பி.டெக் மூன்றாம் ஆண்டு இறுதியில் என்னோட மொத்தக் குடும்பமும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தார்கள். CTS-ல் ஆணி புடுங்கறதுக்கு என்னை தேர்வு செய்திருந்தார்கள். பரம்பரையில் முதல் engineer என்பதோடு இல்லாமல், அவ்ளோ சம்பளத்தில் வேலை கிடைத்தது எனக்குத்தான். அப்பாக்கும் அம்மாக்கும் ரொம்ப பெருமை. என் தம்பிக்கு அப்போதே அட்வைஸ் இம்சைகள் ஆரம்பிச்சாச்சு. ஒரு வழியா படிப்ப முடிச்சுட்டு வேலைக்கு சேர்ந்து நான் ஆணி புடுங்கின அழகே தனி. வேலைல சேர்ந்து ரெண்டே அ(ஆ)ப்ரைசலிலே மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பிச்சாச்சு. எவ்வளவோ கெஞ்சினேன். இன்னும் ஒரு வருஷம் கல்யாணம் வேண்டாம்னு. எல்லாம் செவிடன் காதுல ஊதுன சங்கா போச்சு. அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில் ரகு பலிஆடா ஆனார்:)
நான்கு மாத கர்ப்பமா இருக்கும்போது நான்கு பேர் கொண்ட டீமை லீட் செய்ய அழைத்தார்கள். US(உழவர் சந்தையா?? அடிங்க) வேற போகவேண்டியதிருக்கும்ன்னு சொன்னாங்க. Project delivery ஜூன் மாதத்தில். என் டெலிவரியோ மே மாசத்துல. என் நிலைமைய சொன்னதும் இது வேலைக்காவதுன்னு ஒரு பெரிய கும்பிடு போட்டு பெஞ்சு தேய்க்க வெச்சுட்டாங்க. கிட்டத்தட்ட ஆறு மாசம் ஓசி சம்பளம். சரி இந்த பிளாஷ்பேக்கெல்லாம் ஏன் ஓட்றேன்னு தான கேக்கறீங்க. இருங்க இனிமேல்தான் மேட்டரே. (அப்ப இதுவரைக்கும் எழுதினது??)
குழந்தைய பார்த்துக்க ஆள் கிடையாது. நான் வேலைய ரிசைன் பண்றேன்னு சொன்னேன். (டெண்டேடிவ் டெலிவரி டேட் கொடுத்தப்பவே நானும் ரகுவும் சேர்ந்து எடுத்த முடிவுதான்). அப்போதிலிருந்து இன்றுவரைக்கும் எக்கச்சக்கமான விமர்சனங்கள். என் பெற்றோருக்கும் சரி ரகுவின் பெற்றோருக்கும் சரி நான் வேலையை ரிசைன் செய்வதில் துளிக்கூட இஷ்டமில்லை. அம்மா "எப்படியாவது லீவ எக்ஸ்டண்ட் பண்ணு. குழந்தைக்கு ஆறு மாசம் ஆனதும் நான் வளர்க்கறேன். நீ வேலைக்குப் போ. வாரக்கடைசியில் இங்க வந்துட்டு போ"ன்னாங்க. நீ ஏம்மா வேலைக்கு போல. இந்நேரம் நீ வேலைல இருந்திருந்தீன்னா தலைமையாசிரியையா ஆயிருக்கலாமேன்னு கேட்டேன்(அம்மா டீச்சர் டிரெய்னிங் முடிச்சுட்டு அரசாங்க வேலைல சேர இருந்தாங்க.). அவங்களால பதில் சொல்ல முடியலை. ஒரு வழியா அவர்களை சமாதானம் பண்ணியாச்சு. ஆனா கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாய் "ஏன் வேலையை விட்ட?" என்ற கேள்விக்கு பதில் சொல்லி எனக்கு அலுத்துவிட்டது. Atleast weekly once someone throws this question on me. நண்பர்கள் கூட ஒவ்வொரு முறையும் போன் செய்யும்போதும் அடுத்த என்ன பண்ண போறதா உத்தேசம் என்று கேட்பார்கள். நானும் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு தடவை ஜூனியர் ஸ்கூல் போகிற வரைக்கும் வேலைக்குப் போகபோவாதில்லை என்று சொன்னேன். ஆனா திரும்ப திரும்ப அதே கேள்வி? "90% எடுத்ததெல்லாம் வேஸ்ட்டாகுதே?" "அடுத்து என்ன பிளான்?" விதவிதமாக ஒரே கேள்வி. இவர்கள் எல்லாம் இப்படி அடிக்கடி கேட்பதால் நானென்னமோ தண்டத்துக்கு உட்கார்ந்திருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். இதுக்கெல்ல்லாம் ஹைலைட்டாக கொஞ்ச நாள் முன்னாடி உறவினர் ஒருவர் அடித்த கமெண்ட், ஏற்கனவே காண்டுல இருந்த என்னை ரொம்பவே எரிச்சலடைய செய்துவிட்டது. அவருடனான உரையாடல்.
"ஏம்மா வேலைய ரிசைன் பண்ண?"
குழந்தைய பார்த்துக்கணும்.
"ஏன் உன் அம்மாவையோ மாமியாரையோ வர சொல்ல வேண்டியதுதானே?"
அவங்களால வர முடியாது.
"அப்ப என்னதான் பண்ணப்போற?"
-----
"கேக்கறேன்ல சொல்லு"
(மனதுக்குள்) தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப்போறீங்க?
"எனக்கு முன்னமே தெரியும் இப்படியெல்லாம் ஆகும்ன்னு. அப்பவே சந்துரு(என் அப்பா) கிட்ட தலபாடா அடிச்சிக்கிட்டேன். Engineering எல்லாம் படிக்கவெக்காதடா. தண்ட செலவு தான். கேட்டானா அவன்? இப்ப பாரு தண்டத்துக்கு 1 லட்சம் போச்சு. உன்னெயெல்லாம் படிக்க வெச்சதே வேஸ்ட்."
(சரியான கோபம் எனக்கு) நீங்க எதுக்கு அழறீங்க? உங்க காசா போச்சு. எங்க அப்பா காசு தானே. போனா போட்டும். கத்திவிட்டு நகர்ந்துவிட்டேன்.
எனக்குத் தெரியும் படிப்பு என்றுமே வீணாகாதென்று. But திரும்ப திரும்ப துக்கம் விசாரிக்கர மாதிரி இப்படி ஆகிபோச்சேன்னு கேக்கும்போது ரொம்ப irritatinga தான் இருக்கு. இது வாழ்க்கையில் ஒரு கட்டம் தான் எனக்குத் தெரிவது கூட பேரன் பேத்தி எடுத்தவங்களுக்கு தெரியமாட்டேங்குதே? Atleast நண்பர்களாவது புரிஞ்சுப்பாங்கன்னு பார்த்தா. ஹூம். அக்கறைங்கற பேர்ல டார்ச்சராதான் இருக்கு. பார்ப்போம் இந்த இம்சை எவ்வளவு நாளைக்கு கண்டினியூ ஆகுதுன்னு.
டிஸ்கி : இது எப்பவோ எழுதினது. பதிவிட்ட கொஞ்சம் கோபம் குறையும்னு தோணிச்சு. அதான் பொலம்பிருக்கேன்.
January 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் வார நாட்களில் லீவு எடுத்து வீட்டில் இருக்கும்போது, காய்காரர் வரைக்கும் கேட்கும் கேள்வி, என்ன வேலைக்கு போலியா...?
உங்களுக்கு its nearly one year, இந்த மாதிரி கேள்விகள், வெற்று பதில்கள்... பாவம் ரொம்பவே கஷ்டம்தான்.
எனக்கு முன்னமே தெரியும் இப்படியெல்லாம் ஆகும்ன்னு. அப்பவே சந்துரு(என் அப்பா) கிட்ட தலபாடா அடிச்சிக்கிட்டேன். Engineering எல்லாம் படிக்கவெக்காதடா. தண்ட செலவு தான். கேட்டானா அவன்? இப்ப பாரு தண்டத்துக்கு 1 லட்சம் போச்சு. உன்னெயெல்லாம் படிக்க வெச்சதே வேஸ்ட்."
///
இந்த டயலாக் டெலிவரி இந்த எடத்துல கூட மேட்ச் ஆகுமா.
வேற வேலை அவங்களுக்குத்தான் இல்லன்னா உங்களுக்குமா??? வேலை மெனக்கெட்டு இதப் போய் ஒரு பதிவாப் போட்டு புலம்புறீங்களே!!
நம்ப வாழுறது நமக்காக....விட்டுத்தள்ளுங்க :)))
அட கவலைய விடுங்க.. எனக்கு கல்யாணம் ஆகி(ஒரு வேளை நடந்தா) குழந்தை பொறந்து என் தங்கமணி வேலைய விட்டா அவ சொல்ர பேச்ச தட்டாம கேட்பேன்..(இல்லைன்னா மட்டும்)..
நல்ல முடிவுங்க.. ஜூனியர் கொடுத்து வச்சவர்.
நன்றி அமித்து அம்மா.
அப்துல்லா அண்ணே. நானும் ஒன்றரை வருஷமா விட்டுத்தள்ளிட்டுதான் இருந்தேன். ஆனா சமீபகாலமா ஓவர் டார்ச்சராகிப் போச்சு. டிஸ்கில போட்ருந்தேனே நீங்க படிக்கலயா.
நன்றி கார்க்கி.
/நீங்க படிக்கலயா.//
யாரப் பார்த்து படிக்கலையானு கேட்டிங்க? நம்ம பொருளாளர் நிதித் துறையில் பட்ட மேற படிப்பு படித்தவர்..
சைக்கிள் கேப்ல உங்க அட்டென்டன்ஸ் 90% என்பதை மார்க்னு சொல்லிட்டிங்க இல்ல.. பார்த்துக்கறேன்
இப்படி பிடிக்காத கேள்வி கேட்கும் ஆளை பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சிட்டு நகந்திருங்கனும்....எதுக்கு அனாவசியமாக கோபப்பட்டு அவர்களையும் காயப்படுத்திட்டு?
அவரவர் மனநிலை எனபது தெரியும் இருந்தாலும்....உங்க பதிவின் கடைசி வரிகளை படிச்சிடுங்க. :-))
//இது வாழ்க்கையில் ஒரு கட்டம் தான் எனக்குத் தெரிவது கூட பேரன் பேத்தி எடுத்தவங்களுக்கு தெரியமாட்டேங்குதே? //
கசப்பான உண்மை!!
ஆமா..ஏன் வேலையை விட்டீங்க? :P
இந்த மாதிரி கேள்வியெல்லாம் கண்டுக்காதீங்கன்னு ஈஸியா சொல்லிடலாம்..ஆனா ஏதோ அவங்கதான் நமக்கு கஷ்டப்பட்டு வேலை தேடித் தந்த மாதிரி ஒரு சிலர் வந்து இப்படி வெட்டியா கேள்வி கேட்டு காய்ச்சி எடுப்பாங்க பாருங்க...வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்..
இனிமே யாராச்சும் கேட்டா வீட்டிலிருந்தே கம்ப்யூட்டர்ல வேலை பார்க்கிறேன்னு சொல்லிப் பாருங்க...அமைதியாகிடுவாங்க..
யோவ் கார்க்கி நீ ஏன்யா சிண்டு முடியற. எனக்கு கொ.ப.சே பதவி தந்த அண்ணன் அப்துல்லாவ பத்தி நான் தப்பா பேசுவேனா?? அவர் தெய்வம்யா தெய்வம்.
நன்றி குமார்.
நன்றி முல்லை.
நன்றி ஷெரீப்.
நீங்க எடுத்த இந்த துணிச்சலான முடிவு நிறைய பேரு எடுக்கலை..
ஜூனியர் பாத்து சிரிச்சிட்டு.. இவிங்களை எல்லாம் ப்ரீ விடுங்க :-)
you also studied in coimbatore ??
அட எம். என். ஸ்ஹெரிப் அதோட விட மாட்டாங்க.. அப்படியா எவளோ சம்பளம், என்ன வேலை, கேள்வி வந்திட்டே இருக்கும் :-)
/// யாரப் பார்த்து படிக்கலையானு கேட்டிங்க? நம்ம பொருளாளர் நிதித் துறையில் பட்ட மேற படிப்பு படித்தவர்..
சைக்கிள் கேப்ல உங்க அட்டென்டன்ஸ் 90% என்பதை மார்க்னு சொல்லிட்டிங்க இல்ல.. பார்த்துக்கறேன் ///
ஹெஹெஹெஹெஹ்
வாங்க SK:)
இந்த கேள்விகள்/புலம்பல்கள் ஒரு நாளும் குறையப் போவதில்லை.. ஒரே வழி வேலையில் மீண்டும் அமர்வதே..
இதுவே எனது முதல் பின்னூட்டம். நீங்கள் எல்லாம் பெரிய கை மாதிரி தெரியது.. ஏகப்பட்ட கிறுக்கல்கள்.. ம்ம்ம் எல்லாம் வாசிக்கணும்...
சரி தமிழ் எப்படி டைப் பண்றீங்க? google transilerate?!!
வாழ்த்துக்கள்.
//சரி தமிழ் எப்படி டைப் பண்றீங்க? google transilerate?!!
//
NHM writer or ekalappai டவுன்லோட் செஞ்சுக்கங்க நண்பா, ரொம்ப ஈஸியா இருக்கும் தமிழ்ல டைப் பண்ன.
அப்புறம் நாங்கள்லாம் பெரிய கைன்னு யாரு சொன்னது??
தீர விசாரிப்பதே மெய் :)))
படிப்பு என்றைக்குமே வீண் போகாது. குறிப்பாக ‘இன்ஜினியரிங்’ படிப்பு பற்றி என்னால் நிறைய சொல்ல முடியும். ‘அப்ளிகேஷன் ஆஃப் டெக்னாலஜி இஸ் கால்டு இன்ஜினியரிங்’. எந்த ஒரு செயலையும் மற்றவர் செய்வதற்கும் ஒரு இன்ஜினியரிங் படிப்பாளி செய்வதற்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருக்கும் எனது என் கருத்து. அனுபவமும் கூட!
படிப்புக்குச் சம்பந்தமில்லாத வேலைகளைத்தான் இதுவரை நான் பார்த்து வந்திருக்கிறேன் என்றாலும் எல்லா வேலைகளிலும் என்னை தனித்திருக்கச் செய்வது, நான் படித்த இன்ஜினியரிங்.
உங்கள் முடிவு சரிதான், சுவரை விற்றுவிட்டு சித்திரம் வாங்க வேண்டியதில்லை. பிள்ளையைத்தூக்கி மடியில் வையுங்கள். வேலை கிடக்குது கழுதை, திறமைசாலிகளுக்காக அது காத்திருக்கும்! தேவைப்படும்போது அல்லது பிள்ளை கொஞ்சம் வளர்ந்தபிறகு கைதட்டி கூப்பிட்டுக் கொண்டால் போச்சு!
"90% எடுத்ததெல்லாம் வேஸ்ட்டாகுதே?"
90%ஆ தெரியாம இந்த BLOG பக்கம் வந்துட்டேன் மன்னிச்சிடுங்க
வாங்க அப்துல்லா.. NHM writer... பற்றி சொன்னதற்கு நன்றிகள் பல.
நீங்க வேற.. நான் வித்யாவுக்கு (அக்கா ஆன்டி-nu சொன்னா அடி தான் விழும்.. அதான் பெயரையே சொல்றேன் Please refer "கதை மாதிரி" from Vidhya's blogs) "வலை நாயகின்னு" பட்டமெல்லாம் குடுக்கலாமான்னு think பண்ணிட்டு இருக்கேன்..
சரி இப்போ என்ன விசாரிக்கணும்.. அவ்ளோ தானே..
விசாரிச்சிருவம்ல..
SPIDEY said...
"90% எடுத்ததெல்லாம் வேஸ்ட்டாகுதே?"
90%ஆ தெரியாம இந்த BLOG பக்கம் வந்துட்டேன் மன்னிச்சிடுங்க
//
நானும் இவர வழி மொழிஞ்சுக்கிறேன்.
அப்புரம் கருத்தெல்லாம் இங்க சொல்லக்கூடாதுங்கிறதுதான் பதிவே.அதுனால நான் அப்பீட்.......
வித்யா அவங்களுக்குதான் வேற வேலை இல்லைன்னு கேள்வி கேட்டுட்டு இருக்காங்க. நீங்க ஏன் பதில் சொல்லறீங்க. சிரிச்சுட்டே ரைட்ல வாங்கி லெப்ட்ல விட்டுட்டு போங்க. இதே நீங்க கஷ்டப்பட்டு வேலைக்கு போனாலும் பச்ச புள்ளையை விட இவங்களுக்கு பணம்தான் முக்கியமா போச்சுன்னு சொல்லுவாங்க. கூலா விடுங்க.
ரொம்ப கோபமா இருக்கிங்களா? ஒரு தத்துவம் சொல்லட்டுமா
நம்ம பல்ல நாமதான் வெளக்கணும் அதே மாதிரிதான் நம்ம வாழ்க்கையை நாமதான் வாழணும். புரிஞ்சதா?
(இந்த தத்துவத்தால இன்னும் கோபம் எகிறுசுன்னா தல படம் பாருங்க சரியா போயிடும் :)
சூப்பர் வித்யா. கிட்டத்தட்ட நானும் இதேப் பிரச்சினை வேறு விதத்தில் பேஸ் பண்ணிருக்கேன். என்னோடது லவ் மேரேஜ். புராஜெக்ட் சப்மிட் பண்ணவுடன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்(அப்பாம்மா சம்மதத்தோடுதான்). காரணம் எங்கப்பாவோட பிரஷர். விதவிதமா எங்க ஜாதி பசங்களோட போட்டோஸ், புரப்போசல்ஸ்னு, எவ்ளவோ எடுத்து சொல்லியும், கொண்டுவந்து டார்ச்சர் பண்ணார். அப்புறம் இங்க வந்தாச்சா, வந்தவுடன் ஆறு மாசம் நல்ல பிரென்ச் டிரெயினிங். நான் அவ்ளோ ஆர்வமா படிச்சேன். புரிஞ்சிக்கரதுலயோ, எழுதறது படிக்கிரதுலயோ அவ்ளோ நல்லா பெர்பார்ம் பண்ணேன். பேசுவதில்தான் தகராறு. அப்புறம் வேலைக்கு முயற்சி பண்ணப்போ தான் புரிஞ்சது எனக்கு டெக்னிக்கல் பிரென்ச் சுத்தமா தெரியலைன்னு. பிளஸ் அது பழக்கத்துக்கும் நாளாகும்னு. சரி இது இங்குள்ள சாதாரண சின்ன சாப்ட்வேர் கம்பெனிகளுக்குத்தான் பெரிய பிரச்சினை. பெரிய கன்செர்ன்களுக்கு அப்ளை பண்ணலாம்னு பண்ணப்பத்தான் இன்னும் பல விஷயங்கள் இங்கிருக்கறது தெரிஞ்சது. இங்கயும் பிரென்ச் ரொம்ப முக்கியம். பிளஸ் இவங்க கொள்கை முடிவுகள் வெளிப்படையாவே ஐரோப்பியர்களுக்கே முன்னுரிமை. அது பெண்ணாக இருக்கும்பட்சத்தில் எப்படிப்பட்டவர்களாக அவங்க இருக்க வேணும். அதுவும் கேண்டிடேட் பிரஷ்ஷர் என்றால் எப்டி இருக்கணும்னு வெச்சிருந்த கொள்கைகளே ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. கொடும என்னன்னா, நான் ஒபாமா பத்தி எழுதினப்போ நெறயப்பேர் என் பார்வை புரியாம பயங்கரமா நக்கலடிச்சாங்க.
பிளஸ் ஆன்சைட்ல வர்ற ஆளுக்கும், இங்க இருக்கிற அந்த அலுவலக ஊழியர்களுக்கும் இருக்கிற சம்பள வித்தியாசம் ஏணி வெச்சாலும் எட்டாத அளவுக்கு உண்டு(நான் சொல்றது ஐரோப்பா, குறிப்பா இங்க). அதுப்பத்தி ஒரு பெரிய பிரச்சினையே இங்க போன வருஷ ஆரம்பத்தில் வெடிச்சது.
இதுப் பத்தி தெரிஞ்சவுடன் என் ரங்கமணி நீ இங்கெல்லாம் எதுக்குப் போய் கஷ்டப்படுற. வீட்ல ஜாலியா இரு. இல்ல வேற பீல்டுக்கு மாத்தி போகனும்னாலும் போ. படி. உன் இஷ்டம்னு சொல்லிட்டார். நாங்களும் சில முடிவுகள சேர்ந்து எடுத்தோம். எல்லாம் ஸ்மூத்தா போயிட்டிருந்தது.
ஆனா இதை என் பெத்தவங்களும் புரிஞ்சிக்கலை, என் மாமியாரும் புரிஞ்சிக்கலை. பயங்கர தொல்லை இந்த விஷயத்தில். அவ இங்க வேலப்பாக்குரா, அவன் அங்க வேலப்பாக்குறான் நீ வீட்ல சும்மா இருக்கியே. இந்த இம்சை உங்களைவிட எனக்கு எக்கச்சக்கமா ஜாஸ்தி, ஏன்னா உங்க கேஸ்லாயாவது குழந்தை வளர்க்கரத கொஞ்சமாவது ஏத்துப்பாங்க.
ஒரு பிரெண்டுக்கோ, இல்ல கசினுக்கோ இல்ல அத்தையாச்சே, பெரியாப்பாவாச்சேன்னு சொந்தக்காரங்களுக்கோ போன் பண்ண முடியலை. பேச முடியலை. அவ்ளோ டார்ச்சர், எல்லார் கிட்டருந்தும். ஏன் வேலைக்குப் போகல. ஏன் வேலைக் கிடைக்கலன்னு. எடுத்து சொன்னாலும் புரிஞ்சிக்கிற ஐடியாவுலயே அவங்க இல்லன்னு அப்புறம்தான் புரிஞ்சது.
இப்டி வினோதமான காரணத்த வெச்சு ஒரே இம்சை கொடுத்ததாலதான், ஏதோ ஒரு வேகத்துல தெரியாத்தனமா, நான் என் பதிவுலயே, சரி இங்க எதாவது வேலை இருந்தா சொல்லுங்கப்பான்னு ஒரு வேண்டுகோள் வெச்சேன். ஆனா அதுவும் இன்னொரு விதத்துல போய் முடிஞ்சது. நெறயப்பேர் நான் காசு கஷ்டத்துல இருக்கேன், குடும்பக் கஷ்டத்தில் இருக்கேன், (பாவம் என் ரங்கமணியையும் விட்டு வெக்கல) என் ரங்கமணி என்னை வேலைக்குப் போகச் சொல்லி டார்ச்சர் படுத்தராருன்னு, தப்புத்தப்பா பலவிதங்களிலும் புரிஞ்சிக்கிட்டு இன்னொரு விதத்தில் டார்ச்சர் கொடுத்தாங்க. ஏண்டா இப்டி ஒரு பதிவு போட்டோம்னு ஆகிடுச்சி. இன்னிவரைக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லாம, எனக்கு வர்ற பின்னூட்டங்கள்ள கூட சிலப் பேர் இதுப் பத்தி குறிப்பிடும்போது எரிச்சலின் உச்சக்கட்டத்துக்கு போய்டுவேன். அப்புறம் என் கொரங்கு புத்திதானே காரணம்னு விட்டுடுவேன்.
ரொம்ப நல்ல பிரச்சினைய எடுத்து அலசனீங்க வித்யா. எனக்கும் என் எரிச்சல் நியாபகம் வந்திடுச்சி உங்க பதிவைப் பார்த்து.
உங்களின் முடிவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
திருமணமானபுதிதில் நான் வேலையை விட்ட பொழுது என்னைத் திட்டி தீர்க்காதவர்கள் இல்லை. இன்று என் பிள்ளைகளை வளர்த்திருக்கும் விதத்தைப்பார்த்து
அவர்களே என்னைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
நாளை உலகம் உங்களையும் பாராட்டும்.
SK நான் படிச்சது வேலூர்ல.
SPIDEY & குடுகுடுப்பை
Deemed Universityla படிச்சேன்ங்க:)
\\ தாரணி பிரியா said...
வித்யா அவங்களுக்குதான் வேற வேலை இல்லைன்னு கேள்வி கேட்டுட்டு இருக்காங்க. நீங்க ஏன் பதில் சொல்லறீங்க.\\
அப்படியும் இருந்துபாத்தாச்சு. அதுக்கு கிடைச்ச பேர் திமிர்பிடிச்சவ. எவ்ளோ நாள் தான் தாரணி இதெல்லாம் சகிச்சுக்க முடியும். இப்ப clear state of mind வந்தாச்சு. அதுக்குதான் ஊட்டி டிரிப் போயிருந்தோம்.
அய்யோ ராப் உங்க நிலைமை இன்னும் கஷ்டம் தான். இந்த சமூகம் எப்பதான் தன் பார்வையை மாற்றப்போகிறதோ தெரியல.
நன்றி தென்றல். என்னைப் பாராட்ட வேணாம். வையாமல் இருந்தாலே போதும்.
வேலைக்குப் போகலைனா ஏன் போகலை? போனால் - யார் குழந்தைகளைப் பார்த்துப்பா? பெரியவங்கனா - ஏன் வயசான காலத்தில கஷ்டப்படுத்தற்? கேர்டேக்கர்னா - அவங்கள நம்பியா விட்டுட்டு போற? - என கேள்விகள் எண்ணிலடங்கா. யாரும் உதவ மாட்டாங்க ஆனால் கேள்வி கேட்பாங்க. நாம பாட்டுக்கு நமக்கு நல்லதுனு படறதை செஞ்சுட்டு போய்ட்டே இருக்கணும்
same blood here,enna panna ........
லூஸ்'ல விடுங்க மேடம்...
என்ன இருந்தாலும் நீங்க வேலையை விட்டது தப்புதான்.. (ஹிஹி..)
நன்றி அமுதா
நன்றி rekha
நன்றி சரவணகுமரன்.
ஹி ஹி தாமிரா நான் டென்ஷன் ஆகமாட்டேனே:)
I know you are very frustrated, but here is what I think. If you never going to work again, isn’t that mean that you have wasted a B.Tech opportunity of some else?
I dont think so Mr.Layman. I had all the qualifications to take a B.Tech degree. Also i may start working in the future.
I wud be happy if you start working again, that means utilizing what u learnt.
உங்க Blog பக்கம் முதல் முறையா வந்திருக்கேன். உங்களோட அதே நிலைமைல இருப்பதனாலயோ என்னமோ உங்க பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு :)
வேளைய விட்டத எங்கிட்ட சொல்லவேயில்லையே...ஏன் விட்டீங்க....
அய்யோ...அம்மா...அடிக்காதீங்க....ஒடிப்போயிடறேன்..
அப்படியே கண்டுக்காம விடுங்க?
ஹோட்டல்ல “ என்ன சாப்பட வந்தீங்களான்னு “கேக்குற அகராதிங்க நாட்டுல க்ரூப்பாதான் அலையுறாங்க..
எனக்கு வேற மாதிரி டார்ச்சர்..எனக்கு எப்ப கல்யாணம் ஆகபோவுத்துன்னு கேட்காம சில பேருக்கு தூக்கமே வராதான்னு தோனும்..:)
லூஸ்ல விடுங்க..
technology மறக்காம இருக்க online freelancing project ஏதாச்சும் செய்ய விருப்பம் இருந்தா சொல்லுங்க..
Hi ,
Just happened to read this article.
You have clearly mentioned how people interfere in others personal stuff and literally irritate.Guess this is a situation which every other working women face in their life.Durin such situations its the Hubby who need to support the wife.Hope Raghu is is agreat support for you.
நன்றி தீபா.
கடந்த ஒரு வாரமா ஆஃபிஸ் ல வேலையெல்லாம் விட்டுட்டு ப்ளாக் படிக்கற வேலைல இறங்கிட்டேன் . உஙக ப்ளாக்லயும், விக்னேஷ்வரி ப்ளாக்லயும் பழைய பதிவுகள தூசி தட்டி எடுத்து படிச்சிட்டு இருக்கேன்...
பழைய பதிவுன்னாலும் இதுக்கு கண்டிப்பா பதில் போடணும்னு தோணிச்சு....வேலைய விடறதுங்கறது அவ்ளோ ஈஸியான விஷயம் இல்லைங்க வித்யா (எனக்கு அந்த தைரியம் இல்ல..)... அதுவும் குழந்தைக்காகன்றப்ப உங்களை கண்டிப்பா பாராட்டணுங்க.... வேலைக்கு என்னைக்கு வேணும்னாலும் போலாங்க.. இந்த வேலை இல்லைனா இன்னொரு வேலை.. ஆனா குழந்தைங்க அப்படிங்களா ? நான் வேலைக்கு போறேந்தான்..எதையுமே முழுமனசோட ஈடுபாட்டோட பண்ணனும்னு நினைக்கறவ நான்..ஆனா பாருங்க கடனேன்னுதான் வரேன்...அதோட நம்ம நல்லா அம்மா இல்லையோன்ற குற்ற உணர்ச்சி என்னை தினம் தினம் கொன்னுகிட்டு இருக்கு :-( என்ன பண்றது.. பணமும் தேவையாயிருக்கே.. உங்க இன்னொரு பதிவுல இருக்கற மாதிரி E.M.Iதான் காரணம் :-( நானாவது பரவால்ல என் குழந்தைய விட்டுட்டு வரேன்னு என் நண்பர்கள்டயாவது சொல்லி ஃபீல் பண்றேன்... ஆனா என் பொண்ணு இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்கா..அம்மாதான் வேணும்னு கேக்க முடியாத அந்த நேரத்துல என் தங்கம் மனசு என்ன பாடுபட்டுச்சோ???
கேள்வி கேக்கறவங்களுக்கு என்னங்க... கேட்டுட்டேதான் இருப்பாங்க... என்னை கூட பாருங்க ...என்ன கைகுழந்தைய விட்டுட்டா வேலைக்கு வர்ற அப்படீங்கறாங்க... மாமியார் பாத்துக்கறாங்க ..என்னை விட நல்லா பார்த்துப்பாங்கன்னா.. நம்ம மக்கள் அதுக்கும் ஒரு கேள்வி... அம்மாவ விட யாராவது நல்லா பர்த்துக்க முடிய்மான்னு... நமக்கு மட்டும் இது தெரியாமவா இருக்கு....
அந்த காலத்துல பொண்ணுஙக வேலைக்கு போனாக்க அதிர்ச்சியாவய்ங்க... இப்ப வேலைக்கு போகலைன்னா அதிர்ச்சியாகறாய்ங்க...
நீங்க வேலைய விட்டது குழந்தைக்காக/குடும்பத்துக்காக.. நான் வேலைக்கு போறது என் குழந்தைக்காக/குடும்பத்துக்காக..இதையெலாம் எப்பதான் புரிஞ்சுப்பாய்ங்களோ !!! ?
இதுவே ஒரு பதிவு மாதிரி ஆயிடுச்சோ... ..!!
Post a Comment