June 23, 2009

ஷங்கர் - எஹ்ஸான் - லாய்

டிஸ்கி : இந்தப் பதிவின் டிஸ்கிய முதலில் படிச்சிடுங்க:)

அதிர வைக்கும் கிதாரிஸ்ட், டெக்னிக்கலி ஸ்ட்ராங் கீபோர்ட் ப்ளேயர், வசீகரிக்கும் குரலுடைய ஒருவர். மூவரும் ஒன்று சேர்ந்தால் - Breathless. இந்த ட்ரையோ தான் ஷங்கர் மகாதேவன் - எஹ்ஸான் நுரானி - லாய் மெண்டோன்ஸா.
இப்போது ஹிந்தி திரையுலகில் சூப்பர் ஹிட் மியூசிக் டைரக்டர்ஸ். லாய் ஏ.ஆர். ரஹ்மானிடம் கீ-போர்ட் பிளேயராக இருந்தபோது ஷங்கர் மகாதேவனோடு பழக்கமேற்பட்டது. பின்னர் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த எஹ்ஸானோடு சேர "தொட்டதெல்லாம் துலங்கும்" என்ற வகையில் வெற்றிப் படிக்கட்டில் சர்ரென ஏறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஷங்கர் மகாதேவன் பெரியளவில் பேசப்பட்டது 1998 வெளிவந்த Breathless என்ற அவர் ஆல்பத்தின் பின் தான்.
ஜாவேத் அக்தரின் வரியில் அவர் பாடிய டைட்டில் சாங் சூப்பர் ஹிட். மூச்சு விடாமல் பாடப்பட்ட பாடல் எனக்கூறப்பட்டாலும் வேகமாக, சுத்தமான உச்சரிப்பில் பாடியதால் அப்படியிருந்தது என ஜாவேத் அக்தர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

1998 Dus என்ற படத்திற்க்கு சந்தீப் சௌதாவுடன் சேர்ந்து இசையமத்தார்கள். "ஹிந்துஸ்தானி" என்ற அந்த பாடல் 1999 கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது இந்தியாவை உற்சாகப்படுத்த யூஸ் ஆனது. 1999ஆம் ஆண்டு கே.கே என்ற பாடகருடன் இணைந்து Rockford என்ற படத்திற்கு இசையமைத்தார்கள்.

மில்லினியம் ஆண்டில் இவர்களின் தனிப் பயணம் ஆரம்பமானது. "Mission Kashmir" வியாபார ரீதியில் பெரிய வெற்றியில்லையென்றாலும் பாடல்கள் சூப்பர் ஹிட். அதுவும் சுனிதி சௌஹான் வாய்ஸில் பும்பரோ பாட்டு சூப்பர் ஹிட்.
சுப் கே சே சுன்
பாடலும், இவர்கள் மூவரும் தோன்றிய ரிந்த் போஷ் மால் பாடலும் நன்றாக இருக்கும்.

2001ல் "Dil Chahta hai" படம் இவர்களுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. எல்லா பாடல்களும் பெரியளவில் ரீச்சானது. இந்தப் படத்திற்காக இவர்களுக்கு RD Burman அவார்டும், Star Screen அவார்டும் கிடைத்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
ஜானே க்யோன்

டைட்டில் பாடலான தில் சாக்தா ஹை


2003ஆம் ஆண்டு வெளியான Kal Ho Na Ho, Kuch Na Kaho ரெண்டும் பெரிய ஹிட். Kal Ho Na Ho படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. Its the time to disco பெரிய டான்ஸ் பீவரை உருவாக்கியது.

அதேபோல் Kuch Na Kaho படத்தில் வரும் இந்தப் பாட்டு சூப்பர் ஹிட்.


அதற்க்குப் பின் அவர்கள் இசையமைத்த Bunty Aur Babli (அப்பா, பையன், மருமகள் மூவரும் கெட்ட ஆட்டம் போட்ட பாட்டு சூப்பர் ஹிட்), Kabhi Alvida Na Kehna, Don, Saalam-e-ishq, Jhoom Barabar Jhoom, Johny Gaddar, Tare Zameen Par, Rock on என வரிசையாக ஹிட்கள்.

தமிழில் இவர்கள் முதலில் இசையமைத்த படம் ஆளவந்தான். லேட்டஸ்டாக யாவரும் நலம்.

இப்போது ஷாருக் நடித்துக்கொண்டிருக்கும் My Name is Khan படத்துக்கும் இவர்கள் தான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறியிருக்கிறது. தமிழில் இவர்கள் மேலும் நிறைய படங்கள் இசையமைக்கவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. கண்டிப்பாக ரசிக்கத்தக்க இசையைத் தருவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. பார்ப்போம்.

23 comments:

Anonymous said...

நல்ல ஆராய்ச்சி... சங்கமம் படத்தில் சங்கர் பாடிய பாட்ட விட்டுடீங்களே...

சென்ஷி said...

:))

சூப்பர் பதிவு! என்னோட ஆல்டைம் ஃபேவரைட் பாட்டு ”பண்ட்டி அவுர் பப்லி” கஜுராரே தான்..

அமிதாப், ஐஸ்வர்யா, பாட்டு, டான்ஸ்... கலக்கியெடுத்துருப்பாங்க :)

பகிர்விற்கு நன்றி

Arun Kumar said...

இந்த கூட்டணியின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் Dil Chahata hai ரொம்ப ரொம்ப பிடிக்கும். படத்தின் பிண்ணணி இசை வெகு அருமையாக இருக்கும்.

நல்ல ஆராய்ச்சி நேரம் செலவு செய்து எழுதி இருக்கீங்க..

4 வது youtube விடியோ dimension template bounds விட அதிகமாக இருக்கு..சரி பண்ணுங்க

Truth said...

breathless வந்த புதுசுல நான் ஆ-ன்னு வாயை பிளந்துகிட்டு பார்த்துட்டு இருப்பேன். சூப்பர் ஹிட் முகாபுலா இருந்தப்போ, ஆல்பம் பொருத்த வரையில், 'மேட் இன் இந்தியா'க்கு அப்புறம் breathless தான் கிட்ட தட்ட அனைவரையும் ரீச் ஆகியிருக்குன்னு நினைக்கிறேன்

நல்ல பதிவு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

எம்.எம்.அப்துல்லா said...

யாவரும் நலமில் பல இடங்களில் பார்வையாளர்களை உறைய வைத்தது காட்சியைவிட இவர்கள் இசைதான் என்பது மறுக்க முடியாதது.

எம்.எம்.அப்துல்லா said...

Truth said...

'மேட் இன் இந்தியா'க்கு அப்புறம் breathless தான் கிட்ட தட்ட அனைவரையும் ரீச் ஆகியிருக்குன்னு நினைக்கிறேன்

//

100% true :)

Anonymous said...

மிகவும் நல்ல பாடல்கள்.

சென்ற இரண்டு மூன்று வருடங்களில் இவர்களின் வீச்சு பாலிவுட்டில் பெருமளவு இருந்தது.

Don,jhoombarabarjhoom,taarezameenpar,thoda pyar thoda magic,bachna ae haseeno ஆகிய படங்களின் பாடல்களும் நன்கு வந்திருந்தன.

நன்று.

சந்தனமுல்லை said...

நல்ல பாடல்கள்..பகிர்வுக்கு நன்றி!

Vidhya Chandrasekaran said...

நன்றி மயில் (ஷங்கர் இசையமைப்பை மட்டும் தான் அலசிருக்கேன்).
நன்றி சென்ஷி.
நன்றி அருண்.
நன்றி ட்ரூத்.
நன்றி அமித்து அம்மா.
நன்றி அப்துல்லா அண்ணா.
நன்றி சிவராமன்.
நன்றி முல்லை.

☀நான் ஆதவன்☀ said...

//சூப்பர் பதிவு! என்னோட ஆல்டைம் ஃபேவரைட் பாட்டு ”பண்ட்டி அவுர் பப்லி” கஜுராரே தான்..

அமிதாப், ஐஸ்வர்யா, பாட்டு, டான்ஸ்... கலக்கியெடுத்துருப்பாங்க :)//

என்னோட பேவரட்டும் அது தான். அப்புறம் "கல் ஹோ நா ஹோ"ல "குச் தோ வுவா ஹே" பாட்டும் ரொம்ப புடிக்கும்

நர்சிம் said...

வராக நதிக்கரையோரம் பாடல் எனக்குமிக பிடித்த ஒன்று. அந்தக் குரலால் தான்.

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆதவன்.
நன்றி நர்சிம்.

தராசு said...

ஹோட்டல் பதிவுகள்ல தான் கலக்கறீங்கன்னு நெனச்சேன். பாட்டுலயும் கலக்கறீங்க.

நல்ல அலசல். வாழ்த்துக்கள்.

Breathless ல் பாடல் வரிகளும் பிரமாதம்தான்

pudugaithendral said...

விஷ்வவிநாயகாங்கற பக்தி ஆல்பத்துல சங்கர் ரொம்ப அருமையா பாடியிருப்பார்.

பாலுவின் 2 ஸ்லோகங்கள் இதில் இருக்கு. சங்கர் பின்னியிருப்பார்

G3 said...

:))) எல்லாமே சூப்பர் பாட்டு.. தில் சாஹ்தா ஹை ல தன்ஹாயி பாட்டும் என் ஃபேவரைட் :))

//அப்பா, பையன், மருமகள் மூவரும் கெட்ட ஆட்டம் போட்ட பாட்டு சூப்பர் ஹிட்//

நச்ச்ச்ச்ச் கமெண்ட்டு :)))

துபாய் ராஜா said...

அனைத்துமே அருமையான பாடல்கள்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//Breathless //

நிறைய நாட்களுக்குப் பிறகு (குறைஞ்சது 8-9 ஆண்டுகள்) கேட்கிறேன்... இந்தப்பாட்டை மறந்தே போயிருந்தேன். :O)
பகிர்ந்ததுக்கு நன்றி.

Vidhya Chandrasekaran said...

நன்றி தராசு.
நன்றி கலா அக்கா.
நன்றி G3.
நன்றி துபாய் ராஜா.
நன்றி ஷ்ரேயா.

அ.மு.செய்யது said...

கைலாஷ் கேர்...இப்ப சங்கர் எஹ்சான் லாய் ஆஆ ???

அசத்துங்க...

இவங்களோட ராக் ஆன் டாப்பு டக்கரு....

"உழவன்" "Uzhavan" said...

யாவரும் நலம் படத்தின் பின்னனி இசையை நானும் வெகுவாக ரசித்தேன். தமிழிலும் இவர்கள் இசையை ரசிக்கக் காத்திருப்போம்.

Vidhya Chandrasekaran said...

நன்றி அ.மு.செய்யது.
நன்றி உழவன்.

Cable சங்கர் said...

/யாவரும் நலமில் பல இடங்களில் பார்வையாளர்களை உறைய வைத்தது காட்சியைவிட இவர்கள் இசைதான் என்பது மறுக்க முடியாதது//
அப்துல்லா.. யாவரும் நலம் பிண்ணனி இசை வேறொருவர்.. அண்ணே..