June 2, 2009

வயித்தெரிச்சல்??

எல்லாருடைய வயித்தெரிச்சலும் சாபமும் நல்லா பலிச்சது. கடைசியாக (ஒரு மாதத்திற்க்கு மேலாகிவிட்டது) போன ரெண்டு ரெஸ்டாரெண்ட்களும் அவ்வளவாய் திருப்தியளிக்கவில்லை. அந்த ரெண்டு உணவகங்களைப் பற்றி கீழே.

Cedars

ஏற்கனவே இந்த ரெஸ்டாரண்ட் பற்றி பீட்டரிக்கிறேன்:)
இந்த முறை தம்பி ஸ்பான்சர் என்று முடிவானதும் எங்கு போகலாம் என்ற அலசல்களுக்கிடையே முடிவானது இது. Worth a try என சொல்லி சனிக்கிழமை மதிய உணவுக்குப் போய் இறங்கினோம். டமால். முதல் விக்கெட். சனிக்கிழமைகளில் பஃபே கிடையாது ala carte தான் என்றார்கள். சரி வந்தது வந்தாச்சு. மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம் என நம்பி உட்கார்ந்தான் தம்பி. ட்ரிங்க்ஸ்க்கு ரகுவும், தம்பியும் lyche coolerம் நான் jaleb (dates & rose flavoured drink)ஸ்டார்டர்க்கு nuts crusted cottage cheeseமற்றும் fried potato catalina (Baby potatoes roasted with red and green peppers flavoured with cumin & paprika)ஆர்டர் செய்தோம். என்னோட ட்ரிங் மகா கேவலமாய் இருந்தது (ரெண்டாவது விக்கெட்). லிட்சி கூலர் நல்லாருக்குன்னு ரகுவும், கேவலமாருக்குன்னு தம்பியும் சொன்னாங்க. ஸ்டார்டர் ரெண்டுமே அட்டகாசம்.

மெயின் கோர்ஸில் நான் ஆர்டர் செய்த pizza roma (thin crust) சூப்பராகவும்,ரகு ஆர்டர் செய்த falafel with pita breads (கொண்டக்கடலையில் செய்த வடை) சுமாராகவும்,தம்பி ஆர்டர் செய்த garlic flavored chicken with pita bread படுமோசமாகவும் இருந்தது.Omm ali என்ற mixed nuts puddingல் முடிந்தது.தம்பிக்கு சாப்பாடு சொதப்பியதில் பயங்கர டென்ஷன். அதை விட பில்லைப் பார்த்து இன்னும் வெறியாகிட்டான். எங்கள் நேரத்தை நொந்தபடி திரும்பினோம்.

La Terrase

பாண்டியில் Rendezvous (Continental) உணவகத்துக்கு போகனும்ன்னு ரொம்ப நாள் பிளான். ஆனால் சில காரணங்களால் போக முடியாம இருந்தது. இந்த தடவை நேரமும் சூழ்நிலையும் செட்டானபோது அந்த ஹோட்டலை ரெனவேஷன்காக மூடிவிட்டார்கள்:(
ரகுவும், நாத்தனார் கணவரும் எனக்கு சர்ப்ரைஸ் தர எண்ணி La Terrassse அழைத்துக்கொண்டு போனார்கள். இந்தியன்/வியட்நாமீஸ்/காண்டினெண்டல் என்ற போர்ட் பார்த்தாவது உஷாராகியிருக்கனும். ப்ச்ச். தீஞ்ச வாடையுடனான பிரெஞ்ச் ஆனியன் சூப், உப்பு சப்பில்லாத மஷ்ரூம்/சீஸ் ஆம்லெட்டுகள், அசட்டுத் தித்திப்புடனான கீரீன் பீஸ் புலாவ், tug of war நடத்தத் தகுதியான பரோட்டா என எல்லாமே சூப்பர் சொதப்பல். வியட்நாமீஸ் ஸ்னாக்ஸ் என chaiyo என்ற ஒன்றை ஆர்டர் செய்தார்கள். தாம்பரம் மார்க்கெட்டில் சாயந்திர வேளைகளில் சூடாக கிடைக்கும் மினி சமோசா (ஒன்னு ஒரு ரூபாய்) இந்த சைய்யோவை விட இலட்சம் மடங்கு டக்கராக இருக்கும். அன்று இன்னொரு டென்ஷன் என் மொபைல் அடிக்கடி நெட்வொர்க் இழந்து நண்பர்களுடனான பேச்சை பாதியில் வெட்டிவிட்டது. யாரும் எதுவுமே சாப்பிடவில்லை. ரெஸ்டாரெண்ட் ஓனரிடம் எகிறிவிட்டு ஹோட்டலுக்கு எதிரில் உள்ள பானிபூரிக் கடையில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினோம்:(

இதெல்லாம் படிச்சு நீங்க சந்தோஷப்படுவீங்க தானே. விடமாட்டேன். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன். அடுத்த லிஸ்டில் Bella Ciao - Italian, Mainland China, Kattumaram என வரிசையாக இருந்தாலும் நேரம் தான் இல்லை போய் வர. இந்த லேபிலிள் அடுத்த பதிவு பாண்டிச்சேரியின் ஸ்ட்ரீட் புட்ஸ் மற்றும் கையேந்தி பவன்கள் ஏன் பெஸ்ட் என்ற மினி ஆராய்ச்சிக் கட்டுரையும்??!!! இடம்பெறபோகிறது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.

45 comments:

*இயற்கை ராஜி* said...

Enjoy....

நட்புடன் ஜமால் said...

உங்கள மட்டும் நம்பி ஒரு ரெஸ்டாரண்ட் துவங்களாம் போல் இருக்கே

நல்ல இடம் இருந்தா சொல்லுங்க சிஸ்டர்

தமிழ் அமுதன் said...

ம்ம்ம் ........சாப்பாட்டு நேரமா பார்த்து போடுறீங்களே! இந்த மாதிரி பதிவு? நாயமா ?

எம்.எம்.அப்துல்லா said...

//எல்லாருடைய வயித்தெரிச்சலும் சாபமும் நல்லா பலிச்சது. கடைசியாக (ஒரு மாதத்திற்க்கு மேலாகிவிட்டது) போன ரெண்டு ரெஸ்டாரெண்ட்களும் அவ்வளவாய் திருப்தியளிக்கவில்லை.

//

haiyaa...

:)))

SK said...

இறைவன் இருக்கிறான் :) :) :) :) :) :)

பிட்சான்னு சொல்லி வெறும் சீஸ் மட்டும் மேல ஊத்தி ஊர ஏமாத்துறாங்க. இதுக்கு பதில் பதிவு போட்டே தீரனும்.. நேரம் தான் இல்லை..

SK said...

சகா.. வந்து ஒரு எட்டு பாத்திட்டு போங்க பதிவை :) :)

ஆண்டாம் பேரானந்தம் :)

G3 said...

Hotelku saapida poraappavae post podanumnu mudivoda photo edutha maadiri irukku :D

//மினி சமோசா (ஒன்னு ஒரு ரூபாய்) //
haiiii.. my favourite :)))))

Enna irundhaalum mini samosa pala pazham popcorn nu train travellingla vaangi korikkara sugamae thani :D

மணிஜி said...

இப்பதான் ஒரு ரூபா அரிசி வாங்கியாந்து உலை வச்சிருக்கேன்...நல்லா வக்கனையா சமைப்பேன்...சாப்பிட வர்ரியளா

Vidhya Chandrasekaran said...

நன்றி இயற்கை.

ஜமால் அண்ணா எனக்கு அவ்வளவா சமைக்கத் தெரியாது. ஆனா ரெஸ்டாரெண்ட் டிப்ஸ் வேணும்னா கேளுங்க. அள்ளி வீசறேன்.

எல்லாம் ஒரு விளம்பரம் தான் ஜீவன்.

யூ டூ அண்ணே:(

Vidhya Chandrasekaran said...

ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத SK. ஆனா pizza hut, dominoz கம்பேர் பண்ணும்போது இது ரொம்ப பெட்டர்.

ஆமாம் G3. கையேந்தி பவன்கள்/ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் தரும் சுவை எந்த நட்சத்திர உணவகங்களிலும் கிடைக்காது.

தண்டோரா நமக்கு சுடு சோறு எல்லாம் சரிப்பட்டு வராதுங்க. புளிச்ச மோர் ஊத்திக் கரைச்ச பழையதும் பச்சை வெங்காயமும் இருந்தா சொல்லுங்க.

S.A. நவாஸுதீன் said...

"வயித்தெரிச்சல்??" - நீங்க வேற? ப்ளேட் எல்லாத்தையும் பார்த்து வயித்துப்பசி வந்துடுச்சுங்க

நட்புடன் ஜமால் said...

\\ஜமால் அண்ணா எனக்கு அவ்வளவா சமைக்கத் தெரியாது\\

நல்லா ஹாஸ்யம் உங்களுக்கு

நான் சொன்னது, ஒரு ரெஸ்ட்டாரண்ட் தொடங்கினால் ‍ நீங்களே நல்லா சேல்ஸ் செய்வீங்க மற்றும் விளம்பரம் செய்வீங்க, இதைத்தான் சொன்னேன்

SK said...

/// நல்லா ஹாஸ்யம் உங்களுக்கு

நான் சொன்னது, ஒரு ரெஸ்ட்டாரண்ட் தொடங்கினால் ‍ நீங்களே நல்லா சேல்ஸ் செய்வீங்க மற்றும் விளம்பரம் செய்வீங்க, இதைத்தான் சொன்னேன் ///

ஹையோ ஹையோ :) :)

S.A. நவாஸுதீன் said...

டேய் நவாஸ்.
லஞ்ச் டைம்ல உனக்கு இதெல்லாம் தேவையா. போடா போ. சப்பாத்தி, பருப்பும் வெண்டைக்காய் பொரியலும் தான் உனக்கு இன்னைக்கு. (சாரிங்க இது என் மனசாட்சி எண்ணப் பார்த்து சொன்னது)

பெருமூச்சுடன்
நான்

முரளிகண்ணன் said...

ரொம்ப சந்தோஷம்.

பாண்டிச்சேரி பதிவுக்கு வெயிட்டிங்

Vidhya Chandrasekaran said...

கண்ணு வைக்காதீங்க நவாஸுதீன். இதுக்கே இப்படின்னா இனிமேல் தான்ங்க ரியல் டெரர் ஆரம்பம்.

ஜமால் அண்த்தே நீங்க கேட்டது எனக்குப் புரிஞ்சுது. நான் சொன்னது உங்க பொதூ அறிவை வளர்த்துவிட வேண்டி.

SK மேட்டர் எப்படா சிக்கும்ன்னு காத்துக்கிடந்தியா?

கார்க்கிபவா said...

/garlic flavored chicken//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அசைவமா??????

நட்புடன் ஜமால் said...

\\ஜமால் அண்த்தே நீங்க கேட்டது எனக்குப் புரிஞ்சுது. நான் சொன்னது உங்க பொதூ அறிவை வளர்த்துவிட வேண்டி.\\

இல்லாததை பற்றி இங்கு என்ன பேச்சு

பொதுவா சொன்னேன்

SK said...

யு டூ முரளி.. ஐ ஆம் ஹாப்பி யு நோ.. :)

வித்யா, இதை விட ஒரு சந்தோசம் இருக்கா என்ன.. :)

சகா வாங்க.. வாங்க வாங்க.. :) :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

வியட்நாமீஸ் ஸ்னாக்ஸ் என chaiyo என்ற ஒன்றை ஆர்டர் செய்தார்கள். தாம்பரம் மார்க்கெட்டில் சாயந்திர வேளைகளில் சூடாக கிடைக்கும் மினி சமோசா (ஒன்னு ஒரு ரூபாய்) இந்த சைய்யோவை விட இலட்சம் மடங்கு டக்கராக இருக்கும்.

:)-

Thamira said...

ஹோட்டல்கள் சொதப்பினால் என்ன வெறி வரும் என்பது உணவு ரசிகர்களுக்குப் புரியும். நானும் உங்களைப் போலவே..

(ஆமா, நீங்க இப்படி ரசிகராக இருந்துகொண்டு சமைக்கத்தெரியாமலிருப்பது ஆச்சரியம். ரமாவைக்கூட்டிக்கொண்டு ஒரு நாள் உங்கள் வீட்டுக்கு..தாம்பரம்தானே.. சாப்பிடவரலாம் என்று நினைத்தேனே.. அவ்வ்வ்..)

jothi said...

//இதெல்லாம் படிச்சு நீங்க சந்தோஷப்படுவீங்க தானே. விடமாட்டேன். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்//

அதானே அப்பாவி தம்பி இருக்காரே ஸ்பான்சர் பண்றதுக்கு,.. நீங்க எங்கதான் அஞ்சப்போகிறீங்க,..

எங்களின் வயித்தெரிச்சல் சாபமாக வருகிறது. அடுத்த முறை நீங்கள் சாப்பிடும்போது மட்ட,.. செ,.. வேணாம்,. சில நேரங்களில் நான் நினைக்குறது கூட பலிச்சிடுது. நீங்க மட்டும் சாப்ட்டா பரவாயில்லை. பாவம் ரகுவும் சாப்பிடுறார்,..

Truth said...

பூனே பிள்ளையாருக்கு நான் உடைத்த தேங்காய் வீனாப் போகல :-)

அ.மு.செய்யது said...

சப்பாத்தியும் சப்ஜியுமா இங்க வாழ்க்கை போயிட்டிருக்கு..

இதுல இந்த மாதிரி ரெஸ்டாரண்ட் பதிவுகள போட்டு...

அட‌ போங்க‌...

கார்க்கிபவா said...

//தாம்பரம்தானே.. சாப்பிடவரலாம் என்று நினைத்தேனே.. அவ்வ்வ்..//

ஆள் வளர்ந்த அளவுக்கு(?).... போங்க ஆதி.. இவ்ளோ வெகுளியாவா இருப்பிங்க?

க.பாலாசி said...

ஏனுங்க்கா, இதெல்லாம் சாப்பிடுறதா...!

மணிநரேன் said...

//ரெஸ்டாரெண்ட் ஓனரிடம் எகிறிவிட்டு ஹோட்டலுக்கு எதிரில் உள்ள பானிபூரிக் கடையில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினோம்:(//

La Terrase க்கு ஆசைப்பட்டு இப்படியா பானிபூரி ஆகனும் :(. சர்பிரைஸ் இப்படி ஆகிடுச்சே!!!!!!!


வித்யா... சென்னையில் (தாம்பரம் முதல் எழுப்பூர் வரை)குடும்பத்துடன் கும்பலாக சென்று ஆரஅமர்ந்து பார்ட்டிபோல சாப்பிட நல்ல சைவ உணவகம் இருந்தா சொல்லுங்களேன்.
கடந்த நவம்பரில் நானும் தேடி தேடி வடபழனி நம்மவீடு வசந்தபவன் மட்டும்தான் மாட்டியது.18 பேர் சென்றோம். ஆசைப்பட்டு அழைத்துபோய் கொஞ்சம் நொந்துதான் வெளியே வந்தோம்.

G3 said...

@மணிநரேன்,

நுங்கம்பாக்கத்துல இருக்கற Harrison's hotella eden restaurant try பண்ணி பாருங்க :-)

Cable சங்கர் said...

விடுங்க வித்யா நாலு கடையில ஒரு கடை சொதப்புறதுதான் இதுக்கெல்லாம் மசியலாமா.. அடுத்த முறை பாண்டி போனா சிதம்பரத்துக்கு அவுட் ஆகிற பாண்டி தமிழ்நாடு பார்டர்ல ஒரு தாபா இருக்கும் லெப்டு சைடுல புல்காவும், சைட்டிஷ்ஷும் சும்மா பின்னியெடுக்கும் ஒரு டிரை பண்ணி பாருங்க.. நான் போய் வந்து ஒரு வருஷம் ஆயிருச்சு..

Arun Kumar said...

west mambalam station பக்கம் உடையார் ஸ்நாக்ஸ் என்ற கடை இருக்கிறது. மாலை நேரத்தில் க்யூவில் நின்று வாழைக்காய் மிளகாய் உருளை பஜ்ஜிகளை ஒரு முறை சாப்பிட்டு பார்க்கவும்

வல்லிசிம்ஹன் said...

இதெல்லாம் எங்கப்பா? பாண்டியா???/
அப்ப சரி அந்த ஃபலாஃபல்லுக்காக அங்க வரப் போறேன். கண்ணுக்கு இவ்வளவு அழகா இருக்கே:)

வல்லிசிம்ஹன் said...

OH ok. nandhanam pakkaththiliyaa!!!

Vidhya Chandrasekaran said...

நன்றி முரளிகண்ணன்.

கார்க்கி நான் Eggitarian.

ஜமால் அண்ணே பப்ளிக்ல சீக்ரெட்ட உடைக்காதீங்கண்ணே.

நன்றி அமித்து அம்மா.

Vidhya Chandrasekaran said...

வாங்க ஆதி. அப்பாடா என் சோகத்தைப் புரிஞ்சுக்கவும் ஆள் இருக்கு. ஆதி எனக்கு சமைக்கவே தெரியாதுன்னு சொல்லல. சூப்பராக எல்லாம் இருக்காது. அவ்ளோதான். கண்டிப்பாக ரமாவை அழைத்துக்கொண்டு ஒரு நாள் வாங்க. ரகு மேல எக்ஸ்பரிமெண்ட் பண்ணி போரடிக்குது:)

நன்றி ஜோதி.

ட்ரூத் - என்னா வில்லத்தனம்?

Vidhya Chandrasekaran said...

செய்யது ரொம்ப சலிச்சுக்காதீங்க.

கார்க்கி ஏன் இந்த கொலைவெறி?

பாலாஜி - அவ்வ்வ்வ்வ்வ்வ்

மணிநேரன் G3 சொல்வது நல்லாருக்கும். ராயப்பேட்டையில் இருக்கும் சரவண பவனின் பஃபே உண்வகத்திற்க்குப் போங்கள். 175 ரூபாய்க்கு அசத்தலான வெஜ் ஸ்ப்ரெட். ரிலாக்ஸ்டாக சாப்பிடலாம்.

Vidhya Chandrasekaran said...

நன்றி சங்கர்ஜி. ட்ரை பண்ணிடலாம்.

நன்றி அருண்.

வாங்க வல்லிசிம்ஹன். Cedars உணவகம் கோட்டூர்புரத்தில் உள்ளது. அடையார் வில்லா எதிர்புறம். ஞாயிறு மட்டும் காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை Brunch Buffet.

மணிநரேன் said...

நன்றி G3 மற்றும் வித்யா... விடுமுறைக்கு வரும்போது முயற்சிசெய்து பார்க்கவேண்டும்.

SUFFIX said...

இது நியாயமா அம்மனி, இப்படி angle, zoom எல்லாம் செட் பன்னி படு ஜோரா எங்க ஜொல்ல வச்சு, இப்படி டீடெய்லா உடான்ஸ் விடுரீங்களே, உங்கள சொல்லி தப்பில்லை, உங்கள அழைச்சுட்டு போன‌ தம்பிய சொல்லனும்!! யப்பா யாரு அது...ரென்டு குப்ஸ் கொன்டு வந்து இந்த அக்காவுக்கு காட்டுங்க‌

நாகை சிவா said...

:) வாழ்த்துக்கள் !

//falafel//

கொண்டை கடலையா???? இங்கு கிடைக்கும், ஆனால் கடலையில் அல்ல...

//அடுத்த பதிவு பாண்டிச்சேரியின் ஸ்ட்ரீட் புட்ஸ் மற்றும் கையேந்தி பவன்கள் ஏன் பெஸ்ட் என்ற மினி ஆராய்ச்சிக் கட்டுரையும்??!!! இடம்பெறபோகிறது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.//

வெயிட்ங்... அதில் நீங்க எதையும் மிஸ் பண்ணிடாம பாத்துக்கோங்க ;)

செந்தில்குமார் said...

//அடுத்த பதிவு பாண்டிச்சேரியின் ஸ்ட்ரீட் புட்ஸ் மற்றும் கையேந்தி பவன்கள் ஏன் பெஸ்ட் என்ற மினி ஆராய்ச்சிக் கட்டுரையும்??!!! இடம்பெறபோகிறது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.//

அசத்துங்க வித்யா...

Vidhya Chandrasekaran said...

எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க மணிநரேன்.

நன்றி ஷபி.

முடிந்தவரை கவர் செய்ய முயற்சிக்கிறேன் சிவா.

நன்றி செந்தில்குமார்.

Anonymous said...

வித்யா நானும் பேர பார்த்து உணர்ச்சி வசப்பட்டு ஆர்டர் பண்ணிட்டு நானே கஷ்டப்பட்டு முழுங்கி வீட்டுக்கு வந்து வாந்தி எடுத்துட்டு பழைய சாதம் மாவடு வச்சு என்னை திட்டுட்டே சாப்பிட்டுவிடுவேன்...

நல்ல இல்லன்னு சொல்லவும் முடியாது, துப்பவும் முடியாது ஒரு மாதிரி சிரிச்சுட்டே சாப்டுவேன்... எதுக்கு தான் நாமலே நல்ல சமைக்க கத்துக்கணும் என்று முடிவு பண்ணினேன்.

Vidhya Chandrasekaran said...

வாங்க மயில். எனக்குப் பிடிக்கலைன்னா கோடி ரூவா கொடுத்தாலும் சாப்பிட மாட்டேன்:)

jothi said...

//எனக்குப் பிடிக்கலைன்னா கோடி ரூவா கொடுத்தாலும் சாப்பிட மாட்டேன்:)//

பிடிக்காததை தூக்கி போட்டுட்டு கோடி ரூபாயை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். நீங்கள் ஒட்டிவச்சிருக்க அந்த போட்டவைப் பார்த்துக்கிட்டே காலைல பழைய சோறு சாப்பிடும் கஷ்டமான ஜீவன்கள் நாங்கள்.

விக்னேஷ்வரி said...

Litchi drink எவ்வளவு கேவலமா இருந்தாலும் நல்லாருக்கும் வித்யா. அது litchiயோட speciality.

ஹேய் பீட்சா நல்லாருக்குற மாதிரி தெரியுது. wow....

Vidhya, waiting for your next food postings. :)