November 2, 2009

கண்டேன் காதலை

ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான "Jab We Met" படத்தை தமிழில் ரீமேக்கியிருக்கிறார்கள். பரத், தமன்னா லீட். முதல் காட்சியில் பரத் ஒரு மாதிரி நடந்து வருவார். சோர்வை காட்றாராமா? முடியலடா சாமி. "நல்லவேளை. சுமாரான சோகம் போல. ரொம்ப சோகமா இருந்தா தவழ்ந்து வந்திருப்பாரு" என தியேட்டரில் கமெண்ட் அடித்தார்கள். காதலில் தோல்வி, அம்மாவால் மனக்கசப்பு ஏற்படும் பரத் வாழ்க்கை வெறுத்து கால்போன போக்கில் மதுரை ட்ரெய்ன் ஏறுகிறார். அங்கு தமன்னாவை சந்திக்கிறார். பரத்தால் டிரெய்னை தவறவிட்டதாக சொல்லும் தமன்னாவை பரத் அவரின் சொந்த ஊரான தேனியில் கொண்டு சேர்க்கிறார். அங்கு தமன்னாவிற்கும் அவரின் தாய்மாமன் சந்தானத்திற்கும் கல்யாண ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஊட்டியில் ஒருவரை காதலிக்கும் தமன்னா வீட்டை விட்டு ஓடிப்போகிறார். ஊட்டியில் அவர் தன் காதலனை சந்தித்தாரா? பரத் என்ன ஆனார்? எல்லாம் வெள்ளித்திரையில் காண்க.

படத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் இரண்டு பேர். முதலில் சந்தானம். சான்ஸே இல்லை. தமன்னாவின் ஓவர் ஆக்டிங்கையும், பரத் நடிக்கிறேன் பேர்வழி என ஆளைக் கொல்லும்போதும் ஆபத்பாந்தவனாக காப்பாற்றுகிறார். கல்யாணத்தை நிறுத்த இவர் அடிக்கும் கூத்துகள் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கினறது. அடுத்தது ஒளிப்பதிவாளர். படம் முழுக்க ஜில்லென்ற ஃபீலிங்கை கொடுக்கிறார். ஊட்டி காட்சிகள் அட்டகாசம்.தமன்னா வழக்கமான தமிழ் ஹீரோயின்கள் செய்யும் லூசுப் பெண் கேரக்டர். ரொம்பவே ஓவர் டோஸாகியிருக்கிறது. சிக்கென்றிருக்கிறார். கொஞ்சம் அஷ்டகோணல்களை குறைத்து நடித்தாரென்றால் தூளாக இருக்கும். பரத். ஊஹும். அதுவும் ரெண்டாவது பாதியில் தான் ஈஸி கோ பெர்சனாக மாறிவிட்டதை இவர் பறைசாற்ற முயற்சிக்கும்போது (அந்த chill dude டயலாக்குகள்) "என்ன கொடுமை சார் இது" என தியேட்டரே குரல் கொடுத்தது.

மியூசிக். வித்யாசாகராமே. நம்பமுடியவில்லை. இல்லை. இல்லை. ஒரு பாட்டுக்கூட அவர் சாயல் இல்லை. "காற்று புதிதாய்" சாங் ஓகே. BGM மகா சொதப்பல். ஹிந்தியில் பாட்டுகள் எல்லாம் அட்டகாசமாய் இருக்கும்.

ஜெனரலாய் ஒரிஜினலோடு கம்பேர் செய்யக்கூடாது என்பது என் கருத்து. சீன், டயலாக் இவையெல்லாம் கூட ஒரிஜினலிலிருந்து எடுத்தாளலாம். ஆனால் காஸ்ட்யூம் கூடவா காப்பி அடிக்கனும். கொடுமையா இருக்கு. ஹிந்தியில் "நகாடா" பாட்டில் ஷாகித் கபூர் செய்த அத்தனையும் பரத் இதிலும். அந்த மெகா சைஸ் தவில் கூட அடிக்கனும்னு ரூல்ஸ் போல.

கண்டேன் காதலை - ஒரு தபா கண்டுக்கிடலாம்.