April 1, 2009

நிவா"ரணம்"

முன்னாடி எழுதின துணுக்ஸ் பதிவுல பாண்டிச்சேரில நிவாரண நிதி கொடுத்தது தொடர்பா நான் என்னோட கருத்துக்களைப் பதிவு செஞ்சிருந்தேன். அதுக்கு பரிசல் "அதுல 10%தான் மக்களுக்குப் போகும். இதுல அட்லீஸ்ட் 50%ஆவது பணமா மக்கள் கைல போகும். நல்லா யோசிச்சு, அப்படிப் பண்றதால என்ன நன்மை.. தீமைன்னு பதிவு போடுங்க"ன்னு சொல்லிருந்தார். பெரியவங்க சொல்றத நான் என்னிக்குமே கேட்பேன் (கொலை வெறியோட நீங்க பரிசல துரத்தப்போறீங்கன்னு எனக்குத் தெரியும்). சரி விஷயத்துக்கு வருவோம். வெள்ள நிவாரண நிதி அவசியமான ஒன்றா?எது முக்கியம்? நிவாரணமா? நிரந்தர தீர்வா? பிரச்சனைக்கு யாரெல்லாம் காரணம்? இந்தப் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன? முடிந்தவரை நடுநிலைமையாக என் கருத்துக்களை முன் வைத்திருக்கிறேன்.

ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பொழியும் பருவ மழையானது கடந்த ஏழெட்டு வருடங்களாக மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகமெங்குமே இந்தப் பிரச்சனையிருந்தாலும் பெரும்பாலும் பாதிக்கப்படுவது வடசென்னை தான் (மீடியாக்கள் அப்படித்தான் கூறுகின்றன). நானும் சென்னையையே உதாரணத்திற்க்கு எடுத்துக்கொள்கிறேன். மழை என்றால் முக்கியமாக பாதிக்கப்படும் இடங்கள் வேளச்சேரி, மடிப்பாக்கம், வடசென்னை மற்றும் பல பகுதிகள். அரை நாள் மழைக்கே இந்தப் பகுதிகள் எல்லாம் குளம் போலாகிவிடும். ஒரு நாள் முழுவதும் மழை பெய்தால்? படகு மூலம் தான் வீட்டை விட்டு வெளியேற முடியும். ஒவ்வொரு வருஷமும் மக்கள் படும்பாடு நான்கு மாதங்களுக்கு தான் பேசப்படுகிறது. கொஞ்சம் வெயிலின் தாக்கம் தெரிய ஆரம்பிக்கும்போதும் வாயில் கரையும் தர்பூசணி துண்டுகள் போல் பிரச்சனைகளும் கரைந்து விடுகிறது. ஏனிந்தளவிற்க்கு தண்ணீர் தேங்குகிறது. பிரச்சனைக்கு யார் காரணம்? கண்டிப்பாக நாம்தான். நம் ஒவ்வொரு செயலும் இயற்கைக்கு முரணாக ஆபத்தாகத்தானிருக்கிறது. பருவ நிலைகளில் மாற்றம், பூமியின் தட்ப வெப்பங்களில் மாற்றம் என மறைமுகமாக நாம் இயற்கையின் மீது போர் தொடுக்கின்றோம். இந்தக் காரணங்கள் ஒரு புறம். இன்னொரு மிகப்பெரிய காரணம் நீர்நிலைகளை அழிப்பது. சரியான வடிகால் வசதி இல்லாதது. இருக்கும் வடிகால்களையும் சரியாக பராமரிக்காமலிருப்பது. ஒரு இடம் விடாமல் பிளாட் போட்டு வித்தால் என்னாகும்? பிளாட் போட்டது போக மீதமிருக்கும் கொஞ்ச நஞ்ச நிலங்களையும் குப்பை மேடாக மாற்றிவிடுகிறோம். அப்புறம் தண்ணீர் எப்படி வடியும்? நதியின் பாதையை அடைத்து கட்டப்பட்டிருக்கும் நிகர்நிலை பல்கலைகழகத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அடையாறின் இன்றைய நிலையை பார்த்து ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? ஏரியில் ஆக்ரமிப்பு செய்து வீடு கட்ட வேண்டியது. அப்புறம் மழைத்தண்ணி வீட்டுக்குள் புகுந்துவிட்டது என ஒப்பாரி வைக்க வேண்டியது. இங்கு யாரை குற்றம் சொல்வது? ஏரியை கூறு போட்டு வித்தவனையா? வாங்கினவனையா? இல்ல வீடு கட்ட சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் அதிகாரிகளையா? எல்லாரையும் தான். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதென்பதுபோல் இந்த விஷயத்திலும் மக்களுக்கு விஷயத்தின் வீரியம் புரியும் வரை இந்த அவல நிலை தொடரத்தான் செய்யும்.
ஒவ்வொரு முறை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆயிரங்களை நிவாரண நிதியாக அளித்து தப்பித்துக்கொள்கிறதே அரசாங்கம். நிவாரண நிதி இந்தப் பிரச்சனைக்கு தீர்வாகிவிடுமா? பரிசல் சொல்வதென்னமோ உண்மை தான். ஆனால் ஒவ்வொரு வருடமும் தீர்வு காணக்கூடிய பிரச்சனைக்கு வெட்டியாக பணம் செலவழிப்பதை விட, நிரந்தர தீர்வு கிட்டினால் வேறு நல்ல திட்டங்களுக்கு இந்தப் பணத்தை உபயோகிக்கலாமே. கிடைக்காத பலாக்காய்க்கு கையிலிருக்கும் களாக்காய் மேலென்பதை எத்தனை காலம் ஒற்றுக்கொள்ள முடியும்? பலாவை ருசிக்க நமக்கு உரிமையிருக்கும்போது எத்தனை நாட்கள் இந்த சமாதானத்தை சொல்லப்போகிறோம்? 2000 ரூபாய் பணம், ஒரு புடவை, ஒரு வேஷ்டி, பத்து கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணைய்க்காக எம்.ஜி.ஆர் நகரில் 42 பேர் மிதிபட்டு செத்தார்களே. எவருக்கேனும் நினைவிருக்கிறதா? என் உறவினர் ஒருவருக்கு இந்த மழையால் ஏற்பட்ட செலவு 15,000. கிடைத்த நிவாரணம் 2000. இது வெறும் உதாரணம் தான். இதைவிட கொடிய இழப்பான உயிரிழப்புக்கு யாரால் நிவாரணம் தரமுடியும்?

இந்தப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு. நம் சக்திக்குட்பட்ட தீர்வுகள் நிறையவே இருக்கு. அவற்றில் என் சிற்றறிவுக்கு எட்டிய சில

# வடிகால்களில் அடைப்பு ஏற்படுத்தாமலிருப்பது. அதாவது குப்பையை குப்பைத்தொட்டியில் மட்டுமே கொட்டுவது.

# பிளாஸ்டிக்கின் உபயோகத்தை கூடுமானவரை தவிர்ப்பது. மறுசுழற்ச்சி செய்யமுடியாத பொருட்களால் தான் குப்பை தேங்குவது, வடிகால் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

# நீர் நிலைகளை பராமரிப்பது. குளம், ஏரி போன்றவற்றை அசுத்தப்படுத்தாமல் அடிக்கடி தூர் வாரி பராமரித்தால் சுபிக்ஷ்ம் நிச்சயம்.

# சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பது. இதனால் பருவ நிலைகளின் மாற்றத்தை கொஞ்சமாவது தடுக்க முடியும்.

# Go green. முடிந்தவரை மரம், செடி கொடிகளை காப்பாற்றுங்கள். பெரும்பாலான பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

# மழை நீர் சேகரிப்பு திட்டம். இது காஸ்ட்லியான திட்டமானாஅலும் ராமருக்கு அணில் உதவியது போல நிலத்தடி நீரின் அளவை ஒரளவேனும் உயர்த்தும்.


இம்மாதிரியான திட்டங்களின் மூலம் சிறுவேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.

இது கொஞ்சம் தான். இன்னும் நிறைய இருக்கு. மேற்கூறியவற்றில் கொஞ்சம் கடைபிடித்தாலே போதும்.ஒரளவேனும் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

புகைப்படங்களுக்கு நன்றி http://www.anandnataraj.com/chennai-floods-2008

42 comments:

Cable சங்கர் said...

சும்மா குறை மட்டும் சொல்லாமல் தீர்வுக்கு யோசித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.வித்யா..

Jackiesekar said...

# வடிகால்களில் அடைப்பு ஏற்படுத்தாமலிருப்பது. அதாவது குப்பையை குப்பைத்தொட்டியில் மட்டுமே கொட்டுவது.//

இதை செய்தாலே போதும் எல்லாம் சரியாகி விடும்- பொறுப்பு நம் எர்லோருக்கும் வர வேண்டும்
நல்ல பதிவு

Vidhya Chandrasekaran said...

நன்றி சங்கர்ஜி.

நன்றி jackiesekar.

Anonymous said...

Good posting! more professional web tempaltes at itemplatez.com... its a easy download.

கார்க்கிபவா said...

சாரிங்க.. நான் வித்யா பதிவுன்னு நினைச்சு வந்துட்டேன்.. ராங் நம்பர்

Vidhya Chandrasekaran said...

நன்றி ஜான்.

கார்க்கி --> வேணாம் அழுதுடுவேன். அவ்வ்வ்வ்வ்வ்

சந்தனமுல்லை said...

உங்கள் தீர்வுகளுக்கு - ஜெய் ஹோ!

அ.மு.செய்யது said...

உங்க‌ திட்ட‌ங்க‌ள்லாம் ந‌ல்லா இருக்குங்க‌...

வ‌ருங்கால‌ க‌வுன்சில‌ர் வித்யா வாழ்க‌ ..

எது எப்ப‌டி இருந்தாலும் மழை காலத்தில‌ எங்க‌ ஏரியா ( வடசென்னை,வியாச‌ர்பாடி, பேசின் பால‌ம் கீழே நிக்குற‌ த‌ண்ணி ம‌ட்டும் போக‌வே போகாது )

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்கள் சொன்னாமாதிரி அனைத்துமே நம் சக்திக்குட்பட்ட தீர்வுகள் தான்.
பொறுப்பு எல்லாருக்குமே இருக்க வேண்டும்.

மாநகராட்சி சொல்வதை எத்தனை பேர் கேட்கிறார்கள்.
மக்கும் குப்பை, மட்காத குப்பையாக பிரிப்பதை எத்தனை பேர் செய்கிறோம்.

திட்டங்களும், தீர்மானங்களும் எத்தனையோ வரலாம், அதற்கான செயல்படுதல் மக்களிடமே வரவேண்டும். வருமா? மனமாற்றம் மக்களிடம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆமாங்க செய்யது.

மழைக்காலத்தில் உங்க ஏரியா...

உள்ள வரவே முடியாது.

இன்னமும் மழைக்காலத்தின் போது,
டூ வீலரை மீன்பாடி வண்டியில வெச்சு வெளியில எடுத்துட்டு வரவேண்டிய நிலைமை இருக்குது.

Vidhya Chandrasekaran said...

நன்றி முல்லை.

வாங்க அ.மு.செய்யது. கூவறதுதான் கூவறீங்க. பிரதமர், ஜனாதிபதின்னு சொல்லக்கூடாதா?

ஆமாம் அமித்து அம்மா. சரிதான் மாற்றம் நம்மிடமிருந்து தான் ஆரம்பிக்கனும். இந்த விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்தறதுன்னு தான் தெரியல:(

Deepa said...

மிகவும் அவசியமான பதிவு. நல்ல தீர்க்கமா சிந்திச்சு எழுதி இருக்கீங்க. ஆமாம் நீங்கள் சொல்வது போல் நம் மேல் தான் குறைகளும் இருக்கு, நம் கையில் தான் தீர்வுகளும் இருக்கு.

//எம்.ஜி.ஆர் நகரில் 42 பேர் மிதிபட்டு செத்தார்களே. எவருக்கேனும் நினைவிருக்கிறதா?//

மக்களுக்கு மறதி அதிகம். இம்மாதிரி சமூகப் பார்வையுள்ள எழுத்தாளர்கள் மிக மிக அவசியம் என்பது புலனாகிறது.

narsim said...

வித்யா,

மிக மிக உபயோகமான பதிவு. ஆச்சர்யப்பட வைத்த பதிவும் கூட. நல்ல சிந்தனைகளை பதியுங்கள். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்.

மிக உபயோகமானப் பதிவு வித்யா.

narsim said...

வித்யா,

மிக மிக உபயோகமான பதிவு. ஆச்சர்யப்பட வைத்த பதிவும் கூட. நல்ல சிந்தனைகளை பதியுங்கள். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்.

மிக உபயோகமானப் பதிவு வித்யா.

narsim said...

வித்யா,

மிக மிக உபயோகமான பதிவு. ஆச்சர்யப்பட வைத்த பதிவும் கூட. நல்ல சிந்தனைகளை பதியுங்கள். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்.

மிக உபயோகமானப் பதிவு வித்யா.

Vidhya Chandrasekaran said...

வாங்க தீபா.
\\ இம்மாதிரி சமூகப் பார்வையுள்ள எழுத்தாளர்கள் மிக மிக அவசியம் என்பது புலனாகிறது\\
ஏங்க நீங்க வேற காமெடி பண்றீங்க.

ரொம்ப நன்றி நர்சிம். உங்களைப் போன்றோரின் எழுத்துக்கள் தான் மொக்கையையும் தாண்டி என்னை சிந்திக்க???!!! வைக்கிறது.

நாகை சிவா said...

நல்ல பதிவு வித்யா!

நான் அடிக்கடி கூறும் விசயம் தான் இங்கும்..

நமக்கு தனி மனித ஒழுக்கம் தேவை.

வந்த வரைக்கும் லாபம் னு நாம் போய்கிட்டு இருப்பதால் தான் அந்த சமயத்தில் காசு கொடுத்தா போதும் மக்கள் சமாதானம் ஆகிடுவாங்கனு அரசு நினைக்க ஆரம்பித்து விட்டது.

சரியான வடிக்கால் இல்லனு கவுன்சிலர், எம்.எல்.ஏ. வ பிடிக்க ஆரம்பிச்சா தீர்வு கிடைக்கும். ஆனா இப்பவெல்லாம் சில மக்கள் வெள்ளம், புயல் வராத என்று தான் ஏங்குறாங்க....

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்ல பதிவு வித்யா. அடிக்கடி, இப்படி எதாவதும் எழுதுங்க. ;)
நல்லாருக்கு.

Vidhya Chandrasekaran said...

நன்றி சிவா. அந்தளவுக்கு மக்களின் மூளையை மழுங்கடித்து வைத்திருக்கிறார்கள். என்ன செய்ய?

வாங்க விக்னேஷ்வரி. நீங்க சொல்லிட்டீங்கல்ல பட்டைய கிளப்பிடுவோம்:)

அப்துல்மாலிக் said...

நல்ல உபயோகமான பதிவு வித்யா

ம்ம்ஹூம் செய்யனுமே, இதுமாதிரி நிறைய சொல்லலாம் செயல்படுத்துவது யாரு?

இதை அப்படியே பிரிண்ட் எடுத்து பஞ்சாயத்துபோர்டு நு ஒன்னு இருக்கும் அதுக்கு அனுப்புங்க‌

நானும் கூவிக்கிறேன் வருங்கால கவுன்சிலர் ச்சே வேண்டாம் பஞ்சாயத்து தலைவர் வாழ்க‌

அப்துல்மாலிக் said...

//விக்னேஷ்வரி said...
ரொம்ப நல்ல பதிவு வித்யா. அடிக்கடி, இப்படி எதாவதும் எழுதுங்க. ;)
நல்லாருக்கு.
//

இங்கே என்னா எக்சிபிசனா நடக்கு நல்லயிருக்குனு சொல்றதுக்கு

செயல்படுத்தனுமம்மா செயல்படுத்தனும்

அப்துல்மாலிக் said...

//விக்னேஷ்வரி said...
ரொம்ப நல்ல பதிவு வித்யா. அடிக்கடி, இப்படி எதாவதும் எழுதுங்க. ;)
நல்லாருக்கு.
//

இங்கே என்னா எக்சிபிசனா நடக்கு நல்லயிருக்குனு சொல்றதுக்கு

செயல்படுத்தனுமம்மா செயல்படுத்தனும்

அகநாழிகை said...

உண்மையில் சமுக அக்கறையுடனான
நல்ல பதிவு.
இதுபோன்ற நல்ல சிந்தனைகளை
அடிக்கடி பதிவிடுங்கள்.
(ஆனால் ஏப்ரல் 1-ல் வேண்டாம்)

Vidhya Chandrasekaran said...

நன்றி அபுஅஃப்ஸர். திரும்பவும் சொல்றேன் கூவறத கொஞ்சம் ஹைலெவலா கூவக்கூடாதா?

நன்றி அகநாழிகை:)

SK said...

அம்மணி, அருமையான பதிவு.

இந்த வருத்தம் எனக்கும் உண்டு. வெளிநாடுகளில் குப்பையை எப்படி பிரித்து கொட்டுவதுன்னு சொல்லி கொடுத்துகிட்டு இருக்காங்க. நம்ம நாட்டுல இன்னும் குப்பைய குப்பைத்தொட்டில கொட்டுங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கோம்.

மழை நீர் சேகரிப்பு நல்ல திட்டம். எவ்வளவு மக்கள் அதை நூறு சதவிகிதம் செயல்படுத்தினார்கள். ?? எல்லாரும் நூறோ இருநூறோ கொடுத்து அரைகுறையா செஞ்சிட்டு விட்டுடாங்க.

முரளிகண்ணன் said...

மிக அருமையான உபயோகமான பதிவு.

தொடருங்கள்.

எதிர்கால அருந்ததிராய் கண்ணுக்குத் தெரிகிறார்

Vidhya Chandrasekaran said...

ஆமாம் SK. ஒன்னு விழிப்புணர்வு சுத்தமா கிடையாது. இல்லன்னா அரைகுறையா செய்ய வேண்டியது. ஏதாவது பண்ணனும்னு யோசிக்கிறேன்.

நன்றி முரளி. ஆனாலும் இது உங்களுக்கே ஓவரா இல்ல:)

SK said...

நாம இதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சு எழுதினாலும் அருமையா இருக்கும். ஏதாவது செஞ்சீங்கன்னா கொஞ்சம் எங்களுக்கு முன்னமே தெரியப்படுத்துங்க. :)

சின்னப் பையன் said...

மிக மிக உபயோகமான பதிவு.

Vidhya Chandrasekaran said...

கண்டிப்பா தெரியப்படுத்தறேன் SK. கூட்டுமுயற்சி தான் பலனளிக்கும். அடுத்த மழை சீஸனுக்குள் ஏதாவது முயற்சி செஞ்சு பார்ப்போம்:)

நன்றி ச்சின்னப்பையன்.

மணிகண்டன் said...

point no and point 2 - நான் கண்டிப்பா முயற்சி பண்றேன்.

Arun Kumar said...

நல்லா சூடா சொல்லி இருக்கீங்க.
இந்த பிரச்சனைக்கு எல்லாம் மூல காரணம் மக்கள் தொகை பெருக்கம் தான்.

ஒரு சிறிய உதாரணம்
திருநெல்வேலி முழுக்க மும்பை பூனே சென்னை என எல்லா நகர்களுக்கும் பரவி வருகிறார்கள். அங்க பல கிராமங்கள் இப்பவே முக்கால்வாசி காலி.

எல்லாரும் நகருக்கு படை எடுப்பதால் விளை நிலங்கள் எல்லாம் எல்லாம் ஓவர் நைட்டில் ப்ளாட் ஆகிறது..
கூட்டம் அதிகமானாலே கட்டுபாடு எல்லாம் தவறி விடும்..


குப்பையை எல்லாரும் ஒழுங்கா குப்பை தொட்டியில் போட்டால் அது வேளச்சேரி போன்ற இடங்களுக்கு ஒழுங்காக போய் சேர்ந்து பெரிய குப்பை மலை ஆகும்.


ப்ளாஸ்டிக் பேப்பர் வேண்டாம் என்றால் பேப்பருக்காக மரம் அதிகமாக வெட்டபடும்.

கிராமபுறங்களில் தொழில் வளர்ச்சியோ அல்லது பிழைக்க வழி இல்லாத போது இதை போல சீர் கேடுகளை தடுக்கவே முடியாது.

காவிரி பிரச்சினை முதல் நாட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கு காரணமே இந்த மக்கள் தொகையும் இடப்பெயர்வும் தான..

மணிகண்டன் said...

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் இடப்பெயர்வு நிச்சயமான காரணம் தான்.

தனிமனித ஒழுக்கத்த விட இந்த பிரச்சனைகள ஒரு நல்ல அரசாங்கம் களைய முடியும். ஆனா அரசாங்கத்த மட்டும் குறை சொல்லாம அவங்கவங்க என்ன செய்ய முடியும்ன்னு யோசிக்கலாம். வித்யா அவங்களுக்கு தெரிந்த தீர்வுகள சொல்லி இருக்காங்க. அத வந்து லாஜிக்கலா குறை சொல்றது escapism . பிளாஸ்டிக் பேப்பர் உபயோகம் பண்ணாம இருந்தா மரம் நிறைய வெட்டப்படும்ன்னு சொல்றது எல்லாம் சரியா படல எனக்கு !

Vidhya Chandrasekaran said...

வாங்க அருண். மக்கள் தொகை பெருகுதுன்னா அதுக்கேற்ற மாதிரி திட்டமிடுதல் அவசியம். அதே மாதிரி நிறைய மரம் வெட்டப்படும்ங்கறதையும் என்னால் ஒத்துக்க முடியல. Recycling முறையை உபயோகித்தால் பிரச்சனை வராதல்லவா?

நன்றி மணிகண்டன். சிறு துளி பெரு வெள்ளம். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கும்போது முடிவு நல்லபடியாக அமையும்.

☀நான் ஆதவன்☀ said...

//வடிகால்களில் அடைப்பு ஏற்படுத்தாமலிருப்பது. அதாவது குப்பையை குப்பைத்தொட்டியில் மட்டுமே கொட்டுவது.//

என்னைய கேட்காம என்னோட ப்ளாக்கர் தலைப்பை யூஸ் பண்ணியிருக்கீங்க.....இனி ராயல்"டீ" கொடுக்கனும் சொல்லிபுட்டேன்

"உழவன்" "Uzhavan" said...

முதலில் விகடன் குட் ப்ளாக்கில் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அரசியல்வாதிகள் அறிவிக்கும் இலவசங்கள் போலதான் இந்த நிவாரணமும். அதனால்தான் இன்னமும் நாம் நிரந்தரமான அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் திண்டாடுகிறோம்.
இதற்கான தீர்வு முதலில் மக்களிடம் இருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று சொல்வது மிகச்சரியானதுதான். அதேவேளையில் "மக்களிடம்" என்று சொல்வதற்குப் பதிலாக, "என்னிடம்" என்று சொன்னால் மிக மிகச் சரியானதாக இருக்குமே :-))

Vidhya Chandrasekaran said...

மன்னிச்சுடுங்க ஆதவன். ராயல்"டீ" மட்டும் போதுமா??

தகவலுக்கு நன்றி உழவன். நீங்க சொல்லித்தான் மேட்டர் தெரியும். அதே மாதிரி நான் கொடுத்திருக்கும் தீர்வுகளையும் நான் கடைபிடிச்சுட்டு தான் வரேன்.

மாதேவி said...

நல்லபதிவு.

"சரியான வடிகால் வசதி இல்லாதது. இருக்கும் வடிகால்களையும் சரியாக பராமரிக்காமலிருப்பது."

இதை சரிப்படுத்தினாலே போதுமே.

Arun Kumar said...

@ மணிகண்டன்

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் இடப்பெயர்வு நிச்சயமான காரணம் தான்.

தனிமனித ஒழுக்கத்த விட இந்த பிரச்சனைகள ஒரு நல்ல அரசாங்கம் களைய முடியும். ஆனா அரசாங்கத்த மட்டும் குறை சொல்லாம அவங்கவங்க என்ன செய்ய முடியும்ன்னு யோசிக்கலாம். வித்யா அவங்களுக்கு தெரிந்த தீர்வுகள சொல்லி இருக்காங்க. அத வந்து லாஜிக்கலா குறை சொல்றது escapism . பிளாஸ்டிக் பேப்பர் உபயோகம் பண்ணாம இருந்தா மரம் நிறைய வெட்டப்படும்ன்னு சொல்றது எல்லாம் சரியா படல எனக்கு !@

அய்யோ வித்யா போல விகடன் புகழ் எழுத்தாளரை நான் குறை சொல்லவில்லை. :)

சாப்ட்வேர் மொழியில் சொன்னால் ஒரு bug fix பண்ணும் போது வேறு ஒரு இடத்தில் Bug open ஆகும்.

ஊட்டியில் பல கடைகளில் பிளாஸ்டிக் பேப்பருக்கு பதில் காதித தாளில் கட்டி கொடுப்பார்கள்..(கொடுத்தார்கள்)

போன வருசம் பல இடங்களில் மீண்டும் பிளாஸ்டிக் பைகளே நிறைய கடைகளில் கொடுத்தார்கள்..

reason : காகித தாள் வாங்க செலவு அதிகம்.. பிளாஸ்டிக் விலை குறைவு...

இப்படி practical difficulties நிறைய இருந்தாலும்..

reverse cycling கண்டிப்பாக செய்ய வேண்டிய காரியம்..

நீங்க ,வித்யா சொல்றது சரியான பாயிண்ட்...



காவிரியில் ஈரோடு தாண்டி கடலில் கடக்கும் வரை நெய்வேலி காட்டமணக்கு செடிகளாக இருக்கும்..வெள்ள நேரத்தில் காவிரியின் நீர் ஓட்டத்தை தடுப்பதே இந்த ஜந்துகள் தான்..

ஆனா மேட்டர் என்னன்னா எம் ஜீ ஆர் ஆட்சியில் நெய்வேலி காட்டாமணக்கு செடிகளை காவிரியில் வேண்டும் என்றே வளர்த்தார்கள்..

அப்பதான் தண்ணீர் மெதுவா போகுமாம்.. நிலத்தடி நீர் அதிகமாகுமாம்.

ஒரு தடுப்பு அணையை கட்ட சோம்பல் பட்டு செந்த செடியை வளர்த்தாங்க.. இப்ப காவிரி முழுக்க நெய்வேலி காட்டாமணக்கு விவசாயம் தான்..

ok let us start..
இன்று முதல் வித்யா எழுதி இருக்கும் எல்லா தீர்வையும் கடை பிடிக்கிறேன்,..

Vidhya Chandrasekaran said...

நன்றி மாதேவி.

நன்றி அருண்:)

Suresh S R said...

சமூக அக்கறையுள்ள பதிவு.

Suresh S R said...

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் கட்டுபாடற்ற சமூகம் தான் காரணம்.
//மக்கும் குப்பை, மட்காத குப்பையாக பிரிப்பதை எத்தனை பேர் செய்கிறோம்.//
நாம் குப்பையை பிரித்து போட நேரம் செலவழிப்பதில்லை. ஒரு சிலர் மட்டும் அவரவர் திருப்திக்காக பண்ணி கொள்ள வேண்டியதுதான். ஒரு சிலர் பண்ணி மற்றவர்கள் பண்ணாமல் இருப்பதால் எந்த பலனும் ஏற்ப்பட போவதில்லை.
//திட்டங்களும், தீர்மானங்களும் எத்தனையோ வரலாம், அதற்கான செயல்படுதல் மக்களிடமே வரவேண்டும். வருமா? மனமாற்றம் மக்களிடம்//
சென்னையில் இருக்கும் ஒரு கோடி மக்களிடமும் மனமாற்றம் எதிர்பாக்க முடியாது.
அரசாங்கம் திட்டமிட்டு (நமது மக்களின் மனோ நிலையை கருத்தில்கொண்டு) புது ஏற்பாடுகளை பண்ண வேண்டும்.
முக்கியமாக திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்கள் போல பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி புது தொழில்களை அங்கே தொடங்க ஆவன செய்ய வேண்டும்.
சென்னையின் நெருக்கடியை குறைக்க வேண்டும்.
தூத்துக்குடி, குளச்சல் துறைமுகங்களையும் மதுரை, திருச்சி விமான நிலையங்களையும் மேம்படுத்தி முதலீட்டாளர்களை அந்த பகுதிக்கு திருப்ப வேண்டும்.
இல்லை என்றால் இன்னும் 20 வருடம் கழித்து சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி ஆகிய இடங்களில் மட்டும் தான் மக்கள் குடி இருப்பார்கள் என்ற நிலைமைஏற்ப்பட்டுவிடும்.