எனக்கு ரகுவுக்கும் இருக்கும் சில ஒற்றுமைகளில் ஒன்று சொந்த வீட்டினைப் பற்றிய கருத்து. இருவருக்குமே வீடு வாங்கனும்ங்கற ஆசை சுத்தமாக இல்லை. பணத்தை வீட்டில் முடக்குவது வேஸ்ட் என்பது எங்கள் எண்ணம். ஆனா சொந்தக்காரங்க எல்லாம் நாங்கள் வாடகை வீட்டில் இருப்பது பெரிய பாவமா நினைக்கிறாங்க. அடிக்கடி நாங்கள் எதிர்கொள்ளும் கேள்வி "இன்னும் ஏன் வீடு வாங்கலை??" அவசியமில்லை என்று சொன்னால் சேமிப்பின் அவசியம் பற்றிய லெக்சர் ஆரம்பமாயிடும். இதையும் மீறி ஒரு அபத்தமான அறிவுரை வாடகைக்கு குடுக்கிற காசை வீட்டு லோனா கட்டலாம்ல???!! ஏனோதானோன்னு இல்லாம ஒரு நல்ல வீடு வாங்க குறைந்தது 40 லட்சத்திற்க்கு மேலாகும். அதற்கு EMI கணக்கு போட்டால் சம்பளத்தில் முக்கால்வாசி வங்கிக்கு தான் அழனும். இதையெல்லாம் அவங்ககிட்ட விளக்கவா முடியும். ரெண்டு பேருமே அநாவசியமாவோ ஆடம்பரமாவோ செலவு செய்யறதில்ல. குடும்ப செலவு போக மீதி ஷேர் மார்க்கெட்லயும் வங்கிலயும் இருக்கு. அவசர தேவையை கலக்கமில்லாமல், அடுத்தவரிடம் கை நீட்டாமல் சமாளிக்க முடிகிறது. ஜூனியரின் மருத்துவ செலவு இந்த தடவை பத்தாயிரத்தை தொட்டுவிட்டது. We managed. அதுக்குன்னு வீடு வாங்க ஆசைபடுவது தப்புன்னு நான் சொல்லல. உங்களின் எதிர்காலத்தையும், அவசரத் தேவைகளையும், எமர்ஜென்ஸி என்றால் சமாளிக்க பெரிய தொகையை புரட்ட முடியுமா என்பதையும் யோசித்து வாங்குவது உத்தேசம் என்பது தான் எங்கள் கருத்து. இன்று ஐ.டி துறையை விட அத்துறை ஊழியர்கள் நிறைய பேர் ஆட்டம்கண்டு போயிருப்பதாக வரும் செய்திகள் இந்த E.M.I மேட்டராகத்தான் இருக்கமுடியும் என்பது என் ஊகம்.
அடுத்தபடியா அதிகம் விமர்சிக்கப்படுவது நாங்கள் உணவகங்களுக்கு செல்வதைப் பற்றி தான். வாரக்கடைசியில் ஒரு வேளை(யாவது) உணவகம் சென்று சாப்பிடுவது எங்கள் வழக்கம். I'm passionate about food. அதுக்குன்னு சட்டி முழுக்க சாப்பிடுற ஜீவன் இல்லை. அளவா சாப்பிடனும் அதே சமயம் அனுபவிச்சும் சாப்பிடனும். ரகுவும் என்னைப் போல் தான். எனக்கு வித்தியாசமான உணவுகளை ரசிப்பதில் ரொம்பவே ஆர்வமுண்டு. நிறைய ரெஸ்டாரெண்ட் டிரை பண்ணிருக்கோம். கையேந்தி பவனிலிருந்து பார்க் ஹோட்டல் வரை பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வீட்டிலோ சாப்பாட்டிற்காக ஏன் இவ்ளோ செலவழிக்கறீங்கன்னு கேக்கறாங்க. அட நாய்படாதபாடுபட்டு சம்பாதிக்கிறது எதுக்கு? உயிர் வாழறதுக்கு அவசியமான விஷயம் சோறு தானே? அத அனுபவிச்சு ருசிக்கறதுல என்ன தப்பு?
நாளைக்கு உயிரோட இருப்பமா இல்லையான்னு தெரியாது. சாவற நேரத்துல அய்யோ வாழ்க்கையை அனுபவிக்கல்யேன்னு புலம்பறதுல ஏதும் அர்த்தம் இருக்கறதா எனக்குத் தெரியலை. தாம் தூம்ன்னு செலவு பண்ணாம, கொஞ்சம் எதிர்காலத்துக்கும் சேமிச்சுகிட்டு, நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆழ்ந்து அனுபவிக்கனும். என்ன நான் சொல்றது?
பி.கு : நான் போற வித்தியாசமான உணவகங்களைப் பற்றி ஏற்கனவே இங்கே எழுதிருக்கேன். இனிமே எழுதப் போறதை தங்கிலீஷில் எழுதலாமான்னு ஒரு யோசனையில் இருக்கேன். அடுத்த பதிவு உணவகத்தைப் பத்தி தான். உங்க ஆதரவ அள்ளித் தெளிங்க மக்களே:)
January 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
வாழ்க்கையைப் பற்றிய தங்களின் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்
ரொம்ப பிராக்டிக்கல்! அப்புறம் ஃப்புட்டீ..?..சேம் பிளட்!!
in this life stage it's ok.it is a saving and valid in old age.
சூப்பர் ..
practical ...
பல சமயத்துல சமூகமே நம்மை வழி நடத்து அதை செய்யலைலியா இதை செய்யவில்லையான்னு இலவச அட்வைஸ் கொடுத்துட்டு போய்கிட்டே இருக்கும்..
நல்ல அருமையாக சொன்னீங்க.
//சில ஒற்றுமைகளில் //
அடப்பவி இரகுவோட பல ஒற்றுமைகள் இல்லையா??
:)
//குடும்ப செலவு போக மீதி ஷேர் மார்க்கெட்லயும் //
என்னாது ஷேர் மார்க்கெட்ல இருக்காஆஆஆஆஆ...வாழ்த்துகள்
:)
நன்றி முரளிக்கண்ணன்.
நன்றி முல்லை. என்னைப் போலவே நீங்களும். சந்தோஷம். அப்புறம் நீங்க ஏதாவது ரெஸ்டாரெண்ட் suggest பண்ணுங்க்களேன்.
கருத்துக்கு நன்றி பாபு.
நன்றி அருண்.
அப்துல்லா அண்ணா எல்லா விஷயத்துலயும் ஒருமித்தக் கருத்து இருந்தா வாழ்க்கை உப்புசப்பில்லாம போயிடாதா??
//ஜூனியரின் மருத்துவ செலவு இந்த தடவை பத்தாயிரத்தை தொட்டுவிட்டது.//
கம்ளீட்டா கியூர் பண்ணலாம் குறைந்த செலவுலன்னு சொல்லுறேன். நீ இன்னும் கேட்டபாட்ட காணோம் :(
//இனிமே எழுதப் போறதை தங்கிலீஷில் எழுதலாமான்னு ஒரு யோசனையில் இருக்கேன். அடுத்த பதிவு உணவகத்தைப் பத்தி தான். உங்க ஆதரவ அள்ளித் தெளிங்க மக்களே:) //
ஹா..ஹா..ஹா.. நம்ப ஆதரவுில்லாமயா?? நா நிறைய கை ஏந்தி பவன அறிமுகம் ச்ய்றேன் உனக்கு :))
அண்ணாத்தே ஜூனியர் பத்தி டீடெய்லா மெயில்றேன்.
வீடு உம் எனக்கு சொந்த வீடு கட்டணுமின்னு ரொம்ப ஆசை வித்யா. என் அப்பாவோட சொந்த வீட்டை எனக்காக வித்தாங்க. அதனால முடிஞ்ச வரை சீக்கிரம் சொந்தமா ஒரு வீடு கட்டி அவங்களை அங்க உட்கார வைக்கணும். செம ப்ளான் எல்லாம் போட்டு வெச்சு இருக்கேன்.எப்ப அமையுமோ தெரியலை.
அடுத்து சாப்பாடு அதுல நான் உங்க கட்சிதான். முடிஞ்சவரைக்கும் எல்லாத்தையும் டேஸ்ட் செஞ்சு பாக்கணும். அட்லீஸ்ட் அது ஏன் நல்லா இல்லைன்னாவது தெரியணும். கோயமுத்தூர் வாங்க. நான் நிறைய டேஸ்டான ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போறேன்.
\\அளவா சாப்பிடனும் அதே சமயம் அனுபவிச்சும் சாப்பிடனும்\\
அனுபவிச்சி சொல்லி இருக்கீங்க.
சென்னையில எனக்கு பிடிச்சது ‘பஞ்சாபி தாபா’
life is beautiful.......njoy
வாங்க தாரணி பிரியா. சீக்கிரமே ஆசை நிறைவேற வாழ்த்துக்கள். கோயமுத்தூர்ல எனக்கு புடிச்சது கெளரிசங்கர் அண்ணபூரனி தான்.
**************
நன்றி ஜமால் அண்ணாத்தே. ஹைவேஸ்களில் நடத்தப்படும் பஞ்சாபி தாபாக்களில் சாப்பிட்டு பாருங்கள்.. சென்னையில் இருக்கும் தாபாக்களின் டேஸ்ட் காறி துப்பலாம் போலிருக்கும்.
**********
நன்றி அனிதா.
//நாளைக்கு உயிரோட இருப்பமா இல்லையான்னு தெரியாது. சாவற நேரத்துல அய்யோ வாழ்க்கையை அனுபவிக்கல்யேன்னு புலம்பறதுல ஏதும் அர்த்தம் இருக்கறதா எனக்குத் தெரியலை. தாம் தூம்ன்னு செலவு பண்ணாம, கொஞ்சம் எதிர்காலத்துக்கும் சேமிச்சுகிட்டு, நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆழ்ந்து அனுபவிக்கனும். என்ன நான் சொல்றது//
இத சொல்லித்தான் எங்கம்மாகிட்ட 24 வயசுல அடி வாங்கினேன்
/நாளைக்கு உயிரோட இருப்பமா இல்லையான்னு தெரியாது. சாவற நேரத்துல அய்யோ வாழ்க்கையை அனுபவிக்கல்யேன்னு புலம்பறதுல ஏதும் அர்த்தம் இருக்கறதா எனக்குத் தெரியலை. தாம் தூம்ன்னு செலவு பண்ணாம, கொஞ்சம் எதிர்காலத்துக்கும் சேமிச்சுகிட்டு, நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆழ்ந்து அனுபவிக்கனும். என்ன நான் சொல்றது//
இதையே நான் வழிமொழிகிறேன்
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க
//ஜூனியரின் மருத்துவ செலவு இந்த தடவை பத்தாயிரத்தை தொட்டுவிட்டது.//
can you remove his photos from here.. more than enough to recover.
ரொம்ப சந்தோஷமாயிருக்கு கார்க்கி. நீ அடிவாங்கனதை நினைச்சு. அப்புறம் உனக்கும் எனக்கும் ஒரே வயசுதானா??
*****
நன்றி அமித்து அம்மா. அமித்து எப்படியிருக்கா??
*******
நர்சிம் நீங்களுமா? எனிவேஸ் நீங்க சொன்ன மறுபேச்சு கிடையாது. போட்டோஸ் எல்லாம் தூக்கிட்டேன்.
வீடு பத்தி எனக்கு சொல்ல தெரியலை
சாப்பாடு மேட்டர் ரொம்ப சரி. நான் இது வரைக்கும் அதிகம் அப்படி செஞ்சது இல்லை. செய்யனும்னு ஆசை இருக்கு பாக்காலாம்.
அக்கோவ், இந்தியால இருக்கேன். முடிஞ்சா ஒரு ஈமெயில் அனுப்புங்க எனக்கு. என்னோட ஈமெயில்
friends.sk@gmail.com
//ரொம்ப சந்தோஷமாயிருக்கு கார்க்கி. நீ அடிவாங்கனதை நினைச்சு. அப்புறம் உனக்கும் எனக்கும் ஒரே வயசுதானா??
//
ஒரே ஒரு வயசா..?? இந்த வயசுலயே இந்த குழந்த என்னமா எழுதறத பாரேன்
//நர்சிம் நீங்களுமா? எனிவேஸ் நீங்க சொன்ன மறுபேச்சு கிடையாது. போட்டோஸ் எல்லாம் தூக்கிட்டேன்//
சிலது அப்படித்தான்.. பட்டேன்(ரொம்ம்ம்ம்ம்ம்ப)..தெரிஞ்சுகிட்டேன்..சொன்னேன்..கேட்டீங்க.. நன்றி
chokka solli irrukinga...
Food post podunga.. me the waiting..
பளிச் சிந்தனைகள்.. நம்மூர்ல கிடைக்கும் விதவிதமான சாப்பாடு மற்றும் ஹோட்டல்கள் பத்தி தொடர்ந்து எழுதுங்க.. :-)
நன்றி சிவா. போட்டாச்சு பாருங்க:)
நன்றி யாத்ரீகன்.
Post a Comment