February 25, 2009

சில்லறை பிரச்சனை

என்னையும் பதிவரா மதிச்சி பட்டாம்பூச்சி விருது தந்த அண்ணன் நாகை சிவா அவர்களுக்கு நன்றி.

இரண்டு மாதங்களுக்கு முன் பாண்டிச்சேரியில் நடந்த சம்பவம். ஏற்கனவே சூப்பர் மார்கெட்டில் ஏற்பட்ட அனுபவம் காரணமாக இந்த செயின் ரீடெய்ல் கடைகளை கூடுமானவரை தவிர்க்க முயற்சிக்கிறேன். ஆனாலும் மற்ற கடைகளை (மளிகை கடைகள்) ஒப்பிடும்போது இந்த இடங்களில் பொருட்களின் சுத்தம் மறுக்கமுடியாத ஒரு விஷயமாகிவிடுகிறது.

பாண்டிச்சேரியில் நிறைய cost price shop என்றழைக்கப்படும் நியாய விலை கடைகள் இருக்கு. இதில் முக்கால்வாசி கடைகளில் MRP-விட 2 அல்லது 3 ரூபாய் குறைவாக பொருட்களை கொடுக்கிறார்கள் (MRP என்பது பெயருக்கேற்றார்போல் அதிகபட்ச விலை தான். இந்த விலையிலிருந்து குறைத்து விற்றாலும் லாபம் கிடைக்கும்). ஒரு சில கடைகளில் பொருட்கள் ரொம்ப சுத்தமாக இருக்கும். அப்படிபட்ட ஒரு கடையில் நடந்தது தான் இது.

இந்த தடவை மாமியார் வீட்டுக்கு சில மளிகை சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது. நாமளும் கொஞ்சம் சீன் போடலாமேன்னு "நான் வாங்கிட்டு வரேன்மா"ன்னு கிளம்பினேன். அவங்களும் ஒரு குறிப்பிட்ட கடைய சொல்லி அங்கயே வாங்க சொன்னாங்க. "மாமியார் சொல்மிக்க மந்திரமில்லை"ங்கற என்மொழிக்கேற்ப அங்கயே போய் சேர்ந்தேன். இரண்டு மாடிக் கட்டடத்தில் home needs அனைத்தையும் விற்கிறார்கள். எவ்வளவோ வெரைட்டி. Peak hour மாநகரப் பேருந்து மாதிரி அவ்வளவு கூட்டம். நான் வாங்க வேண்டிய சாமான்களை மட்டும் வாங்கிட்டு திருப்பதி தரிசன வரிசை மாதிரி இருந்த க்யூவில் போய் நின்னேன். எனக்கு முன்னாடி ஒரு வயசானவரும், பின்னால் ஒரு 30-35 வயதிருக்கும் முக்கா நிஜார் போட்ட ஆள் ஒருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். முன்னால் இருந்த தாத்தாவின் முறை. பில் 93 ரூபாய். பில்லோடு 5ரூபாய் மற்றும் 2 ரூபாய் munch chocolate கொடுத்தாங்க. கேட்டதுக்கு சில்லறையில்லைன்னு சொன்னாங்க. பெரியவர் ரொம்ப உறுதியா தனக்கு சில்லறைதான் வேண்டுமெனக் கூறிவிட்டார். இதற்கிடையில் க்யூ நகராததால் ஆளாளுக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள். "ஏன் சார் அல்பத்தனமா சில்லறைக்காக சண்டை போட்றீங்க?" என்றார் ஒருவர். அதுக்கு என் பின்னாலிருந்தவர் "ஏன் கடைக்காரங்க பண்றது உங்களுக்கு அல்பத்தனமா தெரியலையா? 10 ரூபாய் பில்லூக்கு 500 ரூபாய் கொடுக்கும்போது சில்லறையில்லைன்னு சொன்னா ஒத்துக்கலாம். 7 ரூபாய் கூடவா தரமுடியாது? ஏன் வங்கில சில்லறை மாத்தி வெச்சுக்கலாமே?" என்றார். கடைசியில் அந்தப்பெரியவர் தான் வாங்கிய பொருட்களை திருப்பித்தந்துவிட்டார். எனக்கு பில் 151 ரூபாய் வந்தது. 150 ரூபாயோடு ஒரு eclairs சாக்லேட் கொடுத்தேன். முதலில் ஜெர்க்கான அந்த sales girl பின்னர் சிரித்துக்கொண்டே "இதெல்லாம் வாங்க மாட்டோம் மேடம்"

"ஏன் நீங்க கொடுக்கும்போது நாங்க வாங்கிகறோமில்ல?"

"இல்ல மேடம். மேனேஜர் சொல்றத தான் நான் செய்ய முடியும்"

"சரி உங்க மேனேஜர கூப்பிடுங்க"

"அவர் இங்க இல்ல மேடம்"

திரும்பவும் க்யூவில் இருந்த எல்லாரும் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் நேரம் வீணாகுதாம். அப்ப பேசறவனெல்லாம் வேலை வெட்டியில்லாதவனா? வேறுவழியில்லாம 1 ரூபாய கொடுத்துட்டு வந்தேன் (நான் கூட சாமான திருப்பிகொடுத்திருப்பேன். மாமியார் கேட்டா என்ன சொல்றது?). அட அறிவுகெட்ட ஜனங்களே. ஒருத்தன் நியாயத்துக்கு குரல் கொடுக்கும்போது (அது சில்லறை விஷயமாகட்டும் இல்லை கோடி மேட்டராகட்டும்) நீங்க அவன ஆதரிக்கலன்னாலும் பரவால்ல. கருத்து சொல்றேன்னு உங்க திருவாய தொறக்காம இருங்க போதும்.

இரண்டு நாள் கழித்து பஸ்சில் கண்டக்டர் ஒரு ரூபாய் change இல்ல. அப்புறமா தரேன் என்றார். "பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு. அத புடுங்கித் தின்னுச்சாம் அனுமாரு"

28 comments:

கார்க்கி said...

அட இங்கேயும் எம்.அர்.பி. மேட்டர்..

சாக்லேட் மேடர் பத்தி பரிசல் கவிதை எழுதியிருக்காரு இன்னைக்கு..

// நீங்க அவன ஆதரிக்கலன்னாலும் பரவால்ல. கருத்து சொல்றேன்னு உங்க திருவாய தொறக்காம இருங்க போதும்.//

அது சரி.. உங்களுக்கு மாமியார் பயம். நாங்க லேட்டா போனா தங்கமணி எவ பின்னாடி போனீங்க இவ்ளோ நேரம்னு கேட்டா என்ன சொல்ரது? :))

முரளிகண்ணன் said...

\\ அட அறிவுகெட்ட ஜனங்களே. ஒருத்தன் நியாயத்துக்கு குரல் கொடுக்கும்போது (அது சில்லறை விஷயமாகட்டும் இல்லை கோடி மேட்டராகட்டும்) நீங்க அவன ஆதரிக்கலன்னாலும் பரவால்ல. கருத்து சொல்றேன்னு உங்க திருவாய தொறக்காம இருங்க போதும்.
\\

உண்மையான கருத்து.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை said...

//எனக்கு பில் 151 ரூபாய் வந்தது. 150 ரூபாயோடு ஒரு eclairs சாக்லேட் கொடுத்தேன். //

:-)

narsim said...

பட்டாம்பூச்சிக்கு (விருதுக்கு..!!) வாழ்த்துக்கள்..

// இந்த தடவை மாமியார் வீட்டுக்கு சில மளிகை சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது

//
ம்ம்..2கிலோ மொளகாப் பொடியும் 2 கிலோ மொளகாப் பொடியும், 2 கிலோ மொளகாப் பொடியுமா??

வித்யா said...

உன் பதிவ படிக்கும்போதே நினைச்சேன் கார்க்கி:)

நன்றி முரளிக்கண்ணன்.

நன்றி ஜமால்.

வித்யா said...

நன்றி முல்லை.

அய்யோ நர்சிம் நான் மாமியார் மெச்சும் மருமகள்:)

பாபு said...

//150 ரூபாயோடு ஒரு eclairs சாக்லேட் கொடுத்தேன். //
இந்த வேலைய நான்கூட செஞ்சிருக்கேன்.

//அட அறிவுகெட்ட ஜனங்களே. ஒருத்தன் நியாயத்துக்கு குரல் கொடுக்கும்போது (அது சில்லறை விஷயமாகட்டும் இல்லை கோடி மேட்டராகட்டும்) நீங்க அவன ஆதரிக்கலன்னாலும் பரவால்ல. கருத்து சொல்றேன்னு உங்க திருவாய தொறக்காம இருங்க போதும்.//

அப்படி போடுங்க

எம்.எம்.அப்துல்லா said...

//நாங்க லேட்டா போனா தங்கமணி எவ பின்னாடி போனீங்க இவ்ளோ நேரம்னு கேட்டா என்ன சொல்ரது? :))

//

டேய் உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்????

எம்.எம்.அப்துல்லா said...

//"பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு. அத புடுங்கித் தின்னுச்சாம் அனுமாரு"
//

ஹா...ஹா...ஹா...

மணிகண்டன் said...

அவங்க கடைல சுட்ட eclairs சாக்லேட்ட அவங்க கிட்டயே கொடுத்தா எப்படி ஒத்துபாங்க ?

அமிர்தவர்ஷினி அம்மா said...

மாமியார் சொல்மிக்க மந்திரமில்லை"ங்கற என்மொழிக்கேற்ப அங்கயே போய் சேர்ந்தேன்.
வாங்க நல்லவங்களே


எனக்கு பில் 151 ரூபாய் வந்தது. 150 ரூபாயோடு ஒரு eclairs சாக்லேட் கொடுத்தேன்.//
"ஏன் நீங்க கொடுக்கும்போது நாங்க வாங்கிகறோமில்ல?"//
"சரி உங்க மேனேஜர கூப்பிடுங்க"//

வாங்க ஜான்சி ராணி லட்சுமி பாய்
வாங்க வாங்க

இரண்டு நாள் கழித்து பஸ்சில் கண்டக்டர் ஒரு ரூபாய் change இல்ல. அப்புறமா தரேன் என்றார். //
எப்ப தருவாராம்,கேட்கலையா.

இந்த விஷயத்துல நான் ஒரு நச்சரிப்பு கேஸ்,

கண்டக்டர் நீங்க 50 பைசா தரணும்.

சில்லறையா தாம்மா,

அதான் 3 ஒரு ரூபா கொடுத்தேனா,

அட அம்பது பைசா கொடுத்துட்டு ஒரு ரூபா வாங்கிக்கம்மா,

இப்பதானே ஒருத்தவங்க 50 பைசா கொடுத்தாங்க, அத கொடுங்களேன் சார்.

வாங்கிட்டுதானே மறுவேலை (கூடுமானவரை பஸ்ஸில் ஏறும்போது சில்லரை வைத்துக்கொண்டுதான் பயணிப்பேன்)

Arun Kumar said...

//எனக்கு பில் 151 ரூபாய் வந்தது. 150 ரூபாயோடு ஒரு eclairs சாக்லேட் கொடுத்தேன். //
அப்படி போடு...இதை மாதிரி ஊருக்கு பத்து பேர் கிளம்பினா எல்லா மோசடியும் குறையும்.

சில கடைகளில் Unilever போல பெரிய ஆளுங்க சில பொருட்களுக்கு விலை குறைப்பு செய்து விட்டு மறைமுகமாக வேறு பொருட்களுக்கு minimum sales target வைக்கிறார்கள். அதான் இப்படி சாக்கலேட், பல்பம் தீப்பெட்டி போன்ற கட்டாய திணிப்புகள்..

credit cardல் பொருள் வாங்கினால் service charge என்று 3% extra meter ஓட்டுகிற உலகம்.

வித்யா said...

வருகைக்கு நன்றி பாபு.

வாங்க அண்ணாத்தே:)

மணிகண்டன் - கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஹி ஹி அமித்து அம்மா அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்.

வாங்க அருண். இவங்கள திருத்தவே முடியாது??!!

Truth said...

நான் ஒரு முறை ஆஃபீசுக்கு போகும் போது, ரோட்டுல ஒரு போலிஸ் காரன் தம் அடிச்சிக்கிட்டு இருந்தான். அதுவும் போலிஸ் ஸ்டேஷனுக்கு முன்னாடி நின்னுகிட்டு. அப்போ பப்ளிக்ல தம் அடிக்கக்கூடாதுன்னு சட்டம் இருந்திச்சு (நான் சொல்றது இதுக்கு முன்னாடியும் ஒரு முறை சட்டம் கொண்டாந்தாங்கல அப்போ).
நான் "ஏன் சார் பப்ளிக்ல தம் அடிக்றீங்க. நீங்களே இப்படிப் பண்ணினா, அப்றொம், மத்தவங்க எல்லாம் எப்படி திருந்துவாங்க" அப்படின்னு கேட்டுட்டு ரோட க்ராஸ் பண்ணிட்டு, என்னோட ஆஃபீஸ் பஸ்சுக்காக வெயிட் பண்ணினேன். அவரு வந்து எவ்ளோ முடியுமோ அவ்ளோ கெட்ட வார்த்தைகளாக திட்டிட்டுப் போனாரு. இப்படி பட்ட வார்த்தையெல்லாம் நான் காலேஜ் படிக்கும் போதே நான் யூஸ் பண்ணலெ. எப்படா பஸ் வரும்ன்னு காத்திருந்து நான் பஸ்சுல ஏறிட்டேன்.
போலிஸ் பக்கத்துல இருந்த ஒரு தடி மாடு கூட போலிஸுக்குத் தான் சப்போர்டு. என்ன பண்றது? இனி திருத்தக் கூடாது, திருந்தனும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.

Cable Sankar said...

நம்ம ஆளுங்களுக்கு தானும் போராட மாட்டானுங்க.. போராடறவனுக்கு ஆதரவும் செய்ய மாட்டானுங்க.. ஆனா வெட்டி நியாயம் மட்டும் பேசுவானுங்க.. நான் யார் என்ன சொன்னாலும் கவலைபடமாட்டேன். போராடி என் உரிமையை பெற்றே தீருவேன்.

வித்யா said...

வருகைக்கு நன்றி Truth.

வருகைக்கு நன்றி சங்கர்ஜி:)

Namakkal Shibi said...

:)

அந்த கடையிலேயே சுட்டு அவங்களுக்கே சாக்லேட்டா?

என்ன கொடுமை சார் இது?

thevanmayam said...

திரும்பவும் க்யூவில் இருந்த எல்லாரும் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் நேரம் வீணாகுதாம். அப்ப பேசறவனெல்லாம் வேலை வெட்டியில்லாதவனா? வேறுவழியில்லாம 1 ரூபாய கொடுத்துட்டு வந்தேன் (நான் கூட சாமான திருப்பிகொடுத்திருப்பேன். மாமியார் கேட்டா என்ன சொல்றது?). அட அறிவுகெட்ட ஜனங்களே. ஒருத்தன் நியாயத்துக்கு குரல் கொடுக்கும்போது (அது சில்லறை விஷயமாகட்டும் இல்லை கோடி மேட்டராகட்டும்) நீங்க அவன ஆதரிக்கலன்னாலும் பரவால்ல. கருத்து சொல்றேன்னு உங்க திருவாய தொறக்காம இருங்க போதும்.//
மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள்!!

ஜீவன் said...

///இந்த தடவை மாமியார் வீட்டுக்கு சில மளிகை சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது. நாமளும் கொஞ்சம் சீன் போடலாமேன்னு///

குட்!!!

///"நான் வாங்கிட்டு வரேன்மா"//

கொஞ்சம் ஓவர் சீன் போலத்தான் இருக்கு!!!


//"மாமியார் சொல்மிக்க மந்திரமில்லை//
...தாங்க முடியல!!!


பதிவ கவனிச்சு படிக்கும் போது
இந்த மாதிரி disterp பண்ணுற
வார்த்தைகள் குறுக்கால வந்தா
பதிவுல கவனத்த செலுத்த முடியல!
;;;))))

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Anonymous said...

Hi

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

விஜய் said...

\\நீங்க அவன ஆதரிக்கலன்னாலும் பரவால்ல. கருத்து சொல்றேன்னு உங்க திருவாய தொறக்காம இருங்க போதும்.\\
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாகச் சொன்னீங்க :-)

நான் ஆதவன் said...

புரட்சி தலைவி வித்யா வாழ்க..வாழ்க

அதிகமா ஜே.கே ரித்தீஷ் படத்த பார்த்து கெட்டு போய்டீங்க...

//திரும்பவும் க்யூவில் இருந்த எல்லாரும் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் நேரம் வீணாகுதாம். அப்ப பேசறவனெல்லாம் வேலை வெட்டியில்லாதவனா?//

பேசறவனபத்தி எல்லாம் தெரியாது ஆனா நீங்க அந்த சமயத்தில வேலை வெட்டி இல்லாம தானே இருந்தீங்க :)

jokes apart..அது தான் உண்மை. நம்மளோட அவசரமான உலகத்தை (அதாவது வேலை வெட்டி உள்ளவன்) அவுங்களுக்கு சாதகமா பயன்படுத்திகொள்கிறார்கள் வித்யா :(

வித்யா said...

சிபி அண்ணே சுடறதா இருந்த பெரிய அயிட்டமா சுடமாட்டேனா? போயும் போயும் 1 ரூவா சாக்லேட்டா சுடுவேன்:)

நன்றி தேவன்மயம்.

வித்யா said...

ஹி ஹி ஜீவன் இதெல்லாம் கண்டுக்காதீங்க:)

நன்றி விஜய்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதவன்.

Deepa J said...

//அட அறிவுகெட்ட ஜனங்களே. ஒருத்தன் நியாயத்துக்கு குரல் கொடுக்கும்போது (அது சில்லறை விஷயமாகட்டும் இல்லை கோடி மேட்டராகட்டும்) நீங்க அவன ஆதரிக்கலன்னாலும் பரவால்ல. கருத்து சொல்றேன்னு உங்க திருவாய தொறக்காம இருங்க போதும்.// :)

நல்ல பதிவு. நீங்கள் 1 ரூபாய்க்கு சாக்லெட் கொடுத்தது சரியான பதிலடி தான். ஆனால் என்ன செய்வது, நமடு அவசர வாழ்க்கையை நம்பி நம் தலையில் மிளகாய் அரைப்பது தானே அவர்களது பிசினஸ்! அந்தத் தாத்தா நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

நாகை சிவா said...

அண்ணன் நாகை சிவா வா... ஏன் இந்த கொலை வெறி...

அண்ணனை கட் பண்ணிட்டு நாகை சிவா னு சொன்னாலே போதும். நான் ரொம்ப சின்ன பையங்க...