வெளிச்சக் கற்றைகளினூடே நாட்டியமாடும் துரும்புகளை ரசிப்பதும்
கூந்தலுக்கு வலிக்காமல் போடப்படும் பின்னல்களும்
காரணமே இல்லாமல் இதழோரம் நிரந்தரமாய் குடியிருக்கும் சின்னப் புன்னைகையும்
கண்ணாடி முன் செலவழிக்கப்படும் நேரங்களும்
நான்கு முறையாவது உடை மாற்றுவதும்
அழுக்கேறிய பேருந்து ஜன்னல்களில் எழுதப்படும் இனிஷியல்களும்
அடிக்கடி முணுமுணுக்கப்படும் "நெஞ்சினிலே"க்களும்
உறக்கமில்லா இரவுகளும்
சாப்பாட்டுத் தட்டில் போடப்படும் கோலங்களும்
தழையத் தழைய புடவை கட்டி
கண்ணுக்கு மையிட்டு
தலை நிறைய பூ சூடிக்கொள்ளும்போதும் தான் தெரிகிறது
உன் காதல் மெல்ல மெல்ல என்னை ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறதென்று.
"என்னடி தீடிர் மாற்றம்?" என கண்ணடித்துக் கேட்கும் தோழியிடம் எப்படி சொல்வது?
காதல் மட்டும் சொல்லிவிட்டா வருகிறதென்று.
June 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
//"என்னடி தீடிர் மாற்றம்?" என கண்ணடித்துக் கேட்கும் தோழியிடம் எப்படி சொல்வது?
காதல் மட்டும் சொல்லிவிட்டா வருகிறதென்று.//
நல்லா இருக்குது!
இதென்ன கலாட்டா!
என்ன தீடீர்ன்னு!
அப்பப்ப கொசுவர்த்தி சுத்தி பின்னாடி போயிடறீங்க...
நல்லத்தான் இருக்கு
nice :-)
நன்றி சென்ஷி.
நன்றி ஜமால்.
நன்றி மயில்.
நன்றி இனியவள் புனிதா.
சூப்பர் :)
அட.. இப்படி கூடவா?
நடத்துங்க கொ.ப.செ
நைஸ் நல்லாருக்கு வித்யா.
ஒரு சந்தேகம்.. இது கவிதையா..?:)
ம்.ம்ம். (‘நடக்கட்டு’ என்ற வார்த்தையை முன்னால் சேர்த்துக் கொள்ளவும்.)
Q: என்ன தீடிர்னு??
A: Thonuchu... athaan.
Enna padamnnu sollunga???????
நன்றி அருண்.
நன்றி கார்க்கி.
நன்றி கேபிள் சங்கர் (கவுஜ?)
நன்றி நர்சிம்.
நன்றி ட்ரூத்.
நன்றி செந்தில்குமார்(பதில் தெரியல)
என்ன தீடிர்னு இப்படி ஒரு கொல வெறி உங்களுக்கு எங்க மேல?
அருமையா இருக்கு தமிழ். காதலைப்போல கவிதை வரிகளும் அழகு.
thats a lively expression. good.
"என்னடி தீடிர் மாற்றம்?" என கண்ணடித்துக் கேட்கும் தோழியிடம் எப்படி சொல்வது?
காதல் மட்டும் சொல்லிவிட்டா வருகிறதென்று.
அது எப்போதுமே அப்படித்தான். அழையா விருந்தாளியாய் வந்து நம்மை ஆக்கிரமிக்கும் எஜமானியாய் மாறும்.
நைஸ்
அழகு.
காதல் வரும்போது கவிதையும் கூடவே வரும்னு தெரியும், இத்தனை அழகா
வார்த்தைகளும் ஒரு சித்திரம் போல வரும்னு தெரியாமப் போச்சே:)
:-) very nice
நல்லா இருக்குதுங்கோ
சும்மா தான் சிவா.
நன்றி நவாஸுதீன்.
நன்றி யுவா.
நன்றி முரளிகண்ணன்.
நன்றி வல்லிசிம்ஹன்.
நன்றி தீபா.
நன்றி அமித்து அம்மா.
:-) நல்லா இருக்கு வித்யா!
வர வர உங்களுக்கு காதல் தலைக்கேறிடுச்சு. நல்லா இருக்குபா.
கொல வெறி கவுஜ, கலக்கிட்டேள் போங்கோ,
வார்த்தைகளை வரிசைப்படுத்தி வரிகளில் ஒரு ஒழுங்கு கொண்டு வாங்களேன்,
நன்றி முல்லை.
நன்றி விக்னேஷ்வரி (விடமாட்டீங்களே)
மன்னிக்கவும் ஆதி. தேவையில்லாமல் மற்றவர்கள் பெயர் வேண்டாமே.
நன்றி தராசு. கவிதை எல்லாம் இல்லீங்க. சும்மா எப்பவோ எழுதினது. எனக்கு இவ்வளவுதாங்க எழுத வருது.
//"என்னடி தீடிர் மாற்றம்?" என கண்ணடித்துக் கேட்கும் தோழியிடம் எப்படி சொல்வது?//
தோழி சரியான பழம் போல. “பார்ட்டி யாரு?”ன்னுல்ல கேட்டிருக்கணும்.
// Q: என்ன தீடிர்னு??
A: Thonuchu... athaan.
Enna padamnnu sollunga??????? //
Ans : Surya asinidam kaadhal solvathu..... (Gajini)
Ha ha ha......naanga niraya padam paapomla!!!!
epuuuudiiiiiiiiiiiiii!!!
என்ன திடிர்னு?????????
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ராஜா
செந்தில்குமார்
அப்துல்லா அண்ணா
கலக்கிட்டீங்க போங்க...
see thendral akka comment here
http://pudugaithendral.blogspot.com/2009/06/blog-post.html
:))
சூப்பர் வித்யா ! பிரமாதமான கவிதை :)-
திடீர் ஸ்பெல்லிங் மட்டும் எவ்வளவு மாத்தினாலும் சரியா வரலையா ?
//தழையத் தழைய புடவை கட்டி
கண்ணுக்கு மையிட்டு
தலை நிறைய பூ சூடிக்கொள்ளும்போதும் தான் தெரிகிறது//
வாழ்த்துக்கள்
சான்ஸே இல்லங்க..ஒரு ஃபார்ம்ல தான் இருக்கீங்க..
//சாப்பாட்டுத் தட்டில் போடப்படும் கோலங்களும்//
தாறுமாறு...
நல்ல ஃபீலிங்க்ஸ் :)
இது உங்க சொந்த கொசுவர்த்தி மாதிரி தோணுதே! ;)
சும்மாதான்பா கேட்டேன்... ;)
நன்றி மணிகண்டன்.
நன்றி வசந்த்.
நன்றி செய்யது.
நன்றி ஆகாயநதி.
என்ன வித்யா உடல் நிலை சரியில்லையா? மனசு சரியில்லையா? வழக்கமான வித்யா காணமே? எதா இருந்தாலும் சரியாகிவிடும்.
Post a Comment