February 9, 2009

நான் கடவுள்

வழக்கமான பாலா படம். ஒரு வித மூர்க்கத்தனத்துடன் இருக்கும் ஹீரோ. மூன்று வருட உழைப்பினைக் கொட்டி வெளிவந்திருக்கும் படம். சிறு வயதிலேயெ காசியில் கொண்டு வந்து விடப்பட்ட சிறுவன் அகோரியாக வளர்ந்து நிற்கிறான். தன்னைத் தேடி வரும் குடும்பத்தினரிடம் இருக்கும் உறவை அறுத்தெறிந்துவிட்டு வர சொல்கிறார் அவன் குரு. ஊரில் ஊனமுற்றவர்களை வைத்து பிச்சை எடுக்கும் கும்பலின் கதையும் ருத்ரனையும் வைத்து மிச்சக் கதையை பின்னியிருக்கிறார் பாலா. ரொம்பவே வித்தியாசமான துணிச்சலான முயற்சி பாலாவிடமிருந்து. எல்லோரும் சொல்வது போல் குப்பைகளுக்கு மத்தியில் மாணிக்கத்தைக் கண்டெடுக்க பாலா மேற்கொண்டுள்ள முற்சியைப் பாராட்டவாவது படத்தை தியேட்டரில் பார்க்கலாம். மற்றபடி அனைவரின் உழைப்பும் வீணாகத்தான் போயிருக்கிறது.

ஊனமுற்றவார்களின் அவலத்தையே திரும்ப திரும்ப காமிப்பதால் ஒரு வித சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆர்யா பாடி லேங்குவேஜில் பின்னியிருக்கிறார். மத யானையினைப் போல் சினங்கொண்டு அலைகிறார். படத்திலேயே ஆர்யாவிற்க்கு அப்புறம் என்னை கவர்ந்த பாத்திரம் பிச்சைக்காரர்களை மேய்க்கும் முருகன் பாத்திரம் தான். கிளாஸான நடிப்பு. கதையை எப்படிக் கொண்டுபோவது என பாலா ரொம்பவே தடுமாறுகிறார். அந்த மொட்டைத் தலை வில்லன் பேசும் வசனம் பாதிக்கு மேல் புரியவில்லை. அம்சவள்ளியாக வரும் பூஜா ஒரளவுக்கு நடித்திருந்தாலும் நிறைய இடங்களில் அவர் செய்யும் பிரசாரம் எரிச்சல் பட வைக்கிறது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சியின் வசனம் ஹீம் அம்சவள்ளி இம்சைவள்ளியாகிறார். படத்தில் வரும் அந்த நீதிமன்ற காட்சியும், அந்த ஊனமுற்ற சிறுவன் பேசும் வசனங்களும் தான் அதிகம் கைத்தட்டலைப் பெற்றது.

மிகுந்த சிரமத்திற்கிடையே வித்தியாசமான படங்களை எடுப்பதன் மூலம் தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்யவைக்க முயலும் பாலாவின் ஒரே மனதைரியத்தைப் பாராட்டி இந்தப் படத்தை பார்க்கலாம். அதே சமயம் பாலாவும் ஒரே மாதிரியான கதையைப் (இதில் ஷங்கரை மிஞ்ச ஆள் கிடையாது) பண்ணுவதிலிருந்து கொஞ்சம் வெளிவரணும்.

நான் கடவுள் - (படத்தைப் பார்த்த) நான் கடவுள்:)

25 comments:

கார்க்கிபவா said...

கடைசி வரி.. பின்னிட்டிங்க..

pudugaithendral said...

நான் கடவுள் - (படத்தைப் பார்த்த) நான் கடவுள்:) //

படத்துக்கு போகணுமா வேணாமான்னு இந்த ஒத்தவரி சொல்லிடிச்சுங்கோ.

நன்னி.

pudugaithendral said...

லைலா, சூர்யா காட்சிகள் இல்லாவிடில் பிதாமகன் கூட போரடித்திருக்கும். தற்போது இருக்கும் நிலையில் அதிகம் மனதை கணக்க வைக்கும் திரைப்படங்கள் பார்க்க இயலாது.

pudugaithendral said...

என்ன கார்க்கி நலமா?

முரளிகண்ணன் said...

கடைசி வரி.. பின்னிட்டிங்க..

repeaatee

Vidhya Chandrasekaran said...

நன்றி கார்க்கி.

தென்றல் சிஸ்டர் பிதாமகனில் லைலாவின் நடிப்பு ஓவர்டோஸ் என்பதென்கருத்து:)

நன்றி முரளிக்கண்ணன்:)

தமிழ்குறிஞ்சி said...

தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில் பதிவுகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

narsim said...

நீங்க நல்லவங்களா கெட்டவங்களா??
(தெரியலேயேப்பா என்ற பதில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)

Arun Kumar said...

Good Review..
எனக்கும் படத்தை பார்த்து விட்டு வரும் போது இதே தான் தோன்றியது,

பல காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஆனால் ஏதோ சன் டிவி திரை தென்றல் நிகழ்ச்சி பார்பது போல ஒரு உணர்வு.

சில காமெடி காட்சிகள் ரசிக்க வைத்தன.. அம்பானியா யாரு அது? அவரு செல்போன் விக்கறவரு உனக்கு தெரியாது போன்ற யதார்தமான நகைச்சுவை.

//நான் கடவுள் - (படத்தைப் பார்த்த) நான் கடவுள்:) ////

அப்பா ஏற்கனவே ஒரு கடவுளை பார்த்து மூளை குழம்பி போச்சு..

இப்படி எல்லாரும் கிள்ம்பிட்டா ..

அவ்வ்வ்வ்வ்வ

அகம் பிரம்மாஸ்மி
சர்வம் பிரம்மாஸ்மி

நட்புடன் ஜமால் said...

அருமையான வி-மர்-சணம்.

Vidhya Chandrasekaran said...

நர்சிம் நான் நல்லவங்களுக்கு நல்லவ. கெட்டவங்களுக்கு கெட்டவ:))

அது சரி தீடிர்ன்னு ஏனிந்த கேள்வி??ரொம்ப குழப்பிட்டேனோ?

Vidhya Chandrasekaran said...

நன்றி அருண்.

நன்றி ஜமால்.

சந்தனமுல்லை said...

ஷார்ட் "ன்" ஸ்வீட் விமர்சனம்!

நாகை சிவா said...

பாலாவின் படங்களில் சில புரோப்சனல் டச் இருக்கும், மணி படத்தில் இருப்பது மாதிரி. அதற்காகவே இந்த படத்தை பார்க்கனும். நாங்க எல்லாம் எப்பவுமே கடவுள் தான். (விஜய், சிம்பு படம் எல்லாம் பாக்குறோம்ல)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் கடவுள் - (படத்தைப் பார்த்த) நான் கடவுள்:) //

படத்தைப் பார்த்த நீங்க கடவுள்னா, அப்ப இந்தப் பதிவை படிச்ச நாங்களும் கடவுள்னு சொன்னா நீங்க ஒத்துக்கமாட்டீங்களா என்ன.?

☀நான் ஆதவன்☀ said...

படம் இங்க ரிலீசாகல தெய்வமே.. அதனால பார்க்கல தெய்வமே

Vidhya Chandrasekaran said...

நன்றி முல்லை.

நன்றி சிவா.

அமித்து அம்மா ஏன் ஏன்??

வாய்ப்பு கிடைச்சா பாருங்க ஆதவன்:)

Paheerathan said...

கடைசி வரி.. பின்னிட்டிங்க..

Repeatee.......Repeatee

http://bakeera.blogspot.com/2009/02/blog-post_08.html

மணிகண்டன் said...

விமர்சனம் கச்சிதமா இருக்கு ! நீங்க குமுதம்/விகடனுக்கு விமர்சனம் எழுதலாம் ! ஆனா இளையராஜா மியூசிக் பத்தி ஒரு வார்த்தை கூட எழுதலியே !

Vidhya Chandrasekaran said...

நன்றி பகீரதன்.

மணிகண்டன்
\\விமர்சனம் கச்சிதமா இருக்கு ! நீங்க குமுதம்/விகடனுக்கு விமர்சனம் எழுதலாம் ! ஆனா இளையராஜா மியூசிக் பத்தி ஒரு வார்த்தை கூட எழுதலியே !\\

அவ்வளவு கேவலாமாவா எழுதுறேன்?? அப்புறம் ராஜா சார் மியுசிக். சூரியனுக்கு டார்ச் அடிச்சா நல்லாவா இருக்கும்? இன்னும் அந்த உடுக்கை சத்தம் கேக்குதுங்க:)

PNA Prasanna said...

உங்கள் தளம் சிறக்க வாழ்த்துக்கள்.

http://pnaptamil.blogspot.com
http://pnaprasanna.blogspot.com

மணிகண்டன் said...

**** அவ்வளவு கேவலாமாவா எழுதுறேன்?? ***

இல்லைங்க. ரொம்ப நல்லா எழுதறீங்க. நான் complimentaa சொல்லறதா தான் நினைச்சேன்.

anitha said...

என்னதான் திருப்தியளித்தாலும் அதிக செலவு மற்றும் எடுத்துகொண்ட கால அளவினால் நமது எதிபார்ப்பும் அதிகமாகின்றது அல்லவா?

தமிழ் அமுதன் said...

//நான் கடவுள் - (படத்தைப் பார்த்த) நான் கடவுள்:) //


நான் கடவுள் - (பின்னுட்டம் போட்ட நானும்) நான் கடவுள்!

Anonymous said...

nalla review... correct ah soneenga.. aana pichaikkarargal ah suthi kada nadakkum podhu avangaloda thuratha thana kaata mudiyum....
Ore maadhiriyana padama enaku theriyala... pithamaganai vida ithula logic idipaadugal illama irundhudu..