நர்சிம் அவர்களின் பதிவின் மூலமாக பரிசல், லக்கிலுக், கோவி.கண்ணன் போன்றோரின் பதிவுகளை(ஏதாவது செய்யனும் என்பதின் தொடர்ச்சி) படித்தேன். நானும் சில திட்டங்களை பதிவிடுகிறேன். இதுபோல் என் மனசாட்சியை அரித்துக்கொண்டிருக்கும் நிறைய விஷயங்களை தனி மனித தாக்குதல்களுக்கு பயந்து பதிவிட துணிச்சலில்லாமல் மெளனம் காத்திருக்கிறேன். இந்த முறை கொஞ்சூண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுதுகிறேன். பார்ப்போம் யார் வாயில் விழப்போகிறேன் என்று.
தேர்தல்/அரசியல்
1. ஏற்கனவே ஒருத்தர் சொல்லிட்டாரு கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை தான் தேர்தலின் போது பயன்படுத்த வேண்டுமென்று. அதோடு நில்லாமல் யாரெல்லாம் வாக்களிக்கவில்லையென்பதை கணக்கெடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
2. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பிண்ணனி, சொத்து விவரங்கள் சரிபார்க்கப்படுவது போல், அவர்களின் வயதும் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படவேண்டும். மூத்த தலைவர்கள் கட்சியையும்/இளைய தலைவர்களையும் வழிநடத்த வேண்டும்.
3. அமைச்சரவை அமைக்கும் முன், ஒருவருக்கு ஒதுக்கப்படும் இலாகவிற்க்கு அவர் பொருத்தமானவரா என்பதை தெளிவு செய்ய வேண்டும்.
சுகாதாரம்/மருத்துவம்
1. தனியார் துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் கட்டாயமாக கிராமப்புறத்தில் மாதத்தில் சில தினங்கள் பணியாற்ற வேண்டும். அதே போல் தனியாக பிராக்டிஸ் செய்யும் மருத்துவர்களின் fees வரமுறைக்குட்படுத்தப்படவேண்டும்.
2. பொதுக் கழிப்பிடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள அதை உபயோகிப்பவர்கள் முதலில் முன்வரவேண்டும். உங்கள் அசுத்தத்தை நீங்களே சுத்தப்படுத்த தயங்கிவிட்டு நாறுதே நாறுதேன்னு பொறுப்பில் இருப்பவரை குறைக்கூறுவது நியாமாகாது.
3. முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்டு சலம்பறதானல தான் நிறைய பிரச்சனையே.
மற்றவை
1. சீக்கிரமே செய்யவேண்டியது. வீட்டு வாடகை வரைமுறை. இத்தனை சதுர அடி, இன்ன இடத்தில் இருக்கும் வீட்டுக்கு உச்ச வரம்பாக இவ்வளவுதான் வசூலிக்கலாம் என உத்தரவு பிறப்பிக்கப்படவேண்டும். அவ்வாறு ஏற்கனவே GO இருந்தால் அது பின்பற்றப்படுகிறாதா என கண்கானித்தல் வேண்டும்.
2. உங்கள் பிறந்தநாள்/மணநாள், அல்லது நீங்கள் விசேஷமாகக் கருதும் நாட்களில் கொண்டாட்டங்களுக்கு செலவிடும் தொகையில் சிறிய அளவினை ஆதரவற்றோர் இல்லங்கலிள் இருப்பவர்களுக்கு உணவளிப்பதன் மூலமோ இல்லை அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதன் மூலமோ அவர்கள் முகத்தில் சிரிப்பைக் காணலாமே.
டிஸ்கி : ஏற்கனவே பெரிய தலைகள் எழுதிய திட்டங்களை நான் கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன்.
வேண்டுகோள் : பெரிய தலைகள் எல்லாம் சேர்ந்து ஏதேனும் திட்டத்தை செயல்படுத்தினால், என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். என்னால் முடிந்த உதவிகளை கட்டாயமாக செய்கிறேன்.
February 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
//இதுபோல் என் மனசாட்சியை அரித்துக்கொண்டிருக்கும் நிறைய விஷயங்களை தனி மனித தாக்குதல்களுக்கு பயந்து பதிவிட துணிச்சலில்லாமல் மெளனம் காத்திருக்கிறேன். இந்த முறை கொஞ்சூண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுதுகிறேன்.//
எப்ப எழுதலாம் என்று இருக்கீங்க :))
//முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்டு சலம்பறதானல தான் நிறைய பிரச்சனையே.//
இதை தவிர மற்றவை எல்லாம் சூப்பர்.
சுயநலத்தை தவிர்த்து தனி மனித ஒழுக்கம் வளர்ந்தால் பாதி பிரச்சனை தீர்ந்துடும் என்பது என் கருத்து.
ஒவ்வொண்ணும் சூப்பர்.
பாராட்டுக்கள் வித்யா
தைரியமா எழுத துணிஞ்சதுக்கே உங்கள பாராட்டலாம்.
எல்லாமே நல்லததான் சொல்லியிருக்கீங்க.
//முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்டு சலம்பறதானல தான் நிறைய பிரச்சனையே.//
ரொம்ப சரி.
"மற்றவை "கள் மிக முக்கியமானவைகளாத்தான் படுகிறது எனக்கு! நல்ல பட்டியல் வித்யா!
//முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்டு சலம்பறதானல தான் நிறைய பிரச்சனையே//
அப்படி பொதுவா சொல்ல முடியாதுங்க.. சில நல்ல பசங்க தண்ணியடிச்ச்டூ மத்தவங்கள தொல்ல பண்னாமலும் இருக்காங்களே..:))
சிவா எழுதுவேன் ஆனா எழுதமாட்டேன்.
\\சுயநலத்தை தவிர்த்து தனி மனித ஒழுக்கம் வளர்ந்தால் பாதி பிரச்சனை தீர்ந்துடும் என்பது என் கருத்து.\\
கன்னாபின்னாவென்று ஒத்துக்கொள்கிறேன்.
நன்றி தென்றல்.
நன்றி அமித்து அம்மா.
நன்றி முல்லை.
\\சில நல்ல பசங்க தண்ணியடிச்ச்டூ மத்தவங்கள தொல்ல பண்னாமலும் இருக்காங்களே..:))\\
குடிப்பழக்கம் இருப்பவர்கள் நல்ல பசங்களா இருக்க முடியாது என்பதென் கருத்து கார்க்கி.
எல்லாம் நல்ல யோசனைகள்...
நானும் அப்படியே yes mam ன்னு சொல்லி வழி மொழிகிறேன்
தனி மனிதர்கள் சிலர் முன்மாதிரியாக இருந்தாலே போதும் பல பேர் அவரை பார்த்து திருந்துவாங்க..
ரோட்டில் யாராவது வெயில் தாங்காமல் மயங்கி விழுந்தா யாரு என்னன்னு தெரியாம உதவி செய்யும் மக்கள் இன்னமும் நிறைய பேரு இருக்காங்க..
மனிதாபிமானம் இன்னமும் சாகவில்லை.
என்ன சரியானபடி வழி நடத்திசெல்ல தலைவர் யாரும் இல்லை.. என்ன இப்படியே மாற்றமே இல்லாம இருந்திடுமா என்ன?
அப்படியே கண்ணா பின்னாவென்று வழிமொழிகிறேன்
பாராட்டுகள் வித்யா.
எல்லா திட்டத்தையும் வழி மொழிகிறேன். எல்லாமே சூப்பர்.
கலக்கல்.. நன்றி.. இந்த பதிவையும் அதில்இணைத்துவிட்டேன்
//என்னால் முடிந்த உதவிகளை கட்டாயமாக செய்கிறேன்.
//
நீ எங்க கூட சேராம இருக்குறதுதான் நீ செய்யிற உதவிலேயே பெரிய உதவி :))
ச்சும்மா லுலுலாய்க்க்கு சொன்னேன். சுகாதாரம்,மருத்துவம் தொடர்பான யோசனைகள் அருமை. :)
//3. முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்டு சலம்பறதானல தான் நிறைய பிரச்சனையே..//
ஒரு இந்திய 'குடிமகனா" இதை கன்னா பின்னா வென கண்டிக்கிறேன்.
//\\சில நல்ல பசங்க தண்ணியடிச்ச்டூ மத்தவங்கள தொல்ல பண்னாமலும் இருக்காங்களே..:))\\
குடிப்பழக்கம் இருப்பவர்கள் நல்ல பசங்களா இருக்க முடியாது என்பதென் கருத்து கார்க்கி.//
அவ்வ்வ்வ்வ்...நான் நல்லவனா? கெட்டவனா??
http://nanaadhavan.blogspot.com/2008/09/blog-post.html
நாங்கெல்லாம் அப்பவே போட்டுட்டோம்....ஆனா அப்ப கண்டுக்கதான் ஆள் இல்ல :(
//
குடிப்பழக்கம் இருப்பவர்கள் நல்ல பசங்களா இருக்க முடியாது என்பதென் கருத்து கார்க்//
அச்சச்சோ.. அப்படியெல்லாம் நினைக்காதீங்க
நன்றி அருண்.
நன்றி முரளிக்கண்ணன்.
நன்றி தாரணி பிரியா.
நன்றி நர்சிம்.
அப்துல்லா அண்ணாத்தே :x
ஆதவன் & கார்க்கி
on serious notes கொஞ்சமா குடிச்சாலும் சரி, குடிச்சிட்டு அமைதியா இருந்தாலும் சரி குடிப்பழக்கம் தவறானது. என்றாவது ஒருநாள் அரக்கன் வேலையைக் காட்டுவான். தயவு செய்து தவிர்க்கப் பழகுங்கள்:)
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல..
அம்புட்டு ஐடியாவும்...சூப்பரு...
//கொஞ்சமா குடிச்சாலும் சரி, குடிச்சிட்டு அமைதியா இருந்தாலும் சரி குடிப்பழக்கம் தவறானது. என்றாவது ஒருநாள் அரக்கன் வேலையைக் காட்டுவான். தயவு செய்து தவிர்க்கப் பழகுங்கள்:)//
சகோதரி.. செம பாயிண்டு..
நன்றி ரங்கன்:)
Post a Comment