February 12, 2009

பறவைகள் பலவிதம்.....

ஸ்கூல் படிக்கும்போது சுற்றுலான்னு கூட்டிக்கிட்டு போற இடம் ஒன்னு மகாபலிபுரம் இல்லைன்னா வேடந்தாங்கல். வரிசைல நின்னுகிட்டு டவர்ல ஏறி பார்த்தா அங்கொண்ணும் இங்கொண்ணுமா பறவைங்க உக்காந்திருக்கும். "ஏய் எவ்ளோ நேரம் பார்ப்ப"ன்னு டீச்சர் கத்தினதுக்கப்புறம் தான் நகருவோம். கொசுவத்தி சுத்தியபடியே வேடந்தாங்கலில் இறங்கினோம்.

முருகன் என்பவர் உடன் வந்தார். 15 வருடங்களாக இத்துறையில் உள்ள இவர் பொறுமையாக ஒவ்வொரு பறவையின் பெயர், பழக்கம், வாழ்விடம் பற்றிக்கூறினார். வேடந்தாங்கல் தான் இந்தியாவிலேயே மிகப் பழமையான பறவைகள் சரணாலயம். இச்சரணாலயத்தின் மொத்த பரப்பளவே 73.06 ஏக்கர் தான். 1958ஆம் வருடம்தான் இந்த சரணாலயத்தை அரசு தன் வசம் கொண்டுவந்தது. அதற்கு முந்தைய 300 வருடங்களாக ஊர் மக்களே பராமரித்து வந்ததாகக் கூறினார். கனடா, சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து 26 வகையான பறவைகள் இங்கு வருகின்றனவாம். இதில் கனடா நாட்டிலிருந்து வரும் வெள்ளை அரிவாள் மூக்கன் (பேரு எப்படி யோசிக்கிறாங்கப்பா) என்ற பறவை தான் அதிக தூரத்திலிருந்து வருகிறதாம். கனடாவில் இப்போது கடும்குளிர் நிலவுவதால் இப்பறவைகள் இங்கே வருவதாகக் கூறினார். அதேபோல் கனடாவிலிருந்து வரும் ஊசிவால் வாத்தும் இதே காரணத்திற்காகத் தான் இங்கு வருகின்றன. மற்ற பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வருகின்றன. இவ்விரு பறவைகள் மட்டும் சம்மர் ஹாலிடேசுக்கு வருகின்றன.


சைபீரியாவிலிருந்து வரும் வர்ண நாரை/Painted Stroke Open bill Stroke/நத்தைக் குத்தி நாரை Spot bill pelican/பெரியதாரா என்றழைக்கப்படும் இப்பறவையின் அலகின் கீழ் பை போலொரு அமைப்புள்ளது. இதன் மூலம் கலங்கிய குட்டைகளில் இரை தேடும்போது சேறு மற்றும் குப்பைகளை வடிகட்டிவிடுமாம்.
Snake Bird என்ற இந்தப்பறவையின் கழுத்து நீண்டு பாம்பைப் போல் ('S' shape) இருப்பதால் இந்தப்பெயர்.
Spoon bill pelican/கரண்டிவாயன்??!!

எல்லா பறவைகளும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க ஏறத்தாழ 15 முதல் 20 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. சின்னப் பறவைகள் பறக்க தயாராக 70 நாட்கள் வரை ஆகுமாம். பின்னர் இரைத்தேடும் பயிற்சிக்குப்பிறகு தத்தம் நாட்டுக்கு திரும்பிவிடுமாம்.
வேடந்தாங்கல் ஏரி அதிகப்பட்சமாக 20 அடி ஆழத்தைக்கொண்டுள்ளது. வியூ பாயிண்டில் இருந்து பார்க்கும்போது புதர் போல் காட்சி அளிப்பவை நீர்க்கடப்பை மரங்கள்.
பறவைகள் கூடு கட்ட ஏதுவாய் நிறைய கிளைகளோடு வளரும். இம்மரத்தின் 90% சதவிகிதம் நீருக்குள் மூழ்கியுள்ளன.

இருட்ட ஆரம்பித்துவிடவே இரை தேடி சென்ற பறவைகள் எல்லாம் கூடு திரும்பிக்கொண்டிருந்தன. சில பறவைகள் இரவில் இரை தேடும் பழக்கமுடையவையாம்(வவ்வாலோ ஆந்தையோ அல்ல). இருட்டின் காரணமாக எல்லாப் பறவைகளையும் படமெடுக்கமுடியவில்லை(அப்படியே எடுத்துட்டாலும்ன்னு நீங்க சொல்றது கேக்குது).

சீஸன் - நவம்பர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை. நீரின் அளவைப் பொறுத்து ஜூலை வரைக்கூட நீடிக்கும்.

பார்க்க ஏதுவான நேரம் - காலை 6 முதல் 7 மணி வரை. மாலை 5 மணி முதல் 6 மணி வரை. இந்நேரங்க்களில் தான் பறவைகள் அதிகமாக இருக்கும். மற்ற நேரங்களில் இரை தேட போவதால் எண்ணிக்கை ரொம்ப குறைவாகவே இருக்கும். சென்னை, செங்கல்பட்டிலிருந்து பேருந்து வசதியிருக்கிறது.

முடிந்தால் சென்று வாருங்கள். வித்தியாசமான அனுபவமாய் இருக்கும்.

20 comments:

சந்தனமுல்லை said...

பறவைகள் அழகு!! படங்களும் !!

☀நான் ஆதவன்☀ said...

//Blogger சந்தனமுல்லை said...

பறவைகள் அழகு!! படங்களும் !!//

ஒரு உண்மை...ஒரு பொய்

☀நான் ஆதவன்☀ said...

நல்ல அனுபவம். நான் இதுவரை போனதே இல்லை. போய்டு நானும் பதிவு போடுறேன்

narsim said...

நல்லா "வித்யா"சமா இருக்கு..

கார்க்கிபவா said...

காக்கா படம் போட்டிஉர்ந்தா இன்னும் அழகு. எனக்கு அதான் புடிக்கும்

கார்க்கிபவா said...

// narsim said...
நல்லா "வித்யா"சமா இருக்கு//

’நற’சிம்.. :))

Vidhya Chandrasekaran said...

நன்றி முல்லை.

நன்றி ஆதவன்.

நன்றி நர்சிம்:)

Vidhya Chandrasekaran said...

கார்க்கி உனக்கு காக்கா புடிக்குமா. இல்ல காக்கா புடிக்கறது புடிக்குமா?

pudugaithendral said...

கிண்டல் பண்ணுறவங்களை விடுங்க. நீங்க அழகா படம் எடுத்திருக்கீங்கன்னு பொறாமை!!!!

:))))

தகவல்களுக்கு நன்றி

Cable சங்கர் said...

புண்ணியமா போச்சு. உங்க தயவால எனக்கு வேடந்தாங்கல் போற செலவு குறைஞ்சிருச்சு..

Vidhya Chandrasekaran said...

நன்றி தென்றலக்கா:)

நன்றி கேபிள் சங்கர். முடிஞ்சா ஒரு தபா போய்ட்டு வாங்க.

எம்.எம்.அப்துல்லா said...

//கிண்டல் பண்ணுறவங்களை விடுங்க. நீங்க அழகா படம் எடுத்திருக்கீங்கன்னு பொறாமை!!!!

:))))

//


வித்யா, வாத்தியார் அக்கா உன்னைய வஞ்சப் புகழ்ச்சில பாராட்றாங்க

:))

நட்புடன் ஜமால் said...

\\ஊசிவால் வாத்து\\

ரொம்ப புதுமையா இருக்கு.

படங்கள் உண்மையிலேயே நல்லாயிருக்குங்க.

Arun Kumar said...

புகைபடங்கள் எல்லாம் அருமையாக இருக்கு. ரொம்ப நன்றி.

முடிந்தால் புகாசோவில் கொஞ்சம் அழகு படித்தலாமே..

முரளிகண்ணன் said...

ம்ம் நல்லா இருக்கு

தாரணி பிரியா said...

நல்லா இருக்குங்க :)

அப்புறம் இது கார்க்கிக்கு,

"ஏன் கார்க்கி உங்களுக்கும் குருவி பிடிக்கலையா"?

Anonymous said...

உங்க ஃபோட்டோஸா?? I mean நீங்க எடித்ததா? cute..

Vidhya Chandrasekaran said...

அப்துல்லா அண்ணே என்னை கவுக்கறதையே பொழப்பா வச்சிருக்கீங்க போல:x
******

நன்றி ஜமால்.
******

நன்றி அருண். ஹி ஹி எனக்கு பொது அறிவு கொஞ்சம் கம்மிங்க்கோ:)

Vidhya Chandrasekaran said...

நன்றி முரளிக்கண்ணன்.

நன்றி தாரணி. அதானே கார்க்கிக்கூட குருவி புடிக்கல:)

நன்றி பதுமை:)

ஆதவன் said...

really good article..if possible please give your mobile no. to: thamizhstudio@gmail.com.... i want to talk with you about vedanthaangal.

thanks,
www.thamizhstudio.com