Don Pepe. இந்த மெக்சிகன் உணவகத்துக்கு முதல்முறை நிச்சயதார்த்தம் முடிந்த பின் சென்றோம். (நாந்தான் பில் கட்டினேன்:( அப்பவே ஒரளவுக்கு தெரிஞ்சு போச்சு ரகு எப்படின்னு). கல்யாணத்துக்கப்புறம் ஒருமுறையும், சீமந்தத்திற்க்கு செல்வதற்க்கு முன் ஒரு முறையும் சென்றிருக்கிறோம். அப்புறம் கொஞ்ச காலம் renovation காரணமாக ECRல் இயங்கியது. சில மாதங்களுக்கு முன்னர் தான் மீண்டும் இயங்க ஆரம்பித்தார்கள். இந்த தடவை என் தம்பியோடு மதிய உணவிற்காக சென்றிருந்தோம். Renovation பண்றேன்ங்கற பேர்ல கெடுத்து வசிருக்காங்க. ஒரு பக்கம் முழுவதும் கண்ணாடி உபயோகித்திருக்கிறார்கள். ஏர் கண்டிஷனரையும் தாண்டி வெயிலின் சூடு தெரிகிறது. சரி சாப்பாட்டிற்க்கு வருவோம். Veg Nachos & Strawberry Margarita ஆகியவற்றோடு ஆரம்பித்தோம். As usual both of them were excellent. அதுக்குப் பிறகு ஆர்டர் பண்ண எதுவுமே சரியில்லை. நான் Burritos,
ரகு Chimi changas,
என் தம்பி texas chicken with mexican rice
என ஆளுக்கு ஒரு ஐட்டம் ஆர்டர் செய்தோம். Burritos & Chimi changas were too bland. உப்பு சப்பு ஒன்னுமேயில்லை. சர்வரைக் கூப்பிட்டு கேட்டதுக்கு அப்படிதான் இருக்கும் என்றார். எங்ககிட்டயேவா. நாங்கள் ஏற்கனவே இதே ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டிருப்பதையும், எங்களுக்கும் அதன் சுவை தெரியுமென்பதை சுட்டிக் காட்டினோம். மாற்றித்தருவதாக சொல்லி வேறோன்று கொண்டு வந்தார். This time it had salt??!! தம்பி அவன் டிஷ் பரவாயில்லை என்றான் (நானும் ரகுவும் முட்டை மட்டும் சாப்பிடும் சைவ பட்சிணிகள். என் தம்பி மாமிச பட்சிணி). Fried icecream வாங்கிய தம்பி நொந்து போனான். Fried icecreams tastes great in Cascade restaurants. எனக்கும் அதே கதிதான். இப்படி ஒரு ஹார்டான chocolate brownie நான் சாப்பிட்டதேயில்லை. ரகு மட்டும் ஏதுவும் வேண்டாமென தப்பிச்சாச்சு. பில் செட்டில் பண்ணும்போது தம்பி சொன்னான் "பேசாம பிரெண்ட்ஸோட சேர்ந்து வீட்லயே ஏதாவது செஞ்சு சாப்பிட்டிருக்கலாம்".
உணவகம் : Don Pepe
எங்கே : Cathedral Road. சோழா ஷெரட்டான் எதிரில். Hot breads மாடியில்.
Cuisine : Mexican
பர்ஸ் : பழுத்திருக்கனும். மூன்று பேருக்கு கம்ப்ளீட் மீல் 800 ரூபாய்க்கு
மேல் ஆகும் (only vegetarian).
போலாமா : ஒரு தடவை போய் பார்க்கலாம். அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது:(
January 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
மீ த first :)
//பர்ஸ் : பழுத்திருக்கனும். மூன்று பேருக்கு கம்ப்ளீட் மீல் 800 ரூபாய்க்கு //
unlimited என்றால் ஓட்டல் காரரை நொந்த போக வைச்சிடலாம்..
இந்த ஓட்டலுக்கா தாம்பரத்தில் இருந்து ECRக்கு போனீங்களா?
டீசல் பெட்ரோல விலையை குறைச்சது தப்பா போச்சு :))
ஒன்றை வருடத்துக்கு முன் என் தங்கையை டிரீட்டுக்கு இங்கே கூட்டி போயிருந்தேன்.. அப்போ அருமையாயிருந்தது..
கதீட்ரல் ரோட்லயா..?!!!
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு பக்கத்திலதானே?!!!
ஹிஹிஹி... அந்த ரோட்ல எனக்கு நல்லா தெரிஞ்ச இடம் அதுதான். :)
வாங்க அருண். மீ த பர்ஸ்ட் போட்டதுக்காக அண்ணனுக்கு ஒரு burritos பார்சல்:)
நான் லிமிடெட் மீல்ஸையே மிச்சம் வைக்கிற பார்ட்டி.
ஆமாம் யாத்ரீகன். முன்னாடியெல்லாம் ரொம்ப சூப்பரா இருந்தது. Renovation செய்த பிறகு நல்லாவேயில்லை.
ஊர் சுற்றி சார் ஸ்டெல்லா மேரீஸ் இருக்கறதும் கதீட்ரல் ரோட்ல தான. காலேஜ் எதிர கங்கோத்ரீ இருக்கு. அதே லைன்ல இன்னும் கொஞ்சம் முன்னாடி வந்தா pepe வரும். இராதாகிருஷ்ணன் சாலையும் கதீட்ரலும் ஒன்னுதான்.
photos super.
நன்றி முரளிக்கண்ணன்:)
நாந்தான் பில் கட்டினேன்:( அப்பவே ஒரளவுக்கு தெரிஞ்சு போச்சு ரகு எப்படின்னு\\
ஹா ஹா ஹா.
அவருக்கும் தெரிஞ்சி போயிருக்கும் நீங்க எப்படி சாப்டுவீங்கன்னு.
சாப்பாட்டு பிரியர்களுக்கேற்ற விருந்து இந்த பதிவு.
பார்க்க மட்டும் தான் நல்லா இருக்கும் என்று நினைத்ததை உறுதி செய்து வீட்டீங்க....
:))
நன்றி ஜமால்.
வாங்க நாகை சிவா.
அதுக்கு எதிர்தாப்புலதான் என் ஆபிஸ். சொல்லி இருந்தீன்னா நானும் ஜாய்ண்ட போட்டுருப்பேன்ல ( அதுனாலதான் சொல்லலன்னு சொல்லுறியா??)
Rs.800/???
Don pepe OR Don'T pepe???
நல்ல ரென்யூ!
சாரி அது ரெவ்யூ!! :-)
அப்துல்லா அண்ணாத்தே அங்க எந்த ஆபிஸ். நானும் ஆறு மாசம் அந்த ஏரியாவுல தான் ஆணி புடுங்கிட்டுருந்தேன். CTS opposite to woodlands drive in:)
ஐயோ நர்சிம் எப்படிங்க இப்படியெல்லாம்??
நன்றி முல்லை:)
நீங்க சொல்றத பார்த்தா அதுக்கு வெளியில இருக்கிற 'கையேந்திபவன்'லேயே சாப்பிட்டிருக்கிலாம். கொஞ்சம் டேஸ்டா இருந்திருக்கும்
அந்தளவுக்கு மோசமில்லை ஆதவன். ஆனாலும் கையேந்திபவன் டேஸ்ட்கிட்ட ஷெரட்டான், தாஜ் எல்லாம் பிச்சையெடுக்கனும்..
//(நாந்தான் பில் கட்டினேன்:(
கல்யாணத்துக்கு முன்னாடி சாப்பிட போகும் போது, தனியே வராம தம்பியையும் கூட்டி வந்தா இப்படி தான்
Post a Comment