என் உறவினரின் 4 வயது மகன் சரியான வாலு. அவன கண்ட்ரோல் பண்றதுங்கறது முடியாத காரியம். அவன் சித்தப்பா அவனுக்கு ஒரு கெட்டவார்த்தையை வேற கத்துக்கொடுத்திட்டார். ரொம்ப கோபப்படுத்தினால் அந்த வார்த்தையை யூஸ் பண்ணிடுவான். எனக்கு கல்யாணமான புதிதில் அந்த வார்த்தையை கேட்டு அதிர்ந்து போனேன். அப்புறம் அவன் பெற்றோரிடம் சொல்லி ஒருவழியாக அந்த வார்த்தையை மறக்கடித்தோம். ஏதாவது சேட்டை பண்ணலென்னா அவனுக்கு தூக்கமே வராது (என் பையன் மாதிரி). அவன் கை காலெல்லாம் நிறைய வீரத்தழும்புகளிருக்கும். ஒவ்வொரு முறை விஷமம் பண்ணும்போதும் சரியா அடிவாங்குவான் அவங்க அப்பாகிட்டருந்து. அவனின் வீரதீரபிரதாபங்களில் 5 பவுன் தங்கச் சங்கிலியை தொலைத்ததும், கலர் டீவியை கீழே தள்ளி உடைத்ததும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. போன வருஷம் தான் LKG சேர்த்திருக்காங்க. சமீபத்தில் அவரை நேரில் சந்தித்தபோது எப்படியிருக்கான் பையன்னு கேட்டதுக்கு புலம்பித்தள்ளிட்டார்.
வாரத்திற்க்கு ஒருமுறை அவன் ஆசிரியை பேரண்ட்ஸ் வந்துபார்க்கவும்ன்னு டயரில எழுதிஅனுப்பறாங்களாம். பையன் அடிதடின்னு இறங்கலைன்னாலும் அறவழியில அராஜகம் பண்றானாம். அவனின் மாஸ்டர் பீஸ் இதோ உங்களுக்காக.
# ரெண்டு தடவை மிஸ் கிட்ட பாத்ரூம் போக பர்மிஷன் கேட்ருக்கான். போகக்கூடாதுன்னு சொல்லவே அடுத்த தடவை ஏதும் கேக்காமல் பாத்ரூம் போய்ட்டு வந்திருக்கான். ஏண்டா இப்படி பண்ணன்னு கேட்டதுக்கு "நீங்க எப்படியும் போகக்கூடாதுன்னு தான் சொல்வீங்க. உங்ககிட்ட பர்மிஷன் கேட்டு ஏன் எனர்ஜிய வேஸ்ட் பண்ணனும்?"
# வகுப்பு நேரத்தில் லஞ்ச் பாக்ஸிலிருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட்டிருக்கான். ஏண்டா கேக்காம சாப்பிட்டன்னு கேட்டதுக்கு "எங்கம்மா எனக்கு குடுத்துவிட்ருக்காங்க. எனக்கு பசிக்குது சாப்பிட்டேன்"
# வகுப்பில் வட்டமாக மேஜை போட்டு அதை சுற்றி பசங்களை உட்காரவைத்திருப்பாங்களாம். இவன் ரொம்ப விஷமம் செய்வதால் ஆசிரியை எப்போதும் இவன் பக்கதிலேயே தான் அமருவாராம். ஒருநாள் "போய் மத்த பாய்ஸ் பக்கதுல உட்காருங்க. நான் எதுவும் பண்ணமாட்டேன். சும்மா என் பக்கதுலயே உக்காராதீங்க"
# வகுப்பில் ஏதோ குறும்பு செய்ததற்க்கு டீச்சர் திட்டவே இவன் போய் போர்டில் எழுதிபோட்டதையெல்லாம் அழித்து விட்டானாம். டீச்சருக்கு ரொம்ப கோவம் வந்து இவனை லேசாக அடித்ததும் அவன் உடனே சொன்னது "அய்ய்ய்ய் வலிக்கலயே". நொந்தேவிட்டாரம் அவர்.
ஹ்ம்ம்ம் LKGலேயே இப்படியா?
February 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
வடிவேலு காமெடி அதிகமா பார்க்கிறான் போல!! :-)))
\\வகுப்பில் ஏதோ குறும்பு செய்ததற்க்கு டீச்சர் திட்டவே இவன் போய் போர்டில் எழுதிபோட்டதையெல்லாம் அழித்து விட்டானாம். டீச்சருக்கு ரொம்ப கோவம் வந்து இவனை லேசாக அடித்ததும் அவன் உடனே சொன்னது "அய்ய்ய்ய் வலிக்கலயே". நொந்தேவிட்டாரம் அவர்.\\
இது டாப்பு ...
\\ஹ்ம்ம்ம் LKGலேயே இப்படியா?\\
யம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஹா ஹா ஹா..... நல்லா இருக்கு!
இருக்கலாம் முல்லை:)
நன்றி ஜமால்.
நன்றி பாஸ்:)
அடங்க.. அவனுக்கு பிரைட் ஃப்யூச்சர் இருக்குங்க..
//வகுப்பு நேரத்தில் லஞ்ச் பாக்ஸிலிருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட்டிருக்கான். ஏண்டா கேக்காம சாப்பிட்டன்னு கேட்டதுக்கு "எங்கம்மா எனக்கு குடுத்துவிட்ருக்காங்க. எனக்கு பசிக்குது சாப்பிட்டேன்"//
Wow!! Soooooper :-)))
பையன் சரியாதான் சொல்லியிருக்கான்
அவங்க அம்மாகிட்ட இத சொல்லிடறேன் கார்க்கி:)
நன்றி தீபா.
சரிதான் பாபு:)
LKGலயே ‘மாப்பிள்ளை பெஞ்ச்’ ஆ??
கலக்கல்!!!!!!
ஹ ஹ ஹ...
அரசியல்ல ஆர்வம் இருக்குமோ? :-)
இப்பலெல்லாம் பசங்க ரொம்பவே தேறிட்டானுங்க.. வித்யா..
வருகைக்கு நன்றி நர்சிம், truth, சங்கர்ஜி:)
//# வகுப்பில் ஏதோ குறும்பு செய்ததற்க்கு டீச்சர் திட்டவே இவன் போய் போர்டில் எழுதிபோட்டதையெல்லாம் அழித்து விட்டானாம். டீச்சருக்கு ரொம்ப கோவம் வந்து இவனை லேசாக அடித்ததும் அவன் உடனே சொன்னது "அய்ய்ய்ய் வலிக்கலயே". நொந்தேவிட்டாரம் அவர்.
//
எங்கம்மா அடிச்சாங்கன்னா நானும் என் தம்பியும் கூட சின்ன வயசுல இதே மாதிரி "வலிக்கலையே"ன்னு சொல்லுவோம். ஆனா LKGங்கிறது கொஞ்சம் ஜீரணிக்க கஷ்டமா இருக்கு.
:)
/// பையன் அடிதடின்னு இறங்கலைன்னாலும் அறவழியில அராஜகம் பண்றானாம்.///
அறவழி அராஜகமா? எங்க புடிகிறீங்க இந்த வார்த்தையெல்லாம்?
//"அய்ய்ய்ய் வலிக்கலயே".//
;;-))))
பையன் பிரமாதமா வருவாங்க.
LKG பசங்க கிட்ட பழகற டீச்சர் இத கூட ரசிக்க முடியாதா ? இதுக்கு போய் கம்ப்ளைன்ட் கொடுப்பாங்களா ?
இந்த நாலு இன்சிடென்ட்ல எது பெஸ்ட்ன்னு சொல்லவே முடியல !
வளர்ந்த பிறகு "terror" -ஆ வருவான் போல இருக்கு...மழலைகள் எல்லாம் நம்மை மகிழ்விக்க பிறந்தவை...Let us enjoy.
visit my blog - http://valibarsangam.wordpress.com
Saravanan S
சரியான வயதில் சரியான வழிகாட்டி கிடைத்தால் பையன் ரொம்ப சூப்பராக வருவான்
same blood. I experiance same kind of problems with my son.
வாங்க கைப்புள்ள. ஓ நீங்க சின்ன வயசிலேயே கைப்புள்ளயாதான் இருந்தீங்களா?
ஜீவன் ரத்தம் பார்க்காம ரவுடியிசம் பண்றதுதான் அறவழி அராஜகம்:) எப்படி??
வாங்க மணிகண்டன். நானும் இதேதான் யோசிச்சேன்.
சரியாகச் சொன்னீர்கள் சரவணன்.
ஆமாம் அருண். அவன் ரொம்ப புத்திசாலி. அவன் திறமைகளை ஊக்கப்படுத்த பெற்றவர்களுக்குத் தெரியவில்லை:(
ஆஹா ஜூனியர் முரளி டெரரா? அன்பாகச் சொல்லுங்கள் பாஸ். அடித்து புரியவைக்காதீர்கள்:)
இப்ப எல்லாம் நாமதான் யோசிச்சு பேச வேண்டி இருக்கு. பசங்க எல்லாம் படு சார்ப் :)
சரியா புரியவைக்கணும் புள்ளைங்களுக்கு. பெரிய பையன் ஆனவுடன் நல்ல புரிஞ்சுக்கற வாய்ப்பு.
குழந்தைகளின் இந்தக் கதைகளை ரசிக்கிற, அனுபவிக்கிற மனசு முதலில் வேணும் நம் மனிதர்களுக்கு. நல்ல பதிவு.
வாங்க தாரணிபிரியா.
கருத்துக்கு நன்றி SK.
கருத்துக்கு நன்றி மாதவராஜ்.
ஹூம்! பாவம் பெற்றோர்கள்.
சரியான வால் பையன் போல இருக்கு. ஆனா நட்டு நொம்ப சமத்து:-))
வணக்கம்
நிச்சயம் மிகச்சிறந்த வருவதர்கான எல்லா தகுதியும் கொண்டிருக்கின்றான் அந்த குழந்தை.
மனதில் உள்ளதை தைரியமாகவும், திடமாகவும், சொல்கிறான் மற்றும் செய்கிறான்.
அடங்க மறுத்தல் என்பதே மிகப்பெரிய வரம்
யாறாவது அவனை சரியான வழியில் ஊக்குவிக்கவும்
நன்றி
இராஜராஜன்
நல்ல பதிவு
// கார்க்கி said...
அடங்க.. அவனுக்கு பிரைட் ஃப்யூச்சர் இருக்குங்க.//
ஆமா நம்ம கார்க்கி மாதிரி :)
வாங்க வடுவூர் குமார்.
நட்டு அவங்க அம்மா மாதிரியா அபி அப்பா:)
கருத்துக்கு நன்றி வனம்.
நன்றி ஆனந்த்.
ஹி ஹி ஆதவன் நான் சொல்ல நினைச்சத நீங்க சொல்லிட்டீங்க:)
வித்யா, அந்த பயன் வாலுத்தனம் ரொம்ப ரசிக்க வைக்கின்றது, அதைவிட நீங்க எழுதி இருக்கின்ற எழுத்து நடை அருமையா இருக்கின்றது
குட்டி பையன் செய்த விஷமங்களை
அணுவா அணுவா, ரசிச்சு சொல்லி இருக்கீங்க. :-))
பையன் சூப்பரா வருவான்.
என் இனமடா நீனு சொல்ற அளவுக்கு இருக்கான். He will have a very bright future :)
இப்பவே இப்படியா
சரியா போச்சு.
நன்றி ரம்யா.
நன்றி வெட்டிப்பயல். உங்க கிட்ட வேணா டியூஷன் படிக்க சொல்றேன்:)
நன்றி அமித்து அம்மா.
ரசிக்கும்படி குறூம்புத்தனம் இருந்தாலும், இந்த மாதிரி சிறு வயதிலேயே அசிரியர்களுக்கு அடங்காமல் இருப்பது, வருங்காலத்தில் ஒழுக்கமின்மையில் கொண்டு விடும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் தான் இச்சிறுவனை நல்வழிப்படுத்த வேண்டும்.
என் தங்கை மகனும் இப்படித்தான். யாருக்கும் பயம் கிடையாது. ஏதாவது சேட்டை செய்தே, இருட்டு ரூம்ல போட்டு பூட்டிடுவேனு சொன்னாலும், வா, இருட்டறைக்குப் போகலாம்’னு சொல்லும் அளவுக்கு பயம் கிடையாது. இப்போது ஸ்கூலுக்குப் போகிறான். அங்கே டீச்சர்களுக்குக் கொஞ்சம் பயப்படுகிறான். அவன் டீச்சர் என்ன உபாயம் மேற்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நாள் கிளாசில் தூங்கி விட்டானாம். ஏண்டா தூங்கினே என்று டீச்சர் கேட்டதற்கு, “I am very Tired Madam" என்று சொல்லிவிட்டு, மீண்டும் படுத்துக் கொண்டு விட்டானாம் :-)
அந்த குழந்தைக்கு நல்ல பிரைட் ப்யூச்சர் இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த குழந்தையிடம் ஒரு முரட்டுத்தனம் தெரிகின்றது.
தந்தையிடம் அடிவாங்கி, வாங்கி அந்த முரட்டுத்தனம் வந்து விட்டது என்று நினைக்கின்றேன்.
அன்பான வழியில் சொன்னால் புரிந்து கொள்வார்.
// ஏதாவது சேட்டை பண்ணலென்னா அவனுக்கு தூக்கமே வராது //
சேட்டை பண்ணுவது என்பது எல்லா குழைந்தைகளும் பண்ணுவதுதான். அதை நல்லத்தனமாக சொன்னால் புரிந்து கொள்ளுவார்கள்.
// ஒவ்வொரு முறை விஷமம் பண்ணும்போதும் சரியா அடிவாங்குவான் அவங்க அப்பாகிட்டருந்து.//
அடிப்பது என்பது மிகத் தப்பான விசயம். அடிக்கடி அடித்துக் கொண்டு இருந்தால் பயம் போய், வெறுப்பு வந்துவிடும்.
//பையன் அடிதடின்னு இறங்கலைன்னாலும் அறவழியில அராஜகம் பண்றானாம். //
இது ஒரு விதமான முரட்டுத்தனம்தான்.
மன்னிக்கவும். மற்றவர்கள் கருத்துக்களில் இருந்து மாறு பட்ட கருத்து சொல்வதற்கு.
மாறு பட்ட கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. மனதில் பட்டது சொல்லிவிட்டேன்.
வாங்க விஜய்.
இராகவன் சார். நீங்க சொல்றது உண்மை தான். அவன் பெற்றோரிடமும் இதே தான் சொன்னேன். வருகைக்கு நன்றி சார்:)
Post a Comment