போன துணுக்ஸ் பதிவில் பரிசல் துணுக்ஸ் என்ற தலைப்பு வெண்பூ பயன்படுத்தியது என்று சொல்லியிருந்தார். வெண்பூ அண்ணாவிடம் மன்னிப்பு கேட்டதுக்கு ரொம்ப பெருந்தன்மையா பரவாயில்லைன்னு சொல்லிட்டார். இருந்தாலும் என் மனசாட்சி உறுத்தவே துணுக்ஸ் நிறுத்தப்படுகிறது. ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க. அதுக்குப் பதிலாதான் இந்த தலைப்பு:)
*******
உறவினருக்கு கல்யாணத்துக்காக பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். 28 வயதான பெண் ஒருவரின் கண்டீஷன் "குறைஞ்சது 50,000 சம்பாதிக்கனும். கல்யானத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் தான். அக்கா தங்கை இருக்கக்கூடாது". இன்னும் பல. பொண்ணோட குவாலிபிகேஷன். 12 வது பெயில். இந்தக் காலத்துல பொண்ணு கிடைக்கிறது குதிரை கொம்பாருக்காம். இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு பையன் கிடைக்கிறது கஷ்டமா இருக்குமாம். ஆக ரெகுலரா என் பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போடும் பொண்ண பெத்த பதிவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதைப் பற்றி பரிசீலிக்கப்படும்:)
************
நான் எழுதனும்ன்னு நினைக்கிற மேட்டர வேற யாராவது ரொம்ப நல்லா எழுதிடறாங்க. அப்படி நான் எழுதனும் நினைச்ச ஏர்டெல் விளம்பரத்த பத்தி கார்க்கியும், பரிசல் சாரும் எழுதினாங்க. அப்புறம் வோடோபோன் விளம்பரத்த பத்தி பரிசல் சார் தனி பதிவே போட்டுட்டார். விடமாட்டேன். புதுசா வந்திருக்கிற மிரிண்டா விளம்பரத்தில் மொக்க ஜோக்காக இருந்தாலும், பிண்ணனி இசை டக்கராக இருக்கிறது.
***********
பேருந்தில் லேட்டஸ்ட் படங்களின் காமெடி சீன்ஸ் ஒளிபரப்பினார்கள். வில்லு படமும் ஏகன் படமும். என் நிலைமை எப்படியிருக்கும். அப்படியே கண்ணாடிய ஒடைச்சிட்டு வெளிய குதிச்சிடலாம்னுகூட யோசிச்சேன். அப்புறம் வருங்காலத்தில் தமிழ் பதிவுலகின் நம்பிக்கை நட்சத்திரத்தை இழந்துட்டோமேன்னு நீங்க எல்லாரும் சோகத்தில் தத்தளிப்பீங்களேங்கற ஒரே காரணத்துக்காக முடிவ மாத்துக்கிட்டேன். நயந்தாரா கொஞ்சம் நடிச்சும் காட்டிருக்கலாம்.
**********
அஜீத்தின் இந்தப் பாட்டைப் பாருங்களேன்.
ஒவ்வொரு முறை இந்தப் பாட்டைப் (தப்பித்தவறி) பார்க்கும்போதும் தோன்றுவது "பாட்டப் பாடின ஹரிஹரன் கூட இந்தளவுக்கு கஷ்டப்பட்டிருக்கமாட்டார்". அப்பாவோட கமெண்ட் இன்னும் மோசமா இருக்கும். அஜித் ரசிகர்களுக்கு பயந்து அதை இங்கே குறிப்பிடல. இன்னொரு பாட்டு மிஜிக் டைரக்டராக முயற்சி பண்ணுவாரே. அதுல மழைல நனைஞ்சிக்கிட்டே பாடுவார் (படுத்துவார்). நான் விஜயின் தீவிர ரசிகை இல்லையென்பதற்கான ஆதாரம்.
***********
செவ்வாய் காலை - தாம்பரம் டூ மதுராந்தகம்
வியாழன் மதியம் - மதுராந்தகம் டூ அண்ணா நகர்.
வியாழன் இரவு - அண்ணா நகர் டூ தாம்பரம்.
சனி விடியற்காலை - தாம்பரம் டூ பாண்டிச்சேரி.
திங்கள் விடியற்காலை - பாண்டி டூ கள்ளக்குறிச்சி
திங்கள் இரவு - கள்ளக்குறிச்சி டூ பாண்டி
செவ்வாய் காலை - பாண்டி டூ தாம்பரம்.
இப்படி போன வாரத்தில் முக்கால்வாசி நேரம் பயணத்திலேயே கழிந்தது. வரும் ஞாயிறு வரை ரெஸ்ட் (வீட்டில் புடுங்க வேண்டிய ஆணிகளெல்லாம் கடப்பாரைகளாக மாறி கழுத்தை நெரிப்பது வேறு விஷயம்). திரும்பவும் திங்கள் கள்ளக்குறிச்சி போகனும். ஒரு வாரம் அங்க ஸ்டே. எக்கச்சக்கமா பதிவுகள் ட்ராப்டில் முடிக்கப்படாமல் இருக்கின்றன். இந்தப் பயணங்களின் காரணமாக நீங்க தப்பிச்சிட்டிருக்கீங்க. அடுத்த வாரம் முழுக்க பதிவு போட முடியாது. ம்ம்ம்ம் ரொம்ப காலத்துக்கும் நீங்க எஸ்கேப் ஆகமுடியாது. மார்ச் முடிஞ்சு ஏப்ரலில் உங்கள் எல்லாருக்கும் சனி பிடிக்கப்போகுது. ஏப்ரலில் தொடர் தாக்குதலுக்கு ரெடியாருங்கப்பு:)
March 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
47 comments:
ஹையா மீ த ஃபர்ஷ்ட்டூ :)
வெயிட்...பதிவ படிச்சிட்டு வர்றேன்.
அப்ப நான் ஃபர்ஸ்ட் இல்லயா ?
அசின் மிரிண்டா விளம்பரம் சூப்பருங்க...
//செவ்வாய் காலை - தாம்பரம் டூ மதுராந்தகம்
வியாழன் மதியம் - மதுராந்தகம் டூ அண்ணா நகர்.
வியாழன் இரவு - அண்ணா நகர் டூ தாம்பரம்.
சனி விடியற்காலை - தாம்பரம் டூ பாண்டிச்சேரி.
திங்கள் விடியற்காலை - பாண்டி டூ கள்ளக்குறிச்சி
திங்கள் இரவு - கள்ளக்குறிச்சி டூ பாண்டி
செவ்வாய் காலை - பாண்டி டூ தாம்பரம்.
இப்படி போன வாரத்தில் முக்கால்வாசி நேரம் பயணத்திலேயே கழிந்தது.//
தாமஸ் குக் மாதிரி வர வாழ்த்துக்கள்.
மார்ச் முடிஞ்சு ஏப்ரலில் உங்கள் எல்லாருக்கும் சனி பிடிக்கப்போகுது. ஏப்ரலில் தொடர் தாக்குதலுக்கு ரெடியாருங்கப்பு:)
எவ்வளவோ தாங்கிட்டோம், இத தாங்க மாட்டோமா வித்யா...
நான் ஒரு வாரம் வெயிட்டிங்க சொன்னேன்.
நான் எழுதனும்ன்னு நினைக்கிற மேட்டர வேற யாராவது ரொம்ப நல்லா எழுதிடறாங்க//
ம், ரொம்ப கரெக்ட்டா சொல்லியிருக்கீங்க.
பொண்ணோட குவாலிபிகேஷன். 12 வது பெயில்..
இதைப்பற்றி ஒரு தனி பதிவே போடலாம்.....
28 வயதான பெண் ஒருவரின் கண்டீஷன் "குறைஞ்சது 50,000 சம்பாதிக்கனும். கல்யானத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் தான். அக்கா தங்கை இருக்கக்கூடாது". இன்னும் பல.
பத்திரமான பயணம் அமைய வாழ்த்துக்கள்.
சேம் ப்ளட் குறித்து ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியடைந்தேன்.
//வில்லு படமும் ஏகன் படமும்.//
நல்ல முழு நீள நகைச்சுவை திரைப்படங்கள்
"என்னத்த சொல்ல" - இதைப் பற்றி நான் என்னத்த சொல்ல??? எனக்கு அவ்வளவு ஈர்ப்பாக இல்லை இந்தத் தலைப்பு. சாரி சிஸ்டர்.
துணுக்ஸ்னு பேரு வச்சாரே தவிர அதுக்கப்புறம் அவர் எழுதுன பாட்டைக் காணோம். நீ அதை மெயிண்டெய்ன் செய்வதால் மிகவும் மகிழ்வதாக வெண்பூ சொன்னார் :)
மொத ரிச்சர்வேஷன் நான் கவுண்டர் திறக்குறதுக்கு முன்னாடியே...ஐ மீன் நீ இப்படி சொல்றதுக்கு முன்னாடியே நான் செஞ்சுட்டேன்
:))
//நயந்தாரா கொஞ்சம் நடிச்சும் காட்டிருக்கலாம்.
//
நுண்அரசியலை ரசித்தேன் :)
//"பாட்டப் பாடின ஹரிஹரன் கூட இந்தளவுக்கு கஷ்டப்பட்டிருக்கமாட்டார்". //
:):)
//செவ்வாய் காலை - தாம்பரம் டூ மதுராந்தகம்
வியாழன் மதியம் - மதுராந்தகம் டூ அண்ணா நகர்.
வியாழன் இரவு - அண்ணா நகர் டூ தாம்பரம்.
சனி விடியற்காலை - தாம்பரம் டூ பாண்டிச்சேரி.
திங்கள் விடியற்காலை - பாண்டி டூ கள்ளக்குறிச்சி
திங்கள் இரவு - கள்ளக்குறிச்சி டூ பாண்டி
செவ்வாய் காலை - பாண்டி டூ தாம்பரம்.
//
அட இன்னாமே ஒரு தபா இப்பிடி சுத்துனதுக்கே இம்மா அலுத்துகுர!!!!
ஒவ்வோர் தபாவும் இந்தமேரி சுத்திகினுகீற என்னமேரி ஆளல்லாம் நென்ச்சிப்பாரு...ஒ.கே.
அண்ணே கன்பார்ம்டா என் பையன் உன் பொண்ணுக்குத்தாண்ணே. அப்புறம் தலைப்பு சம்பந்தமா இல்லாத மூளைய போட்டு குழப்பினதுல இது ஒன்னு தான் தேறிச்சு. கொஞ்ச நாளைக்கு இந்த மாதிரி துணுக்ஸ் மேட்டர சொல்றத விட்டுடலாமான்னு கூட யோசிச்சேன். விதி வலியது.
என்னத்த சொல்ல
நல்லா இருக்கு
மேல ரிசர்வேஷன் செஞ்சுட்டேன்னு நான் போட்ட பின்னூட்டம் இதுக்குதான். இதை அங்கே கட்&பேஸ்ட் செய்ய மறந்துட்டேன்.
//ஆக ரெகுலரா என் பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போடும் பொண்ண பெத்த பதிவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதைப் பற்றி பரிசீலிக்கப்படும்:)
//
ஆஜர்..
உங்க அப்பா என்ன சொல்லுவாருன்னு என் கிட்ட போய் சொல்லிட்டிங்களே..
பதிவாக போடப் போறேன்..
நான் விஜய் ரசிகன் தான் என்பதற்கு ஆதாரமும் வேண்டுமோ?
\\ எம்.எம்.அப்துல்லா said...
//செவ்வாய் காலை - தாம்பரம் டூ மதுராந்தகம்
வியாழன் மதியம் - மதுராந்தகம் டூ அண்ணா நகர்.
வியாழன் இரவு - அண்ணா நகர் டூ தாம்பரம்.
சனி விடியற்காலை - தாம்பரம் டூ பாண்டிச்சேரி.
திங்கள் விடியற்காலை - பாண்டி டூ கள்ளக்குறிச்சி
திங்கள் இரவு - கள்ளக்குறிச்சி டூ பாண்டி
செவ்வாய் காலை - பாண்டி டூ தாம்பரம்.
//
அட இன்னாமே ஒரு தபா இப்பிடி சுத்துனதுக்கே இம்மா அலுத்துகுர!!!!
ஒவ்வோர் தபாவும் இந்தமேரி சுத்திகினுகீற என்னமேரி ஆளல்லாம் நென்ச்சிப்பாரு...ஒ.கே.\\
போகப் போக பழகிடும்னு நினைக்கிறேன்.
//"பாட்டப் பாடின ஹரிஹரன் கூட இந்தளவுக்கு கஷ்டப்பட்டிருக்கமாட்டார்".//
:-)
வாங்க அ.மு.செய்யது. சைக்கிள் கேப்பில வடைய அப்துல்லா அண்ணே ஆட்டையபோட்டுட்டாரு. நீங்க வேற தாமஸ் குக்ன்னு வெறுப்பேத்தாதீங்க பாஸ்.
வாங்க அமித்து அம்மா. நான் கூட அந்த பதிவ படிக்கும்போது ரொம்ப ஆச்சரியப்பட்டேன். Atleast i'm not alone:)
நன்றி சங்கர்ஜி.
என்னத்த சொல்லின்னு காபிரைட் கன்னையா வாங்கிட்டாரு.எனவே தலைப்பு செல்லாது.
நன்றி முரளிக்கண்ணன்.
கார்க்கி ஏன் இந்தக் கொலைவெறி உனக்கு. எப்படியோ உனக்கு பதிவுக்கான மேட்டர் சிக்க்டுச்சு. சந்தோசம்யா.
நன்றி முல்லை.
ராஜ நடராஜன் நான் அப்ப என்ன தலைப்புல தான் எழுதட்டும் அவ்வ்வ்வ்வ்வ்வ்
யோவ் என்ன இது இப்பதான் 3 பார்த்தேன்
22ஆஆ
me the 24th
me the 25th.
\\ஆக ரெகுலரா என் பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போடும் பொண்ண பெத்த பதிவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதைப் பற்றி பரிசீலிக்கப்படும்:)\\
எப்படிங்க இதெல்லாம்
12th பெயிலானாலும் அந்த பொண்ணுக்கு நல்ல நடைமுறை அறிவு இருக்குங்க. அத உங்க பதிவில் எழுதும் இந்த பின்னூட்டம் மூலமா பாராட்டறேன்.
இத எல்லாம் பாக்கும்போது நம்ப பெருசுங்களுக்கு வரதட்சணை வாங்கற யோசனை எப்படி வந்ததுன்னு எளிதா புரியுது.
ஜமால் அண்ணாத்தே உங்க கவுண்டிங் முன்னால நானெல்லாம் தூசு:)
நன்றி மணிகண்டன் கால் சதத்திற்க்கு:)
//"குறைஞ்சது 50,000 சம்பாதிக்கனும். கல்யானத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் தான். அக்கா தங்கை இருக்கக்கூடாது"//
அவ்வ்வ்வ்வ்வ்வ்...அக்கா தங்கை இருக்குறது எங்க குத்தமா..
//மார்ச் முடிஞ்சு ஏப்ரலில் உங்கள் எல்லாருக்கும் சனி பிடிக்கப்போகுது. ஏப்ரலில் தொடர் தாக்குதலுக்கு ரெடியாருங்கப்பு:) //
அதே தான்... எங்க பின்னூட்ட தாக்குதலுக்கும் ரெடியா இருந்துக்கங்க
பொண்ணு சொல்லியிருக்கற கண்டீஷன் குறைவுதாங்க.
நான் அதை நவீன மணல்கயிறு ஸ்டைலில் இருந்தால் எப்படி இருக்கும்னு பதிவு போட வெட்டிப்பயல் கலக்கலா கண்டீஷன் போட்டு பதிவு போட்டிருந்தார்.
நேரம் கிடைக்கும்போது படிங்க.
பொண்ணுங்க சொல்வது, மாப்பிள்ளை ஹைவையா இருக்கணுமாம்??? :(
அதான் எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே.. :)
//"என்னத்த சொல்ல"//
என்னாலும் சொல்லுங்க :)
என்னுடைய பழைய போஸ்ட் ஒன்னு இருக்கு யுவதிகளின் எதிர்பார்ப்பு, நேரம் கிடைத்தால் படிச்சு பாருங்க. ;)
பேருந்தில் வில்லு, ஏகன் பார்த்த உங்க நிலைமையை விட படத்தின் முதல் நாள் அன்று திரையரங்கில் சென்று படம் பார்த்த என் நிலைமையை யோசிச்சு பாருங்க. :)
//மார்ச் முடிஞ்சு ஏப்ரலில் உங்கள் எல்லாருக்கும் சனி பிடிக்கப்போகுது. ஏப்ரலில் தொடர் தாக்குதலுக்கு ரெடியாருங்கப்பு:)//
அப்ப இது வரைக்கும் இல்லையா இனிமேல் தானா? அது சரி கத்திரி வெயிலில் தான் சனி உக்கிரம் அடைவான் போல ;)
நன்றி ஆதவன்.
நன்றி தென்றலக்கா.
வாங்க முத்துலக்ஷ்மிக்கா.
படிச்சிட்டு சொல்றேன் சிவா. வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆஹா 33 பின்னூட்டமா... சூப்பர்
என்னத்த சொல்ல... எத வேணுமானாலும் சொல்லுங்க.. படிக்க பின்னூட்டமிட நாங்க இருக்கோமில்ல.
// ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க. அதுக்குப் பதிலாதான் இந்த தலைப்பு:)//
நாங்க சந்தோஷப்படவில்லை என்று சொன்னால் நம்பவாப் போறீங்க..
உண்மையைச் சொல்றேங்க சந்தோஷப் படவில்லை..
// நான் எழுதனும்ன்னு நினைக்கிற மேட்டர வேற யாராவது ரொம்ப நல்லா எழுதிடறாங்க. //
இதுக்குதாங்க நான் எழுதணும் என்று நினைப்பது கூட கிடையாது.
நாமெல்லாம் பின்னூட்டம் மட்டும்தான்.
(10 நாளா என்ன பதிவு போடுவது என்று மண்டை காஞ்சு போச்சுங்க..)
// வில்லு படமும் ஏகன் படமும். என் நிலைமை எப்படியிருக்கும். //
ஐயோ பாவம்.. உங்க நிலைமை இப்படி ஆக வேண்டாம்.
// அப்படியே கண்ணாடிய ஒடைச்சிட்டு வெளிய குதிச்சிடலாம்னுகூட யோசிச்சேன். அப்புறம் வருங்காலத்தில் தமிழ் பதிவுலகின் நம்பிக்கை நட்சத்திரத்தை இழந்துட்டோமேன்னு நீங்க எல்லாரும் சோகத்தில் தத்தளிப்பீங்களேங்கற ஒரே காரணத்துக்காக முடிவ மாத்துக்கிட்டேன்.//
நல்ல வேலை அது மாதிரி எதுவும் நீங்க பண்ணவில்லை. நாங்க பண்ண புண்ணியம் தப்பிச்சீங்க
// நயந்தாரா கொஞ்சம் நடிச்சும் காட்டிருக்கலாம். //
ஹி.. ஹி... ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு..
// அஜீத்தின் இந்தப் பாட்டைப் பாருங்களேன்.
ஒவ்வொரு முறை இந்தப் பாட்டைப் (தப்பித்தவறி) பார்க்கும்போதும் தோன்றுவது "பாட்டப் பாடின ஹரிஹரன் கூட இந்தளவுக்கு கஷ்டப்பட்டிருக்கமாட்டார்". //
என்னத்த சொல்வது... நடிக்கின்றேன் என்று நம்மை வாட்டி வதைக்கின்றார்கள்.
// செவ்வாய் காலை - தாம்பரம் டூ மதுராந்தகம்
வியாழன் மதியம் - மதுராந்தகம் டூ அண்ணா நகர்.
வியாழன் இரவு - அண்ணா நகர் டூ தாம்பரம்.
சனி விடியற்காலை - தாம்பரம் டூ பாண்டிச்சேரி.
திங்கள் விடியற்காலை - பாண்டி டூ கள்ளக்குறிச்சி
திங்கள் இரவு - கள்ளக்குறிச்சி டூ பாண்டி
செவ்வாய் காலை - பாண்டி டூ தாம்பரம்.
இப்படி போன வாரத்தில் முக்கால்வாசி நேரம் பயணத்திலேயே கழிந்தது. //
இந்த கொடுமைக்கு நடுவுல வில்லு படமும், ஏகன் படமும் பார்த்தீர்களா..
ஐயோ பாவம்..
// எக்கச்சக்கமா பதிவுகள் ட்ராப்டில் முடிக்கப்படாமல் இருக்கின்றன். இந்தப் பயணங்களின் காரணமாக நீங்க தப்பிச்சிட்டிருக்கீங்க. அடுத்த வாரம் முழுக்க பதிவு போட முடியாது. ம்ம்ம்ம் ரொம்ப காலத்துக்கும் நீங்க எஸ்கேப் ஆகமுடியாது. மார்ச் முடிஞ்சு ஏப்ரலில் உங்கள் எல்லாருக்கும் சனி பிடிக்கப்போகுது. ஏப்ரலில் தொடர் தாக்குதலுக்கு ரெடியாருங்கப்பு:) //
நாங்க எல்லாம் யாரு.. இதுக்கெல்லாம் அசருவோமா என்ன..
நன்றி இராகவன் சார். வருகைக்கும் விரிவான பின்னூட்டங்களுக்கும்:)
@உறவினருக்கு கல்யாணத்துக்காக பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். 28 வயதான பெண் ஒருவரின் கண்டீஷன் "குறைஞ்சது 50,000 சம்பாதிக்கனும். கல்யானத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் தான். அக்கா தங்கை இருக்கக்கூடாது". இன்னும் பல. பொண்ணோட குவாலிபிகேஷன். 12 வது பெயில். இந்தக் காலத்துல பொண்ணு கிடைக்கிறது குதிரை கொம்பாருக்காம். இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு பையன் கிடைக்கிறது
கஷ்டமா இருக்குமாம். @
என்ன கொடுமை ...இந்த மேட்டர்ல நான் என் அப்பா அம்மா எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய்ய்ய மெகா சீரியலே எடுக்கலாம்...Same blood :)
@ஒவ்வொரு முறை இந்தப் பாட்டைப் (தப்பித்தவறி) பார்க்கும்போதும் தோன்றுவது "பாட்டப் பாடின ஹரிஹரன் கூட இந்தளவுக்கு கஷ்டப்பட்டிருக்கமாட்டார்". @
கண்ணை பறிக்கும் சூரியனோ ரெட் என்ற காவிய பாடலில் அஜீத் அண்ணன் தலையை சொறிவாரு பாருங்க.. சான்ஸே இல்லை..
head and shoulders , மெடிக்கேர் விள்ம்பர மாடல்கள் எல்லாம் தோத்து போய்டுவாங்க..
எய் ய் ய் ய் உன் கு ஆட்டி பத்தி தெரியுமா என்று சிட்டிசனில் தல பேசற வசனத்துக்கு என்ன க்ளாப்ஸ் தெரியுமா?
@இந்தக் காலத்துல பொண்ணு கிடைக்கிறது குதிரை கொம்பாருக்காம். இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு பையன் கிடைக்கிறது
கஷ்டமா இருக்குமாம். @
:)))))
இப்ப தான் விளம்பரத்தை கேட்டேன். செம மொக்க..............
வாங்க அருண். அதானே சரித்தர முக்கியத்துவம் வாய்ந்த அந்த சொறிப்பாட்டை நான் மறந்துட்டேன். சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் அஜீத் வாழ்க:)
வருகைக்கு நன்றி ஆதவன்.
Post a Comment