June 21, 2009

அப்பாவும் நானும்

பெண் குழந்தைகளென்றாலே அப்பாவிடம் பாசமாக இருக்கும் விஷயம் தெரிந்த ஒன்று தான். அப்பாவைப் பற்றி பேசும்போது இந்த டயலாக்கையும் மீறி "எங்கப்பா தான் தி பெஸ்ட்" என்ற கர்வம் எல்லாப் பெண்களுக்குமே இருக்கும். நானும் விதிவிலக்கல்ல. தந்தை என்பவர் குழந்தைகளிடம் கண்டிப்போடுதான் இருக்க வேண்டும் என்ற விதிகளுக்கு மாறாக அப்பா ரொம்பவே பிரெண்ட்லி. எனக்கு நினைவு தெரிந்து அப்பா (அம்மாவும்) என்னை அடித்ததோ, திட்டியதோ இல்லை. இத்தனைக்கும் அப்பா ரொம்ப கோவக்காரர். அவர் உத்யோகம் அப்படி.

அடிக்கடி தான் சிறுவயதில் கஷ்டப்பட்டதை கூறுவார். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பப் பிண்ணனியில் M.A வரை அவர் படித்ததை நினைத்து இன்றளவும் நான் வியப்பதுண்டு. இதெல்லாம் சொல்லி வளர்த்தனாலேயோ என்னவோ எது தேவை எது தேவையில்லை என்று யோசிக்கும் பக்குவம் அப்பவே இருந்தது. தான் பட்ட கஷ்டங்களைப் பிள்ளைகள் படக்கூடாதென்பதில் ரொம்பவே உறுதியா இருந்தார். We were also not demanding kids though:) படிப்பு சம்பந்தமாக எது கேட்டாலும் உடனே கிடைக்கும். அப்பாவின் வாசிப்பு பழக்கம் ஒரளவுக்கு எனக்கும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆங்கிலப் பேப்பர்களை வாசிக்க சொல்வது, அதில் வரும் கிராஸ்வோர்ட்க்கு விடை கண்டுபிடிக்க டிக்ஷ்னரியை புரட்டுவது என அப்பா சூப்பரா ஆங்கிலம் கற்றுத் தருவார். என்னோட ஒரளவுக்கு சுமாரான ஆங்கிலத்துக்கு அவரே குரு.

அப்பாவிடம் ரொம்ப பிடித்த விஷயம் அவர் எனக்கு அளித்த சுதந்திரம். எங்க போய்ட்டு வந்த? ஏன் லேட்டு? யாரது போன்ற எந்த கேள்விகளும் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. இந்த சுதந்திரம் என் எல்லைகள் எதுவென்பதை எனக்கு உணர்த்தியது. என் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமையை எனக்கே தந்திருந்தார். +2 முடித்தபின் டீச்சர் ட்ரெய்னிங் தான் என வற்புறுத்திய உறவுகளிடம் "என் பொண்ணை என்ன விட அதிகமாத்தான் படிக்க வைப்பேன்" என சொல்லி பொறியியல் படிக்க வைத்தார். படிப்பு முடித்தவுடன் கல்யாணம் என வற்புறுத்திய அம்மாவை அப்பா மூலம் தான் சமாளிக்க முடிந்தது. ஆனால் நான் கேட்ட மூன்று வருடங்களை அப்பாவால் சாங்ஷன் பண்ண முடியவில்லை. ஒரு வருடத்துக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டது.

எல்லாவற்றையும் தாண்டி அவர் என் மீது வைத்திருக்கும் அன்பையோ, நான் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தையோ ஜஸ்ட் லைக் தட் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ம்ம்ம் திரும்பவும் சின்னப்பொண்ணா மாறி உன் அரவணைப்பிலேயே இருக்கனும்ன்னு தோணுதுப்பா. தந்தையர் தின வாழ்த்துகள்ப்பா:)

டிஸ்கி : அப்பாவின் பிறந்தநாள் ஜூன் 18. அன்று சில காரணங்களால் பதிவிட இயலவில்லை. டூ இன் ஒன் பதிவாக தந்தையர் தினத்துக்காகவும், தந்தையின் பிறந்தநாளுக்காகவும் இன்று:)

29 comments:

புதுகைத் தென்றல் said...

அப்பாவுக்கு பிலேட்டட் பர்த்டே விஷஷ்.

//திரும்பவும் சின்னப்பொண்ணா மாறி உன் அரவணைப்பிலேயே இருக்கனும்ன்னு தோணுதுப்பா. //

ஆஹா அப்படி ஒரு வரம் மட்டும் கிடைச்சா....ம்ம்ம்

Arun Kumar said...

உங்க அப்பாவிற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்க அப்பாவின் timing comments ஏதும் இந்த பதிவில் இல்லையா?

S.A. நவாஸுதீன் said...

அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களோடு தந்தையர் தின வாழ்த்துக்களும்

பொதுவா அப்பாக்களுக்கு பொண்ணுங்க மேல கொஞ்சம் அன்பு கூடுதல் இருக்கும்ங்கற ஒரு குற்றச்சாட்டு இருந்துகிட்டு இருக்கு. (நான் சாதரணமா என் மகள் கிட்ட பேசினாக் கூட என் மனைவி அடிக்கிற கமெண்ட் இதுதான்).

ஆகாய நதி said...

அப்பாவிற்கு என்னுடைய வாழ்த்துகளையும் கூறிவிடுங்கள் :)

Truth said...

அப்பா என்னோட ஒரு நாள் சின்னவரா? :-)
அப்பாவிற்கு பிலேட்டட் பர்த்டே வாழ்த்துக்கள்

G3 said...

Vaazhthu koora vayadhilladha kaaranathal vanangikolgiren :)

துபாய் ராஜா said...

அப்பாவுக்கு பிலேட்டட் பிறந்த நாள் வாழ்த்துக்களோடு தந்தையர் தின வாழ்த்துக்களும்.

நம்ம தந்தையர் தின கவிதை இங்கே சென்று படியுங்கள். http://rajasabai.blogspot.com/2009/06/blog-post_20.html

வித்யா said...

நன்றி கலா அக்கா.
நன்றி அருண்குமார்.
நன்றி நவாஸுதீன்.
நன்றி ட்ரூத் (தாமதமான பிறந்தநாள் வாழ்ததுகள் உங்களுக்கு)
நன்றி ஆகாயநதி.
நன்றி G3.
நன்றி துபாய்ராஜா.

Anonymous said...

வாழ்த்துக்கள் சொல்லிடுங்க வித்யா.. அப்படியே உங்க குட்டி செல்லத்தின் அப்பாக்கும்.

தாரணி பிரியா said...

உங்க அப்பாவிற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

அப்பாவுக்கு வாழ்த்துகள் வித்யா. இத அவர் படிச்சா ரொம்ப சந்தோஷப்படுவார்.

charu said...

பொறாமையா இருக்குங்க...
வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும்

எம்.எம்.அப்துல்லா said...

உங்க அப்பாவுக்கு பிறந்ததின ராயல் சல்யூட்

:)

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் வித்யா உங்களிருவருக்கும்! நல்ல இடுகை - straight from the heart!! :-)

நர்சிம் said...

பிறந்த நாள வாழ்த்துக்கள். நல்ல பதிவு.

வித்யா said...

நன்றி மயில்.
நன்றி தாரணி பிரியா.
நன்றி ஆதவன்.
நன்றி சாரு.
நன்றி அப்துல்லா அண்ணா.
நன்றி முல்லை.
நன்றி நர்சிம்.

தராசு said...

உங்க நைனாக்கு ஒரு வணக்கம்.

ஆமா, அது இன்னா பொட்ட புள்ளங்க அல்லாம் கல்யாணம் ஆனதுக்கு அப்பாலிக்காதான் நைனா மேல ஓவரா அன்பு காட்டினிக்கறீங்கோ??

இன்னா மேட்டரு???

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாமதமான வாழ்த்துக்கள் -

//திரும்பவும் சின்னப்பொண்ணா மாறி உன் அரவணைப்பிலேயே இருக்கனும்ன்னு தோணுதுப்பா. //

நெகிழ்ச்சியான தந்தையர் தின பதிவு

Deepa said...

இயல்பான அழகான பதிவு. உங்கள் அப்பாவுக்குப் பிறந்தநாள் மற்றும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

த‌வ‌மாய் த‌வ‌மிருந்து எஃபெக்ட்...

வித்யா said...

நன்றி தராசு (நான் எப்பவுமே இப்படித்தான்).
நன்றி குடுகுடுப்பை.
நன்றி அமித்து அம்மா.
நன்றி தீபா.
நன்றி செய்யது.

மணிகண்டன் said...

***
+2 முடித்தபின் டீச்சர் ட்ரெய்னிங் தான் என வற்புறுத்திய உறவுகளிடம் "என் பொண்ணை என்ன விட அதிகமாத்தான் படிக்க வைப்பேன்" என சொல்லி பொறியியல் படிக்க வைத்தார்.
***

உங்க அப்பாவுக்கு ரொம்ப நல்ல மனசு வித்யா. ஆயிரக்கணக்கான மாணவர்களை ஒரே முடிவுல காப்பாத்தி இருக்காரு :)-

விக்னேஷ்வரி said...

அப்பாவுக்கு என் வாழ்த்துக்களும்.

" உழவன் " " Uzhavan " said...

//அவர் உத்யோகம் அப்படி//
என்ன.. போலீஸ்காரரா?? அப்ப அப்ப டெரர் ஆகிருவாரோ :-)
நல்ல அப்பா.. வாழ்த்துக்கள்.

வித்யா said...

நன்றி மணிகண்டன்.
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி உழவன்.

Gokul R said...

வித்யா ....

உங்களுடைய அப்பா பற்றிய பதிவு, என்னை என் அப்பா பற்றி எழுதத்தூண்டியது ...
இங்கே கிறுக்கியிருக்கிறேன்....

http://gokul-r.blogspot.com/2009/09/blog-post.html

நேரம் கிடைக்கும் போது பின்னூட்டம் இடவும் ...

venkat said...

The scribbles on the bond of relationship between father and daughter has been expressed with high spirited emotions. Its lovely. Keep it up.

வித்யா said...

நன்றி கோகுல்.
நன்றி வெங்கட்.