Showing posts with label போட்டோஸ். Show all posts
Showing posts with label போட்டோஸ். Show all posts

October 28, 2010

மன்னிப்பு கேட்கிறார் ஆமிர்கான்

நல்ல வேளை தப்பிச்சேன். முச்சந்தில நிக்க வச்சு எந்திரன் பாருங்கன்னு பிட் நோட்டீஸ் விநியோகம் பண்ண சொல்லல.

சொன்னா புரிஞ்சிக்கோங்க ஒபாமாஜி. நீங்க என்னைப் பார்க்கலன்னா கூட பரவாயில்ல. கலைஞர் பார்க்காம மட்டும் போய்டாதீங்க.

சொன்னா கேளுங்க தலைவரே. நீங்க கதை வசனம் எதுவும் இப்போதைக்கு எழுத வேண்டாம். அப்புறம் அங்க வேடிக்கப் பார்க்க சேர்ந்த கூட்டம் வோட்டு போடற கூட்டமாயிடும்.

சரி சரி. ஜெயிச்சா தலைமைச்செயலகத்த கொடநாட்டுக்கு மாத்த மாட்டேன்.

அதோ அங்க ஒருத்தர் நிக்கறாரு பாருங்க. இப்போதைக்கு அவரும் நானும் தான் கட்சில இருக்கோம்.

நான் ஆட்சிக்கு வந்தால் என் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வரும் அனைத்து மக்களுக்கும் இலவச ஆயூள் காப்பீடு வழங்குவேன்.

நிம்மதியா பாத்ரூம் கூட போக முடியல சார். எங்க, எப்ப எவன் கேமராவோட வருவான்னே தெரியமாட்டேங்குது.

யப்பா ஜெமினி சர்க்கஸ்ல அந்தரத்துல தாவறதுக்கு ஆள் குறையுது. நீங்க வர்றீங்களான்னு கேக்கறான்ப்பா

பாவம். அவங்களோட கவிதைகளை தெரியாத்தனமா படிச்சிட்டாங்களாம்.

நெஞ்சத் தொட்டு சொல்றேன். இப்படி ஒரு கொடுமை நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா 3 இடியட்ஸ் படத்துல நடிச்சிருக்கவே மாட்டேன். தமிழ் மக்கள் என்னை மன்னிச்சிருங்க.

October 20, 2010

நவராத்திரி - ஃபோட்டோ ரவுண்ட் அப்

மைலாப்பூர் வடக்கு மாட வீதி முழுவதும் பொம்மைகளின் அணிவகுப்பு. ஜூனியரைக் கூட்டிக்கொண்டு போனேன். பொம்மைகள் எல்லாம் அம்மாடியோவ் விலையில். 30 ரூபாயில் ஆரம்பித்து 8,000 ரூபாய் வரை பொம்மைகள் இருந்தன. தெருவின் இருபுறமும் பொம்மைகளின் அணிவகுப்பு அவ்வளவு அழகாக இருந்தது. ஜூனியர் கண்ணில் படுவதையெல்லாம் வாங்கனும்னு சொல்லிக்கொண்டிருந்தார். அவர்கள் சொல்லும் விலையில் பாதியைக் குறைத்து பேரம் பேசவேண்டியிருக்கிறது:((
அதே வடக்கு மாட வீதியில் ஒரு பாட்டி கோல அச்சுகள் விற்றுக்கொண்டிருந்தார். எனக்கு சுட்டுப் போட்டாலும் கோலம் போடவராது. அதனால் நானும் சில அச்சுகள் வாங்கிக்கொண்டேன். நான் கேட்ட மயில் டிசைன் அவுட் ஆஃப் ஸ்டாக். நாளை வா தாரேன் என்றார். ஜூனியரைக் கூட்டிக்கிட்டு இரண்டு நாள் வந்ததுக்கே நாக்கு வெளில தள்ளிருச்சு. இதுல மூணாவது நாள் வேறயா என மனதில் நினைத்துக்கொண்டேன்.
மூன்று படிகளோடு ஆரம்பித்திருக்கிறேன். வியாழனன்று மாலை ஒரே ஒரு பிள்ளையார் பொம்மை மட்டும் வைத்துவிட்டு மறுநாள் மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
பைனாப்பிள் கேசரி
பீங்கான் பிள்ளையார்
மாமியார் வீட்டு கொலு
இது நான் வைத்தது. கம்ப்ளீட். DOT:)
கிருஷ்ணன் - கோபியர் கோலாட்டம். தாண்டியா ஆட்டமும் ஆட தசரா கூட்டமும் கூட
சமயபுரம் மாரியம்மன். பாண்டிச்சேரியில் வாங்கினது. மைலாப்பூரை விட பாண்டியில் பொம்மைகள் மலிவாக இருக்கின்றன. அரசே கண்காட்சி நடத்தி சிறப்புத் தள்ளுபடியும் கொடுக்கிறார்கள். பண்ரூட்டியிலிருந்து வரும் பொம்மைகள் தத்ரூபமாக இருக்கின்றன.
அர்த்தநாரீஸ்வரர். பார்த்ததும் பிடித்ததால் வாங்கினேன்.
இது எதுக்கு வாங்கின?
ஆணும் பெண்ணும் சமம். பெண்ணீயம். அதெல்லாம் உனக்குத் தெரியாது. புரியாது.
முதல்ல நெட் கனெக்‌ஷன புடுங்கனும்.
இதுவும் ஆணாதிக்கம்தான்.
ஙே!!
டெரக்கோட்டா பிள்ளையார்
இந்த டெரக்கோட்டா பவுல் தோழி பரிசளித்தது.
இந்த தசாவதார பொம்மைகள் அம்மாவுடையது. 25 வருஷத்திற்கு முன்னர் பெரியம்மா அம்மாவிற்கு வாங்கிக்கொடுத்ததாம். விருத்தாச்சலம் பீங்கான் ஃபேக்டரியிலிருந்து வாங்கியிது. அம்மா காஞ்சிபுரத்தோடு கொலு வைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார் (தொடர்ந்து மூன்று வருடங்கள் வீட்டில் துக்க நிகழ்வு. செண்டிமெண்டாக அம்மா அப்செட்). இந்த முறை நான் அம்மாவிடமிருந்து லவட்டிக்கொண்டு வந்துவிட்டேன்.
இதை எந்த ஆர்டரில் அடுக்க வேண்டும் என்பது தெரியவில்லை. வழக்கம்போல் அம்மாவிடம் கேட்க அம்மா பெரியம்மாவிடம் கேட்டு அவங்களுக்கும் சரியா ஞாபகமில்லையென சொன்னார். அப்புறம் நெட்ல தேடிப்பாரேன் என்றார்;) பின்னர் வைசாகிலிருந்து அக்கா ஃபோன் பண்ணி வரிசை சொன்னார்.
“எப்படிக்கா?”
“ஹி ஹி. ரெண்டு வருஷத்துக்கு முன்னால மைலாப்பூர்ல செட் வாங்கும்போதே பின்னால நம்பர் போட்டுக் கொடுத்துருக்காண்டி”
“அதானே பார்த்தேன்.”
“அது சரி. நீ என்ன கொலுவெல்லாம் ஆரம்பிச்சிருக்க. நம்பவே முடியல”
“போரடிக்குதுக்கா. ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி, அக்கம் பக்கமென நிறைய பேர் வந்து போய்கிட்டிருக்காங்க. ரிலாக்ஸ்டா இருக்குக்கா.”

இந்த பிள்ளையார் என்னோட பிறந்தநாள் பரிசாக வந்தது:)
மேலும் சில படங்கள்

February 5, 2010

செக்கர் வானம் இதுதானோ?

சென்ற பதிவின் தொடர்ச்சி.

ஜனவரி 26ஆம் தேதி சாயந்திரம் 4 மணிக்கு கன்யாகுமாரி சென்று இறங்கினோம். விவேகானந்தர் பாறை மற்றும் வள்ளுவரை கண்டுக்கினு வர போட் ஏறலாம் என்று போனால் அனுமர் வாலை விட நீண்டிருக்கிறது க்யூ. க்யூவில் நின்று பத்து நிமிடம் கழிச்சு நண்பன் சொன்னது "ஹே மறந்துட்டேன். 4.30 மணிக்கெல்லாம் ஃபெரி சர்வீஸ் க்ளோஸ் பண்ணிடுவாங்க". அப்புறம் அவன் ஏன் கொஞ்ச நேரம் நொண்டிக்கிட்டு இருந்தான் உங்களுக்கு புரிஞ்சிருக்கும். அங்கிருந்த நேரா மூக்குத்தியம்மன்/பகவதி அம்மன் கோவிலுக்கு போனோம். அங்க நடை திறப்பதற்கு முன்னமே 2 கி.மீ தொலைவிற்கு க்யூ. ஆணியே புடுங்க வேணாம். கடற்கரையில் காலை நனைச்சுட்டு அப்படியே சூர்ய அஸ்தமனத்தைப் பார்த்திடலாம்ன்னு கிளம்பினோம்.


கடற்கரையில் இருந்து சூர்ய அஸ்தமனத்தை பார்க்கும் வ்யூ பாய்ண்ட்
உருக்கிய வெள்ளி போன்ற கடலலை
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்..
தகதகக்கும் தங்க தட்டாய் சூரியன்

நர்சிம் செக்கர் வானம் என்றொரு பதிவு எழுதியிருந்தார். அவர் விவரித்திருந்த செக்கர் வானம் இதுதானோ? நர்சிம் இதப் படிச்சீங்கன்னா நான் சொல்றது சரியான்னு சொல்லிட்டுப் போங்க.






அஸ்தமனத்த பார்த்த கையோட கொய்யா, அன்னாசி, கரும்பு ஜூஸ் எல்லாத்தையும் முழுங்கிட்டு ரூமுக்கு போய் ஒரு குட்டி தூக்கம் போட்டோம். திரும்பவும் டின்னரின் போது படம் போவது பற்றி பேச்சு வர நாணயம் பார்க்கலாமென்று முடிவாகி தியேட்டர் பற்றி விசாரிக்கையில் "அந்த தியேட்டர்ல ரொம்ப கொசு கடிக்கும். படமே பார்க்க முடியாது. ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடும் தியேட்டர் ஏசியோட நல்லா இருக்கும்" என்றார். விடு ஜூட். படம் பார்த்துவிட்டு வந்து தூங்க ஆரம்பிக்கும்போதே எழுப்பிட்டாங்க. கல்யாணத்த சிறப்பா நடத்தி வைச்சுட்டு???!!! மண்டபத்துலேயே டிஸ்கஷன் ஆரம்பிச்சாச்சு அடுத்து எங்கன்னு? சாயந்திரம் 5.30க்கு தான் ட்ரெய்ன். மணி 10.30 தான் ஆவுது. பேசாம திருநெல்வேலி போய்ட்டு வருவோமா என ஒரு ஐடியா. அல்வா வாங்க தான் முடியும். பேசாம கன்னியாகுமாரியே போவோம். வள்ளுவர் கிட்ட போய் "அய்யா பெரியவரே. நீர் பாட்டுக்கும் பொழுது போகாம எழுதி வச்சிட்டு போய்ட்டீரு. ஒவ்வொரு வருசமும் 30 குறள மனப்பாடம் பண்ணி மார்க் வாங்கறதுக்குள்ள தாவு தீந்துடுச்சு"ன்னு நியாயம் கேட்டுட்டு வரலாம்ன்னு ஏகமனதா முடிவு பண்ணி கிளம்பியாச்சு.




இந்த தடவை பத்தே நிமிசத்துல ஃபெரில உட்கார்ந்துட்டோம் (ஃபெரியில் அனுமதிக்கும் முறையில் பல குறைகள். பெரிய தள்ளுமுள்ளு ஏற்படுகிறது). விவேகானந்தர் பாறைல ஒரு பத்து நிமிசம் சுத்திட்டு வள்ளுவரப் பார்க்கப் போகலாம்னா ஃபெரிக்கு வெயிட் பண்றதுக்கே ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு. இனிமே வள்ளுவரப் பார்த்து நியாயம் கேட்டா, "நாங்க ஏறாம எப்படி ட்ரெய்ன் எடுக்கலாம்ன்னு?" மம்தா பானர்ஜியோடு வீணா சண்டை வருமேன்னு வள்ளுவர்கிட்ட போகாம ரூமுக்கு நடைய கட்டிட்டோம். மூட்டை முடிச்செல்லாம் எடுத்துகிட்டு வர்ற வழியில எஃக் பஃப்ஸ், க்ரீம் பன், கோக், முறுக்கு, தட்டை, பிஸ்கெட், வேர்கடலை பக்கோடா மட்டும் வாங்கிக்கொண்டோம்.

ட்ரெய்ன் ஏறினவுடனே சாப்பிட ஆரம்பித்தது. போரடிக்கும்போது மொக்கை போடுவதும் பின்பு சாப்பிடுவதுமாய் போனது. நடுவில் பாட்டுக்கு பாட்டு விளையாட ஆரம்பித்தோம். மொபைல் போனில் ஸ்டோர் பண்னி வைத்திருந்த பாட்டுகளை போட்டு விட்டு அலப்பறை பண்ணிக்கொண்டிருந்தான் நண்பன் ஒருவன். எவ்வளவு வயசானாலும், எங்க போனாலும் இந்த பிட் அடிக்கிற பழக்கம் போகவே போகாதா என அவனைக் கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் சைட் சீட்டில் உட்கார்ந்திருந்த ரயில்வே போலீசார் அடிக்கடி துப்பாக்கியை தொட்டுப் பார்த்துக்கொண்டதால், உசாராகி எங்கள் இசைப் பயணத்திற்கு தேசிய கீதம் வாசித்துவிட்டோம். ஏற்கனவே சொன்னா மாதிரி டாக்டருக்கு கதை மட்டும் சிக்கியது. சீன் எல்லாம் இனிமே தான் டெவலப் செய்யனும். 28 காலை வீடு வந்து சேரும் வரை மீண்டும் கல்லூரி சென்று வந்தது போலவே இருந்தது.

February 3, 2010

தமன்னாவா வடிவேலுவா??

ஜனவரி 25 மாலை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்சில் டிக்கெட் புக் செய்திருந்தோம். 6.45க்கு ட்ரெய்ன் என தகவல் தரப்பட நான் 5.15 மணிக்கே ஜூனியர் பார்வையில் படாமல் வீட்டை விட்டு எஸ்கேப் ஆக பிளான் செய்திருந்தேன். MTC இணையதளத்தில் அண்ணா நகரிலிருந்து எக்மோர் போக 75 நிமிடங்கள் ஆகும் எனப் போட்டிருந்தது. கடைசி நேரத்தில் அப்பா "எனக்கு நுங்கம்பாக்கத்தில் தான் வேலை. நானே உன்னை ட்ராப் செய்துவிடுகிறேன்" என சொல்ல, 5.30 மணிக்கெல்லாம் புறப்பட்டாச்சு. சரியாய் 50.50க்கு எக்மோரில் வண்டியை நிறுத்தி இறங்கிக்கோ என்றார்.

"ஏன்ப்பா. வேலை வந்துடுச்சா? நான் ஆட்டோல போகவா?"

"எக்மோர் ஸ்டேஷன் வந்துடுச்சு"

"யாரக் கேட்டு இவ்வளவு சீக்கிரம் வந்தது. MTC வெப்சைட்ல 75 நிமிஷம் ஆகும்ன்னு போட்ருந்தானே."

"அவன் ஊரெல்லாம் சுத்தி காமிச்சுட்டு வர அவ்வளவு நேரம் ஆகும்."

"கிர்ர்ர். நீயாவது சொல்லிருக்கலாம்ல. ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்புறன்னு?"

"எனக்கு என்னடி தெரியும். நீ உன் பிரெண்ட்ஸ் பார்க்க போறியோன்னு நினைச்சேன்"

ஆரம்பமே அசத்தலா இருக்கேன்னு நினைச்சுகிட்டே போனா நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பத்தின டீடெய்ல்ஸ் எதுவுமே போடல. பக்கத்துலயே ரூம்ல இருந்த இரண்டு அங்கிள்ஸ்கிட்ட எவ்வளவு பவ்யமா கேக்க முடியுமோ அவ்வளவு மரியாதையோட

"நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் எப்ப சார் வரும்?"

"அது 5.30 மணிக்கே போய்டுச்சேமா"

நான் அப்படியே ஸாக் ஆயிட்டேன். அடக்கடவுளே. 5.45ன்னு சொல்றதுக்கு பதிலா 6.45ன்னு சொல்லிட்டானோ என நினைத்தபடியே "இல்ல 6.45க்குன்னு சொன்னாங்களே?"

"ஓ. டைம் சொல்லிக் கேளும்மா. அது ஸ்பெஷல் ட்ரெய்ன். இனிமேதான் வரும்."

அவரிடம் என்ன சொல்வது என யோசித்துக்கொண்டிருக்கும்போதே மக்களிடமிருந்து போன் வர எஸ்கேப்.

ரவானா ஹோகி என நான் ஸ்டாப்பை கதறிக்கொண்டிருந்த ஸ்பீக்கரைப் பார்த்து எரிச்சலுடன்

"இவங்களுக்கு வாயே வலிக்காதா?"

"ஹே அதுக்குதானடி சம்பளம் தர்றாங்க"

கிர்ர்ர்ர் என அவளை முறைக்க, அதற்குள் அங்கிள் ரொம்ப சீரியசாய்

"அது ரெக்கார்டட் வாய்ஸ்மா" என்றார். மற்ற நால்வரும் கோரசாய் "ஆணியே புடுங்க வேணாம் போ" என மனதிற்குள் சொல்லிக் கொண்டோம்.

ஒவ்வொருத்தராய் வந்து சேர 6.30 மணியாகிவிட்டது. ட்ரெய்ன் கிளம்பியும் கதவருகேயே நின்றுகொண்டிருந்த நண்பனை தமன்னாவுக்கு வெயிட்டிங்கா என கிண்டல் பண்ண, அதற்கு இன்னொரு தோழி, வழியனுப்ப வந்தவனை உள்ளாற ஏத்திவிட்ட வடிவேலு கதையாகப்போகுது என நக்கலடிக்க களைகட்ட ஆரம்பித்தது.

"கோவில்பட்டி எப்ப வரும்?"

"ஏன்?"

"இல்ல. என் கூட வேலை செய்றவருக்கு கோவில்பட்டி சொந்த ஊரு. லீவுல இப்ப அங்கதான் இருக்காரு. கோவில்பட்டி வந்ததும் கூப்பிட சொன்னாரு."

(கோவில்பட்டி விடியற்காலை 3மணிக்கு வரும்போல)

"எதுக்கு? ஸ்டேஷனுக்கு வந்து டாட்டா சொல்லுவாரா. ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி லூசுங்களோட ட்ராவல் பண்ண வைக்கற"

கிட்டத்தட்ட பத்தரை மணி வரை பேசிக்கொண்டிருந்தோம். சக பயணிகளின் வற்புறுத்தலால் தூங்கப்போனோம் (இந்த பெருசுங்க தொல்லை தாங்கமுடியலடா சாமீ). காலையில் ஐந்தரை மணிக்கு சூடா பஜ்ஜி, வடை சமோசா விற்றுக்கொண்டிருந்தார்கள். இந்த நேரத்துக்கு யார்ரா சாப்பிடுவா என்று யோசித்த எங்களுக்கு கொஞ்ச நேரத்திற்கு பிறகு புரிந்தது. 7 மணிக்கு போக வேண்டிய ட்ரெய்ன் 9 ஆகியும் முக்கிக்கொண்டிருந்தது. மிகப்பெரிய சோகம் ட்ரெய்னில் பாண்ட்ரி இல்லை. தண்ணி காலி. திங்க ஏதுவுமில்லை. 5 மணிக்கே பல்லை விளக்கினது எவ்வளவு பெரிய தவறு எனப் புரிந்தது. அதைவிட மாபெரும் தவறு பஜ்ஜி வாங்கி வைக்காமல் விட்டது. ரிடர்ன் ட்ரிப்பின் போது ஒரு மினி பேக்கரியே ஸ்டாக் வைத்தக் கதை அடுத்த பதிவில். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வள்ளியூரில் ட்ரெய்ன் நின்றுகொண்டிருந்தது. அப்போ எடுத்த புகைப்படங்கள் இவை. எங்க பார்த்தாலும் பச்சைப் பசேல்ன்னு ஊரே ஏசி போட்டுவிட்டால் போல் இருந்தது.



ஸ்டேஷனில் இறங்கி அங்கிள் வீட்டில் கொட்டிகிட்டு ஏசி ரூம் வந்தால் கண்ண கட்டுது. இருந்தும் ஊர் சுத்தனும்ங்கற உயர்ந்த லட்சியத்தோட, கடமையுணர்ச்சியோட கிளம்பி எங்களுக்குன்னு ஏற்பாடு பண்ணியிருந்த ட்ரைவரிடம் மத்தூர் தொட்டிப்பாலம் பார்க்கனும் என்றோம். அதெல்லாம் நல்லாருக்காது. திற்பரப்பு அருவி போய்ட்டு அப்படியே பத்மநாபபுரம் அரண்மனை பார்க்கலாம்ன்னாரு. நாங்கதான் அறிவாளி ஆச்சே. இன்னிக்கு ஜனவரி 26. அரண்மனை மூடியிருப்பாங்க என்ற இணையத்தகவலை சொன்னதும் அப்படியான்னாரு. அப்பவே உசாராயிருக்கனும். நாகர்கோவிலிலிருந்து ஒரு மணி நேர பயணம். திற்பரப்பு அருவி அன்புடன் (ஹுக்கும்) வரவேற்றது.

போட்டோவுல என்னாமா தண்ணி கொட்டுதுன்னு பார்த்தீங்கல்ல. இப்ப நிஜ அருவியப் பாருங்க.


அருவியப் பார்த்து காண்டாகி கிளம்பிவிட்டோம். அருவிக்கு வந்து சும்மா போனா நல்லாருக்குதுன்னு ஆளுக்கொரு வாழைக்காய் பஜ்ஜியும், பழம்பூரியும் (நேந்திரம் பழ பஜ்ஜியாம். டக்கரா இருந்தது) அமுக்கிவிட்டு கிளம்பினோம். அங்கிருந்து பிற்பகல் ஒரு மணிக்கு கிளம்பினோம். ட்ரைவர் :"இங்கன" என ஆரம்பித்தார். நேரா பொண்ணு வீட்டுக்கு வண்டிய விடுங்க சாமின்னு ஒருசேர பெரிய கும்பிடு போட்டோம். அங்க போய் மதியம் செம லஞ்ச் சாப்பிட்டோம் (வடை, பாயாசம், அப்பளம், 3 பொரியல், அவியல், எரிசேரி, பருப்பு, சாம்பார், ரசம், மோர்ங்கற மெனுவ சொன்னா நீங்க வயித்தெரிச்சல் படமாட்டீங்க தானே). தூக்கம் கண்ண சுழுட்ட அடுத்த நாங்க கிளம்பின இடம் கன்னியாகுமாரி. சூர்ய அஸ்தமனம் அடுத்த பதிவில்...