February 9, 2009

வெண்ணிலா கபடி குழு

சனிக்கிழமை காலை தாம்பரத்திலிருந்து மதுராந்தகம். மாலை குடும்பத்தோடு வேடந்தாங்கல்(சீக்கிரமே பதிவா வருது:)). அன்றிரவு இரவுக் காட்சி நான் கடவுள். மறுநாள் விடியற்காலை நண்பனின் கல்யாணம் வேலூரில். கல்யாணம் முடிந்து உடனே மதுராந்தகம் ரிடர்ன்(காலை கல்யாண் வீட்டில் சாப்பிடக்கூட இல்லை. முரளிக்கண்ணனுக்கு சந்தோஷமா இருக்கும்). 12.30 மணிக்கு வந்தவுடனே அம்மா சமையலை ரசிச்சு சாப்பிட முடியாமல் அவசர அவசரமாக அள்ளி முழுங்கி, ஜூனியரை தூங்க வைத்துவிட்டு வெண்ணிலா கபடி குழு மேட்னி.

2.30 மணி நேரப் படத்தில் மதுரையில் நடக்கும் கபடி போட்டிகள் (சுமார் 45 நிமிடங்கள்) மட்டுமே பார்க்கும்படி இருக்கிறது. முதல் பாதியில் வரும் அழுத்தமில்லாத காதல் காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிடுகின்றன. BGM நல்லாருந்தது. சரண்யாவையும், கிஷோரையும் தவிர அத்தனைப் பேரும் புதுமுகங்கள். கிஷோர் முறைப்பும், விறைப்பும் காட்டும் கபடிக் கோச்சாக வந்து பட்டையைக் கிளப்புகிறார். சிலம்பாட்டம் மாதிரியான சொம்பை படங்களை தவிர்த்தால் ரகுவரன்/நாசர் போல் வரலாம். அப்புக்குட்டியும், பரோட்டா சாப்பிடுபவர் கேரக்டரும் சூப்பர். அதிலும் மைதானத்தில் வந்து அப்புக்குட்டி "டேய் நமக்கும் 11 ஆடியன்ஸ் இருக்காங்கடே" எனும்போது ஹாஹாஹா. பிற்பாதி லகான், சக்தே இந்தியா வகையறா என்றாலும் சுவாரசியமாகவே இருக்கிறது. அவர்கள் கபடி ஆடும்போது நம் மீது கூட புழுதி படர்வது போல் perfect gaming. பிற்பாதியைப் போலவே முற்பாதியிலும் கொஞ்சம் விறுவிறுப்புக் கூட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்த வருஷம் நான் பார்த்த படங்களிலிருந்து கத்துகிட்ட பாடம்:

1. குமுதம்/ஆனந்த விகடன், பிளாக் விமர்சனங்களை நம்பி படத்துக்கு போகவே கூடாது.
2. எவ்வளவு பெரிய ஜாம்பவானின் படமாகட்டும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம போகணும்.
3. முக்கியமா இந்த சலசலப்புக்கெல்லாம் பயந்து படம் பார்க்காம இருக்கக்கூடாது. இல்லைன்னா ஒரே நாள் ரெண்டு பதிவு போட முடியுமா? அடாது மழை பெய்தாலும் விடாது படம் பார்க்கப்படும்:)

33 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமுதம்/ஆனந்த விகடன், பிளாக் விமர்சனங்களை நம்பி படத்துக்கு போகவே கூடாது//

சத்தியமான உண்மைங்க.. வர வர குமுதம் விமர்சனத்த படிக்கவே முடியல.. ஊத்தித் தள்ளுறாங்க..

//எவ்வளவு பெரிய ஜாம்பவானின் படமாகட்டும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம போகணும்//

பாலா படத்தோட எபெக்டா ?
//முக்கியமா இந்த சலசலப்புக்கெல்லாம் பயந்து படம் பார்க்காம இருக்கக்கூடாது. இல்லைன்னா ஒரே நாள் ரெண்டு பதிவு போட முடியுமா? அடாது மழை பெய்தாலும் விடாது படம் பார்க்கப்படும்:)//

ரொம்ப தைரியம்தான்.. வாழ்த்துக்கள்..

சந்தனமுல்லை said...

//3. முக்கியமா இந்த சலசலப்புக்கெல்லாம் பயந்து படம் பார்க்காம இருக்கக்கூடாது. இல்லைன்னா ஒரே நாள் ரெண்டு பதிவு போட முடியுமா? அடாது மழை பெய்தாலும் விடாது படம் பார்க்கப்படும்:)//

:-)))

நட்புடன் ஜமால் said...

கபடி கபடி

நட்புடன் ஜமால் said...

\\வெண்ணிலா கபடி குழு\\

இப்படி ஒரு படமா

நட்புடன் ஜமால் said...

"டேய் நமக்கும் 11 ஆடியன்ஸ் இருக்காங்கடே"

படிக்கவே அழகாயிருக்கு

நட்புடன் ஜமால் said...

\\எவ்வளவு பெரிய ஜாம்பவானின் படமாகட்டும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம போகணும்.\\

சரியாக(ச்) சொன்னீர்கள்.

ஜாம்பவான் என்றும் நினைக்காதீர்கள்

முரளிகண்ணன் said...

\\காலை கல்யாண் வீட்டில் சாப்பிடக்கூட இல்லை. முரளிக்கண்ணனுக்கு சந்தோஷமா இருக்கும்). \\

அப்பாடா, இப்பத்தான் மனசுக்கு சந்தோசமா இருக்கு.

\\சிலம்பாட்டம் மாதிரியான சொம்பை படங்களை தவிர்த்தால் ரகுவரன்/நாசர் போல் வரலாம்\


நிச்சய உண்மை.

படம் நல்லாத்தானே இருக்கு?. ஒருவேளை அலைச்சல் காரணமாக படத்தில் ஒன்ற முடியவில்லையா?

கோ. முகுந்தன் said...

Hi vidya

r u in tambaram. shall we meet in person

அமிர்தவர்ஷினி அம்மா said...

ப்பா

எவ்ளோ பெரிய சேஞ்

எனக்குத் தெரிஞ்சு வெ. கபடி குழுவோட முதல் விமர்சனம் ப்லாக்ல உங்களுது தான் இருக்கும்

நல்லா விமர்சிக்கிறீங்க நீங்க.

புதுகைத் தென்றல் said...

நான் ஒரு தமிழ்ப் படம் கூட பாக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கேன். நீங்க வரிசையா படம் பாத்திட்டு விமர்சனம் போடறீங்களா?


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மணிகண்டன் said...

************* நான் ஒரு தமிழ்ப் படம் கூட பாக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கேன். *********

சந்தோஷமா இருங்க புதுகை.

புதுகைத் தென்றல் said...

சந்தோஷமா இருங்க புதுகை.//

அதுவும் சரிதான்.

இங்க ஹைதையில் ஒரு டீவிடி கடையில் தமிழ் படங்கள் கிடைக்குமான்னு கேட்டேன். அதுக்கு அவரு படக்குன்னு ஏம்மா! இங்கேர்ந்து தான் பாதி படம் அங்கே போகுது அதை ஏன் பாக்கணும்? பேசமா தெலுங்கு டீவிடியே வாங்கிக்கன்ஙனு சொல்லிப்பிட்டாரு.

:((((((((((((

ஜீவன் said...

சனிக்கிழமை காலை தாம்பரத்திலிருந்து மதுராந்தகம். மாலை குடும்பத்தோடு வேடந்தாங்கல்(சீக்கிரமே பதிவா வருது:)). அன்றிரவு இரவுக் காட்சி நான் கடவுள். மறுநாள் விடியற்காலை நண்பனின் கல்யாணம் வேலூரில். கல்யாணம் முடிந்து உடனே மதுராந்தகம் ரிடர்ன்(காலை கல்யாண் வீட்டில் சாப்பிடக்கூட இல்லை. முரளிக்கண்ணனுக்கு சந்தோஷமா இருக்கும்). 12.30 மணிக்கு வந்தவுடனே அம்மா சமையலை ரசிச்சு சாப்பிட முடியாமல் அவசர அவசரமாக அள்ளி முழுங்கி, ஜூனியரை தூங்க வைத்துவிட்டு வெண்ணிலா கபடி குழு மேட்னி.////

இந்த அளவிற்கு படம் விறுவிறுப்பு இல்லையே!

நல்லா விமர்சனம் எழுதுறீங்க!

வித்யா said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

முரளி முதல் பாதி ரொம்ப ஜவ்வு மாதிரி இருந்தது. ரகுவுக்கும் என் தம்பிக்கும் கூட அப்படியே பட்டது.

Arun Kumar said...

ஒரே weekendல் இரண்டு விமர்சனமா ??
இந்த படமும் மொக்கை தானா?

சரி விடுங்க
அடுத்த வாரம் சுந்தர் சி நடித்த அக்மார்க் மொக்கை படம் வருதாம் இப்பவே முன் பதிவு செய்துவிடுங்கள்.

விடாது படம்பார்த்து தமிழ் பிளாக்கு நல்ல சேவை செய்யவும்

எம்.எம்.அப்துல்லா said...

//(சீக்கிரமே பதிவா வருது:)).

//


பி கேர் ஃபுல்....நா என்னையச் சொன்னேன்

:))

நாகை சிவா said...

//எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம போகணும்.//

இதாங்க ரொம்ப முக்கியம். ஒவ்வொரு ரசனையும் வேறுப்படும். உங்களுக்கு பிடிச்ச படம் யாருக்குமோ பிடிக்காம போகலாம். எல்லாருக்கும் பிடிச்ச படம் உங்களுக்கு சத்திய சோதனையாக அமையலாம்.

அதுவும் கூட தமிழ் சினிமா பார்ப்பதை பெருமையா நினைக்காம கடமையா நினைங்க. & Welcome on board :)

SK said...

ஒரே weekendல் இரண்டு விமர்சனமா ??

ithu ellam too much :)

வித்யா said...

\\ Arun Kumar said...
அடுத்த வாரம் சுந்தர் சி நடித்த அக்மார்க் மொக்கை படம் வருதாம் இப்பவே முன் பதிவு செய்துவிடுங்கள்.\\

அவ்வ்வ்வ். எனக்கு அந்தளவுக்கு மனதைரியம் இல்லீங்கோ
*************
அப்துல்லா அண்ணே ஏன் இந்த கொலைவெறி?
***********
நன்றி சிவா.
******
SK பொறாமை??

SK said...

no no .. all peelings yaa :( :(

மணிகண்டன் said...

******
இங்க ஹைதையில் ஒரு டீவிடி கடையில் தமிழ் படங்கள் கிடைக்குமான்னு கேட்டேன். அதுக்கு அவரு படக்குன்னு ஏம்மா! இங்கேர்ந்து தான் பாதி படம் அங்கே போகுது அதை ஏன் பாக்கணும்? பேசமா தெலுங்கு டீவிடியே வாங்கிக்கன்ஙனு சொல்லிப்பிட்டாரு.
*******

நான் சொன்னத வாபஸ் வாங்கிக்கறேன். நீங்க இந்த மாதிரி ஒரு முடிவுக்கு வருவீங்கன்னு எனக்கு தெரியாம போச்சு !

RAMYA said...

//3. முக்கியமா இந்த சலசலப்புக்கெல்லாம் பயந்து படம் பார்க்காம இருக்கக்கூடாது. இல்லைன்னா ஒரே நாள் ரெண்டு பதிவு போட முடியுமா? அடாது மழை பெய்தாலும் விடாது படம் பார்க்கப்படும்:)//

ரெண்டா சாமி இது அடுக்குமா ??
ஒரு பதிவுக்கே ஒன்னும் முடியலை
என்னாதிது சின்னப் பிள்ளைத் தனமாஇருக்கு???

RAMYA said...

அம்மா சமையல் ம்ம்ம்ம்
நல்ல அம்மா.

அம்மா சமைக்கிற தைரியத்திலே
நம்ப ரெண்டு பதிவு, சினிமா
போட்டு தாக்கறீங்க வித்யா

RAMYA said...

கொஞ்ச நாட்களாக உங்களை பதிவிற்கு வரலை மன்னிச்சுக்கோங்க, இனி அடிக்கடி வரேன்!!!

தாரணி பிரியா said...

இதே மாதிரி அடிக்கடி மொக்கை படம் பாத்து விமர்சனம் எழுத வாழ்த்துகள். :)

தாரணி பிரியா said...

ஹை நாந்தான் 25

Cable Sankar said...

வெண்ணிலா க.குழு முதல் இணைய பதிவு விமர்சனம்..http://cablesankar.blogspot.com/2009/01/blog-post_29.html அமிர்த வர்ஷினி அம்மா.. வித்யா உங்க விமர்சனமும் நன்றாக இருக்கிறது.

Cable Sankar said...

////குமுதம்/ஆனந்த விகடன், பிளாக் விமர்சனங்களை நம்பி படத்துக்கு போகவே கூடாது////

குமுதத்தை கூட ஆட்டத்தில எப்பவாவது சேத்துக்கலாம். ஆனந்த விகடனை இப்பலெல்லம் ஒரே அழுகுணி ஆட்டம்தான் ஆடுது.. கண்ட கண்ட படத்துக்கு எல்லாம் 39,40ன்னு மார்க்கு கொடுத்து மார்கோட மானத்தையே வாங்குது..

கோ. முகுந்தன் said...

http://kathalukai.blogspot.com/

Truth said...

அப்போ பாக்க வேணாங்கறீங்களா?

மணிகண்டன் said...

**** அப்போ பாக்க வேணாங்கறீங்களா*****

விமர்சனத்த நம்பாதீங்கன்னு சொல்றாங்க. அவ்வளவு தான்.

வித்யா said...

வாங்க ரம்யா. இனிமே அடிக்கடி கடை பக்கம் வாங்க:)
*******

நன்றி தாரணி பிரியா.
*******

நன்றி கேபிள் சங்கர். பெரிய ஆள் நீங்க. பாராட்டுனதுல ரெம்ப மகிழ்ச்சி:)
*********

வித்யா said...

Truth
பார்க்க வேணாம்னு சொல்லல. எல்லாம் உங்க சொந்த ரிஸ்க்கா இருக்கட்டும். மணிகண்டன் சொன்னது போல விமர்சனங்களை நம்பாதீங்கன்னு தான் சொல்றேன். ஒருத்தருக்குப் பிடித்தது இன்னொருவருக்கு பிடிக்காமல் போகும். After all opinion differs:)