழியா நீண்ட விவாதத்திற்க்குப் பிறகு பாம்படிக்க தாய்குலம் சம்மதம் வழங்கியது. பாம்படிக்கறத நானும் பார்ப்பேன் என அடம்பிடித்து அங்கேயே நின்றுகொண்டேன். அங்கிள் அதன் தலையை குறிபார்த்து இரும்பு கம்பியால் சுவற்றோடு சேர்ந்து நசுக்கினார். கிணற்றின் ராட்டினத்திலிருந்து கயிறு பிரிவதுபோல பாம்பு சரசரவென்று ஜன்னல் கம்பியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. அங்கிள் விடாமல் இன்னும் பலமாக அதன் தலையை நசுக்கி கீழே தள்ளினார். அண்ணா, அங்கிளின் பையன் எல்லாம் சேர்ந்து அதை தரையில் தள்ளி ஆளுக்கு ஒரே போடு. பாம்பு பரலோக ப்ராப்தி அடைந்தது.

பின்னர் ஆராய்ந்ததும் தெரிந்தது கருநாகம்/ராஜ நாகம் என்று. The most deadly snake. கிட்டத்தட்ட ஒரு 3.5 அடி நீளமிருந்தது. எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். ஒரு கவரில் போட்டு நாளைக்கு ஸ்கூலுக்கு கொண்டு போறேன். பார்மலின்ல போட்டு லேபில் டிஸ்ப்ளேக்கு வைக்கலாம் என்று. ம்ஹூம். ஒருத்தர் சொன்னார். பாம்பிற்க்கு வாலில் இன்னொரு உயிர் இருக்கும். கொஞ்ச நேரம் விட்டால் அதுக்கு திரும்ப உயிர் வந்துடும் (எங்கேருந்துடா இப்படிப்பட்ட கான்செப்ட் புடிக்கிறீங்க). ஒருவழியா கொஞ்சம் மண்ணென்னைய் ஊற்றி வைக்கோல் படுக்கையில் வைத்து அண்ணாவே கொள்ளி போட்டார். இந்த சம்பவத்திற்க்கு பிறகு அம்மா கர்ம சிரத்தையாய் வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கோவிலுக்கு சென்று புற்றுக்கு பாலூத்தி பாவத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கரைத்துக் கொண்டிருந்தார்.

இப்போக்கூட அண்ணா எதுக்காவது என்னை கிண்டல் செஞ்சால் சொல்லுவேன் "ஹூம் பாம்புக்கிட்டருந்து உன்ன காப்பாத்தினேன் பார். எனக்கு இது தேவைதான்". அண்ணா கொஞ்ச நேரத்திற்க்கு கப்சிப்:)

43 comments:

எம்.எம்.அப்துல்லா said...

ஹை மீ த ஃபர்ஷ்ட்டூ

நட்புடன் ஜமால் said...

ஏன் இந்த மர்டர் வெறி ...

தாரணி பிரியா said...

அய்யே மீ தி பஸ்ட்டு போச்சே :(

எம்.எம்.அப்துல்லா said...

//வீட்டில் எல்லோரும் 8.30 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவோம்).

//

ச்சேசேய்....மோசமான பழக்கமாச்சே
:)

எம்.எம்.அப்துல்லா said...

தாரணி பிரியா said...
அய்யே மீ தி பஸ்ட்டு போச்சே :(

//

ஹையா...வடை போச்சா :)))

தாரணி பிரியா said...

எனக்கு பாம்பா பார்த்தா நிஜமாவே பயம் வரதில்லை வித்யா. முதல்ல எங்க வீட்டுக்கு பின்னால சோளக்காடு இருக்கும். தினமும் குறைஞ்சது ஒரு பாம்பாவது பார்க்கலாம். பாம்பு பாக்கறது பல்லியை பாக்க மாதிரிதான் எங்களுக்கு. ஆனா அதை அடிக்கும் போது மட்டும் பார்க்கமாட்டேன். ரொம்ப கஷ்டமா இருக்கும். அதனால நீங்க பயங்கர தைரியசாலிங்க :)

தாரணி பிரியா said...

வடை தர போகும் வள்ளல் அப்துல்லா வாழ்க. நீங்க வாங்கின வடையை கோவைக்கு பார்சல் அனுப்பிடுங்க :)

தாரணி பிரியா said...

//எம்.எம்.அப்துல்லா said...
//வீட்டில் எல்லோரும் 8.30 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவோம்).

//

ச்சேசேய்....மோசமான பழக்கமாச்சே
//

கரெக்ட். நைட் குறைஞ்சது 11.30 மணி வரைக்குமாவது எங்க வீட்டுல நானும் என் தங்கையும் கதை பேசிக்கிட்டு இருப்போம். எங்க அம்மாகிட்ட நாலு நல்ல வார்த்தை வாங்கிட்டு தூங்கினாதான் சூப்பரா தூக்கம் வரும் :)

Vidhya Chandrasekaran said...

அப்துல்லா அண்ணாத்தே அதெல்லாம் ஒரு நிலாக்காலம். இப்போ என் பையன் 11 மணிக்குத்தான் தூங்கறான்:(

Vidhya Chandrasekaran said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் ஜமால்.

வாங்க தாரணி பிரியா. இன்னொரு மேட்டர் சொல்றேன். நான் பாம்ப (விஷமில்லாதது) உயிரோட பிடிச்சிருக்கேன். ரொம்ப நாளாச்சுங்க பாம்ப பார்த்து:(

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :-)

pudugaithendral said...

பாம்பை கண்டு அஞ்சாமல் நின்ற வீர மங்கைன்னு பட்டம் கொடுத்திடலாமா?

Vidhya Chandrasekaran said...

பயப்படாதீங்க முல்லை:)

வாங்க தென்றல் சிஸ்டர். சே சே எனக்கிந்த பதவி பட்டம் இதிலெல்லாம் ஆசையில்லை சிஸ்டர்:)

கார்க்கிபவா said...

அந்த ஃபோட்டொவ எடுத்துடுங்களேன்.. பயமா இருக்கு

மாதவராஜ் said...

//எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். ஒரு கவரில் போட்டு நாளைக்கு ஸ்கூலுக்கு கொண்டு போறேன். பார்மலின்ல போட்டு லேபில் டிஸ்ப்ளேக்கு வைக்கலாம் என்று.//

ரசித்தேன்.

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2009/03/blog-post_4529.html

இங்க பாம்புன்னா அங்க தேளு பதிவைப் படிங்க.

:)) :((

மணிகண்டன் said...

***
இன்னொரு மேட்டர் சொல்றேன். நான் பாம்ப (விஷமில்லாதது) உயிரோட பிடிச்சிருக்கேன். ரொம்ப நாளாச்சுங்க பாம்ப பார்த்து:(
***

ஆமாம். நான் கூட. (ரப்பர் பாம்பு தான ?)

எங்க வீட்டுல இதே மாதிரி பாம்பு வந்துட்டு போன பிறகு (பாம்பு வந்த வீடு உருபடாதுன்னு சொல்லி) வீட வித்தே ஆகனும்ன்னு சொன்ன புண்ணியவான்கள் இருக்காங்க !

SK said...

பாம்பாஆஅ ???

Vijay said...

சும்மாவா சொன்னாங்க, பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்’னு :-)

Vidhya Chandrasekaran said...

என்ன கார்க்கி இதுக்கே பயந்தா எப்படி??

நன்றி மாதவராஜ்.

வாங்க மணிகண்டன்.

Vidhya Chandrasekaran said...

யாராவது தண்ணி தெளிச்சு SKவ எழுப்புங்கப்பா.

கருத்துக்கு நன்றி விஜய்:)

Cable சங்கர் said...

படத்துல போட்டுருக்கிற பாம்புதான் அந்த பாம்பா..?

நல்லாத்தானே போஸ் கொடுத்திருக்கு..?

நல்ல அருமையான பாம்பு நடையில் அருமையான பதிவு விதயா

SK said...

இருங்க வித்யா.. உங்க கனவுல இன்னைக்கு பாம்பு வரணும்னு வேண்டிக்கறேன். ஆனா ஜூனியர் இருக்கறேன்னு பாக்குறேன். .:) :) இல்லை நீங்க டெர்ரர் ஆகிடுவீங்க :)

சின்னப் பையன் said...

ஹாஹா...

என்னா கொலவெறி???????

:-))))

Vidhya Chandrasekaran said...

நன்றி சங்கர்ஜி:)

ஹே SK பாம்பு என்னைப் பார்த்து டரியலாகாம இருந்தா சரி:)

வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்.

Truth said...

எனக்கு reptiles னா அலர்ஜி. இந்த படத்தை பாக்கும் போட்தே, உடம்புல பாம்பு நெளியிற மாதிரி இருக்கு.
பை த வே, எங்க வீட்லயும் பாம்பு குடித்தனம் பண்ணினதா அம்மா சொல்லியிருக்காங்க. நான் ஒரு நாட்டுபுறத்தான். எங்க வீட்டு ஷெல்ஃபுல ஒரு கூடைய எடுக்கும் போது ஒரு பாம்பு நல்லா காயில் மாதிரி சுத்திக்கிட்டு இருந்த்தாக மற்றும் பல மாதிரியான கதைகள அம்மா சொல்லியிருக்காங்க.

அமர பாரதி said...

கதை நன்றாக இருக்கிறது. உங்களுக்கு சிறுகதை எழுதுவது சரளமாக வருகிறது.

Vidhya Chandrasekaran said...

வாங்க Truth. எனக்கு reptile ஜாதில புடிக்காத ஒரே ஜந்து மரவட்டை தான். பாம்பு பிடிச்சு பழக்கமிருக்கரதால அது அலர்ஜி ஏதும் தெரியல. deadly snake என்ற வாகையில் இதுதான் என்னோட உச்சக்கட்ட சந்திப்பு. மத்தபடி நல்லபாம்பு, சாரை, பச்சை, காளையான் குட்டி என்று பட்டியல் நீளும்:)

வாங்க அமர பாரதி. இது கதையல்ல நிஜம்:)

Arun Kumar said...

//இன்னும் பலமாக அதன் தலையை நசுக்கி கீழே தள்ளினார். அண்ணா, அங்கிளின் பையன் எல்லாம் சேர்ந்து அதை தரையில் தள்ளி ஆளுக்கு ஒரே போடு. பாம்பு பரலோக ப்ராப்தி அடைந்தது.//

அப்பாடா பாம்பு பரலோகம் போனது ஏகாதேசியிலா ?

அந்த பாம்பு இரை ஏதாவது சாப்பிட்டு விட்டு உங்கள் வீட்டு பக்கம் ரெஸ்ட் எடுக்க ஒதுங்கி இருக்கும்.

அதானால் தான் அது ஓடாமல் அடி வாங்கி பரலோகம் சென்றது.

அது பசியோட இருக்கும் போது யாராவது சீண்டினால் டி ராஜேந்தர் ஸ்டைலில் சீறு விட்டு தான் அடி வாங்கி இருக்கும்

Arun Kumar said...

//இன்னும் பலமாக அதன் தலையை நசுக்கி கீழே தள்ளினார். அண்ணா, அங்கிளின் பையன் எல்லாம் சேர்ந்து அதை தரையில் தள்ளி ஆளுக்கு ஒரே போடு. பாம்பு பரலோக ப்ராப்தி அடைந்தது.//

அப்பாடா பாம்பு பரலோகம் போனது ஏகாதேசியிலா ?

அந்த பாம்பு இரை ஏதாவது சாப்பிட்டு விட்டு உங்கள் வீட்டு பக்கம் ரெஸ்ட் எடுக்க ஒதுங்கி இருக்கும்.

அதானால் தான் அது ஓடாமல் அடி வாங்கி பரலோகம் சென்றது.

அது பசியோட இருக்கும் போது யாராவது சீண்டினால் டி ராஜேந்தர் ஸ்டைலில் சீறு விட்டு தான் அடி வாங்கி இருக்கும்

Arun Kumar said...
This comment has been removed by the author.
இராகவன் நைஜிரியா said...

உங்க பதிவுக்கு என்னோட முதல் விஜயமே இதுதான்.

டெரர் ஸ்டோரி படிக்கிறமாதிரி இருக்கு..

பாம்ப பாத்து பயப்படாம அதை அடிக்கிற வரை வேடிக்கை பார்த்து இருக்கீங்க.. தைரியசாலிதான் நீங்க.

narsim said...

//ஒரு கவரில் போட்டு நாளைக்கு ஸ்கூலுக்கு கொண்டு போறேன்//

நீங்க பயங்ங்க்க்கரமான ஆளோ??

காட்சிகள் கண்முன்.. நல்ல பதிவு..

தமிழ் அமுதன் said...

கருநாகத்த பார்த்தா பார்த்தவங்களுக்கு ஆயுசு கெட்டின்னு
எங்க ஊருபக்கம் சொல்லுவாங்க!!

நம்ம கண்ணுல மாட்டின நாகத்தோட நெலமை ??

Vidhya Chandrasekaran said...

வாங்க அருண். அது சீறரதுக்கு நாங்க வாய்ப்பே குடுக்கலியே:)

நன்றி இராகவன்:)

நன்றி நர்சிம்:) நானெல்லாம் பெரிய ரவுடியா இருந்தவளாக்கும்:)

ஜீவன் அப்ப நான் ரொம்ப நாள் பதிவெழுதுவேன்னு சொல்றீங்க:)

வல்லிசிம்ஹன் said...

சாமி கடவுளே. இன்னிக்கு எப்படித் தூங்கப் போறேனோ தெரியலையே. ஜமா போட்டுக் கிட்டு இப்படியா ரெண்டு பேரும் எழுதுவீங்க ஊர்வன,கொட்டுவன என்று வரிசையா வரும் போல இருக்கே:))))

மாசற்ற கொடி said...

அய்யோ ! பயமா இருக்குங்க - இதே மாதிரி ஒரு முறை எங்கள் வீட்டு சமையல் அறை ஜன்னலில் அது வந்த போது, எங்கள் பாட்டி கை கூப்பி கொண்டு " நாகராஜா, நாகராஜா ! வந்த வழியே போய்டு - நான் உனக்கு பால் வார்க்கறேன் " என்று வேண்டி அனுப்பியும் விட்டார்கள் !!

ஏந்தான் இதை ராத்திரில படிச்சேனோ - ............

பயத்துடன்
மாசற்ற கொடி

Vidhya Chandrasekaran said...

வாங்க வல்லிசிம்ஹன். பயப்படாம தைரியமா தூங்குங்க. ஏதுனாலும் என்கிட்ட சொல்லுங்க. ஒருவழி பண்ணிடலாம்:)

வருகைக்கு நன்றி மாசற்றகொடி. எங்க வீட்ல கூட இந்த மாதிரி கதை சொல்லுவாங்க. அதெல்லாம் தனியா ஒரு பதிவே போடலாம்:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாம்படிக்கறத நானும் பார்ப்பேன் என அடம்பிடித்து அங்கேயே நின்றுகொண்டேன்.

ம்ஹூம் என்னா ஒரு வில்லத்தனம்

ஆனாலும் ஜீனியரோட அம்மாவுக்கு செம தில்லுதான்.

ஆமா இது டெர்ரர் பதிவு இல்லல்ல, காமெடி பதிவுதானே.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தாயே. நீங்களும் சென்னைலதான் இருக்கீங்களா. எதுக்குக் கேக்கறேன்ன ஒரு அவசரம் ஆபத்துக்குக் கூப்பிடத்தான்:)
வந்திருவீங்கள்ளா:)))))))

Vidhya Chandrasekaran said...

வாங்க அமித்து அம்மா. ரொம்ப குசும்பாயிடுச்சு உங்களுக்கு. இருங்க அமித்து கிட்ட சொல்லி உதைக்க சொல்றேன்.

Vidhya Chandrasekaran said...

நான் சென்னைக்கு பக்கதுல தாம்பரத்துல இருக்கேனுங்க வல்லிஹம்சன்:)

மகேஷ் : ரசிகன் said...

பாம்பு படத்த போட்டு இப்படியா பயமுறுத்தறது?

விஷம்...விஷம்...விஷம்.. (உங்கள சொன்னேன்).

நாங்களும் பாம்பு அடிச்சிருக்கம்ல?
அனுபவத்தை "http://gcefriends.blogspot.com/2009/03/blog-post_05.html" இங்கே படிக்கலாம்.