குமரகத்தில் ஆரம்பித்து மூணாறுக்கு ட்ரை பண்ணி கடைசியாக ஊட்டில லேண்ட் ஆனோம். ஏற்கனவே நான் ஊட்டிக்கு மூணு தடவை போயிருக்கேன். கடைசியா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஆபிஸ்ல இருந்து 12 பேர் ஊட்டிக்கு போனோம். ஊட்டில இப்போ சரியான குளிர். எனக்கு ஜீனியர் எப்படி அடாப்ட் பண்ணிப்பானோன்னு தான் கவலை. ஆனா நானும் ரகுவும் தான் ரொம்ப கஷ்டப்பட்டோம். ஜூனியர் அவர் பாட்டுக்கு சரியான ஆட்டம். 3 நாள் எந்த கவலையும் இல்லாம நல்லா எண்ஜாய் பண்ணோம். அப்புறம் ஊட்டி பத்தி நான் சொல்ல புதுசா எதுவும் இல்ல. As usual எங்கப் பார்த்தாலும் கூட்டம் தான். அதுவும் வட இந்தியர்கள் ரொம்ப ஜாஸ்தி. பகலெல்லாம் நல்ல வெயில் அடித்தாலும் மாலை 6 மணிக்கு மேல் சரியான குளிர். பைக்காரா, குன்னூர், ஊட்டி, முதுமலை ஆகிய இடங்களை தான் மூன்று நாட்களில் கவர் செய்தோம். முதுமலையில் மட்டும் சபாரிக்கு டிக்கெட் கிடைக்காததால் ரிட்டர்ன் ஆகிட்டோம். என் ரேடியோவ இத்தோட ஆஃப் பண்ணிட்டு அங்க நான் எடுத்த போட்டோஸ பாருங்க (சுமாரா தான் இருக்கும்).
January 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
கடைசி போட்டோ சூப்பர்! அப்புறம் பூக்களின் போட்டோவும்...உங்க ஜூனியரையும் சேர்த்துதான்!!
பசுமையான பயனம்
போட்டோக்கள் அருமை!
இந்த நேரத்துல ஊட்டில வெயில் அடிக்குமோ?
நன்றி முல்லை.
நன்றி கவின்.
நன்றி ஜீவன். ஆமாங்க. பகல்ல வெயில் இருந்தது. ஆனா மாலை 6 மணியிலிருந்து காலை 7 மணி வரை சரியான குளிர்.
///ஆமாங்க. பகல்ல வெயில் இருந்தது.///
பகல்ல வெயிலா ? ரொம்ப ஆச்சர்யமா இருக்கே?
;;;;;))))
ஆஹா... ஜாலியா போச்சா? நானும் போறேன்
ஆமா ஜீவன் எனக்குக்கூட ஆச்சரியமா தான் இருந்தது. எல்லாரும் பயங்கர பில்டப் பண்ணாங்க. உறைபனி அப்படி இப்படின்னு. நான் எதிர்பார்த்த மாதிரி இல்லாம பகல்லவெயில் அடிச்சது:)
கண்டிப்பா போயிட்டு வாங்க கார்க்கி. எனக்கு ரொம்ப refreshinga இருந்தது.
ஹாஹாஹா உண்மைய சொல்லுங்க போட்டோ நீங்க எடுத்ததா?
குழந்தை அழகு, அந்த பூக்கள் மாதிரியே..
போட்டோ நீங்க எடுத்ததா?
குழந்தை அழகு, அந்த பூக்கள் மாதிரியே..
மகி & ராம்
நான் எடுத்த போட்டோஸ் தான் அது. நன்றி உங்கள் வருகைக்கு:)
மனதுக்கு நல்ல மாற்றமா அமைஞ்சு இருக்கும்னு நினைக்குறேன். வாழ்த்துக்கள்.
வாங்க SK. மனசுக்கு ரொம்ப நிம்மதியாகவும், மூளைக்கு ரொம்ப refreshinga இருந்தது. வாழ்த்துக்களுக்கு நன்றி:)
மாப்ள ஜம்முன்னு என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்காரு :))
nice photos..
ஜுனியர் சூப்பரா போஸ் கொடுக்கறாரு
Post a Comment