February 16, 2009

துணுக்ஸ் - 16/2/2009

குறுகலான தெருவில் ஆட்டோவில் வந்துகொண்டிருந்தோம். பாதி தெருவைத் தாண்டியபின் எதிர் பக்கத்திலிருந்து ஒரு ஸ்கார்பியோ தெருவுக்குள் நுழைந்தது. விடாது ஹாரன் அடித்தபடியே இருந்த அந்தவண்டியின் டிரைவர் ஆட்டோவை பின்னால் எடுக்க சொன்னார். பாதி தூரம் வந்தாச்சு நீங்க பின்னால எடுங்கன்னு ஆட்டோடிரைவர் சொன்னதுக்கு, ஸ்கார்பியோ டிரைவர் "யார் வண்டின்னு தெரியுமா? அண்ணன் கிட்ட சொன்னேன் ஆடிடுவ நீ"ன்னு சவுண்ட் உட்டார். ஆட்டோக்காரரும் நமக்கேன் வம்புன்னு வழிவிட்டுட்டார். அப்புறம் ஆட்டோக்கார் சொன்னார். "வார்டு கவுன்சிலரான உடனே ஒரு வண்டிய வாங்கிட்டு இவனுங்க போடுற ஆட்டம் தாங்கமுடியல"
*********

தி.நகர் செல்வதற்காக மாநகரப் பேருந்தில் ஏறினோம். வழக்கத்திற்க்கு மாறாக கூட்டமே இல்லாம பஸ் காலியாக இருந்தது. மேடவாக்கத்தில் ஏறிய பெண் ஒருவர் ரொம்ப நேரம் பர்ஸை துழாவி ஒரு பத்து ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார். நோட்டைப் பார்த்த கண்டக்டர் ரொம்ப டென்ஷன் ஆகிட்டார். எட்டாக மடிக்கப்பட்டு கருப்பாக இருந்தது நோட்டு. வேற நோட்டு கேட்டதுற்க்கு அந்த பெண் கண்டக்டரை சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பித்துவிட்டார். ரொம்ப பொறுமையா இருந்தவர் அந்தப் பெண் இறங்கியவுடன் சொன்னார் "உன் புருஷனுக்கு கோயில் கட்டி கும்பிடனும்".
***********

இரண்டு நாளைக்கு முன்னாடி நண்பன் ஒருவன் sms பண்ணிருந்தான்.
"Vidhya, I lost ur mobile no. Let me know ur no asap"
டேய் எப்படிடா இவ்ளோ தெளிவா இருக்கீங்க?
***********

தண்ணீர் இல்லாமல், எண்ணைய் இல்லாமல் சமைக்கறதுக்காக ஒரு குக்கர் இருக்காம். அந்த குக்கரின் டெமோ பார்த்த என் அண்ணன் சும்மால்லாம என் நம்பர அந்த கம்பெனிக்கு கொடுத்திட்டார். அங்கிருந்த ஒரே தொல்லை. மேடம் டெமோக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கன்னு. "யோவ் நான் தண்ணி, எண்ணை சேர்த்து சமைச்சாலே வாயில வைக்க வழங்கல. இதுல நீ வேற டார்ச்சர் பண்ணாத"ன்னு சொன்னதுக்கப்புறம் தான் விட்டாங்க. இவங்கள அவாய்ட் பண்ண பொய்யெல்லாம் சொல்ல வேண்டியிருக்குது:)
**********

Saawariya படத்துல வர்ற இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒருநாள் மாலை கேட்டுக்கொண்டிருந்தபோது அம்மா சொன்னார் "என்னடி இது? விளக்கு வைக்கிற நேரத்துல சாவறீயா? சாவறீயான்னு?. அந்தக் கருமத்த முதல்ல மாத்து":)
Get this widget | Track details | eSnips Social DNA

***********

தோழியின் கல்யாணத்துக்கு சேலம் செல்வதாய் இருந்தது. ரயில் டிக்கெட், அங்கு தங்க ரூம் எல்லாம் ரெடி பண்ணியிருந்தோம். கடைசி நேரத்தில் கேன்சலாகிவிட்டது. இந்த தடவையும் கல்யாண சாப்பாடு மிஸ்ஸாகிடுச்சு:(
ஆனா அந்த வருத்தத்தை கொஞ்சம் போக்கும்விதம் சனிக்கிழமை மதியம் ஹோட்டலில் லஞ்ச். யெஸ் அதேதான். கூடிய சீக்கிரம் உங்க வயிறெரியவைக்க போட்டோஸோட பதிவு வருது:)

26 comments:

நட்புடன் ஜமால் said...

\\இரண்டு நாளைக்கு முன்னாடி நண்பன் ஒருவன் sms பண்ணிருந்தான்.
"Vidhya, I lost ur mobile no. Let me know ur no asap"
டேய் எப்படிடா இவ்ளோ தெளிவா இருக்கீங்க?\\

ஹா ஹா ஹா

புதுகைத் தென்றல் said...

"யோவ் நான் தண்ணி, எண்ணை சேர்த்து சமைச்சாலே வாயில வைக்க வழங்கல. இதுல நீ வேற டார்ச்சர் பண்ணாத"ன்னு சொன்னதுக்கப்புறம் தான் விட்டாங்க. இவங்கள அவாய்ட் பண்ண பொய்யெல்லாம் சொல்ல வேண்டியிருக்குது:)//


நம்பிட்டேங்க...

புதுகைத் தென்றல் said...

Saawariya படத்துல வர்ற இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். //

பாட்டைக் கேட்டு தியேட்டருக்கு போய் நாங்க நொந்த அனுபவத்தை பதிவா வேற் பொட்டிருக்கேன்,

ஜீவன் said...

/////"யோவ் நான் தண்ணி, எண்ணை சேர்த்து சமைச்சாலே வாயில வைக்க வழங்கல. இதுல நீ வேற டார்ச்சர் பண்ணாத"ன்னு சொன்னதுக்கப்புறம் தான் விட்டாங்க.///

;;;)))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

"யோவ் நான் தண்ணி, எண்ணை சேர்த்து சமைச்சாலே வாயில வைக்க வழங்கல. இதுல நீ வேற டார்ச்சர் பண்ணாத"ன்னு சொன்னதுக்கப்புறம் தான் விட்டாங்க. இவங்கள அவாய்ட் பண்ண பொய்யெல்லாம் சொல்ல வேண்டியிருக்குது:)

எப்படிங்க !!!!
இப்படி பொய்யெல்லாம் சொல்லி
கடைசியில அதை உண்மைன்னு எங்கள நம்ப வைக்கறீங்க.

கார்க்கி said...

//
இரண்டு நாளைக்கு முன்னாடி நண்பன் ஒருவன் sms பண்ணிருந்தான்.
"Vidhya, I lost ur mobile no. Let me know ur no asap"
டேய் எப்படிடா இவ்ளோ தெளிவா இருக்கீங்//

ப்ளேட்டையே மாத்திட்டிங்க.. பொறுப்பா நீங்களும் நம்பர அனுப்பின உடனே அவரு ஃபோன் பண்ணி இத சொல்லியிருப்பாரு.. நல்லா சமாளிக்கறீங்க

மணிகண்டன் said...

வித்யா, சூப்பர் துணுக்ஸ்.

வித்யா said...

நன்றி ஜமால்.

நம்பினதுக்கு நன்றி தென்றலக்கா:)
அப்புறம் படம் சூர மொக்கைன்னு நண்பன் சொன்னதால மீ த எஸ்கேப்பு:)

வித்யா said...

நன்றி ஜீவன்.

நன்றி மணிகண்டன்.

அமித்து அம்மா நான் அநாவசியமா பொய் சொல்லமாட்டேன்:)

கார்க்கி நீ வேணா அப்படி பண்ண்ணிருப்ப. நான் சொன்னதுக்கப்புறம் தான் அந்த லூசுக்கு தெரிஞ்சுது.

Truth said...

//"Vidhya, I lost ur mobile no. Let me know ur no asap"

ஹி ஹி ஹி.

//இவங்கள அவாய்ட் பண்ண பொய்யெல்லாம் சொல்ல வேண்டியிருக்குது:)

சரி கடைசி வரைக்கும் எப்படி சமைப்பீங்கன்னு சொல்லவே இல்லயே.

நான் ஆதவன் said...

நான் முத முறையா "swedes" படத்தில வரும் "சாவறீயா சாவறீயா" என்ற ரொமாண்டிக் பாட்டை கேட்டுட்டு கொஞ்சம் அதிர்ச்சியானேன். அப்புறமா விசாரிச்சதில் தான் அதன் அர்த்தம் புரிஞ்சுது :)

நான் ஆதவன் said...

உங்களுக்கு வெறும் சுடுதண்ணியும், எண்ணையும் மட்டும் தான் அடுப்புல காய வைக்க தெரியும்ங்கிறத தெரியாம, அந்த வேலைக்கும் ஆப்பு வைக்க வந்திருக்காங்க போல.....

Cable Sankar said...

அந்த மொபைல் sms சூப்பர். நல்ல கரகர, நற நற துணுக்ஸ்..

Cable Sankar said...

அந்த மொபைல் sms சூப்பர். நல்ல கரகர, நற நற துணுக்ஸ்..

சந்தனமுல்லை said...

சுவாரசியம் வித்யா!

//கூடிய சீக்கிரம் உங்க வயிறெரியவைக்க போட்டோஸோட பதிவு வருது:)//

வெயிட்டிங் ப்பா!

வித்யா said...

Truth கம்பெனி சீக்ரெட்ட இப்படி பப்ளிக்கா கேட்ககூடாதுங்க.

ஆதவன், பப்ளிக் பப்ளிக்:)

நன்றி சங்கர் ஜி.

நன்றி முல்லை:) சீக்கிரமே போட்றேன்.

நாகை சிவா said...

//"Vidhya, I lost ur mobile no. Let me know ur no asap"
டேய் எப்படிடா இவ்ளோ தெளிவா இருக்கீங்க?//

உங்க பிரண்ட் ஆச்சே ! இது கூட இல்லாட்டி எப்படி ? ;)

//யோவ் நான் தண்ணி, எண்ணை சேர்த்து சமைச்சாலே வாயில வைக்க வழங்கல. இதுல நீ வேற டார்ச்சர் பண்ணாத"ன்னு சொன்னதுக்கப்புறம் தான் விட்டாங்க. இவங்கள அவாய்ட் பண்ண பொய்யெல்லாம் சொல்ல வேண்டியிருக்குது:)//

வழங்கலையா??????????

பொய் - நல்ல காமெடி சென்ஸ் ங்க உங்களுக்கு ;))

ச்சின்னப் பையன் said...

ஹாஹா...

துணுக்ஸ் சூப்பர்....

எம்.எம்.அப்துல்லா said...

//"வார்டு கவுன்சிலரான உடனே ஒரு வண்டிய வாங்கிட்டு இவனுங்க போடுற ஆட்டம் தாங்கமுடியல"
//

பொதுவா எப்பவுமே அய்யாக்கள் அமைதியா இருப்பாங்க. அவங்க அல்லக்கைகள் தொல்லைதான் தாங்க முடியாது :))

எம்.எம்.அப்துல்லா said...

//அந்தப் பெண் இறங்கியவுடன் சொன்னார் "உன் புருஷனுக்கு கோயில் கட்டி கும்பிடனும்".
//

ஒரு சைக்காலஜி.... இந்த மாதிரி வெளில சவுண்டு விடுற ஆளுங்க வீட்ல அமைதியா இருப்பாங்க. வீட்ல சவுண்டு விடுற ஆளுங்க வெளிய அமைதியா இருப்பாங்க :))

எம்.எம்.அப்துல்லா said...

//தண்ணீர் இல்லாமல், எண்ணைய் இல்லாமல் சமைக்கறதுக்காக ஒரு குக்கர் இருக்காம். //

கொஞ்சம்வுட்டா அரிசி இல்லாம,பருப்பு இல்லாமன்னு கூட மார்க்கெட்டிங் பண்ணுவாய்ங்களோ???

மணிகண்டன் said...

********
ஒரு சைக்காலஜி.... இந்த மாதிரி வெளில சவுண்டு விடுற ஆளுங்க வீட்ல அமைதியா இருப்பாங்க. வீட்ல சவுண்டு விடுற ஆளுங்க வெளிய அமைதியா இருப்பாங்க
*********
அப்துல்லா அண்ணே,

இது பொதுவான சித்தாந்தமா இல்லாட்டி self introspection ஆ ?

எம்.எம்.அப்துல்லா said...

//இது பொதுவான சித்தாந்தமா இல்லாட்டி self introspection ஆ ?//

போங்க மணி அண்ணே நீங்க ரொம்ப மோசம். இப்படியெல்லாம் பொது இடத்துல போட்டு வாங்கக்கூடாது.
:)

முரளிகண்ணன் said...

சூப்பர் துணுக்ஸ்.

\\இவங்கள அவாய்ட் பண்ண பொய்யெல்லாம் சொல்ல வேண்டியிருக்குது:)
\\

இது பொய்தானே?

\\"உன் புருஷனுக்கு கோயில் கட்டி கும்பிடனும்\\

:-)))))))))))))))))))))

வித்யா said...

நன்றி சிவா.

நன்றி ச்சின்னப்பையன்.

அப்துல்லா அண்ணா நான் சொல்ல நினைச்சதை மணிகண்டன் சொல்லிட்டார்.

நன்றி முரளிக்கண்ணன். கம்பெனி சீக்ரெட்ட வெளில சொல்லமாட்டேன்:)

Arun Kumar said...

"Vidhya, I lost ur mobile no. Let me know ur no asap"

சூப்பர்..

நமக்கு நாமே திட்டத்தில் அனுப்பபட்டதா??