January 7, 2009

துணுக்ஸ்

நீயு இயர்க்கு முதல் நாள் ரகுவின் பிரெண்ட் கூட டின்னர் சாப்பிடலாம்னு ஒரு பிளான். அவர் வீடு வேளச்சேரியில. நாங்க வேளச்சேரி போய்ட்ற மாதிரியும், அங்க அவர் எங்கள பிக்கப் பண்ணிக்கற மாதிரியும் பிளான். தாம்பரத்தில் இருந்து மாநகராட்சி பேருந்தில் போனோம். 6 மணிக்கு கிளம்பி வேளச்சேரி போக 7.15 ஆயிடுச்சு. அவரோட பிரெண்ட் கேட்டார். "ஏண்டா White board பஸ்ல வந்திருந்தேன்னா சீக்கிரமே வந்துருக்கலாமே". அதற்கு ரகு சொன்னது "காஸ்ட் கட்டிங்டா மச்சி" (ரகு கம்பெனியில் recession காரணமாக 10% சம்பளம் கட்).
*********************************

ஞாயிற்றுக்கிழமை சிலம்பாட்டம் போயிருந்தோம் (தெரிஞ்சே சூனியம் வெச்சிக்கிட்டேன்). இந்த தடவையும் ஜூனியர் ரொம்ப சமர்த்தா இருந்தார். ஆனா படம்தான்:(. இதுக்கு முன்னாடி தாம் தூம் இதே தியேட்டர்ல பார்த்தோம் (அதான் ஜூனியரை first time தியேட்டர் கூட்டிக்கிட்டு போனது). தியேட்டர் ராசி போல. விஜய டி.ஆர் இன்னும் படத்த பார்க்கல போல. ஏன்னா அடுத்த சூப்பர் ஸ்டார் என் பையன் தான் கூசாம பேட்டி கொடுக்கிறாரூ. காலக் கொடுமைடா சாமி.
*************************************

இதுவும் சிலம்பாட்டம் பத்திதான். பாட்டுல டான்ஸ் ஆடுறேன்னு சிம்பு சாவடிக்கிறார். அப்புறம் அந்த ஹீரோயின். ஹூம் இன்னும் ஒரு கர்ச்சீப் சேர்த்து கட்டிருக்கலாம். எனக்கு புடிச்ச பாட்டு வைச்சிக்கவா ரீமிக்ஸ் & Where is the party song? முகேஷ் வாய்ஸ் சூப்பர்.
*************************************

போன ஞாயிறு நைட் டின்னருக்கு ஆனந்த பவன் போயிருந்தோம். ஆர்டர் பண்ணிட்டு காத்துகிட்டிருந்தபோது பக்கத்து டேபிளிலிருந்து கேட்டது.

ஆண் : என்ன ஆர்டர் பண்ணட்டும்?
பெண் : சுஜிக்கு pizza ரொம்ப பிடிக்கும். அதுவும் சொல்லுங்க.
குட்டிப் பெண் (சுஜியாக தான் இருக்கனும்): ஹும் எப்படியும் ஒரு sliceக்கு மேல என்ன சாப்பிட விட போறதில்ல. உனக்கு எது பிடிக்குமோ அதெயே சொல்லு.

என் பின்னால அமர்ந்திருந்ததால என்னால் அவர்கள் ரியாக்ஷனை பார்க்கமுடியல.
*****************************************

சேனல் மாத்திக்கிட்டுருக்கும்போது விஜயில் ஒரு விளம்பரம். நடந்தது என்ன நிகழ்ச்சிக்காக, ஒரு பெண்மனியை பேட்டி எடுத்துகிட்டிருந்தாங்க. அம்மணி போன ஜென்மத்துல ஜோதா பாயா இருந்தாங்களாம். ஃபதேபூரில் இருக்கும் கோட்டையில் நடந்தபடியே பேட்டி குடுக்கறாங்க. "நான் வாழ்ந்த அரண்மனை இப்படி போற வர்றவன் பாக்குற மாதிரி ஆகிடுச்சே". எத்தனை பேர் இப்படி கிளம்பப்போறாங்கலோ தெரியல.
***********************************

14 comments:

கார்க்கி said...

குழந்தையை கூட்டிட்டு போனிங்களா? சின்னப்ப்பையன் ஓக்கே. கொஞ்சம் பெரியவன் ஆனா படத்துக்கு போறதுக்கு முன்னாடி விசாரிச்சுட்டு போங்க..

கார்க்கி said...

/(ரகு கம்பெனியில் recession காரணமாக 10% சம்பளம் கட்)//

சிலமபாட்டம் அவாய்ட் பண்ணியிருந்தா call taxi லே போயிருக்கலாம்.

வித்யா said...

கண்டிப்பா கார்க்கி. இப்போ ஒன்னும் புரியாதுங்கற தைரியம்தான். அப்புறம் சிலம்பாட்டம் தாம்பரத்துல தான் பார்த்தேன்.டிக்கெட் 60 ரூவா(பால்கனி)

முரளிகண்ணன் said...

\\ஏண்டா White board பஸ்ல வந்திருந்தேன்னா சீக்கிரமே வந்துருக்கலாமே\\


ஒயிட் போர்ட்தானே எல்லா இடத்திலும் நிக்கும். யெல்லோ அல்லது எக்ஸ்பிரஸ் என்றால் சரியாய் இருக்குமோ?

சந்தனமுல்லை said...

:-))

//அம்மணி போன ஜென்மத்துல ஜோதா பாயா இருந்தாங்களாம்.//

நானும் பார்த்தேன் அந்தக் கொடுமையை..(கிளிப்பிங்ஸ் தான்!) ஆனா அந்தப் படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடி சொல்லலை அந்தம்மா ன்னு தோணுச்சு!

வித்யா said...

நீங்க சொல்றது சரிதான் முரளிக்கண்ணன். அவருக்கு அது தெரியல. May be ஒயிட் கலர் பஸ்ஸை அப்படி சொல்லிட்டாரோ என்னவோ??

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

ஏன்னு தெரியனுமா ...

வித்யா said...

எதுக்கு ஜமால் வாழ்த்துக்கள்?

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))

அந்த ஹீரோயின். ஹூம் இன்னும் ஒரு கர்ச்சீப் சேர்த்து கட்டிருக்கலாம்.

:))))))))))))

புதுகை.அப்துல்லா said...

//ஏன்னா அடுத்த சூப்பர் ஸ்டார் என் பையன் தான் கூசாம பேட்டி கொடுக்கிறாரூ. காலக் கொடுமைடா சாமி.
//

நான் நினைச்சதயே சொல்லுறீங்க :)

SK said...

உங்க வுட்டுக்காரா அய்யா சொல்லும் பொது அப்படியே என் அப்பா நெனப்பு வந்திச்சு :-)

Arun Kumar said...

சிலம்பாட்டம் பார்த்தற்க்கு 10 % salary cutஆ? அந்த படத்தை பார்த்தற்க்கு 100% increment இல்ல கொடுக்கனும்?

Arun Kumar said...

//ஃபதேபூரில் இருக்கும் கோட்டையில் நடந்தபடியே பேட்டி குடுக்கறாங்க. "நான் வாழ்ந்த அரண்மனை இப்படி போற வர்றவன் பாக்குற மாதிரி ஆகிடுச்சே"//

வடிவேலுக்கு அடுத்த படத்தோட காமேடி sequence ரெடி :))