February 23, 2009

வாழ்த்தும் - கண்டனங்களும்

"எல்லா புகழும் இறைவனுக்கே". இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கிய ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் என் வாழ்த்துக்கள்.

ஆஸ்கர் விருது பெற்ற ஜெய் ஹோ பாடல்.


படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த இன்னொரு பாடல்
Get this widget Track details eSnips Social DNA


சரி தலைப்பிலுள்ள கண்டனங்கள் யாருக்கு?

மூத்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு. வக்கீல்கள் அமைதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பாராம். ஒரு மாநிலத்தின் முதல்வர் மூத்த தலைவர் இப்படியா emotional blackmail செய்வது? ஏன் ஐயா உங்களால் ஒரு ஸ்திரமான நடவடிக்கையை இரண்டு தரப்பினர் மீது எடுக்கமுடியவில்லை? ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது என்று பதறி அறிக்கை விடத் தெரிந்த உங்களுக்கு ஏன் இரண்டு தரப்பினரையும் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. நீங்கள் யாருக்கு பயப்படுகிறீர்கள்? வோட்டு போய்விடும் என வக்கீல்களுக்கா? இல்லை உங்கள் பொறுப்பிலிருக்கும் காவல்துறை எதிர்ப்பு கிளப்புவார்கள் என்றா? என்னவோ போங்கள். உங்களிடமும், உங்கள் சக அரசியல்வாதிகளிடமும் கொஞ்சமேனும் நாகரிகத்தை எதிர்பார்ப்பது என் தவறுதான்.

தி.மு.க தலைவரின் தொண்டரடிப்படைகளுக்கு - அவரே முடியாம போய் ஆஸ்பத்திரியில படுத்துருக்காரு. அவருக்கு தேவையானது நல்ல ஓய்வுங்கறது உங்களுக்கு தெரியாதா? அவர நிம்மதியா இருக்கவிடாம அந்த பாலத்த தொற, இந்த திட்டத்த தொறன்னு ஏன் ரப்சர் பண்றீங்க. தலைவரும் ஏன் இதுக்கெல்லாம் ஒத்துக்கிறாரு? யாமறியோம் பராபரமே:)

ஜெயலலிதா உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் இந்த பிரச்சனையை ஊதி பெருசாக்குவதில் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்க்கின்றன. அடிவாங்கினவனே மறந்தாலும் இவங்க வுடமாட்டாங்க போல. நான், எனது அரசு என்ற சுயதம்பட்டம், ஆணவம் இவற்றை விட்டொழித்து என்னிக்கு மேடம் பொறுப்பானா எதிர்கட்சி தலைவரா செயல்படபோறீங்க? சட்டசபைக்கு வந்தாலும் 5 நிமிஷம் தான் இருக்கறீங்க. கேட்டா கருணாநிதியும் அப்படித்தானேன்னு அவர கை காட்றீங்க. அப்ப உங்களுக்குன்னு தனி அடையாளம் ஏதும் கிடையாது. நேத்துக்கு கட்சி ஆரம்பிச்ச கேப்டன் கேட்கும் கேள்விகள் கூட நீங்க கேக்கமாட்டேங்கறீங்களே ஏன்?

வக்கீல் பெருமக்களே நீதிமன்ற வளாகத்தில் அடிதடி நடந்து நீதித்துறையே களங்கப்பட்டுடுச்சுன்னு கூவறீங்களே, சுப்ரமணிய சுவாமி மேல முட்டை அடிச்சீங்களே. எங்க வைச்சு அடிச்சீங்க புரோட்டா கடையிலயா? இந்த செயல் அநாகரிகம் இல்லையா?

காவல்துறை கனவான்களே அது சரி எவ்வளவு நாள் தான் நீங்களும் அடிவாங்க்கிட்டிருப்பீங்க. அதுக்கெதுக்குங்க வாகனங்களையெல்லாம் துவம்சம் பண்ணீங்க? வக்கீல்களை மட்டும் மொத்தியிருந்தா கொஞ்சமாவது உங்க பக்கம் நியாயம் இருந்திருக்கும் (அவங்க அடிச்சாங்க நாங்க அடிச்சோம்னு). இப்ப பாருங்க உங்களுக்கும் தான் கெட்ட பேரு.

சுப்ரமணியபுரம் படத்துல கஞ்சா கருப்பு ஒரு டயலாக் சொல்லுவார்
"இவைங்களுக்கு மத்தில வாழறதே பெரிய பொழப்புதாண்டா".

34 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் மட்டும்

மற்றவை ... ம்ம்ம் ... ம்ம்ம் ...

Truth said...

"இவைங்களுக்கு மத்தில வாழறதே பெரிய பொழப்புதாண்டா".

உண்மை தானுங்க

மணிகண்டன் said...

ஆட்டோ.........

சந்தனமுல்லை said...

//"இவைங்களுக்கு மத்தில வாழறதே பெரிய பொழப்புதாண்டா".//

:-)

தாரணி பிரியா said...

சாட்டையை வெச்சு சுழட்டினது மாதிரி இருக்கு வித்யா :(.

தாரணி பிரியா said...

நியாயமான கேள்வி. ஆனா பதில் யார் சொல்ல போறாங்க ?

Namakkal Shibi said...

/இவைங்களுக்கு மத்தில வாழறதே பெரிய பொழப்புதாண்டா/

:))

கார்க்கி said...

mm.. நடக்கட்டும்.. நடக்கட்டும்

அசோசியேட் said...

கண்டனங்களை அடுத்த பதிவாக தனியாக இட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம் . வாழ்த்தும் போதே சைடில் வசை.

Namakkal Shibi said...

//ஆட்டோ.........//

டாடா சுமோ..........!?

குசும்பன் said...

// எங்க வைச்சு அடிச்சீங்க புரோட்டா கடையிலயா? இந்த செயல் அநாகரிகம் இல்லையா?//

அப்படி அடிச்சு இருந்தா முட்டை பரட்டோவாவது கிடைச்சுருக்கும்:)))

செம கலக்கல் பதிவு!!!

குசும்பன் said...

//அப்ப உங்களுக்குன்னு தனி அடையாளம் ஏதும் கிடையாது. //

ஹி ஹி சசிகலா அவுங்க அடையாளம் இல்லை:(((

Arun Kumar said...

ஆட்டோ start செய்யும் சத்தம் கேக்குது .. :)

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை செய்யும் காமேடிகளே ஒவர் டோஸ் ஆகுது....சிரிப்பொலி ஆதித்யா எல்லாம் வேஸ்ட்,,

கபீஷ் said...

Vidya,
Good post!! I like and appreciate your guts!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

"இவைங்களுக்கு மத்தில வாழறதே பெரிய பொழப்புதாண்டா".

ஆமாங்க
ரொம்ப கஷ்டமாதான் இருக்கு

அபி அப்பா said...

நல்லா இருந்துச்சு பதிவு!திமுக தொண்டர்களுக்கு கொடுத்த சாட்டை அடி துபாய் வரைக்கும் வலிக்குது!சபாஷ்!

வித்யா said...

ஏன் ஜமால்?

நன்றி Truth.

என்ன மணிகண்டன். எழுத சொன்னதே நீங்க தான:)

நன்றி முல்லை.

நன்றி தாரணி பிரியா.

வித்யா said...

நன்றி சிபி சார்.

சரி கார்க்கி:)

நானும் முதலில் அப்ப்டித்தான் நினைச்சேன். Associate. These people dont deserve a separate post அப்படின்னு நினைச்சேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

ஹி ஹி நன்றி குசும்பன்.

வித்யா said...

அருண் நான் எஸ் ஆகி ரொம்ப நேரம் ஆகுது:)

நன்றி கபீஷ்.

வாங்க அமித்து அம்மா.

வாங்க அபி அப்பா. யாரையும் புண்படுத்தனும்ன்னு எழுதலை:) (அப்பாடி வழக்கமான டயலாக்க சொல்லியாச்சு.)

எம்.எம்.அப்துல்லா said...

தி.மு.க தலைவரின் தொண்டரடிப்படைகளுக்கு //

யூ மீன் மீ??? ஒ.கே ஐ அம் ஆஜர்.

ஆட்சியை உள்ளாட்சி துறை அமைச்சர்கிட்ட குடுப்பாரா?குடுப்பாரான்னு நாங்களே எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துக்கிட்டு இருக்கோம்.இதுல நீ வேற ஏன் எங்கள வம்புக்கு இழுக்குற :((

எம்.எம்.அப்துல்லா said...

//நல்லா இருந்துச்சு பதிவு!திமுக தொண்டர்களுக்கு கொடுத்த சாட்டை அடி துபாய் வரைக்கும் வலிக்குது!சபாஷ்!

//

ஏன்ணே நம்மள மாதிரி நேர்மையா ஒத்துக்குற தைரியம் இன்னைக்கு நாட்ல வேற எந்த தொண்டர்கள்கிட்ட இருக்கு (நல்ல வேளை மீசையில மண்ணு ஒட்டல)
:)))

நான் ஆதவன் said...

////ஆட்டோ.........//

டாடா சுமோ..........!?//

லாரி............!?

Cable Sankar said...

///அவரே முடியாம போய் ஆஸ்பத்திரியில படுத்துருக்காரு. அவருக்கு தேவையானது நல்ல ஓய்வுங்கறது உங்களுக்கு தெரியாதா? அவர நிம்மதியா இருக்கவிடாம அந்த பாலத்த தொற, இந்த திட்டத்த தொறன்னு ஏன் ரப்சர் பண்றீங்க. தலைவரும் ஏன் இதுக்கெல்லாம் ஒத்துக்கிறாரு? யாமறியோம் பராபரமே:)
/

அவருக்கு அவர் ஆளூங்க மேலேயே நம்பிக்கையில்லை. அதனால் தான் தான் இல்லாமல் எதுவும் நடக்கக்கூடாது என்று உடம்பு சரியில்லைன்னாலும் பரவாயில்லைன்னு டிவிலயாவது பேசிகிட்டே இருக்காரு..

வித்யா said...

ஓ அப்துல்லா அண்ணா அவிங்களா நீங்க??

ஆதவன் லாரி அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லீங்க:)

வாங்க சங்கர்ஜி. நீங்க சொல்றதும் சரிதான். ஆனா அவர் வழிகாட்றது விட்டுட்டு இப்படியேன் நடந்துக்குறாருன்னு தான் தெரியல.

நாகை சிவா said...

ஆஸ்கர் வென்ற இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்.

அது Emotional Blackmail இல்லங்க. எல்லாம் தலைக்கு மீறி போயாச்சு. எப்படி முடிவுக்கு கொண்டு வருவது, இது ஒன்று தான் வழி. ஐயோ அம்மா அது போல எல்லாம் நீங்க ஏதும் செய்ய கூடாதுனு எல்லாம் ஒடி வருவாங்கனு நினைக்கிறார். பார்ப்போம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறார் என்று. இது போன்ற அறிக்கைகள் அவருக்கும் புதிது அல்ல நமக்கு புதிது அல்ல. முடிவு இது வரை அவருக்கு சாதகமாக தான் அமைந்து இருந்து இருக்கிறது. இந்த தடவை பாக்கலாம்?

நாகை சிவா said...

//சுப்ரமணியபுரம் படத்துல கஞ்சா கருப்பு ஒரு டயலாக் சொல்லுவார்
"இவைங்களுக்கு மத்தில வாழறதே பெரிய பொழப்புதாண்டா".//

ஹாஹா... ரொம்ப ரசித்தேனுங்க... நல்ல டைமிங். இது போன்ற ஹிட்டான வரிகளை எடுத்து அவ்வபோது பயன்படுத்துங்கள்.

மணிகண்டன் said...

****
என்ன மணிகண்டன். எழுத சொன்னதே நீங்க தான:)
****
வேண்டாம் வித்யா. இது எல்லாம் ரொம்ப ஓவரு ! நான் ஏற்கனவே ரொம்ப பயந்த சுபாவம்.

வித்யா said...

உங்கள் கருத்துக்கு நன்றி நாகை சிவா. பிரச்சனை கைமீறி போறட்துக்கு காரணம் அவரின் அலட்சியம் தானே. அப்புறம் நீங்க தேவர் மகன் டயலாக் யூஸ் பண்ணத பார்த்து தான் எனக்கு இந்த ஐடியா வந்தது.

மணிகண்டன் ரொம்ப பயப்படாதீங்க. மணிகண்டன் தான் எழுத சொன்னாருன்னு நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்:)

narsim said...

மிக நல்ல கேள்வி வித்யா.. உங்களின் எண்ணத்தை தைரியமாய் பதிந்ததற்கு வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

//அப்புறம் நீங்க தேவர் மகன் டயலாக் யூஸ் பண்ணத பார்த்து தான் எனக்கு இந்த ஐடியா வந்தது.//

ராயல்டி அனுப்பிடுங்க :)

உங்க பதிவில் தான் சமீபமாக சினிமா பார்ப்பதை பெருமையாக நினைக்காமல் கடமையா செய்யுங்க என்று சொன்னேன், அதை மனதில் நிறுத்தி புகுந்து விளையாடுங்க. கவுண்டர் வரிகளை அங்க அங்க வீசுங்க ... பிச்சுக்கும் :))

வித்யா said...

நன்றி நர்சிம்:)

செஞ்சிடறேன் சிவா:)

அவன்யன் said...

எல்லோருக்கும் ஒன்னு சொல்லிகிறேன்
எவ்ளோவோ பேர் ப்லோக் எழுதுறாங்க ஏன் இப்படி உங்களுக்குள குரூப் பொர்ம் பண்ணிகிரேங்க. எல்லோர் ப்லோகும் படிங்க கமெண்ட் அடிங்க.உங்களுக்கு வேண்டியவுங்க ப்லோக் மட்டும் படிச்சிட்டு ஓட்டு போட்டுட்டு சேச்சே என்ன இது சின்ன புள்ளைங்க மாதிரி.

முரளிகண்ணன் said...

வித்யா

வாழ்த்துக்கள்.

தங்களின் அறச்சீற்றத்திற்க்கு.

நாகை சிவா said...

டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில் நீங்களும்....

http://tsivaram.blogspot.com/2009/02/blog-post_24.html