டிஸ்கி 2: இந்தப் பதிவு முழுக்க முழுக்க மீஜிக் ஓரியண்டட். பாடல்களின் முழு அர்த்தம் மாலும் நஹி ஹை:)
கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் ECE டிபார்ட்மெண்டில் நடந்த கான்பரென்ஸ் முடிவில் கல்ச்சுரல்ஸ்க்கு அரேஞ்ச் செய்திருந்தார்கள். என் தோழி ECE டிபார்ட்மெண்ட் என்பதால் அவள் வற்புறுத்தலுக்கிணங்க அந்த ப்ரோக்ராமைப் பார்க்க சென்றிருந்தேன். ஜூனியர் பையன் ஒருவன் கிட்டாரோடு வந்து உட்கார்ந்து "அல்லா கே பந்தே ஹஸ் தே" என்று கர்ணக் கொடூரமாய் பாட ஆரம்பித்தான். "ஏண்டி செமினார்க்கு ஸ்பான்சர் பத்தலைன்னு இவன விட்டு பிச்சை எடுக்கறீங்களா?" என அவளை கலாய்த்துக் கொண்டிருந்தபோது என் வகுப்பு நண்பன் ஒருவன் "வித்யா அந்தப் பாட்டு ரொம்ப நல்லாருக்கும். பாடறவன் சொதப்பிட்டான். Will try to get u the audio soon." என்றான். சொன்ன மாதிரியே இரண்டு நாட்களில் இந்தப் பாடலை மட்டும் சிடியில் பதிந்து கொடுத்தான். கேட்டவுடன் அசந்து போனேன். மனசை அறுக்கும் அமானுஷ்யமான அதே சமயம் ரொம்ப மெஜெஸ்டிக் வாய்ஸ். கைலாஷ் கேர். 2003ல் வெளிவந்த "Waisa be hota hai II" படத்தில் அவர் பாடிய இந்தப் பாட்டு அவருக்கு ஒரு வெளிச்சத்தைத் தேடி தந்தது.
அர்த்தம் புரியவில்லையென்றாலும் அந்தக் குரலும் இசையும் ரொம்பவே பிடித்திருந்தது. கைலாஷ் கேர் சுஃபி (sufi) பாடகர் என்று நண்பன் கூறினான். (Sufism பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள ஏதேனும் லிங்க் கிடைக்குமா?)
அதற்குப் பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்வதேஸ் படத்தில் உதித் நாரயணனோடு "யூஹி சல்லா சல்லா ஹி" பாட்டு.
2005ஆம் ஆண்டு "Mangal Pandey" படத்தில் டைட்டில் "சாங்கான மங்கள மங்கள ஹோ" பாட்டை "மங்கள்" "அக்னி" "ஆத்மா" என மூன்று வெர்ஷனில் பாடியிருப்பார். அவருடைய rustic வாய்ஸ் நன்றாக செட்டாகியிருக்கும். இசை ஏ.ஆர்.ரகுமான்.
தமிழ் படத்தில் அவர் முதன்முதலில் பாடியது மஜா படத்தில் வரும் "போதுமடா சாமி" என்ற பாட்டு. தமிழ் உச்சரிப்பு ரொம்ப சுமார் என்றாலும், பர்ருவாயில்லே பாடகர்களோடு ஒப்பிடும்போது மன்னிச்சு விட்டுடலாம்.
2006ஆம் ஆண்டு Kailasa என்ற அவருடைய முதல் ஆல்பம் வெளிவந்தது. ஆல்பம் சூப்பர் ஹிட். 9 பாடல்கள்.
Sufi ஸ்டைலில் Teri deewani
Peppy நம்பரான tauba tauba
Kaise mein kahoon ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை.
2007ஆம் ஆண்டு Kailasa Jhoomo re என்று பெயரிடப்பட்ட அடுத்த ஆல்பம்.
இதில் babam bam
Get this widget | Track details | eSnips Social DNA | |
saiyyan, jhoomo re மூன்றும் கிளாசாக இருக்கும்.
Delhi - 6 படத்தில் Arziyan பாடலும், தாம் தூம் படத்தில் உய்யாலாலோ (திரைப்படத்தில் இடம்பெறவில்லை) பாட்டும் பாடியிருக்கிறார்.
27 comments:
\\"ஏண்டி செமினார்க்கு ஸ்பான்சர் பத்தலைன்னு இவன விட்டு பிச்சை எடுக்கறீங்களா\\
:-))))))))
அபியும் நானும் படத்தில் 'ஒரே ஒரு ஊரிலே' பாட்டும் இவர் பாடினது தான். நல்ல பாடல்.
//இந்தப் பதிவு முழுக்க முழுக்க மீஜிக் ஓரியண்டட். பாடல்களின் முழு அர்த்தம் மாலும் நஹி ஹை:)
//
ஸ்ட்டார்ட் மீஜிக்
நன்றி முரளிகண்ணன்.
தகவலுக்கு நன்றி மனுநீதி.
நன்றி நர்சிம்.
//கைலாஷ் கேர் சுஃபி (sufi) பாடகர் என்று நண்பன் கூறினான். (Sufism பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள ஏதேனும் லிங்க் கிடைக்குமா?)
//
நேரில் பார்க்கும்போது நானே நிறைய சொல்லுகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் இவரும் ஒருவர்.
//நான் ஏக் காவ் மே ஏக் கிஸான் வகையறா. எனக்கு ஹிந்தி லோடா லோடா ச்சே தோடா தோடா தான் வரும்.
//
உனக்காவது ஹிந்தி தோடா தோடாமாலும். எனக்கு ஹிந்தி அறவே மாலாது :)
வித்யா,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இசையை ரசிக்க மொழி அவசியமில்லை. சூஃபிஸம் பற்றி ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் உள்ளன. தமிழில் ஒரு புத்தகமும் உள்ளது. (யார் வெளியிட்டார்கள் என சரிபார்த்துவிட்டு விவரம் தருகிறேன்).
டெல்லி 6 நேற்றுதான் பார்த்தேன். கரீனாவின் நடிப்பு மிகவும் அருமையாக இயல்பாக இருந்தது. சற்றே சறுக்கினாலும் மிகை நடிப்பாக ஆகியிருக்கக்கூடிய கதையமைப்பு.
நன்றாக எழுதுகிறீர்கள். அப்புறம் ஏன் மீஜிக் என்றெல்லாம் எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை (நகைச்சுவைக்காகவா?) இசை என்றோ மியூசிக் என்றோ எழுதலாமே. இப்படி எழுதிப்பாருங்கள் உங்கள் எழுத்து நடை அழகு இன்னும் கூடும்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
//நான் ஏக் காவ் மே ஏக் கிஸான் வகையறா.
என்ன கொடுமை இது? இந்தி கூடவா தெரியாது?
இங்க பூனேல எல்லாம் நான் 'சிர்ஃப் இந்தி' தான். வெணும்னா வாங்க பூனேக்கு, இந்தி சொல்லித் தர்றேன். அதுக்கு முன்னாடி ஏக்கு, தோ, தீன்... பாட்ட ஒரு முறை கேட்டுக்கோங்க, இல்லேன்னா கொஞ்ச கஷ்டம் தான் :-)
கண்டிப்பாண்ணே.
நன்றி நவாஸுதீன்.
நன்றி வாசு சார். நீங்கள் சொல்லப்போகும் புத்தகத்திற்காக வெயிட்டிங்.
ட்ரூத். சின்ன வயசில் ப்ரவேஷிகா பெயிலான கோஷ்டி நான். தேரா வரை தெரியும் பாஸ்:)
//தமிழில் ஒரு புத்தகமும் உள்ளது. (யார் வெளியிட்டார்கள் என சரிபார்த்துவிட்டு விவரம் தருகிறேன்).
//
நாகூர் ரூமி எழுதியது.
சப் கானா மே சூனா
சபி அச்சா ஹேய்
தங்கள் ரசனை வளர்க
வெயிலோடி விளையாடி (வெய்யில்) விட்டு விட்டீர்களே ...
"ஏண்டி செமினார்க்கு ஸ்பான்சர் பத்தலைன்னு இவன விட்டு பிச்சை எடுக்கறீங்களா?" என அவளை//
இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்..
//கைலாஷ் கேர் சுஃபி (sufi) பாடகர் என்று நண்பன் கூறினான். (Sufism பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள ஏதேனும் லிங்க் கிடைக்குமா?)
//
ரஹ்மானும் சூஃபியை தான் பின்பற்றுகிறார்.
விக்கிபீடியாவில் தேடினாலே கிடைக்குமே !!!
மேலும் பீமா படத்துல கப்பல்ல ஷெரின் கூட விக்ரம் டான்ஸ் ஆடுவாரே !!! அந்த பாட்டும் இவர் பாடுனது தான்னு நினைக்கிறேன்.
மேஜிக்கல் வாய்ஸ்னா கண்டிப்பா இவரு தான்.
//ஏண்டி செமினார்க்கு ஸ்பான்சர் பத்தலைன்னு இவன விட்டு பிச்சை எடுக்கறீங்களா//
//நான் ஏக் காவ் மே ஏக் கிஸான் வகையறா. //
எப்படி வித்யா? :-))))))
பாடல்களை நிதானமாகக் கேட்டு விட்டு வருகிறேன்.
:-)))
அந்த லிஸ்டில் ஓம் சாந்தி ஓம் படத்தில் வரும் பாட்டும், பூத் நாத் படத்தில் வரும் ஸல், ஜானே தும் பட்டும் எனக்கு பிடிக்கும்.
வெரைட்டியா எழுதறீங்கன்னு சொன்னதுக்கு என் பதிவில் வந்த் வெரைட்டியா சாப்பிடறாங்கன்னு பின்னூட்டம் போட்டாரு கார்க்கி.. எங்க...??
நானும் இந்தி கொஞ்சம் அறிந்தவள்... உதித் அவர்களின் ரசிகையும் கூட :)))
பாடல்களின் அர்த்தம் ஏதோ கொஞ்சம் புரியும்!
//ட்ரூத். சின்ன வயசில் ப்ரவேஷிகா பெயிலான கோஷ்டி நான்.
நான் ப்ராத்மிக் பாஸ். பாஸ் பெருசா பெயில் பெருசா :-)
நல்லா ரசிச்சேங்க இந்த பதிவ...
வாவ்.. எனக்கும் மிகவும் பிடித்த பாடகர்.. இவரின் சக் தே ஃபட்டே கேட்டு இருக்கிஙக்ளா? அல்டிமேட்..
தமிழில் வெயிலோடு உறவாடி , பீமாவில் ஒரு பாட்டும் பாடி இருக்கிறார்.. இன்னும் நிரைய இருக்கு..
மறக்காம சக் தே ஃபட்டே கேளுங்க.. கோஸ்லா கின்னு ஆரம்பிக்கும் படம் பேரு.
சூஃபி இசை இறைவனை பக்தியின் மூலமாக அல்லாமல் சக மனித அன்பின் வாயிலாக அடைய நினைப்பதாகும். மனிதனைத் தவிர்த்து விட்டு இறை பக்தி என்ற தனியான ஒன்றைப் பிடித்துக் கொள்ளாமல் மனிதனையே இறைவனின் அம்சமாகக் காண்பதே சூஃபி இசையின் அடிப்படைப் பண்பு.
சாருவின் கலகம் காதல் இசை படியுங்கள்.
நண்றிண்ணே.
ஷுக்ரியா வசந்த்ஜி (எப்பூடி?)
நினைவுபடுத்தியமைக்கு நன்றி சம்பத்.
நன்றி ஆதி.
நன்றி செய்யது. அந்தப் பாட்டு விஜய் யேசுதாஸ் பாடினது என நினைக்கிறேன்.
வாங்க தீபா.
நன்றி முல்லை.
நன்றி மயில்.
விடுங்க சங்கர்ஜி. அவருக்கு பொறாமை:-)
நன்றி ஆகாயநதி.
நன்றி ட்ரூத்.
தகவலகளுக்கு நன்றி கார்க்கி.
@ஏண்டி செமினார்க்கு ஸ்பான்சர் பத்தலைன்னு இவன விட்டு பிச்சை எடுக்கறீங்களா?"@
அய்யோ சான்ஸே இல்லை..:))))))))))))))
ஜீ வி பிராகாஷ் குமார் பாடல்களை தொடர்ந்து கேளுங்க..இவரோட பாடல்களை சூப்பரா திருப்பி மாத்தி போட்டு சுட்டு கொடுப்பார்..
அப்புறம் சூபிஸம் தொடர்பாக பா ராகவன் சில மாதங்கள் முன்னர் எழுதி இருந்தார்
இங்கு போய் பாருங்க
http://www.writerpara.com/paper/?cat=181
Post a Comment