இப்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படும் டாபிக் பிப்ரவரி 14ஆம் தேதி மங்களூரில் என்ன நடக்கும் என்பதே. முதலில் ராம் சேனா அமைப்பினர் செய்தது சரியா? கண்டிப்பாகத் தவறுதான். குடிப்பது, ஆடை உடுத்துவதையெல்லாம் அடிப்பதன் மூலமோ, மிரட்டலின் மூலமோ சரிசெய்ய முடியாது. இதெல்லாம் அவரவர் விறுப்பு வெறுப்பு. ஒரு வகையில் தனி மனித ஒழுக்கமென்றுக்கூட சொல்லலாம். ஒருவர் சுதந்திரம் என எண்ணும் விஷயம் அடுத்தவருக்கு ஆபாசமாக பட்டால் யாரும் பொறுப்பேற்க முடியாது. அதே சமயம் இந்த விஷயத்தை சட்டபூர்வமாக அனுகாமல், பஃப் நிரப்பும் போராட்டம், ஜட்டி அனுப்பும் போராட்டம் நடத்துவதெல்லாம் எந்த விதத்தில் நாகரிகமாகும்?
ஏதோ ஒரு வாரப் பத்திரிக்கையில் எழுத்தாளர் ஒருத்தர் சொல்றார் ஐ.டி துறையினர் மன அழுத்தத்தை போக்கவே பஃப்புக்கு செல்கின்றனர் என்கிறார். சுத்தப் பேத்தல். குடித்தால் மன அழுத்தம் சரியாகிவிடுமோ. மனதை ரிலாக்ஸ் பண்ண எவ்ளோ வழிகள் இருக்கின்றன. கடற்கரையோரம் காலாற நடந்து செல்லலாம். பூங்காக்களுக்கு செல்லலாம். நண்பர்கள் ஒன்று கூடி பேசலாம். தெருவிலிருக்கு வாண்டுகளோடு சேர்ந்து விளையாடலாம். எவ்வளவோ வழிகள் இருக்கே. ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் குடி பழக்கம் அறவே தவிர்க்கப் படவேண்டிய ஒன்று. நீங்கள் குடிப்பதால் உங்களை கொஞ்சம் கொஞ்சமாகவும், உங்களை நம்பியிருப்பவர்களின் கனவுகளை ஒரேடியாகவும் கொல்கிறீர்கள்.
உடை விஷயத்தைப் பொறுத்தவரை தனக்கு செளகரியமான உடையை அணிய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கு ஒரு எல்லையும் உண்டு. உடம்பு தெரிய உடை உடுத்திய காலம் மாறி இப்போ உள்ளாடை தெரிய உடை உடுத்துவது ஃபேஷனாகிவிட்டது. ஜீன்ஸ் அணிவது தவறில்லை. ஆனால் லோ வெய்ஸ்ட் அவசியமா? காமாசோமவென்று உடை அணியவேண்டியது. அப்புறம் அவன் இங்க தொட்டான் அங்க தொட்டான்னு ஈவ் டீஸிங் கேஸ் போட வேண்டியது. சினிமாவைத் தாண்டி இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளிலும் மறைமுகமாய் வன்முறையையும், காமத்தையும் தூண்டும் நிகழ்ச்சிகள் வருவதால் இம்மாதிரியான தாக்கங்களும், ஃபேஷன் போதைகளும் கட்டுகடங்காமல் பெருகிவருகின்றன.
கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று.
February 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
\\கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று. \\
அருமையான சிந்தனை
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் ...
//ஒருவர் சுதந்திரம் என எண்ணும் விஷயம் அடுத்தவருக்கு ஆபாசமாக பட்டால் யாரும் பொறுப்பேற்க முடியாது.//
பெரும்பாலான நேரங்களில் சுதந்திரம் என்பது ஒழுக்கத்தை மீறுவதாகவே உள்ளது. உடல் உறுப்புகளை முழுதும் மூடியவண்ணம் உடை அணியுங்கள் என்று சொல்வது ஒழுக்கம். ஆனால், நீ சொல்லும் அந்த குறிப்பிட்ட ஒழுக்கத்தை மீறுவேன், அதுதான் என் சுதந்திரம் என்று இன்றைய இளைய சமுதாயம் திரிவது வேதனைதான்.
உங்களின் கடைசி வரிகளில் உண்மையை ப்டம் பிடித்து காட்டியுள்ளீர்கள் சகோதரி.
வாழ்த்துக்கள்.
காதலர் தினத்தில நாலு கடைகளுக்கு வியாபாரம் நல்லா நடக்கும் அதை கெடுக்கிறாங்க .
நன்றி முரளிக்கண்ணன்.
அதேதான் ஜமால் அண்ணாத்தே:)
நன்றி தராசு.
வாங்க சுரேஷ்குமார். வியாபாரம் எதுவு டல்லானாமாதிரி தெரியலேயே.
//காலம் மாறி இப்போ உள்ளாடை தெரிய உடை உடுத்துவது ஃபேஷனாகிவிட்டது. ஜீன்ஸ் அணிவது தவறில்லை. ஆனால் லோ வெய்ஸ்ட் அவசியமா?//
ஆம்.. மிக டேஞ்சரான மேட்டர் இது..
வித்யா.. மிக சீரியாஸான விசயம்.. நல்லா எழுதியிருக்கீங்க..
உடை விஷயத்தைப் பொறுத்தவரை தனக்கு செளகரியமான உடையை அணிய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கு ஒரு எல்லையும் உண்டு. உடம்பு தெரிய உடை உடுத்திய காலம் மாறி இப்போ உள்ளாடை தெரிய உடை உடுத்துவது ஃபேஷனாகிவிட்டது. ஜீன்ஸ் அணிவது தவறில்லை. ஆனால் லோ வெய்ஸ்ட் அவசியமா? காமாசோமவென்று உடை அணியவேண்டியது. அப்புறம் அவன் இங்க தொட்டான் அங்க தொட்டான்னு ஈவ் டீஸிங் கேஸ் போட வேண்டியது. சினிமாவைத் தாண்டி இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளிலும் மறைமுகமாய் வன்முறையையும், காமத்தையும் தூண்டும் நிகழ்ச்சிகள் வருவதால் இம்மாதிரியான தாக்கங்களும், ஃபேஷன் போதைகளும் கட்டுகடங்காமல் பெருகிவருகின்றன.//
அருமைய சொல்லியிருக்கீங்க.
ஆனா நீங்க சொல்லியிருக்கற உடை விஷயத்தில் ஆண்களும்,பெண்களும் சரிநிகர் சமானமாய் உள்ளாடைத் தெரிய உடை உடுத்துவதுதான் நாகரீகம்னு
ஆரம்பிச்சு சூப்பரா நடத்திகிட்டும் இருக்காங்க.
வித்யா.. மிக சீரியாஸான விசயம்.. நல்லா எழுதியிருக்கீங்க..//
வழி மொழிகிறேன்.
//மனதை ரிலாக்ஸ் பண்ண எவ்ளோ வழிகள் இருக்கின்றன. கடற்கரையோரம் காலாற நடந்து செல்லலாம். பூங்காக்களுக்கு செல்லலாம். நண்பர்கள் ஒன்று கூடி பேசலாம். தெருவிலிருக்கு வாண்டுகளோடு சேர்ந்து விளையாடலாம். எவ்வளவோ வழிகள் இருக்கே. ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் குடி பழக்கம் அறவே தவிர்க்கப் படவேண்டிய ஒன்று. நீங்கள் குடிப்பதால் உங்களை கொஞ்சம் கொஞ்சமாகவும், உங்களை நம்பியிருப்பவர்களின் கனவுகளை ஒரேடியாகவும் கொல்கிறீர்கள்.//
நல்ல சிந்தனை. ஆனால் சரக்கு விற்பதால் தானே இத்தனை கச்சடாவும். அதை ஏன் தடை செய்யக்கூடாது?
//கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று. //
சிஸ், மிகவும் அருமை. நெருப்பில் குளிர் காய்வது போன்றது இந்த விஷயம். மிகவும் அருகில் போனால் சுட்டுவிடும். எட்ட நின்றால் கதகதப்பு கிட்டாது.
//ஆண்களும்,பெண்களும் சரிநிகர் சமானமாய்//
ஆமாம் அக்கா. ஈங்க கூட இதப் பற்றி முன்னாடி ஒரு பதிவு போட்டு இருக்கீங்க :))
// ஈங்க //
மன்னிக்கவும் அது நீங்க :)
நன்றி நர்சிம்.
நன்றி தென்றலக்கா. ஆமா இப்போ ஆண்களும் அப்படித்தான் உடுத்துகிறார்கள்:(
நன்றி தேனியார். மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வந்தால் ஓட்டு வங்கி அடிவாங்காதா? அரசியல்வாதிகளுக்கு ஓட்டு தானே முக்கியம். மக்கள் மீது அக்கறைபட அவர்களுக்கேது நேரம்?
நீங்க சொல்றது சரிதான் அப்துல்லா அண்ணா. நான் கூட ஜீன்சும் குர்தாவும் அணிவேன். அடுத்தவங்க கண்ண உறுத்தாத மாதிரி:)
**********
பஃப் நிரப்பும் போராட்டம், ஜட்டி அனுப்பும் போராட்டம் நடத்துவதெல்லாம் எந்த விதத்தில் நாகரிகமாகும்?
***********
ஆகாதா ?
***********
ஐ.டி துறையினர் மன அழுத்தத்தை போக்கவே பஃப்புக்கு செல்கின்றனர் என்கிறார்.
************
18 மணிநேரம் வேல பாக்கராங்கன்னு வேற சொல்லி இருக்காரு. பாவம், நம்ப மக்கள் தான் அவர ஏமாத்தி இருக்காங்க. அவர திட்டாதீங்க.
************
நீங்கள் குடிப்பதால் உங்களை கொஞ்சம் கொஞ்சமாகவும், உங்களை நம்பியிருப்பவர்களின் கனவுகளை ஒரேடியாகவும் கொல்கிறீர்கள்
************
நீங்கள் குடிகாரர் ஆவதால், அளவுக்கு அதிகமாக குடிப்பதால் அப்படின்னு சொல்லி இருக்கலாம்.
*************
உடை விஷயத்தைப் பொறுத்தவரை தனக்கு செளகரியமான உடையை அணிய அனைவருக்கும் உரிமை உண்டு
***************
கரெக்ட்.
***********
ஆனால் அதற்கு ஒரு எல்லையும் உண்டு.
************
ஹ்ம்ம்ம்ம்...உண்மை தான் ! ஆனா இங்க தான் generation gap பிரச்சனை ஆரம்பிக்கும்.
************
உள்ளாடை தெரிய உடை உடுத்துவது ஃபேஷனாகிவிட்டது.
*************
hygeine சம்பந்தப்பட்ட விஷயம் இது.
************
ஆனால் லோ வெய்ஸ்ட் அவசியமா ?
************
பயங்கர comfortable'aa இருக்கும்ங்க.
*************
காமாசோமவென்று உடை அணியவேண்டியது. அப்புறம் அவன் இங்க தொட்டான் அங்க தொட்டான்னு ஈவ் டீஸிங் கேஸ் போட வேண்டியது.
**************
காலைல தூங்கி எழுந்துட்டு அப்படியே வருவாங்களே, அத சொல்றீங்களா. (காமாசோமவென்று).
*************
தொலைக்காட்சிகளிலும் மறைமுகமாய் வன்முறையையும், காமத்தையும் தூண்டும்
*************
மறைமுகமா இல்லீங்க.
*************
கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று.
**************
நச் !
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
உங்களின் அத்தனை கருத்துக்களுடனும் ஒத்துப்போகிறேன்.
கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று //
இதை விட தெளிவாக வேறு யாரும் சொல்லிவிட முடியாது என்று நினைக்கிறேன்.
ஹாட்ஸ் ஆஃப்
//கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று.
ரொம்பச் சரி!
Nice comment.
ஆழமான அலசலுக்கு நன்றி மணிகண்டன்.
என்ன SK?
நன்றி அமித்து அம்மா.
நன்றி Truth.
நன்றி தமிழ்செல்வன்.
ஒண்ணும் இல்லீங்க ஆபிசெர் .. ஏதோ யோசனை
//கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது.//
suupppeerrrrrrrrrrrrrrrrrrrrr.............
என்னமோ போங்க. நீங்க உருப்படற மாதிரி எனக்குத் தெரியல
ரொம்ப யோசிக்காத SK. முடி கொட்டிட போகுது:)
நன்றி கேபிள்சங்கர்:)
கார்க்கி அது நான் சொல்ல வேண்டிய டயலாக்.
யாராக இருந்தாலும் தனி நபர் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு.
ஒரு மாசத்துக்கு முன்னாடி யாரு இந்த ராமர் சேனா தலைவர்ன்னு யாருக்கும் தெரியாது. ஒரு வாரமாக இவரையும் இவர் தொண்(கு)ண்டர் குழு செய்திதா எல்லா மீடியாவிலும். இதை தான் இந்த சேனாக்கள் எதிர்பார்க்கின்றன.
இலவச விளம்பரம் கிடைச்சாச்சு. இனி சீக்கிரமே தேர்தலில் நின்று மக்கள் தலைவராக ஆகி விடலாம்.
இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் வளர்த்து விடுவதே மீடியாக்களின் தலையாய கடமை அருண்:x
நல்ல அலசல்...
இரு தரப்பின் அணுகுமுறை மிக கேவலமான வழியில் உள்ளது.
//சுத்தப் பேத்தல். குடித்தால் மன அழுத்தம் சரியாகிவிடுமோ. //
பேத்தல் இல்லங்க. உண்மை தான்.
மன அழுத்தத்தை தவிர்க்க குடிப்பது ஒரு வகையான வழிமுறை தான். இது உலக அளவில் ஏற்றுக் கொள்ள பட்ட ஒரு தீர்வு தான். இணையத்தில் தேடி பாருங்க. கோப்பு தேவை என்றாலும் தருகிறேன்.
எவ்வளவு குடிக்கிறோம் என்பது தான் ரொம்ப முக்கியம். குடிக்கு அடிமையானவர்களை பற்றி நான் பேசவில்லை.
அதுவும் போக அது ஒன்று தான் வழி என்ற கூறவில்லை. அதை தவிர்த்து நீங்கள் கூறியதை போன்று பல வழிகள் உள்ளது. குடியை நம் நாட்டில் உள்ளவர்கள் தவிர்ப்பது மிக்க நலம் (சீதோஷ்நிலையை கருத்தில் கொண்டு)
நச்சுன்னு ஒரு குட்டு வச்சிருக்கீங்க!!!
நன்றி நாகை சிவா.
நன்றி விஜய்.
அருமையாகக் கருத்துகளைப் பதிந்திருக்கிறீர்கள் வித்யா. வெகு அமைதியாக அழுத்தமாகச் சொல்லிவிட்டீர்கள்.
வாழ்த்துகள்.
//அதே சமயம் இந்த விஷயத்தை சட்டபூர்வமாக அனுகாமல், //
சட்டப் பூர்வமாகவும் அணுகியிருக்கிறார்கள். மேலும் கண்டன் ஊர்வலங்களும் நடந்தது. இதற்கு முன் நடந்த molest கேஸ்-களிலும் (மும்பை- புத்தாண்டு ஈவ்)
குற்றவாளிகள் தண்டிக்கப் படவே இல்லை..அதுதான் உண்மை!
//
பஃப் நிரப்பும் போராட்டம், ஜட்டி அனுப்பும் போராட்டம் நடத்துவதெல்லாம் எந்த விதத்தில் நாகரிகமாகும்?
//
இன்சல்ட செய்யணும்-னு ஆனப்பறம் நாகரிகம் எல்லாம் எதுக்கு வித்யா?
//குடிப்பது, ஆடை உடுத்துவதையெல்லாம் அடிப்பதன் மூலமோ, மிரட்டலின் மூலமோ சரிசெய்ய முடியாது. இதெல்லாம் அவரவர் விறுப்பு வெறுப்பு. //
கரெக்ட். குடிப்பது, உடை உடுத்துவது கூட விட்டுவிடுங்கள்..முஸ்லிம்-களூடன் நட்பு கொண்டதற்கு ஆளான பெண்களின் நிலை இங்கே பாருங்கள்...
http://www.hindu.com/2009/02/12/stories/2009021256500100.htm
//கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று. //
நச்சுன்னு முடிச்சு இருக்கிங்க
(Thanks to ur support for superstar in cable shankar's post!)
மிகவும் அருமையான பதிவு, வாழ்த்துக்கள்!
ஆனால்.... ஆனால்.....ம்... ம்....
தண்ணி, ரொம்ப ஜாலியான விஷயம்! அதை சிறுமை படுத்த வேண்டாமே...!
;););)
Post a Comment