June 10, 2009

என்னா வில்லத்தனம்?

ஆனந்த தாண்டவம் படத்திலிருந்த கனா காண்கிறேன் பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தோம். தீடிரென்று அப்பா "ஏய் இந்தப் பாட்டுல ராமாயணத்தை உல்டா பண்ணிருக்காண்டி" என்றார்.
"உல்டா பண்ணலப்பா. அதே கான்சப்ட் தான்ப்பா"
"இல்லடி அதுல ராமர் தான் வில்லை உடைப்பார். இந்தப் பாட்டுல அனுமார் இல்ல வில்லை உடைக்கிறார்".
வீட்டில் சிரிப்பு சத்தம் அடங்க ரொம்ப நேரம் ஆயிற்று.
********

குலதெய்வம் கோவிலுக்குப் போய் நான்கு வருடங்களாகிவிட்டது. வருடா வருடம் ஏதாவது ஒரு தடங்கல் வந்துக்கொண்டேயிருக்கிறது. கோவிலில் இருக்கும் உரல்களில் மாவிடித்து அதில் விளக்கு செய்து அம்மனுக்குப் படைப்பது வழக்கம். எனக்கு நினைவு தெரிந்து பெரியம்மா, அம்மா, அத்தை என எல்லாரும் கர்ம சிரத்தையாக அதை செய்ய, நான் அண்ணாக்களெல்லாம் பொழுதுபோக்க உலக்கையடிப்போம். இந்த முறை பெரியம்மாவால் முடியாததால் வேறு சிலர் மூலம் அரிசி இடித்ததாக அண்ணா சொன்னார். காசு கொடுத்தால் கோவிலில் இருக்கும் பெண்கள் சிலரே மாவிடித்து தருவதாக சொன்னார். இங்கயும் அவுட்சோர்சிங்?
**********

குரூப்பாக தாம்பரத்திலுள்ள அடையார் ஆனந்த பவன் ரெஸ்டாரெண்ட் சென்றிருந்தோம். கடைசியாக எல்லோரும் கேட்டிருந்த பாதாம் மில்க் வந்தது. ஆர்வமாக கிளாஸை எடுத்த அண்ணா ஸ்ட்ரா வழியாக குடிக்க முயற்சித்து "என்னாடா ஸ்ட்ரா குடுத்திருக்காங்க. வரவே மாட்டேங்கது." என சலித்துக் கொண்டே சர்வரை அழைக்க முற்பட்டார். அதற்கு மேல் அடக்கமுடியாமல் நாங்கள் அனைவரும் வெடித்து சிரிக்க ஆரம்பித்துவிட்டோம். எங்கள் சிரிப்பிற்கு காரணம் புரியாமல் முழித்துக்கொண்டிருந்தவரின் தலையில் தட்டி, கிளாசில் இருப்பது ஸ்ட்ரா இல்ல. பிளாஸ்டிக் ஸ்பூன் என்றதும் அசடு வழிந்தார். கண்ணில் நீர் வர புரையேற சிரித்தோம்.
*********

வரும் 15ஆம் தேதியிலிருந்து ஜூனியரை ப்ளே ஸ்கூல் அனுப்பலாமென்றிருக்கோம். காலை 9 முதல் 11 மணி வரை தினமும் இரண்டு மணி நேரம். வீட்டிலிருந்து 5 நிமிடம் நடந்தால் பள்ளி. ரகுவுக்கு காலை அவனோடு விளையாடுவது மிஸ்ஸாகுமேங்கற கவலை. எனக்கோ காலையில் ஜூனியரை எழுப்பி, உணவுகொடுத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டுமேங்கற கவலை. ப்ளே ஸ்கூலுக்கேவா? Miles to go:)
**********

சில வாரங்களுக்கு முன்பு காலை 8 மணியளவில் வீட்டிற்க்கு விருந்தினர்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றி வந்துவிட்டார்கள். அது நொல்லை, இது நொட்டை என ஒரே அதிகாரம். அத்தோடில்லாமல் எங்கள் லைஃப்ஸ்டைலை வேறு குறை சொல்லிக்கொண்டிருந்தார்கள். வீடு முழுக்க பொருட்கள் இரைந்துகிடக்கிறது என சலிப்பு வேறு. 2 வயது வாலு வீட்டில் இருக்கும்போது கிச்சனே ஹாலில் தான் இருக்கும்:) அழகாய் அடுக்கி வைத்திருக்க நானென்ன மியூசியமா நடத்தறேன் (அமித்து அம்மா குழந்தையிருக்கும் வீடு என்றொரு பதிவெழுதியிருந்தார். அதுதான் நினைவுக்கு வந்தது). பொங்கி வந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு அவர்களை முடிந்த அளவு உபசரித்து அனுப்பி வைத்தோம். நினைத்த மாதிரியே மேலிடத்தில் பத்தவைத்துவிட்டார்கள். மேலிடம் அதைப் பெரிதாக கண்டுகொள்ளாமல் எனக்கு சப்போர்ட் செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. வந்தோமா, சாப்டோமான்னு கிளம்பாமா என்னா வில்லத்தனம்.
*********

42 comments:

மணிகண்டன் said...

me the first

நாகை சிவா said...

:)

//ப்ளே ஸ்கூலுக்கேவா? Miles to go:)//

Enjoy

//அழகாய் அடுக்கி வைத்திருக்க நானென்ன மியூசியமா நடத்தறேன்//

Well said... Namma policyum athey than :)

Truth said...

:-)
straw thing was good. I too laughed for a while, I am imagine how it would have been seeing in person

last para - agreed :-)

G3 said...

:)))))))))))

அக்னி பார்வை said...

///வந்தோமா, சாப்டோமான்னு கிளம்பாமா என்னா வில்லத்தனம்.
///

இப்படிதாங்க குடும்பத்த பிரிக்கிரத்துக்கு ஒரு ப்ளான் போட்டு டூர் போவாங்க

குசும்பன் said...

//கோவிலில் இருக்கும் பெண்கள் சிலரே மாவிடித்து தருவதாக சொன்னார். இங்கயும் அவுட்சோர்சிங்?//

இது வந்து ரொம்ப நாளாச்சுங்கோ!!!

//விருந்தினர்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றி வந்துவிட்டார்கள். //

முன்னறிவிப்பு செஞ்ச்சுட்டு வந்தா வீட்டு வாசலில் எங்கு பூட்டு தொங்குமோ என்ற பயம் தான்:) நாங்க எல்லாம் கொஞ்சம் உசாருங்கோ!:)

Cable Sankar said...

/ அது நொல்லை, இது நொட்டை என ஒரே அதிகாரம்.//

இது இல்லைன்னா அப்புறம் என்ன உறவுக்காரங்க..?:)

Pravee said...

nalla eluthrureenga vidhya.. keep it up...

ச்சின்னப் பையன் said...

:-))))))))))

S.A. நவாஸுதீன் said...

பொங்கி வந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு அவர்களை முடிந்த அளவு உபசரித்து அனுப்பி வைத்தோம். நினைத்த மாதிரியே மேலிடத்தில் பத்தவைத்துவிட்டார்கள். மேலிடம் அதைப் பெரிதாக கண்டுகொள்ளாமல் எனக்கு சப்போர்ட் செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. வந்தோமா, சாப்டோமான்னு கிளம்பாமா என்னா வில்லத்தனம்.

சிலபேருக்கு இப்படி செய்யலேன்னா தூக்கமே வராது. டேஞ்சர் பார்ட்டிங்க

எம்.எம்.அப்துல்லா said...

என்னவோ தெரியவில்லை....
என்றைக்கும் விட இன்றைக்கு உன் இடுகை மிகவும் சிறப்பாக இருக்கு. சரியான காரணம் சொல்லத் தெரியவில்லை.

:)

தராசு said...

கடைசி மேட்டர் சூப்பர்.

வந்தமா சாப்டமான்னு இல்லாம நிறைய பேர் செய்யும் வேலையிது. நான் பட்டென்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விடிவேன். என் வீட்டில் பொருள்கள் எங்க வைக்கணும்னு நான் தாங்க முடிவெடுப்பேன்.

எம்.எம்.அப்துல்லா said...

Cable Sankar said...

இது இல்லைன்னா அப்புறம் என்ன உறவுக்காரங்க..?:)

//

வா வித்யா நம்ம எல்லாரும் கேபிள் அண்ணன் வீட்டுக்குப் போய் 2 நாள் தங்கிட்டு வருவோம்.

புள்ள ஃபீல் பண்ணிச் சொல்லுது...என்னான்னு
கேப்பிங்களா அத
விட்டுட்டு தத்துவமா பேசுறீங்க!!! போண்ணே..போ !

:)

கார்க்கி said...

எப்பவாது வீட்டுல சமைப்பிங்களா?

Arun Kumar said...

@இல்லடி அதுல ராமர் தான் வில்லை உடைப்பார். இந்தப் பாட்டுல அனுமார் இல்ல வில்லை உடைக்கிறார்".@

நேயர் விருப்பம்..
வார வாரம் தனியாக உங்க அப்பாவின் டைமின் சென்ஸை பதிவாக போடவும்

சான்ஸே இல்லை.. :))))

அ.மு.செய்யது said...

அனுமாரு மேட்டரு ஹா..ஹா..

ஒரு ஃபார்ம்ல தான் எழுதறீங்க வித்யா..கல கல பதிவு.

Deepa said...

:-) //வீடு முழுக்க பொருட்கள் இரைந்துகிடக்கிறது என சலிப்பு வேறு. //
Same blood!

சந்தனமுல்லை said...

//காலையில் ஜூனியரை எழுப்பி, உணவுகொடுத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டுமேங்கற கவலை. ப்ளே ஸ்கூலுக்கேவா? Miles to go:)//

ஆகா...:-)

//வீடு முழுக்க பொருட்கள் இரைந்துகிடக்கிறது என சலிப்பு வேறு. 2 வயது வாலு வீட்டில் இருக்கும்போது கிச்சனே ஹாலில் தான் இருக்கும்:) //

அதானே...! கூல்..இதையெல்லாம் காதுலேயே வாங்கிக்கவே கூடாது!!:-)

வித்யா...நல்லா இருக்கு துணுக்ஸ்!

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க.

மயில் said...

வந்தோமா, சாப்டோமான்னு கிளம்பாமா என்னா வில்லத்தனம்.

ஆமப்பா, இதே பொழப்பா ஒரு குரூப் இருக்கும்.

புதுகைத் தென்றல் said...

வில்லனுங்க ஜாஸ்தியாகிட்டாங்க வித்யா.

அடுத்த வீட்டுக்கு வந்து நாட்டாமை செய்யறவங்களை பாக்கும்போது கோவம்தான் வருது.

ஜூனியர் ப்ளே ஸ்கூலில் போடூறீங்க சரி. நிஜமாவே ப்ளேதானான்னு பாருங்க.
காலாண்டுக்குள் 50 எழுதத் தெரியணும்னு டார்கெட் ஏதும் இல்லாட்டி ஓகே தான்.

அவருக்கும் டைம்பாஸ் ஆகும்.

மணிகண்டன் said...

துணுக்ஸ் சூப்பர் வித்யா. அடிக்கடி அதே சொந்தக்காரங்க உங்க வீட்டுக்கு வர எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

வித்யா said...

நன்றி மணிகண்டன் (என்னா வில்லத்தனம்?)
நன்றி சிவா.
நன்றி ட்ரூத்.
நன்றி G3.
நன்றி அக்னிபார்வை.
நன்றி குசும்பன்.

வித்யா said...

நன்றி கேபிள். (என் வீட்டுக்கு வந்து நாட்டாமையா. சரிதான்)
நன்றி pravee.
நன்றி ச்சின்னப் பையன்.
நன்றி நவாஸுதீன்.
நன்றி அப்துல்லா அண்ணா.
நன்றி தராசு.

வித்யா said...

நன்றி கார்க்கி. (எப்பவாவது ஹோட்டலுக்கு போவோம்)
நன்றி அருண்குமார்.
நன்றி செய்யது.
நன்றி தீபா.
நன்றி முல்லை.
நன்றி நர்சிம்.
நன்றி மயில்.
நன்றி தென்றலக்கா. (விசாரித்துவிட்டோம். டார்கெட் எதுவுமில்லை:))

வெண்பூ said...

//
அழகாய் அடுக்கி வைத்திருக்க நானென்ன மியூசியமா நடத்தறேன்
//

கரெக்டா சொன்னீங்க வித்யா...

அப்புறம் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.. இந்த வாரம் அண்ணாநகர் ராஜஸ்தானி தாபா போயிருந்தோம். நன்றாக இருந்தது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நகைச்சுவையில் பின்றீங்க..

"இல்லடி அதுல ராமர் தான் வில்லை உடைப்பார். இந்தப் பாட்டுல அனுமார் இல்ல வில்லை உடைக்கிறார்".
//

இந்தப்பகுதியைத் தாண்ட நிறைய நேரம் ஆயிற்று.

மணிநரேன் said...

நன்றாக இருந்தது...

அப்பாவின் டைமிங்...ஹா ஹா ஹா..

ஸ்ட்ரா மேட்ட்ர்...அண்ணன் பாவந்தான்.

//ப்ளே ஸ்கூலுக்கேவா?//

அதானே!இன்னும் எவ்வளவு இருக்கு..

//எனக்கு சப்போர்ட் செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.//

இதுதானே வேண்டியது...இது போதும், யாரோட வில்லத்தனமும் கதைக்காவாது.

Vijay said...

\\நினைத்த மாதிரியே மேலிடத்தில் பத்தவைத்துவிட்டார்கள். மேலிடம் அதைப் பெரிதாக கண்டுகொள்ளாமல் எனக்கு சப்போர்ட் செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. வந்தோமா, சாப்டோமான்னு கிளம்பாமா என்னா வில்லத்தனம்.\\

இன்னும் சில மனிதர்கள் இப்படித் தான் இருக்காங்க. என்ன செய்யறது???

வித்யா said...

நன்றி வெண்பூ.
நன்றி ஆதி.
நன்றி மணிநரேன்.
நன்றி விஜய்.

விக்னேஷ்வரி said...

:)

அன்புடன் அருணா said...

இந்த வில்லத்தனமெல்லாம் இல்லைன்னா வாழ்க்கை ருசிக்காது வித்யா!!

வித்யா said...

நன்றி விக்னேஷ்வரி.
நன்றி அருணா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அந்த ஸ்ட்ரா மேட்டர் சான்ஸே இல்ல வித்யா, கொஞ்சம் கற்பனை பண்ணி பாத்து, எனக்கும் கண்ணுல தண்ணி.

வரும் 15ஆம் தேதியிலிருந்து ஜூனியரை ப்ளே ஸ்கூல் அனுப்பலாமென்றிருக்கோம்.

ஆல் தி பெஸ்ட் - ஜூனியரோட ஸ்கூலில் இருக்குற டீச்சர்ஸுக்கும் சேர்த்துதாம்ப்பா இது.

வீடு முழுக்க பொருட்கள் இரைந்துகிடக்கிறது என சலிப்பு வேறு//
அடுக்கி வெச்சிருந்தா அதுக்கு பேரு அடகுகடை, கலைஞ்சி இருந்தாதான் வீடுன்னு நான் சொல்லல, இளையதளபதி சொல்லியிருக்காருன்னு சொல்ல வேண்டியதுதானேப்பா.

R.Gopi said...

//காசு கொடுத்தால் கோவிலில் இருக்கும் பெண்கள் சிலரே மாவிடித்து தருவதாக சொன்னார். இங்கயும் அவுட்சோர்சிங்?//

Angeyumaa??

//ப்ளே ஸ்கூலுக்கேவா? Miles to go:)//

Super......

//சாப்டோமான்னு கிளம்பாமா என்னா வில்லத்தனம்.//

Vandhadhukku aedhavadhu sollanumey, adhuthaan......

Idhellaam choicela vidunga.....

Innum niraiya ezhudhunga....

Appadiye ennoda blogs paarunga.... pidikkalaam.

www.edakumadaku.blogspot.com

www.jokkiri.blogspot.com

R.Gopi said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

அடுக்கி வெச்சிருந்தா அதுக்கு பேரு அடகுகடை, கலைஞ்சி இருந்தாதான் வீடுன்னு நான் சொல்லல, இளையதளபதி சொல்லியிருக்காருன்னு சொல்ல வேண்டியதுதானேப்பா.//

**************

Kalakkall............

வித்யா said...

நன்றி அமித்து அம்மா.
நன்றி கோபி.

ஆகாய நதி said...

அய்யோ இந்த பதிவை உடனே படிக்காம போயிட்டேனே... ஊருக்கு விஜயம்...

இந்த 10மாத பொழில்குட்டியே கிச்சனை ஹாலுக்கு கொண்டு வரப்போ 2வயசுகுட்டி லூட்டி சூப்பரா தான் இருக்கும் :))

சுரேஷ் குமார் said...

//
அழகாய் அடுக்கி வைத்திருக்க நானென்ன மியூசியமா நடத்தறேன்
//
இரசித்தேன்..
அதும் இல்லாம,
குழந்தை உள்ள வீட்டில் அப்படி இப்படி தான் இருக்கும்..

பட்டாம்பூச்சி said...

:))))

" உழவன் " " Uzhavan " said...

//வரும் 15ஆம் தேதியிலிருந்து ஜூனியரை ப்ளே ஸ்கூல் அனுப்பலாமென்றிருக்கோம்//

தலைவரு இப்ப பிளே ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சுட்டாரா?? குட் :-)

அபி அப்பா said...

அபியும் என் மனைவியும் அலுக்காம அடுக்கி வைப்பதை நானும் நட்டுவும் சளைக்காம கலைத்து போடுவோம்.

வில்லன்கள் பத்தி கவலைப்பட கூடாது.லூஸ்ல விடுங்க!