இந்த வருடம் பொங்கல் கொஞ்சம் டல்லாகவே கழிந்தது. சொந்த ஊருக்கு போகலாம் என்ற ஐடியாவும் ஜூனியரின் உடல்நிலை காரணமாக கைவிடப்பட்டது. அம்மாவுக்கும் எனக்கும் ஜூனியர் கொடுத்த சளி படுத்தியது. அப்பாவுக்கும் உடல்நிலை சரியில்லை. பொங்கல் காசும் இந்த தடவை கொஞ்சம் கம்மி தான். வந்த காச வைச்சு உருப்படியா ஏதாவது வாங்கனும்.
**********************************
இந்த மீடியாக்களின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. CNN-IBN சேனலில் நம் நாட்டு ராணுவ தளவாடங்களைப் பற்றிய செய்தி ஒன்றை கூறினார்கள். பகீரென்றிருந்தது. அட அறிவுகெட்ட ஜென்மங்களே நீங்கள் வெளியிட்ட செய்தி நாட்டுக்கு பெரிய ஆபத்தினை கொண்டு வரும் என்பதை யோசிக்கவே மாட்டீங்களா??
******************************
தொடர்ந்து ஆறு வருடங்களாக புத்தகக்கண்காட்சியை மிஸ் பண்ணவேயில்லை. இந்த முறை செல்லமுடியாதது ரொம்பவே வருத்தமாகத்தான் இருக்கிறது. பார்ப்போம் ஏதாவது மேஜிக் நடந்து ஞாயிற்றுக்கிழமையாவது போக முடியுமான்னு.
***********************
20 வயதில் காதல், கர்ப்பம், கொலை என திருச்சி மாணவர்களின் அரங்கேற்றம் அச்சப்படவைக்கிறது. ஒரே பையனை ரெண்டு பெண்கள் லவ்விருக்காங்க. அதில் ஒருத்தி கர்ப்பம். அவனை பதிவு திருமணம் செய்துகொண்ட இன்னொருத்தி, கர்ப்பத்தை கலைக்கலாம் என சொல்லி வீட்டுக்கு வரவழைத்து, கணவனுடன்????!!! சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து, தன் ஆடையை அணிவித்து எரித்திருக்கிறார்கள். என்னமா பிளான் பண்ணிருக்காங்க. யாரை குற்றம் சொல்வது??
********************
சிலம்பாட்டத்தில் வரும் நலந்தானா பாட்டு டிவியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருந்தது. பாட்டின் கடைசி நடனத்தை??!! பார்த்து அப்பா அடித்த கமெண்ட் "ஒரு குச்சியை வச்சி தாண்டுடா ராமா தாண்டுடா ராமான்னு சொல்லிருந்தா சூப்பரா இருந்திருக்குமில்ல".
********************
இந்த வார தமாஷ் - ஜூனியர் விகடன் அட்டையில் "காற்றுகூட எங்களை பிரிக்க முடியாது" தயாநிதி பற்றி அழகிரி.
*************************
வாழ்த்துக்கள் - குமுதம் மற்றும் ஆனந்த விகடனால் பாராட்டப் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும்.
January 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
\\ஒரு குச்சியை வச்சி தாண்டுடா ராமா தாண்டுடா ராமான்னு சொல்லிருந்தா சூப்பரா இருந்திருக்குமில்ல".
\\
ha ha ha ha
உங்க அப்பாவுக்கும் உங்கள மாதிரி லொள்ளு அதிகங்க. அழகிரி பற்றி சொல்லிட்டிங்க இல்ல. இருக்கு உங்களுக்கு..
நன்றி முரளிக்கண்ணன்.
கார்க்கி எனக்கு தான் எங்கப்பா மாதிரி லொள்ளு அதிகம்:) அப்புறம் தீருமாங்கலத்தில 10,000 வாங்காம தி.மு.கவுக்கு வோட்டு போட்டேங்க:)
\\"ஒரு குச்சியை வச்சி தாண்டுடா ராமா தாண்டுடா ராமான்னு சொல்லிருந்தா சூப்பரா இருந்திருக்குமில்ல".\\
ஹா ஹா ஹா
நன்றாக(ச்) சிரிக்கவைத்துவிட்டீர்கள் ...
கார்க்கி said...
உங்க அப்பாவுக்கும் உங்கள மாதிரி லொள்ளு அதிகங்க.
தந்தை எட்டடி, பொண்ணு பதினாறடி, ஜுனியர் எத்தனை அடியோ.?
ஏதாவது மேஜிக் நடந்து ஞாயிற்றுக்கிழமையாவது போக முடியுமான்னு.
//
மேஜிக் நடக்க வாழ்த்துக்கள்
CNN-IBN மாதிரியான ஆட்கள் திருந்தற மாதிரியே தெரியலியே.....
//ஒரு குச்சியை வச்சி தாண்டுடா ராமா தாண்டுடா ராமான்னு சொல்லிருந்தா சூப்பரா இருந்திருக்குமில்ல".//
சூப்பர் டைமிங் சென்ஸ் :)
வர வர ரொம்ப ரொம்ப அருமையாக கிறுக்க ஆரம்பிச்சுடீங்க..:)
உங்களின் வருங்கால லட்சியம்வாரமலர் அந்துமணி, கற்றதும் பெற்றதும் சுஜாதா போல கிறுக்குவதா?
ஹாய் சுஜாதா இன்னும் இறக்கலன்னு நெனக்கிறேன்
//வந்த காச வைச்சு உருப்படியா ஏதாவது வாங்கனும்.
//
சத்யம் ஷேர் வாங்குங்க..hahaha
//தீருமாங்கலத்தில 10,000 வாங்காம தி.மு.கவுக்கு வோட்டு போட்டேங்க:)
//
அட நம்மூரா??
ஹூம்..அந்த அகில உலக ஆணழகனுக்கு ரெண்டு பேர் போட்டி..? என்னமா ப்ளான் பண்ணியிருக்காங்க.
\ஒரு குச்சியை வச்சி தாண்டுடா ராமா தாண்டுடா ராமான்னு சொல்லிருந்தா சூப்பரா இருந்திருக்குமில்ல".
ரொம்ப சரி.. பெருசுங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.
காசி வாங்கல...சரி எந்த அடிப்படையில திமுக விற்க்கு ஓட்டு போட்டிங்க..?
ஆட்சி சரியாக சகலவிதமான இலவசங்களுடன் நடக்கிறது என்பதாலா..?
நன்றி ஜமால்.
நன்றி அமித்து அம்மா.
ஆமாங்க ச்சின்னப்பையன்.
அய்யோ அருண் என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலயே. இதெல்லாம் கேட்கக்கூடாதுன்னு தான் சுஜாதா போய்ட்டார் போல:(
சிங்.செயக்குமார் வேணாம் அழுதுருவேன்:)
நர்சிம் நான் சும்மா கார்க்கிக்கு கவுண்டர் கொடுக்க சொன்னேன்ங்க. நமக்கு ஓட்டு பாண்டிசேரிலங்க:)
நன்றி கும்க்கி. அது சும்மானாச்சுக்கும் சொன்னது. எனக்கு அங்க வோட்டு இல்ல:)
ஜூனியர் நலமா? பொங்கல் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?
//narsim said...
//தீருமாங்கலத்தில 10,000 வாங்காம தி.மு.கவுக்கு வோட்டு போட்டேங்க:)
//
அட நம்மூரா??//
ரிப்பீட்டேய்... நீங்களுமா??
நானும் திருமங்கலம் தான். NGO நகர்.
Post a Comment