Showing posts with label காமெடி மாதிரி. Show all posts
Showing posts with label காமெடி மாதிரி. Show all posts

December 15, 2011

மார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ

டிஸ்கி 1: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யார் மனதாவது புண்படுமேயானால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
டிஸ்கி 2: எனக்கிருக்கும் அரைகுறை அறிவை வைத்து எழுதியிருக்கிறேன். ஏதாவது பிழை இருப்பின் அறியாச் சிறுமி தெரியாமல் எழுதிவிட்டதாய் நினைத்துக் கொள்ளவும்.

விடிகாலை 5 மணிக்கு எழுந்து வாசன் தெருவிலிருக்கும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு அப்படியே வெண்பொங்கலை ஒரு கை பார்த்துவிட்டு வரலாமென்று வீட்டை விட்டு கிளம்பிய அனந்தராமன் என்கிற அனந்து மாமாவை நான்காவது குறுக்குத் தெருவில் நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்தியது.

பின்மண்டையில் விண்ணென்று வலித்தது அனந்து மாமாவிற்கு. மெல்ல கண் திறக்க முயன்று தோற்றார். கிணற்றுகுள்ளிருந்து சில பேச்சுகுரல்கள் கேட்டன.

"மாமே பெர்சு முள்ச்சு முள்ச்சு பார்க்குதுடா. நீ ஒடிப்போய் மன்னார இட்டா"

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த சீனில் ஆஜரானான் மன்னாரு. சிகப்பு அண்ட்ராயர் தெரிய மடித்துக் கட்டிய வெளுத்த கைலியும், பச்சை ஜல்லடை பனியனும் அணிந்திருந்தான். விழிகள் ரெண்டும் எக்ஸ்ட்ரா சிகப்பாக மிரட்டின. நீட்டி, மடக்கி முறுக்கி விடப்பட்ட மீசையையும், தாடை வரை தொங்கிக்கொண்டிருந்த அருவாவெட்டு கிருதாவையும் கிட்டத்தில் பார்த்த அனந்து அலறி மயங்கிச் சரிந்தார். அடுத்த ஒரு மணிநேரமும் தன் டாவான செகப்பியைப் பற்றி மன்னாரு சிலாகித்துக்கொண்டிருந்ததை கூட இருந்த மாரியும், சோடாவும் கேட்டுக்கொண்டிருந்தனர். மீண்டும் அனந்து கண் திறந்தார். இம்முறை அவர் அலறுவதுக்கு முன் அவர் வாய் மூடப்பட்டது.

இந்தாரு ஐயரே. உன்னாண்ட காசு புடுங்க உன்ன இங்க இட்டார்ல்ல. உன்னால என்க்கு ஒரு வேலை ஆவனும்.

என்ன என்பது போல் பயந்த பார்வை பார்த்தார் அனந்து. இம்முறை வாய் மலர்ந்தது சோடா.

ஐயுரே எங்க தலைக்கு கன்னடத்து பாட்டு நாலு சொல்லிக் கொடுப்பியாம்.

நீங்க சொல்றது நேக்கு புரியலை.

அதான் ஐய்ரே. இந்த கல்யாண மண்டபம் மாரி இர்க்குமே. அங்கன மேல குந்திக்கினு மண்டைய மண்டைய ஆட்டிப் பாடுவாங்களே. அது மாரி நாலு பாட்டு மன்னாருக்கு சொல்லி கொடு.

கர்நாடக சங்கீதமா? உங்களுக்கா என மறுபடி மயங்கினார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுகையில் மன்னாரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.
மன்னிச்சுடுங்கோ சார்வாள். உங்களுக்கு கத்துக்கொடுக்கற அளவுக்கு நேக்கு ஞானமில்லை. நேக்கு அந்த பிராப்தமும் இல்லை.

தா. இப்படில்லாம் உதார் விட்டா நாங்க வுட்ருவோமா? ரெண்டு மாசமா உன்ன வாட்ச் பண்ணினுருக்கோம் ஐய்ரே. நீ பெருமாசாமி கோவில்ல பாட்டு படிச்சதெல்லாம் கேட்டுட்டு தான் உன்னிய தூக்கினு வந்தோம். தெருவுல போறவன புட்சாரதுக்கு நாங்க இன்னா லூசா?

அனந்து எவ்வளவு மன்றாடிப் பார்த்தும் மன்னாரு மசியவில்லை. கண்ணில் நீர் வர கேட்டுப் பார்த்தார். ம்ஹூம். விதி விட்ட வழியென்று பெருமாள் மீது பாரத்தைப் போட்டு விட்டு மன்னாருக்கு கற்றுத்தரும் மனதைரியத்தை வரவழைத்துக்கொண்டார்,

நாம ஸ்வரத்துல இருந்து ஆரம்பிப்போம்.

அய்ய. இது இன்னாடா வம்பாக்கீது. பாட்டு கத்துக்க ஜுரம் வர்ணுமா. இன்னா ஜுரம்பா? சாதா ஜூரம் போதுமா? இப்பத்திக்கு ஏதோ மர்மக் காச்சல்ன்னு சொல்றாங்கோ. அத வரவச்சிக்கனுமா?

பெருமாளே. ஜூரம் இல்லை. ஸ்வரம். சங்கீதத்தின் அடிப்படை. நான் பாடறேன். நீங்களும் என் கூட பாடுங்கோ.

டூயட்லாம் வேணாம் ஐயரே. ஸோலோதான் வேணும். ஈரோ எண்ட்ரி கொடுக்க சொல்ல பாடுவாங்களே. அந்த மாதிரி.

கடைசில நீங்கதான் தனியா பாடுவேள்.

ஆங். கடைசிலல்லாம் கெடியாது. முதல்ல இருந்தே நான் தனியா தான் பாட்டு படிக்கனும்.

சரிங்க. அதுக்கு நீங்க பாட்டு கத்துக்கனுமோன்னோ. இப்ப கத்துக்கறச்சே நான் பாட பாட என் பின்னாடி இருந்து பாடுங்கோ.

ஏன் ஐய்ரே உனக்கு பின்னாடி போய் பாடனும். உன் முன்னாடியே குந்திக்கினு பாட்றேனே.

பெருமாளே. ஏன் என்ன இப்படி சோதனை பண்ற? இங்க பாருங்க. நான் பாடற மாதிரியே பாடுங்க

எச்ச

ரி

ர்ரீ

க்கா

ம்ம்மா

சரி விடுங்க. இதெல்லாம் கத்துக்க ரொம்ப நாழியாகும். நான் பேசாம உங்களுக்கு நாலு ராகத்துல பாட்டு சொல்லித் தந்துடறேன்.

பேசாம எப்படி ஐய்ரே பாட்டு சொல்லுவ. மைண்ட் வாய்ஸா?

இதோ பாருங்க. முதல்ல கிண்டல் பண்றத நிறுத்திட்டு சம்மணம் போட்டு உட்காருங்கோ. பாரதியார் பாட்டு ரெண்டு பாடிக் காமிக்கிறேன்.

இதாண வேணாங்கறது. எனக்கு கன்னட பாட்டு தான் வேணும். பாரதியாரு தமில்லல்ல பாட்டு எளுதிருக்காரு.

இதுவும் கர்நாடக சங்கீதம் தான்.

சரி. டேய் சோடா போய் அந்த பொட்டிய எடுத்துனு வா. ஐய்ரு பாட்றத புட்ச்சி வச்சு கத்துக்கலாம்.

நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டேளே?

என்ன ஐய்ரே?

இப்ப எதுக்கு உங்களுக்கு இந்த விபரீத ஆசை?

அத்த ஏன் கேக்குற ஐய்ரே. நம்ம டாவு சேப்பியிருக்குதே. அதுக்கு இந்த மாதிரி பாட்டுன்னா உசிராம். உன்னால இப்படி பாட முடியுமான்னு கேட்டுச்சு. மண்டபத்துல பாடி அத அசத்துனும்னு தான்.

அது சரி. பாட்ட ஆரம்பிக்கிறேன். இப்போ பாடப் போற பாட்டு அம்சத்வானி ராகம்.

யோவ் அம்சாவோட தாவணி பத்தில்லாம் பாட்டு வுட்டா சேப்பி கோச்சுக்கும்யா.

அம்சாதாவணி இல்லீங்க. அம்சத்வானி.

அருள் புரிவாய் கருணை கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே

யோவ் இன்னாய்யா இது. அழுது வடிஞ்சிகினு இருக்கு. கொஞ்சம் இறக்கி குத்துறாப்புல பாட்டு சொல்லு ஐய்ரே.

கர்நாடக சங்கீதத்துல அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நீங்க இதக் கத்துக்கோங்கோ. அடுத்ததும் பாரதியார் பாட்டு தான். இது பகடி ராகம்.

கபடி விளையாண்ட்ருக்கேன். இதென்ன பகடி?

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதயே நந்தலாலா

அடுத்தது காம்போதி ராகம்.

யாருக்கு பேதி?

பெருமாளே. யாருக்கும் பேதி இல்லை. இந்த ராகம் பேரு காம்போதி. பாட்டக் கேளுங்கோ.

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே

இது பாட்டு ஐய்ரே. அப்படியே பாடிக்கினே சேப்பியை ரொமாண்டிகா ஒரு லுக் விட்டேன்னு வை சொக்கிருவா.

கடைசியா மஹா கணபதி பாடிடுங்கோ. இது நட்டை ராகம்.

நெட்டை ராகம்ன்னா பாட்டு பெர்சாருக்குமா?

நட்டை ராகம்.

மஹா கணபதிம்
மனசார ஸ்வராமி

சோக்கா பாட்ற ஐய்ரே. இந்த கேசட்ட கேட்டு நாலு நாள்ல கத்துக்கிறேன். ஆங். மற்ந்துட்டேன். அய்ரே உன்னாண்ட சிலுக்கு ஜிப்பா இருக்கா?

எதுக்கு?

இல்ல நாங்க பாத்த ஆம்பிளங்க அல்லாருமே சிலுக்கு ஜிப்பா போட்டுனு தான் பாடினாங்க. அதான்..

என் சைஸ் உங்களுக்கு பத்தாது.

அப்படீங்கற. மாரி இன்னாடா பண்றது. பேசாம கைலியோடவே போய்டவா?

வேணாம் மன்னாரு. நம்ம டெய்லராண்ட சொன்னா இரண்டு நாள்ல ரெடி பண்றுவான்.

அப்புறம் சுத்தி உக்கார நாலு ஆளுங்க வேணுமேடா. அதுக்கும் ஏற்பாடு பண்ணு.

அப்பால ஒரு டவுட் ஐய்ரே. இதெல்லாம் சாமீ பாட்டுங்க தானே. கவுச்சியெல்லாம் சாப்புட்லாமா?

குளிர்ச்சியா எதுவும் சாப்பிடாதீங்கோ. காலைல எழுந்து கழுத்தளவு தண்ணில நின்னுண்டு சாதகம் பண்ணுங்கோ. மிளகு தட்டி போட்டு பால் குடிங்கோ. மும்மூர்த்திகள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

ரொம்ப டாங்க்ஸ் ஐய்ரே. அப்பாலிக்கா டைம் கெட்ச்சா ஊட்டாண்ட வந்து பாடி காமிக்கிறன். டேய் மாரி. ஐய்ர ஆட்டோல இட்டுனு போய் வூட்ல வுட்டுட்டு வாடா. டேய் சோடா அந்த மண்டபம் மேனேஜரு வூட்ட வாட்ச் பண்ண ஆரம்பிடா.

-மார்கழி ஆரம்பிப்பதை முன்னிட்டு மீள்ஸ்:)

May 17, 2011

பழிக்கு பழி

கொலைப்பட்டினியோடிருக்கும் பத்து சிங்கங்களிருக்கும் குகையின் வாசலில் நிற்கும் ஆடு போல் DK கல்யாண மண்டப வாசலில் நின்றுக்கொண்டிருந்தேன். அவசியம் உள்ளே போகத்தான் வேண்டுமா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. வேறு வழியில்லை. போய்த்தான் ஆக வேண்டும். கண்களை மூடி ஒரு தடவை மூச்சை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டேன். மனதைரியத்தை வரவழத்தைக்கொண்டு உள்ளே நுழைந்தேன். வராந்தா போன்றிருக்கும் அமைப்பில் சிதறிய அன்ன உருண்டைகளை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்கள் நடுவயதுப் பெண்கள். ”இப்பக்கூட ஒன்னும் கெட்டுப்போய்டல. அப்படியே திரும்பி ஓடிடு” என என் மூளை எச்சரித்துக்கொண்டிருக்கும்போதே “ஹேய் ஸ்வேதா. வா வா வா. என்ன அங்கேயே நின்னுண்டிருக்கே. உள்ளே வா. அப்பாம்மா வர்லையா?” எனக் கேட்டபடியே என் பதிலை எதிர்பார்க்காமல் சச்சு மாமி என் கையைப் பிடித்து தரதரவென உள்ளே இழுத்துக் கொண்டு போனாள். என்னைக் கொண்டுபோய் அவள் நிறுத்திய இடத்தில் சங்கர் மாமா உட்கார்ந்திருந்தார்.

”என்னடீ இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட? இன்னும் சாவகாசமா விளையாடலுக்கு வந்திருக்கலாமே” என்றார் சங்கர் மாமா நக்கலாக.

“இல்லை மாமா. ரொம்ப ட்ராஃபிக். தாலி கட்டியாச்சா? என்றபடியே மேடையில் என்ன நடக்கிறது என நோட்டம் விட்டேன். மடிசாரில் சுமியைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. மரப்பாச்சிக்கு புடவை சுற்றுவது போல் கட்டிவிட்டிருந்தார்கள். நான்குக்கும் மேற்பட்ட மாற்று மாலைகள் வேறு. புகையில் வெந்துக்கொண்டிருந்தாள். அப்பப்போ சுரேஷின் காதில் எதுவோ ஓதிக்கொண்டிருந்தாள், சாஸ்த்ரிகள் மாமாவிற்குப் போட்டியாய். ”அது ஆச்சு பத்து நிமிஷம். வந்ததிலேர்ந்து நின்னுண்டேயிருக்கியே. சித்த இங்க வந்து உட்காரு” என சங்கர் மாமா சேரைக் காமித்தார்.

“இருக்கட்டும் மாமா. நான் போய் சுமியைப் பார்த்திட்டு ஓதியிட்டுட்டு வந்துட்றேன்.”

“பாணிக்ரஹனம் போய்ண்டுருக்குடி. அப்பாம்மா ஏன் வரல”

“அம்மாக்கு உடம்பு முடியல மாமா. அப்பா மீட்டிங் கிளம்பிட்டாரு.” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அதானே. எங்காத்து விசேஷம்னா மட்டும் உங்கம்மாக்கு உடம்புக்கு முடியாம போய்டுமே” என நொடித்தபடியே வந்தமர்ந்தாள் புவனா மாமி. பின்னாடியே சீதா மாமி, சேஷு மாமா என ஒரு பெரும்படையே வந்துகொண்டிருந்தது. கோபு மாமாவின் ஏப்பத்தில் எல்லோரும் டைனிங் ஹாலில் போர் பண்ணிட்டு வந்திருக்கிறார்கள் எனப் புரிந்துக்கொண்டேன். ”என்னடி நன்னாருக்கியா. இப்படியே ஒசந்துண்டே போனா ஒங்கப்பன் மாப்பிள்ளை எப்பட்றி தேடுவான்?” என அவருடைய முறக்கையால் என் முதுகில் ஒன்று வைத்துவிட்டு அமர்ந்தார் பாலு மாமா. “இத அடிக்காம சொல்லக்கூடாதா மாமா. வலிக்கறது” என்றேன். அடுத்து எந்தப் பக்கத்திலிருந்து யார் அட்டாக் பண்ணுவாங்க என யோசித்துக்கொண்டிருக்கும்போதே முதல் வெட்டு விழுந்தது.

“அப்புறம் வேலையெல்லாம் எப்படி போய்ண்டிருக்கு?”

“ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்ல மாமா. போறது”

“BTSல தான வேலை பார்க்கிற?”

“ஆமாம்”

“என் தங்கை பையன் கூட அங்கதான் வேலை பண்றான். இரு அவள கூப்பிடறேன்” என்றாவரே ”மங்களா இங்க வாயேன்” எனக் கத்தினாள் சீதா மாமி.

மங்களா என்றழைக்கப்பட்ட அந்த மாமி தன் பெருத்த சாரீரத்தை உருட்டிக்கொண்டு வந்து சேர்ந்தாள்.

“நம்ம ஸ்ரீதர் பொண்ணுடி. உன் பையன் வேலை பண்ற கம்பெனிலதான் இவளும் இருக்கா” என்றாள் சீதா மாமி.

“ஓஹ் அப்படியா. எப்ப ஜாயின் பண்ண கொழந்தே” என்ற மாமியின் குரல் வெண்கல கடையில் யானைப் புகுந்தாற்போலிருந்தது.

“7 இயர்ஸ் ஆய்டுத்து”

“எம்பையன் எட்டு மாதத்திற்கு மின்னதான் சேர்ந்தான். நீ எந்த ஆஃபிஸ்?”

“சிட்டி ஆஃபிஸ்”

“ஓ. அவன் மெயின் ஆஃபிஸிலருக்கானாக்கும். ட்ரெய்னிங்ல ரொம்ப நன்னா பெர்ஃபார்ம் பண்றாவளைத்தான் மெயின் ஆஃபிஸ்ல போடுவாளாமே” என மாமி மொக்கைப் போட ஆரம்பித்தார். இதுக்கே டென்ஷன் ஆனா எப்படிங்கற மாதிரி அடுத்தடுத்து நான் ஸ்டாபாக அள்ளி வீசிகொண்டிருந்தார்.

“மஹா ட்ரெய்னிங்கல பெர்ஃபார்ம் பண்றத பார்த்து கம்பெனில அவனுக்கு ஒரு வீல் வச்ச சூட்கேஸ் கிஃப்ட் பண்ணாங்க தெரியுமோ.”

“அசடே. அது பேர் ஸ்ட்ராலிடி. ஹாய். ஐ’ம் கேஷவக் கிருஷ்ணன். மங்களா ஹஸ்பெண்டு” என்று கை கொடுத்தபடியே அமர்ந்தார். கேஷவக் கிருஷ்ணனில் அந்த ஷவுக்கு அவர் கொடுத்த அழுத்தமும், நெற்றிச் சந்தனமும் நான் மலையாளி என மைக் போட்டு அறிவித்தன.

"மஹா சின்ன வயசுலருந்தே ரொம்ப ப்ரில்லியண்ட். காலேஜ்ல கூட டாப்பர். ட்ரெய்னிங்ல எக்செல் பண்ணதால ஹெச்.ஆர் இவன கம்பெனியோட பெஸ்ட் ப்ராஜெக்ட்ல தான் போடனும்ன்னு ஹோல்ட் பண்ணி வச்சிருக்கா தெரியுமோ.” என அவர் பங்கிற்கு அடித்துவிட்டுக்கொண்டிருந்தார். இன்னும் ரெண்டு நிமிஷம் இவங்க பேசறதைக் கேட்டா ஸ்வேதா செத்திருவாள் ரேஞ்சுக்கு இருந்தது கணவன் மனைவியில் அலப்பறை. ஆபத்பாந்தாவன் அநாதரட்சகனாக சாஸ்திரிகள் மாமாவின் அனொன்ஸ்மெண்ட் கேட்டது. “பாணிகிரஹனம் ஆயிடுத்து. விஷ் பண்றாவா எல்லாம் வரலாம்”. எஸ்கேப் ஆகிடு ஸ்வேதா என மைண்ட் வாய்ஸ் சொல்ல சிங்கங்களிடம் விடை பெற்றுக்கொண்டு, சுமியைச் சந்தித்து, கவரைக் கொடுத்து, கொஞ்சம் பேசிவிட்டு, ஃபோட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒரு வழியாய் மண்டபத்தை விட்டு வெளியே வருவதற்குள் வேர்த்துவிட்டது.

ஆஃபிஸ் வந்து சீட்டில் அமர்ந்ததும் ஹேமா வந்தாள்.

“இந்தாடி ப்ரிண்ட் அவுட். ஹெச்.ஆரிலிருந்து பன்னெண்டு ப்ரொஃபைல் மெயில் பண்ணிருந்தாங்க. எனக்கு தேவையானது ஒன்னும் இல்ல. உனக்கு ஒத்து வருமா பாரு.’

“தேங்ஸ்டி.”

“தேங்ஸ் எல்லாம் அப்புறம். கல்யாணத்துல ஒரே குளுகுளுன்னு இருந்ததா? எத்தனை தேறிச்சு?”

“கொலவெறில இருக்கேன். போய்டு.”

“ஏன் எல்லாமே அம்மாஞ்சியாத்தான் இருந்ததுகளோ?”

“அடியேய்ய்ய்ய்ய்”

“சும்மா சொல்லுடி”

“கடுப்பேத்தாதடி. ஒரு மொக்கை பார்ட்டிங்க கிட்ட மாட்டிகிட்டு முழி பிதுங்கி வந்திருக்கேன். என்னமோ அவங்க புள்ளதான் கம்பனியையே தாங்கற மாதிரி ஸீனப் போட்டாங்கடி. கம்பெனில கொடுக்கற இயர்லி கிஃப்ட்ட பெர்ஃபார்மன்ஸுக்கு கொடுத்ததா சொல்றாங்கடி. நீ மட்டும் என் இடத்துல இருந்திருந்தா கொலையே பண்னிருப்படி” என நடந்தவற்றை அவளிடம் சொல்லி முடித்தேன்.

கண்ணில் நீர் வர சிரித்தவள், என் PM வருவதைப் பார்த்துக் கிளம்பினாள்.

“ஹாய் ஸ்வேதா. Is everything ok?"

"யெஸ் வேலு.”

“டீம் ஃபார்ம் பண்ணிட்டீங்களா?”

“Yet to. இன்னைக்குதான் ஹெச்.ஆரிலிருந்து ப்ரொஃபைல்ஸ் அனுப்பிச்சிருக்காங்க. Have to go through and"

"ஓ நோ. We dont have ample time swetha. நீங்க ஒன்னு பண்ணுங்க. இண்டர்வியூவெல்லாம் வேண்டாம். If you are satisfied with the profile, pull them into the team."

"ஆனா வேலு, இது ரொம்ப ஹெவியான வொர்க்.”

“நெவர் மைண்ட் யா. ஷிஃப்ட்ஸ் கேன்சல் பண்ணுங்க. டெட்லைன்ஸ் ஷார்ட்டன் பண்ணுங்க. you know how to get the work done."

ஹூம்ம்ம். ஈசியா சொல்லிட்டுப் போய்டுவார். டீம் மெம்பர்ஸ வேலை வாங்கறதென்ன அவ்ளோ ஈசியா. ஃப்ரெஷர்ஸ் மட்டும் தான் எவ்ளோ நேரமானாலும் உட்காருவாங்க. என்னத்த பண்ண என மனதிற்குள் புலம்பியபடியே ஹேமா வைத்துவிட்டுப் போன ப்ரிண்ட் அவுட்களைப் புரட்ட ஆரம்பித்தேன். நடுவில் இருந்த ரெசுயூமைப் பார்த்ததும் எனக்குள் இருந்த ஓனிடா சாத்தான் குரூரப் புன்னகை புரிந்தது.

Name : Mahadevan Keshava Krishnan

வாடி வா.......

March 8, 2011

தோத்துப் போனப்புறம்

இங்கு சிறந்த முறையில் ப்ரோகிதம் நடத்திதரப்படும் (திருமணங்களுக்கு மட்டும்)

-கலைஞர்
அறிவாலயம்
***************

இங்கு குறைந்த விலையில், 365 நாட்களும் ஓய்வுச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.

-செல்வி. ஜெயலலிதா
ஜெஜெ டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்
போயஸ் கார்டன், கொடநாடு, சிறுதாவூர்
(எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை)
***************

இங்கு சிறந்த முறையில் ஹை ஜம்ப், லாங் ஜம்ப் பயிற்சி அளிக்கப்படும். இருபது வருட அனுபவம் ஆய்ந்த ஆசிரியரின் மேற்பார்வையில் வகுப்புகள் எடுக்கப்படும்

-டாக்டர் இராமதாசு
தைலாபுரம் தோட்டம்
****************

ஆசைப்பட்ட பொருள் கிடைக்காமல் கை நழுவிப் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற இங்கு வகுப்புகள் எடுக்கப்படும். அதோடு அண்ணனை சமாளிப்பது எப்படி என்ற கோர்சும் இலவசமாக கற்றுத்தரப்படும்.

இலவுக் காத்த கிளி ஸ்டாலின்
முன்னாள் மேயர், எதிர்கால முதலமைச்சர்
ஆயிரம் விளக்கு
*****************

மீசையில் மண் ஓட்டினால் மீசைக்கு பாதிப்பு வராமல் துடைப்பது, மடக்கி முறுக்கு மீசை வளர்ப்பது முதல் மீசைக்கென்றே தனித்துவமாக ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி பட்டறை.

திருமாவளவன்
சிறுத்தைக்குட்டி பயிற்சி பட்டறை
கொழும்பு ஏர்போர்ட்
******************

இங்கு சுத்தமான, சுவையான கூட்டு வகைகள் சப்ளை செய்யப்படும்

கேப்டன் கேட்டரிங் சர்வீஸ்
******************

அமைதியான குளத்தில் குவா குவா எனக் கத்தியபடியே தவளைக்கல் எறிவது எப்படி, வாயாலேயே வடை சுடுவது எப்படி போன்ற பராம்பரியமிக்க விளையாட்டுகள் இங்கு பயிற்றுவிக்கப்படும்

-ஈ.வி.கேஸ் இளங்கோவன் & கோ
- யுவராஜா & கோ

பி.கு : மேற்குறிப்பிட்டுள்ள இரு கம்பேனிகளுக்கும் தலைவர் ஒருவர்தான். ஆனால் கம்பேனி வேற வேற.
***************

வெறிச்சோவென்றிருக்கும் ஆஃபிஸில், பயமில்லாமல் தைரியமாய் உட்கார்ந்து ஈ ஓட்டுவது எப்படி என்ற கலை இங்கு பயிற்றுவிக்கப்படும். பயிற்சிக்கு பணம் கட்டுபவர்களுக்கு கால் கிலோ விபூதியும், குங்குமமும் இனாமாக வழங்கப்படும்.

-கமலாலயம்
***************

எங்கள் கார்டனில் தோப்பைப் போல காட்சியளிக்கும் ஒத்தை மரம், ஒரு இலை கூட இல்லாத மரம், கண்ணீர் வடிக்கும் மரம், போன்ற அரிய வகை மரங்கள் விற்பனைக்கு

வைகோ
தாயகம்
***************

பிஸினசில் நன்றாக லாபம் பார்த்த பின்னர், குடைச்சல் கொடுத்து, பார்ட்னரே தங்களை வெளியே துரத்துவது எப்படி? தகுதிக்கு மீறி ஆசைப்படுவது எப்படி? போன்ற வாழ்க்கைக்கு உபயோகமான பயிற்சிகள் அளிக்கப்படும்.

-காங்கிரஸ் தலைமை
*****************

எல்லாவிதமான பக்கவாத்தியங்களும் இங்கு சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படும். ஸ்ருதி சுத்தமாய் ஜால்ரா அடிப்பதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும் வகுப்புகள்.

வீரமணி, சுப.வீ, தங்கபாலு
********************

January 21, 2011

தெரியலயேப்பா...தெரியலயே...

நீங்க நல்லவரா கெட்டவரா? தெரியலேயேப்பா...தெரியலயே.. ஸ்டைலில்

ராமதாஸிடம் - உங்களை திமுக கூட்டணில சேர்த்துக்குமா? சேர்த்துக்காதா?

அம்மாவிடம் - ரெஸ்ட் எடுக்க கொடநாடு பெஸ்ட்டா? சிறுதாவூர் பெஸ்ட்டா?

நடிகர் விக்ரமிடம் - உங்க அடுத்த படம் 2016ல ரிலீஸாகிடுமா?

கலைஞர் கருணாநிதியிடம் - டெல்லிக்கு மெசேஜ் கொடுக்க கடுதாசி பெட்டரா? தந்தி பெட்டரா?

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் - எது ஈசி? இடமிருந்து வலம் தலையாட்றதா? வலமிருந்து இடம் தலையாட்றதா?

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சிலரிடம் - எந்த மொழிப் படங்கள் சுடுவதற்கு ஏற்றவை? கொரியப் படங்களா? ஜப்பானியப் படங்களா?

தமிழ் மையம் ஜெகத் கஸ்பரிடம் - எது சுலபம்? பத்திரிக்கையாளர்களின் கேள்விகளா? சிபிஐ கேள்விகளா?

வரும்....ஆனா வராது...ஸ்டைலில்

மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் - ஊழல் நடந்துச்சா இல்லையா? = நடந்துச்சு.. ஆனா நடக்கலை

இளங்கோவன்/யுவராஜிடம் - காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா? - போட்டியிடும் ஆனா போட்டியிடாது.

சிபிஐயிடம் - ஆ.ராசாவை கைது செய்வீங்களா மாட்டீங்களா? = செய்வோம். ஆனா செய்யமாட்டோம்..

January 3, 2011

நடிகர் விஜய்யிடம் பகிரங்க மன்னிப்பு

ண்ணா சத்தியமா இனிமே விஜய் ஏன் கெட்டப் சேஞ்ச் பண்ணமாட்டேங்கறாருன்னு கேக்கவே மாட்டேங்ண்ணா

November 26, 2010

டாக்டர் கேப்டன் வால்க வால்க

நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது நடந்தேறிவிட்டது. குருவியே டாக்டர் பட்டம் வாங்கும்போது அது பறக்கும் (அல்லது பறப்பதாக நம்பப்படும்) விண்ணையே ஆளும் எங்கள் விண்ணரசுக்கு டாக்டர் பட்டம் தாமதமாய்த் தான் தரப்பட்டிருக்குறது. Better late than never என்று மனசை தேற்றிக்கொண்டு விலா எடுக்க ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்துக்கொண்டிருக்கின்றது. ஜிப் வெச்ச ஷூ போடும் ஜூப்பர்மேன், டார்ச் வெச்ச தொப்பி போடும் தமில்தலைவன், விருத்தகிரி தரப்போகும் வித்தகன், கரண்டுக்கே ஷாக் கொடுக்கும் ட்ரான்ஸ்பார்மர், புல்லட்டையே புஸ்வாணமாக்கும் பூகம்பம் டாக்டர் கேப்டன் வால்க வால்க..

************

கேப்டனா நடிச்சேன் கேப்டன் பட்டம் கொடுத்தீங்க. டாக்டரா நடிச்சேன். டாக்டர் பட்டம் கொடுத்தீங்க. அடுத்தது முதலமைச்சரா நடிக்கப் போறேன். பார்த்து பண்ணுங்க சாமீங்களா

ஃபோர் பீசஸ். நாட் இனஃப்..Sing in the rain..

கேப்டன் : நீ வேணா பாரேன். எதிர்காலத்துல இந்தக் குழந்தைங்க எதுக்குமே பயப்படாத மாவீரர்களாக வருவாங்க.

அண்ணி : எதை வெச்சு சொல்றீங்க?

கேப்டன் : என்னை இவ்ளோ கிட்டத்துலப் பார்த்தும் அழுகாம தைரியமா இருக்குதுங்களே. அதான்.

ஏய் இந்தாப்பா போட்டோகிராஃபர். என்னை மட்டும் எடு. கீழே உடைஞ்சிகிடக்கும் மெஷினையெல்லாம் எடுக்காதே.

அடுத்த படத்துல நான் BMஆ (PM) நடிக்கிறேன். கதை என்னான்னா, இந்தியாவின் தலைசிறந்த MNC கம்பெனில ஸ்டாஃபுகளா ஊடுருவி இந்தியாவை அழிக்கிற சாஃப்ட்வேர் ஒன்ன இன்ஸ்டால் பண்ற பாகிஸ்தான் தீவிரவாதிய ஒழிக்கிறேன். இந்தியால மொத்தம் முந்நூத்தி சொச்சம் சாஃப்ட்வேர் கம்பெனி இருக்கு....

ஏன்ப்பா இன்னும் கொஞ்சம் பெரிய விசிறி வாங்கிட்டு வந்திருக்கக்கூடாதா? பாரு எங்க ரெண்டு பேருக்கும் காத்தே போத மாட்டேங்குது.

யார்றா அது என்ன கிண்டல் பண்றது? என்கவுண்டர் பண்ணிடுவேன் ஜாக்கிரத.

டிஸ்கி : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்ட பதிவு.

October 28, 2010

மன்னிப்பு கேட்கிறார் ஆமிர்கான்

நல்ல வேளை தப்பிச்சேன். முச்சந்தில நிக்க வச்சு எந்திரன் பாருங்கன்னு பிட் நோட்டீஸ் விநியோகம் பண்ண சொல்லல.

சொன்னா புரிஞ்சிக்கோங்க ஒபாமாஜி. நீங்க என்னைப் பார்க்கலன்னா கூட பரவாயில்ல. கலைஞர் பார்க்காம மட்டும் போய்டாதீங்க.

சொன்னா கேளுங்க தலைவரே. நீங்க கதை வசனம் எதுவும் இப்போதைக்கு எழுத வேண்டாம். அப்புறம் அங்க வேடிக்கப் பார்க்க சேர்ந்த கூட்டம் வோட்டு போடற கூட்டமாயிடும்.

சரி சரி. ஜெயிச்சா தலைமைச்செயலகத்த கொடநாட்டுக்கு மாத்த மாட்டேன்.

அதோ அங்க ஒருத்தர் நிக்கறாரு பாருங்க. இப்போதைக்கு அவரும் நானும் தான் கட்சில இருக்கோம்.

நான் ஆட்சிக்கு வந்தால் என் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வரும் அனைத்து மக்களுக்கும் இலவச ஆயூள் காப்பீடு வழங்குவேன்.

நிம்மதியா பாத்ரூம் கூட போக முடியல சார். எங்க, எப்ப எவன் கேமராவோட வருவான்னே தெரியமாட்டேங்குது.

யப்பா ஜெமினி சர்க்கஸ்ல அந்தரத்துல தாவறதுக்கு ஆள் குறையுது. நீங்க வர்றீங்களான்னு கேக்கறான்ப்பா

பாவம். அவங்களோட கவிதைகளை தெரியாத்தனமா படிச்சிட்டாங்களாம்.

நெஞ்சத் தொட்டு சொல்றேன். இப்படி ஒரு கொடுமை நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா 3 இடியட்ஸ் படத்துல நடிச்சிருக்கவே மாட்டேன். தமிழ் மக்கள் என்னை மன்னிச்சிருங்க.

September 15, 2010

எந்திரன் விமர்சனம் எழுதுவது எப்படி?

எந்திரன் ரிலீஸ் தேதி தெரிந்துவிட்டது. சன் டிவி ஒரு பக்கம் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கிறது. நம்மைப் போல சாதரணமான மக்களுக்கு டிக்கெட் கிடைக்க எப்படியும் 2 வாரத்திற்கு மேலாகிவிடும். அதுக்குள் எண்ணிலடங்கா விமர்சனப் பதிவு வந்துவிடும். இரண்டு வாரங்கள் கழித்து விமர்சனப் பதிவு போட்டால் “கல்யாணத்திற்கு வரச்சொன்னால் காது குத்திற்கு வர்றியே” என சகப் பதிவர்கள் எள்ளி நகையாடுவார்கள். பிறரின் சிரிப்புக்கு ஆளாகாமல் விமர்சனப் பதிவு எழுதுவது எப்படி? சில ஐடியாக்களை இங்கே குடுத்திருக்கிறேன்.

#முதலில் தியேட்டருக்கு சென்றதைப் பற்றி ஒரு பத்தி எழுதனும். ட்ராபிக்கில் மாட்டியதைப் பற்றி, கிளம்பும்போது காலில் இடித்துக்கொண்டதைப் பற்றி, சீட் சரியில்லாததைப் பற்றி என எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் கண்டிப்பாக அது படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்க வேண்டும்.

#ஹீரோவின் எண்ட்ரியை பாராட்டியோ, எதிர்த்தோ ஒரிரு வரிகள் எழுதலாம். என்ன எண்ட்ரி என்று சிலாகித்தோ, என்ன எண்ட்ரி இது (என்ன எழவு இது) என்ற பாணியிலோ எழுதலாம்.

#படம் ஆரம்பித்து முடியும் வரை வரும் சீன்களைத் தான் விமர்சிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நாம் படம் பார்க்காமல் விமர்சனம் எழுதப் போவதால் கொஞ்சம் பின்நவீனத்துவ முயற்சியாக நடிகர்களையும், இசையையும், மற்றவற்றையும் விமர்சித்தே எழுதலாம். இங்கு பின்நவீனத்துவ முயற்சி என்பது யாருக்கும் புரியாத மாதிரியும், எழுதப்போகும் நமக்கு (மட்டுமே) எல்லாம் தெரியும் என்கிற மாதிரியுமான முயற்சி என்பதை நினைவில் உட்கார வைத்துக்கொள்ளுங்கள்.

#இந்தியர்களை திருடர்களாக சித்தரித்த ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கிய பின் ரஹ்மான் இசையில் அதீத மேற்கத்திய பாணி தெரிகிறது (அ) ரஹ்மான் இந்தியர்களுக்காக குரிப்பாகத் தமிழர்களுக்காக இசையமைக்காமல் ஏகாதிபத்தியம் பக்கம் சாய்ந்தது துரதிருஷ்டவசமானது. காதல் அணுக்கள் பாடலில் 3ஆவது நிமிடம் 45ஆவது நொடியில் வரும் அந்த கித்தார் ஒலிக்காகவே ரஹ்மானிற்கு ஆஸ்கார் குடுக்கலாம். பிண்ணனி இசை அருமை.

#காதல் காட்சிகளில் இளமை கொப்பளிக்கிறது (அ) ரஜினி தாத்தாக்கு இதெல்லாம் தேவையா என ஆண் பதிவர்களும், ஐஸ் பாட்டியைப் பார்க்க சகிக்கவில்லை என பெண் பதிவர்களும் எழுதிக்கொள்ளலாம்.

#ரஜினியின் உதவியாளர்களாய் வரும் சந்தானமும் கருணாஸும் பட்டையைக் கிளப்புகிறார்கள். கதையோடு ஒன்றி வரும் காமெடி ட்ராக் படத்தின் மிகப்பெரிய பலம் (அ) ஒரு மெத்தப் படித்த சயிண்டிஸ்ட் இப்படிப்பட்ட உதவியாளர்களையா வைத்துக்கொள்வார். ரோபோ உதவியாளர்களை ஏய்க்கிறதாம். கருமம்.

#படத்தில் வரும் CG காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருக்கிறது. பிரம்மாண்டம் படம் முழுவதும் மிரட்டுகிறது (அ) இத்தனைப் பொருட்செலவில் இப்படி ஒரு குப்பை தேவையா? கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளைப் பார்க்கும்போது புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டது நினைவுக்கு வருகிறது (காசும் செலவு செய்யக் கூடாது. படமும் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கனும்ன்னு எதிர்பார்க்கிறது நியாயமா என கேள்விகள் யாரும் கேட்டால் அவர்களைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்).

#கூகிள் சர்ச்சில் ரோபாடிக்ஸ் எனத் தேடுங்கள். வந்து விழும் முதல் இரண்டு லிங்கைப் படிக்காதீர்கள். முதல் பக்கத்தில் தெரியும் கடைசி இரண்டு லிங்கைப் படித்து வைத்துக்கொள்ளுங்கள். முழுவதும் படிக்க முடியவில்லையெனில் நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத சயிண்டிபிக் வார்த்தைகள் நான்கை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். CG பற்றி எழுதும்போது இந்த வார்த்தைகளைப் பரவலாக உபயோகிப்பதன் மூலம் நீங்கள் ரோபோடிக்ஸில் மிகப் பெரிய ஜாம்பவான் என அறியப்படுவீர்கள்.

#எந்திரன் - மந்திரன்
எந்திரன் - தந்திரன்
எந்திரன் - முழு சந்திரன்

(அ)
எந்திரன் - காயலான் கடைக்கு
எந்திரன் - உயிரில்லை
எந்திரன் - துருப்பிடித்த இரும்பு

பி.கு : ஆதரவாகவும், எதிர்த்து எழுதவும் சில குறிப்புகளும், இரண்டித்திற்குமே பொதுவாக சில குறிப்புகளும் இருக்கின்றன. உபயோகித்து பயன் பெறுக.

August 24, 2010

க.மு Vs க.பி - ஒரு ஆய்வு

ஆணோ பெண்ணோ கல்யாணமானதிலிருந்து நிறைய அல்லது கொஞ்சமே நிறைய விஷயங்களில் விட்டுக்கொடுத்தல்/அட்ஜெஸ்ட்/வேறுவழியில்லாமல்/தலையெழுத்தே என பல விஷயங்களை கடக்கவேண்டியிருக்கிறது. இருவருக்குமே காமனான டயலாக். அடிக்கடி கேட்கும் டயலாக். ”கல்யாணத்துக்கு முன்னால நான் எப்படியிருந்தேன் தெரியுமா?” கொஞ்சம் மாற்றி எள்ளலோடு மற்றவர்கள் முன் கலாய்க்க ”எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்”.

இந்த நொந்தல்ஸ் நூடுல்ஸை பெண்கள் வாய்விட்டு சொல்லிவிடுகிறார்கள். ரங்கமணிகள் வழக்கம்போல் ஊமைக்கோட்டான்களாய் கமுக்கமாய் மனதிற்குள்ளே கறுவிக்கொண்டிருந்து சமயம் பார்த்து எடுத்துவிட்டு அப்செட் ஆக்குவார்கள். என்னோட சில க.மு க.பி கம்பேரிஷன்கள்.

# மணி பத்தாகப்போதுடி. இன்னுமா தூங்கறே - அம்மா
விடியற்காலைல எழுப்பாதேன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன். சூரியன் உச்சிக்குப் போறதுக்குள்ள நான் எழுந்தா உலகத்துக்கு ஆகாதுன்னு உடுமலைபேட்டை உலகநாதன் சொன்னது மறந்திருச்சா??

@ மணி 6.30 தானேம்மா ஆறது. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கேம்மா - மாமியார்
தூக்கம் வரலம்மா. சீக்கிரம் எழுந்து பழக்கமாயிடுச்சு (டமார். எங்கோ ட்ரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறும் சத்தம். என் மனசாட்சியாகவும் இருக்கலாம்).
*******************

# குளிச்சிட்டு தான் சாப்பிடேண்டி - அம்மா
சட்னில இன்னும் கொஞ்சம் உப்பு போடுமா.

@ சூடா இருக்கும்போதே நீயும் சாப்பிடேன்மா - மாமியார்
ஒரே கசகசன்னு இருக்குமா. குளிச்சிட்டு சாப்பிடறேனே.
*********************

# வெள்ளிக்கிழமையதுவுமா நகம் வெட்டிக்கிறியேடி. கிளம்பு கோயிலுக்கு போய்ட்டு வரலாம் - அம்மா
நீ போய்ட்டு வா. பிள்ளையார் கோவிலுக்கு போம்மா. சுண்டல் கொடுப்பாங்க.

@ மணி ஆறாகப் போகுது விளக்கேத்திடவாம்மா
*********************

# இந்தக் கனகாம்பரத்த வச்சிக்கோயேண்டி - அம்மா
நானென்ன கரகாட்டமா ஆடப்போறேன். போய்டு.

@ கதம்பம் வச்சுக்கோம்மா - மாமியார்
(மனதுக்குள்) பச்சை மஞ்ச சிவப்பு தமிழன் நான்:(
******************

#ஏண்டி சுரேஷ் கல்யாணத்துக்கு பட்டுப் புடவை கட்டிக்கோயேண்டி.
ஏன் சல்வார் போட்டுகிட்டு வந்தா உன் அக்கா பையன் பொண்ணுக்கு தாலி கட்டமாட்டானா?

என் நாத்தனாரின் மாமியாரின் தங்கை பேரன் காதுகுத்துக்கு அகல பார்டர் வச்ச பட்டுப் புடவையை ஆறுமணிநேரம் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தேன்.
******************

#சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவறியேடி. ஆம்பிள புள்ளமாதிரி வளத்திருக்கீங்க பொண்ண - அத்தை.

@என்னம்மா சாப்பிட்ட தட்ட கொண்டுபோய் சிங்க்ல போடற. எச்சத் தட்ட கழுவி கவுக்கனும். தெரியுதா??

டிஸ்கி : இந்தப் பதிவை ஹஸ்பெண்டாலஜி ப்ரொபசர் டாக்டர் புதுகை தென்றலக்காவுக்கும், எப்படியெல்லாம் சந்தேகப்படனும்னு பதிவு போட்டு சொல்லிக் கொடுக்கும் விதூஷக்காவுக்கும் டெடிகேட் பண்ணிக்கிறேன்.

மு. டிஸ்கி : எதுக்கு காம்ப்ரமைஸ் பண்ணிக்கனும், ஏன் ஆக்டிங் விடனும்ன்னு அதிபுத்திசாலித்தனமான கேள்விகளை கேக்கற கல்யாணமானவங்களுக்கு பூரிக்கட்டை/அதிகம் சேதம் விளைவிக்கக்கூடிய ஆயுதத்தால் சரி மொத்து வாங்குவீர்கள் என்றும், கல்யாணம் ஆகாதவர்கள் சீக்கிரமே கல்யாணம் ஆகி மேற்கூறிய வரத்தை அனுபவிக்கப் பெறுவார்கள் என பணிவுடன் எச்சரிக்கப்படுகிறார்கள்.

August 18, 2010

அரியர்’ஸ் பையன்

லைப்ரரிக்கு போனியா?

ஆமாண்ணே.

மினி ஜெராக்ஸ் எடுத்தாதான் பாஸ் பண்ண முடியும்ன்னு சொன்னியே. இப்ப இந்தக் காலேஜோட நெலம முழுசா புரிஞ்சுதா.

நல்லாவே புரிஞ்சுது. நான் செஞ்ச தப்புக்கு தண்டனையா இந்தக் காலேஜ விட்டே போய்டலாம்னு இருக்கேன்.

காலேஜ விட்டே போறீயா? பெயிலான பேப்பர அரியர் எழுதி க்ளியர் பண்ணாம போறேங்கறது எந்த ஊர் நியாயம்?

அதுக்காக திரும்பவும் அதே சப்ஜெக்ட்ட படிக்கறது ரிவிஷன்ங்கற பேர்ல நடக்கற மொக்கத்தனம்.

மொக்கப் போடுற கூட்டத்துல இந்த சீனியரும் ஒருத்தங்கறத மறந்துராத.

அப்படிப் பார்த்தா நானும் அந்த மொக்க கூட்டத்துல ஒருத்தன் தான் அண்ணே. இரண்டு வருஷமா அரியர் க்ளியர் பண்ண முடியாம தவிக்கிற இந்தப் பசங்களுக்கு மத்தில பாஸ் பண்ண நான் கத்துக்கிட்ட அட்வான்ஸ்ட் டெக்னிக்கெல்லாம் வீணாப் போய்டுமோன்னும் பயமாருக்கு அண்ணே.

இரண்டு வருஷமா அரியர் க்ளியர் பண்ணாம இருக்காங்கறத ஒத்துக்கறேன். இருவது வருஷமா, புக்கையும், புக்கிலருந்து கிழிச்ச பக்கத்தையும் வச்சிகிட்டு பாஸ் பண்ணிகிட்டிருந்த பயக. ஜூனியர் பசங்க பாஸ் பண்ண கஷ்டப்பட்டப்போ ஓடிப்போய் மொத ஆளா பிட் பாஸ் பண்ண பயக நம்ம பயக தான். திடீர்ன்னு அவன பிட்டத் தூக்கிப் போட்டுட்டு மினி ஜெராக்ஸ்
யூஸ் பண்ணுடான்னா எப்படி பண்ணுவான்? நீ மினி ஜெராக்ஸ் யூஸ் பண்ண பயதான? நீ சொல்லிக்கொடு. எப்படி உபயோக்கிக்கனும்னு சொல்லிக்கொடு. ஆனா அவன் மெதுவாத்தான் பாஸ் பண்ணுவான். மெதுவாத்தான் பாஸ் பண்ணுவான்.

மெதுவான்னா எம்புட்டு மெதுவாண்ணே? அதுக்குள்ள நான் பாஸாயிடுவேன் போலருக்கே.

போ. பாஸ் பண்ணிட்டு போ. நான் தடுக்க முடியுமா? எல்லாப் பய புள்ளையும் ஒரு நாளைக்கு பாஸாக வேண்டியதுதான். மார்க்கெடுக்கறது முக்கியந்தான். இல்லன்னும் சொல்லல. ஆனா மத்தவங்களுக்கு பேப்பர காமிச்சு பாஸ் பண்றல்ல. அதான் நீ மார்க் வாங்கினதுக்கே அழகு. எக்ஸாம் ஹால் உட்கார்ந்தவுடனே பாஸ் பண்ணிட முடியுமோ? இன்னிக்கு நீ பிட் அடிப்ப. நாளைக்கு உம்மவன் அடிப்பான். அப்புறம் அவன் மவன் அடிப்பான். அதெல்லாம் பார்க்கிறதுக்கு நான் இருக்கமாட்டேன். ஆனா பிட் நான் எழுதினது. இதெல்லாம் எனக்கு பெருமையா? பிட் அடிக்கறது கடமை.

ஆனா இந்த மரமண்டைங்களுக்கு பிட்டத் தவிர எது கொடுத்தாலும் புரியாதுண்ணே. என்ன விட்றுங்க நான் போறேன்.

பிகரையும், வேலையையும் கரெக்ட் பண்ணிட்டு சீனியர எதுத்துப் பேசற நேரமில்ல.

அப்படில்லங்கண்ணே.

வேறெப்படி? வேறெப்படின்னு கேக்குறேன். ஒரே டிபார்ட்மெண்ட் ஜுனியர்ன்னு ராகிங் பண்ணாம விட்டேன்ல. இது வரைக்கும் ஒரு தடவ ராகிங் பண்ணிருப்பேனா? நான் என் ஜூனியருக்கு பிட் போட்டேன். நீ போட்டியா? நீ அரியர்ஸ் க்ளியர் பண்ண கொஸ்டின் பேப்பர்லாம் லவட்டிட்டு வந்து கொடுத்தானுங்களே? அந்த ஜூனியர் பசங்களுக்கு என்ன பண்ண நீ? ஏதாவது பண்ணு. அப்புறம் காலேஜ விட்டுப் போ. CTSல சேரு. TCSல சேரு. அந்த HRயே கல்யாணம் பண்ணிக்கோ. என்ன இப்ப?

பிட் போட காலேஜ்ல இருக்கனும்னு அவசியமில்லண்ணே. வெளில இருந்து வந்தும் போடலாம். நான் போறேண்ணே.

போய்ட்டு வர்றேன்னு சொல்லு. எங்க அந்த ப்ளேஸ்மெண்ட் இன்சார்ஜ்? தம்பி கேம்பஸ்ல ப்ளேசாயி வேலைக்குப் போகப்போது. சீக்கிரம் ப்ளேஸ்மெண்ட் ஆர்டர கொடு. அடுத்த செமஸ்டர் வரைக்கும் இருக்கக் கூடாதா? நீங்க நாலஞ்சு கம்பெனி மாறிட்டு வர்றதுக்குள்ள நான் பாஸாகி போய்ட்டா என்ன பண்ணுவீக?

அண்ணே நான் போய் கம்பெனில ஜாய்ன் பண்ணி கொஞ்ச நாள்ல உங்களையும் ரெக்ரூட் பண்ணிக்கிறேண்ணே.

என்னையா? ஊஹூம். நான் இங்கயே இருந்து அரியர் மேல அரியர் வைப்பனே தவிர வேலைல சேர மாட்டேன். என்னை வேலைக்கு மட்டும் எடுத்திராதடா. புரியுதா?

அண்ணே. நான் கண்டிப்பா இந்தக் காலேஜ் பசங்கள ரெக்ரூட் பண்ணுவேண்ணே. நம்புங்க.

உன்னையத்தானே நம்பனும். உன்னையவிட்டா ஜஸ்ட் பாஸ் பண்ணவன் வேற யாரிருக்கா இந்தக் காலேஜ்ல? போ போ. லேடீஸ் ஹாஸ்டல் பக்கம் போகாம லைப்ரரிக்குப் போ.

ஹி ஹி சும்மானா சிரிக்கறதுக்கு எழுதினது. இந்த வீடியோவ ம்யூட் பண்ணிட்டு மேல இருக்கறதப் படிச்சி பாருங்க:))

August 3, 2010

விண்வெளியில் விசயகாந்த்

டிஸ்கி 1 : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. யார் மனது புண்படுமேயானால் கம்பேனி பொறுப்பேற்றுக்கொள்வதைப் பற்றி அப்பாலிக்கா யோசிக்கும்.

டிஸ்கி 2 : இந்தக் கதை நான் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும்போது சென்ற சுற்றுலாவின்போது உருவாக்கப்பட்டது. RT & SCR ராயல்டி என ஏதும் கிடைச்சால் ஷேர் பண்ணிக்கலாம். தர்ம அடின்னா அட்ரஸ் குடுங்க. அனுப்பி வைக்கிறேன்.

டிஸ்கி 3 : கதை எழுதும்போது??!! ரகுவரன் உயிருடன் இருந்ததால் அவரைத் தான் வில்லனாக்கினோம். இப்போது அந்த கேரக்டருக்கு மாற்றாக யாரையும் யோசிக்க முடியவில்லை:(

மஞ்சள் காமாலை புரொடெக்ஷ்ன்ஸ்
பெருமையுடன் வழங்கும்

CABTUN IN & AS

விண்ணரசு
- Saviour of earth.

கேப்டனுக்கு அப்பா மகன் என இரட்டை வேடம். இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஜெனிபர் லோபஸ் ஹீரோயினாக நடிக்கிறார். மேற்கொண்டு கதைக்கு போவோம்.

நாசாவில் வேலை பார்க்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் கான்பரன்ஸ் ஹாலில் குழுமியிருக்கிறார்கள். எல்லோர் முகத்திலும் பதற்றம். பிரச்சனை இதுதான். செவ்வாய் கிரகத்திலிருக்கும் இரு வேற்றுகிரகவாசிகளின் சம்பாஷணையை ஒட்டுக் கேட்டபோது, அவர்கள் பூமியை அழிக்க திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது. என்ன செய்வது என எல்லாரும் மண்டையப் பிச்சிக்கும்போது டீ சப்ளை பண்ற பையன் சொல்றான் "ஹ்ம்ம்ம்ம். இந்த உலகத்தை காப்பாத்த ஒருத்தரால தான் முடியும். அவர்தான் மண்ணரசு" (அப்பா கேப்டன்). எல்லாரும் ஏகமனதாக மண்ணரசுவை செவ்வாய்க்கு அனுப்ப முடிவு செய்து நாசா தலைம விஞ்ஞானி ரகுவரனை அணுகுகிறார்கள் (ரகுவரன் வில்லன் என சொல்லத் தேவையில்லை). ரகுவரனிடம் மண்ணரசுவின் வீர தீர பராக்கிரம செயல்களை சொல்லி சம்மதமும் வாங்குகிறார்கள்.

இப்போதான் அப்பா கேப்டனின் இண்ட்ரோ.

பேரரசுவின் பொன்னான வரிகளில், கண்ணம்மாபேட்டையில் ரிகார்டிங் செய்யும் ஸ்ரீகாந் தேவாவின் காதுக்கினிய இசையில் அட்டகாசமான இண்ட்ரோ சாங் வைக்கிறோம். மறக்காம கேப்டனின் கட்சி கொடியை க்ளோஸப்பில் காட்டுறோம். பாட்டு முடிஞ்சவுடனே பேமிலி செண்டிமெண்ட். மண்ணரசுக்கு ஏற்ற ஜோடியா அம்பிகா (முந்தைய படத்தில் இவங்க ஜோடிப் பொருத்தம் இன்னும் என் கண்ணுலயே நிக்குது). இவர்களின் மகனாக விண்ணரசு. வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி உடம்பெல்லாம் இளைக்க முடியாததனால வேற பையன நடிக்க வைக்கிறோம். இங்க ஒரு பேமிலி சாங். ஒரே இளநீர்ல ஸ்ட்ரா போட்டு குடிக்கறது மாதிரியான புதுமையான நிறைய காட்சிகள் இருக்கு.

இப்போ கதைய அடுத்த கட்டதுக்கு கிரேன் வச்சு தூக்குறோம் (கதையும் வெயிட்டு, கேப்டனும் வெயிட்டு. அடுத்த கட்டதுக்கு நகர்த்த முடியாதுல்ல. லாஜிக்! லாஜிக்!)

மண்ணரசு, ரகுவரன் மற்ற விஞ்ஞானிகளெல்லாம் கூடி கும்மியடிச்சு ஒரு முடிவுக்கு வர்றாங்க. மண்ணரசுவே செவ்வாய் கிரகத்துக்கு போய், ஸ்பெஷலா ப்ரோகிராம் செய்யப்பட்ட லேசர் கன்னை வச்சு ஏலியன்ஸை அழிக்கறதுன்னு முடிவு செய்யறாங்க. உடனே நம்ம கேப்டன் ஜிப் வச்ச ஷூவும், டார்ச் வச்ச தொப்பியும்(ஸ்பேஸ் டார்க்கா இருக்கும்ல. லாஜிக் இல்லன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க) போட்டுகிட்டு கிளம்புறாரு. போறதுக்கு முன்னாடி தாய்மார்களை கவரும் விதமா செண்டிமெண்ட் காட்சி. பொண்டாட்டியா பார்த்து இவர் கண் கலங்க அவிங்க அழ, படம் பார்க்குறவங்களும் கண்டிப்பா அழுவாங்க. இவர் கிளம்புறது தீபாவளி சீசன். அதனால புள்ளையாண்டானுக்கு லாரி லாரியா வெடி வாங்கிக் கொடுக்கிறாரு. அப்படியே ஷட்டில்ல கிளம்புறாரு. அங்க போய் லேண்ட் ஆனவுடனே அந்த லேசர் கன் தப்பா ப்ரோகிராம் பண்ணிருக்கறத நினைச்சு அதிர்ச்சியானலும், மேற்கொண்டு மெர்சிலாவாம அவருடைய ரிவர்ஸ் கிக்கினால் ஒரு 100 ஏலியன்ஸையும், மூஞ்சிய க்ளோஸப்ல காமிச்சு ஒரு 1000 ஏலியன்ஸையும், தேசபக்தி உபதேசத்தால ஒரு 10,000 ஏலியன்ஸையும் சாவடிக்கிறாரு. அவர் பேசிக்கிட்டிருக்கும்போது இரண்டு ஏலியன்ஸ் அவர பின்மண்டைல அடிச்சு ஒரு ஜெயில்ல அடைச்சு வக்கிறாங்க. அந்த ஜெயிலுக்கு கதவு கிடையாது. ஆனா வெளியே போகவோ, உள்ளே வரவோ முயற்சி செஞ்சா ஷாக்கடிச்சு சாவாங்க (Technology has improved so much u know).

அம்பிகா மண்ணரசு திரும்பி வருவாருன்னு காத்துக்கிட்டிருக்காங்க. வருஷங்கள் உருண்டோடுகின்றன. விண்ணரசு பெரிய்ய்ய்ய ஆளாகிறார். "அப்பா எங்கம்மா?" என அவரின் கேள்விக்கு அம்பிகா நடந்தவற்றை கூற தன் தந்தையை தேடி நாஸா செல்கிறார் (குருவில விஜய் மலேஷியா போவாரே. அது மாதிரி). ரகுவரனிடம் சென்று தந்தையை மீட்டு வர தன்னை செவ்வாய்க்கு அனுப்புமாறு கேட்க ரகுவரன் மறுத்துவிடுகிறார். ரகுவரனின் புது செகரட்ரியான ஜெ.லோ விண்ணரசுவின் அழகில் மயங்கி (வடிவேலு ஸ்டைலில் அல்ல), தன் பாஸ் தான் வில்லன் என்ற உண்மையை அவரிடம் சொல்கிறார். சினங்கொண்ட விண்ணரசு கண்கள் சிவக்க, கன்னத்து சதை துடிக்க தாயிடன் தானே செவ்வாய் கிரகத்துக்கு சென்று அப்பாவை கூட்டிவருகிறேன் என சபதம் செய்கிறார். செவ்வாய் கிரகத்துக்கு போவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கிறார். ஹெல்ப் பண்ண ஜெ.லோவும் வர்றாங்க. இப்ப ஒரு டூயட் சாங். "காதல் ஆராரோ"ன்னு நரசிம்மா படத்துல ரொமான்ஸ் பண்ணுவாரே அந்த மாதிரி ஒரு பாட்டு. கண்டிப்பா நாக்க மடிச்சு ஆடற சீன் உண்டு. பாட்டு முடிஞ்சவுடனே ஒரு ராக்கெட்ட காட்றோம். கேப்டன் அத எப்படி செஞ்சாருங்கறதையும் காட்றோம். அவங்க அப்பா தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்த பட்டாசில் இருக்கும் வெடி மருந்தெல்லாம் சேர்த்து வச்சு ராக்கெட் பண்றாரு (எப்பூடி).

விண்ணரசு ஜெ.லோவுடன் செவ்வாய் கிரகத்துக்கு போறாரு. அங்க இறங்கி யார் கண்ணுலயும் படாம ராக்கெட்ட ஒளிச்சு வெக்கிறாரு. அப்படியே ஒரு ஏலியன ஃபாலோ பண்ணி அப்பாவை அடைச்சு வச்சிருக்க ஜெயில கண்டுபிடிக்கிறாரு. மண்ணரசு ஜெயில் கதவ பத்தின மேட்டர சொன்னதும் விண்ணரசு அலட்டிக்காம அந்த ஜெயில் சுவற்றை ரெண்டு கையாலையும் பிடிச்சு உடம்ப ஷேக் பண்றாரு. கேப்டன் உடம்புல பாயற மின்சாரம் ஷார்ட் சர்க்யூட் ஆகி, மண்ணரசு தப்பிச்சிடறாரு. ரெண்டு பேரும் சேர்ந்து செவ்வாய் கிரகத்துல எல்லா இடத்திலயும் பாம் வைக்கிறாங்க. அது வரைக்கும் ஏலியன்ஸ் என்ன பண்ணாங்கன்னு யாரும் கேக்கக்கூடாதுல்ல. அதனால அப்ப ஜெ.லோவோட அயிட்டம் நம்பர் ஒன்னு இருக்கு (லாஜிக் மிக முக்கியம் அமைச்சரே). ஏலியன்ஸ் தாங்கள் முட்டாளக்கப்பட்டதை உணருவதற்குள் மூவரும் ராக்கெட் ஏறி தப்பிக்கிறாங்க. செவ்வாய் கிரகமும் வெடித்து சிதறுகிறது.

மண்ணரசு நேரா யு.எஸ் பிரசிடெண்ட் கிட்ட ரகுவரனப் பத்தி சொல்லி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கிறாரு. விண்ணரசு நாசாவோட புது தலைவராகறாரு. And they lived happily forever:)

மீள்பதிவு

July 21, 2010

மதராசபட்டிணம் - மாறுபட்ட கோணத்தில்..

டிஸ்கி : மதராசபட்டிணம் படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்குகையில் டைரக்டர் தமிழ் சினிமாக்களின் இலக்கணங்களை மீறாமல் கொஞ்சம் ரொம்பவே இழுத்துவிட்டார். துரையம்மாள் ட்ரஸ்டை தேடிப் போகும்போதே இந்தக் கதையை இன்ன டைரக்டர் எடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என யோசித்துப் பார்த்தேன். வீட்டிற்கு வந்து டெவலப் செய்தது. நகைச்சுவைக்காகவே தவிர யார் மனதையும் புண்படுத்த அல்ல.

என் இனிய தமிழ் மக்களே...

பூக்கள் பூக்கும் தருணம் பாடலின் போது ஆர்யா-ஏமி அமர்ந்திருக்கும் போட்டை சுற்றி பத்து படகுகளில் வெள்ளை உடையில் தேவதைகள் (என்ற பெயரில்) சிலர் ஆடுவார்கள். அந்த மணிக்கூண்டில் நடக்கும் சண்டையின்போது ஆர்யா அடிபட்டு மயங்கிவிடுவார். ஏமி தன் மானத்தை காப்பாற்றிக்கொள்ள வில்லனை மேலிருந்து கீழே தள்ளி கொன்றுவிடுவார். கடமை தவறாத கவர்னர், மகள் என்றும் பாராமல் அவரை அரெஸ்ட் செய்து லண்டன் ஜெயிலில் அடைத்துவிடுவார் (அதான் இந்தியாவுக்கு சுதந்திரம் குடுத்துட்டாங்களே. Moreover ஏமி லண்டன் சிட்டிசனாச்சே. லாஜிக். லாஜிக்). ஆயுள் தண்டனை முடிந்து ஏமி இந்தியாவுக்கு வருவார். அவர் ஏர்போர்டில் இறங்கியதும் இழுத்துக்கொண்டிருக்கும் ஆர்யா இன்னும் ஆஸ்மா ட்ரபிள் வந்தவர் மாதிரி இன்னும் இழுத்து இழுத்து மூச்சுவிடுவார். அப்படியே பாட்டியக் காமிக்கிறோம். நவரசத்தையும் மூஞ்சில காமிப்பாங்க. கண்டிப்பா கண்ணு துடிக்கும். ஆர்யா இருக்கிற இடத்துக்கு வந்து பார்த்து அவர தொடுவாங்க. அத்தனை காலமா கோத்ரேஜ் பீரோல் பூட்டி வச்சிருந்த ஆர்யாவோட உசிர் படக்குன்னு போய்டும் (இதயா டாவடிச்சோம் என்ற அதிர்ச்சி தான் உண்மையான காரணமாயிருக்கும்). ஆர்யாவோட கால்மாட்டுல உக்காந்திருக்கிற பாட்டியோட தலை தொபுக்கட்டீர்ன்னு தொங்கிரும்.

எந்த சாரே...

ஆர்யாவை தண்ணியில் தள்ளி்விட்டுவிட்டு போகும் ஏமிக்கு லண்டனில் வேறொருவோடு கல்யாணமாகிறது. ஏமியின் காதல் கதையை தெரிந்து கொள்ளும் அந்த வெள்ளக்கார துரை ஏமியை அழைத்துக்கொண்டு இந்தியா வருகிறார். படாதபாடுபட்டு ஆர்யாவை கண்டுபிடித்து ஏமியை ஏற்றுக்கொள்ள சொல்கிறார். அதற்கு ஆர்யா “என்னுடைய காதலி உங்கள் மனைவி ஆகலாம். ஆனால் உங்க மனைவி என்னுடையா காதலி ஆக முடியாது துரை. எங்க நீங்க போட்ட அந்த மோதிரத்த கழட்ட சொல்லுங்க பார்ப்போம்”. ஏமி கூலாக மோதிரத்த கழட்டிக்கொடுத்துவிட்டு “நீ சொன்ன டயலாக் எல்லாம் தமிழ்நாட்டு கல்ச்சருக்கு தான் பொருந்தும். ஐ’ம் ஃப்ரம் லண்டன். Not applicable to me".

தங்கச்ச்ச்ச்ச்சீஈஈஈஈஈஈ...

செல்வி பிறந்தவுடனேயே அவர் அம்மா இறந்துவிட, தாய்க்கு தாயாக இருந்து செல்வியை கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறார் ஆர்யா (உங்களுக்கு அபாரமான மனதைரியம் இருந்தால் ஆர்யாவை நீக்கிவிட்டு அவரை கற்பனை செய்து கொள்ளவும்). அண்ணனுக்கு பயந்த, அண்ணன் மீது அளவில்லா பாசம் கொண்ட தங்கையாக வலம் வருகிறார் செல்வி. அதே நேரம் அவருக்கு ஒரு (நல்ல) வெள்ளைக்கார துரையுடன் காதல் வளர்கிறது. இது தெரியாமல் அண்ணன் வேறொருவருக்கு தங்கையை கல்யாணம் செய்து தருவதாக வாக்கு கொடுத்துவிடுகிறார். இதுல சைட் ட்ராக்கா அவரை ஒருதலையாக காதலிக்கிறார் ஏமி. அவர் காலடி மண்ணை விபூதியாக பூசிக்கொள்கிறார். அவருக்காக தோபிகானாவில் வந்து துணி தோய்க்கிறார். கழுதை மேய்க்கிறார். அவரின் பார்வை கூட ஏமி மீது படாது. அப்படிப்பட்ட பண்பாளர் அவர். தங்கையின் காதல் விஷயம் தெரிந்ததும் ஒரு நீண்ண்ண்ண்ண்ட (டயலாக்) போராட்டமே நடக்கிறது வீட்டில். கடைசியில் தங்கையின் ஆசைதான் பெரிது என நினைத்து காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார். ஏமியை இழுத்துக்கொண்டு போகவரும் வில்லனை (பேசியே) கொல்கிறார். இவர் ஏற்கனவே பேசிவைத்திருந்த பையன் வீட்டார் நிச்சயம் பண்ண வர இவர் மறுத்து நிலைமையை விளக்க, அவர்கள் வாக்கு தவறிட்டியே என சொல்ல, அந்த வார்த்தையை கேட்ட அடுத்த நொடி சலவைக்கல் மீது விழுந்து உயிர்விடுகிறார் நம்ம கவரிமான் பரம்பரை ஹீரோ.

லாலாலா லல லாலா...

ஆர்யா-ஏமி காதல் விவகாரம் கவர்னருக்கு தெரிய வருகிறது. ஆர்யாவிடம் கவர்னர் ஸ்டேட்டசை சுட்டிக் காட்டி பெண் தர மறுக்கிறார். வெகுண்டெழும் ஆர்யா வொர்க் பெர்மிட்டில் லண்டன் சென்று தினக்கூலியாக வேலைக்கு சேர்கிறார். ஒரே பாட்டில் பெரிய பணக்காரராகி ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பார்ட்னராக முன்னேறுகிறார். யூகே குடியுரிமைப் பெற்று தாயகம் திரும்பி ஏமியை கரம்பிடிக்கிறார்.

அழுக்க அடிச்சி பாத்திருக்கியா..

சட்டைய சர்ஃப் எக்ஸல்ல தோச்சிருப்ப. ரின் மேட்டிக்ல தோச்சிருப்ப. ஏன் அரசன் சோப்ல கூட தோச்சிருப்ப. ஆனா சலவக்கல்ல தோச்சிருக்கியா. சோப்பே இல்லாம தோச்சிருக்கியா. ஓங்கி அடிச்சா நாலு மூட்டை துணியோட அழுக்கும் அடையாளமில்லாம போய்டும்டா பார்க்கிறியா. பார்க்கிறியா. பார்றா. தொம். தொம். தொம் என ஆர்யா அடிக்க பின்னாடி ட்ராம் ஒன்று வெடித்து பனை மர அளவு பறக்கிறது. ஏமிக்கு புடைவக்கு பதிலாக பாவாடை தாவணி குடுத்து ஊட்டி மலையில் ஒரு டூயட் உண்டு.

ஏமியின் கையெழுத்து...

”I've some unfinished business in India" என சொல்லிவிட்டு ஒரு தோள்பையோடு ஏர்போர்டில் இறங்குகிறார் ஏமி (பாட்டி). விமானத்திலிருந்து இறங்கி இமி்க்ரேஷனைக் கடக்கும்போது “memories coming" பாட்டு. செக்யூரிட்டு கார்டுடனான காதலுக்கு சாட்சியா அவரிடமிருந்து அடித்த மெட்டல் டிடெக்டரை (1947 மாடல்) தொட்டுப் பார்த்துக்கொண்டே வெளியே வருகி்றார். ட்ராமிலேறியவுடன் மீண்டும் அதே பாடல். ட்ராமில் சுட்ட மணியை எடுத்துப் பார்த்துக்கொள்கிறார். இப்போது கண்டக்டராய் இருக்கும் ஆளின் பெயர் துரை என்பதை அறிந்தவுடன் பஸ் கம்பியில் சாய்ந்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுகிறார். ரெஸ்ட் ஆஃப் த ஸ்டோரி ஆர்யாவை தேடுவது.

ரீ-மேக்...

தமிழ்ல ஆர்யா-ஏமி நடிச்சு சூப்பர் ஹிட்டான கதைய மட்டும் எடுத்துகிட்டு தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி மாத்தியிருக்கோம். நடிகர் நடிகைகள் எல்லாரும் தமிழ்ப்படத்துல
நடிச்சவங்கதான். காஸ்ட்யூம், வசனங்கள், லொகேஷன் எல்லாம் தமிழ்படத்துல வந்த மாதிரிதான். இல்ல இல்ல. அப்படியே காப்பியெல்லாம் அடிக்கல. ரொம்பக் கஷ்டப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி படத்தின் தலைப்பை “மதராசபட்டிணம்லு” என மாத்திருக்கோம். இதுக்காக ஆறு மாசமா உழைச்சோம்.

February 9, 2010

கவிதைகளும் நடுவர்களும் மன்னார் அண்ட் கோவும்

பதிவுலகமே பரபரப்பாக கவிதையில் கபடியாடிக்கொண்டிருக்கிறது. எங்கு நோக்கினும் கவிதைகள்/கவுஜைகள். கவுண்டமனி சொல்வதுபோல் "இந்த கவிஞர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமீ. அ ஆ எழுதறவனெல்லாம் கவிஞர்ங்கறான்". பதிவர்கள் கவிதை எழுதுவதைப் பார்த்து மன்னாருக்கும் கவிதை எழுத வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. துணைகளான சோடா மற்றும் மாரியிடம் மன்னாரு தன் ஆசையை வெளிப்படுத்த அடுத்த யாரை தூக்குவது என்பதற்கான திட்டம் தீட்டுகிறது மன்னார் & கோ

மன்னாரு கவுஜ எய்தற்தெல்லாம் அம்புட்டு சுகரில்ல. நெம்ப யோஜிக்கனும். எப்பவும் எத்தையோ பறிகொடுத்தாப்புல அண்ணாந்து பாத்துக்கினே இர்க்கனும். இதெல்லாம் வேலைக்காவது மன்னாரு.

சும்மா கிட மாரி. பாட்டு மட்டும் மன்னாருக்கு தெரியுமா இன்னா. அய்யர தூக்கல. அதுமேரி எவனாங்காட்டியும் கவுஜ எல்தறவனையும் தூக்கியாந்து மன்னாருக்கு கத்துத்தார சொல்லுவோம். என்னா சொல்ற மன்னாரு?

டக்கர் ரோஜனைடா சோடா. சரி யாரடா தூக்கறது?

ஒரு நாலஞ்சு பேரோட மேட்டர எட்துக்கினு பெரிய மனுசங்களாண்ட போவோம். அவுங்கோ யார்து டக்கராக்குதுன்னு சொல்றாங்களோ அவங்கள தூக்கியாந்து பட்றையப் போட்ருவோம். என்ன சொல்ற?

யோசனையை செயல்படுத்த மன்னார் அண்ட் கோ முதலில் போவது போயஸ் கார்டனுக்கு.

கையில் சின்ன கர்ச்சீப்போடு உள்ளே வருகிறார் செல்வி.ஜெயலலிதா.

"நாட்டில் ஆயிரம் பிரச்சனை தலைவிரித்தாடிக்கொண்டிருக்கையில் கதை, கவிதை, சினிமா என கிளம்பி விடுகிறார் முதலமைச்சர். இதே என் ஆட்சியில்..(விளங்கிறும். அம்மா நீங்க தான் ஜட்ஜம்மா) நான் சர்ச் பார்க் பள்ளியில் படித்தபோது நிறைய ஆங்கில கவிதைகள் எழுதியிருக்கிறேன். கவிஞர்களை ஊக்குவிப்பதற்காக பேனா மையின் விலையை அதிரடியாய் குறைத்தது என் அரசு தான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்த வாரம் கொடநாடுக்கு ஓய்வெடுக்க செல்கிறேன். அப்போது உடன்பிறவா சகோதரியுடன் கலந்தாலோசித்து நல்ல கவிதைகளை இனம் காண்பதெப்படி என அறிவிக்கிறேன்."

இது வேலைக்காவது என அடுத்து ம.அ.கோ பார்க்கப் போனது முத்தமிழறிஞர் கலைத்தாயின் தவப்புதல்வன் பெண்சிங்கம் தரப்போகும் ஆண்சிங்கம் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

"உடன்பிறப்புகளே. கவிதை, கவியரங்கம் போன்ற இடங்களில் தான் என் ஓயாத பணிச்சுமையை இறக்கி வைத்துவிட்டு ஓய்வு பார்க்க முடிகிறது. ஆனால் என்னை நிரந்தரமாய் ஓய்வெடுக்கச் சொல்கிறார் ஒரு சதிகாரி. பெண்சிங்கம் படம் வெளிவரும் முன்னரே அதற்கு சிறந்த படம் விருதை கொடுக்க வந்திருப்பது என்னை மட்டற்ற மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது".

ஹூக்கும். ஐயா நல்ல கவிதைன்னா இன்னா? இத்தப் படிச்சுப் பார்த்து எது நல்லாருக்குன்னு சொல்லுங்க

கவிதைகளைப் படிக்க ஆரம்பிக்கிறார் முதல்வர். நான்கைந்து கவிதைகளிலேயே டென்ஷனாகி. "யாரது? இப்படியெல்லாம் கேவலமாக கவிதை எழுதுவது? வரலாறு தெரியாதவர்கள். இதுவரைக்கும் படித்த கவிதைகள் ஒன்றில் கூட என்னைப் புகழ்ந்து யாரும் எழுதவில்லயே? நீங்க என்ன செய்றீங்க. ஒரு கவிதைப் பட்டறைக்கு ஏற்பாடு பண்ணுங்க. ஜெகத்ரட்சகனை சிறப்பு பயிற்சியாளரா அனுப்பி வைக்கிறேன். கூடவே பா.விஜய், வைரமுத்து, வாலி, சு.ப.வீ எல்லாரையும் அனுப்புறேன். பயிற்சி முடிஞ்சாற்பாடு புதுசா போட்டி வைங்க. பெரிய விழா எடுத்து போட்டில வெற்றி பெற்றவங்களுக்கு எல்லாம் கவிமாமணி பட்டம் கொடுப்போம். என்ன சொல்றீங்க"

ஒரு பக்கம் வைரமுத்து, பா.விஜய் மறுபக்கம் வாலி, ஆப்துல் ரகுமானை நினைத்துப் பார்த்து டர்ர்ர்ர்ராகி அடுத்து லேண்ட் ஆகுமிடம் பிரதமர் இல்லம்.

"ஹான் ஜி. டீக் ஹை ஜி. ஜி. ஜி. ஒகே ஜி" என தரையில் குத்துக்காலிட்டு போன் பேசி முடிக்கிறார் பிரதமர். "சோனியாஜி வாஸ் ஆன் தி லைன்".

நீ பம்மும்போதே தெரிஞ்சுதுடி யாருன்னு. வெளக்கம் வேறயா. பி.எம்ஜி யூ படி திஸ். டெல்லு எது டக்கரு?

"Why did u come here. U know i cant take any decision. U better go to madamji" என்கிறார். சோனியா வீட்டு வாசலில் தமிழக காங்கிரஸின் அத்தனை கோஷ்டிகளும் இருப்பதைப் பார்த்து மண்டையை காப்பாற்றிக்கொள்ள மீண்டும் தமிழ்நாடு ரிடர்ன்.

2011 முதல்வராக இருக்கும் இருவரை கேட்டால் என்ன என எண்ணி முதலில் சின்ன கவுண்டரிடம் போகிறது ம.அ.கோ

"என்னது கூட்டா சேர்ந்து தேர்வு செய்யனுமா. கூட்டா சேர நான் ஏன் தனிக்கட்சி ஆரம்பிச்சேன்? கவிதைகளை மக்களுடன் கடவுளுடனும் சேர்ந்து படித்து தான் செலக்ட் செய்வேன். (இது வேலைக்கே ஆவாதென்பதை எடுத்துக் கூறியதும்) ஒரு நாளைக்கு பதிவுலகத்துல சுமார் 200 கவிதைகள் எழுதப்படுது. அதுல புரியறது 4. புரியாதது 66. எண்டர் தட்டுனது எண்பது. ஹைக்கூ அம்பது" ஆ உம் என நாக்கை மடிக்க, நாக்கு வெளியே தள்ள நாட்டாமையை பார்க்கப் போகிறது ம.அ.கோ. அவர் கட்சியை சேல்ஸ் பண்னுவது சம்பந்தமாக வெளியே போயிருப்பதால் அடுத்து கவுண்டமணி. கூடவே செந்திலும்.

சூரியன் பட பேக்கிரவுண்டு மியுசிக்கோடு கவுண்டர் எண்ட்ரி.

"அய்யய்ய எம்.எல்.ஏ ஆனாலே தொல்லை தான். அங்க வா. இங்க வா. அதத் தொற. இதத் தொறன்னு. ஒரே கஷ்டமப்பா. ஆங் எங்க கவிதா. எத்தன கவிதாவை செலக்ட் பண்ணனும்?"
(கவிதை பேப்பர்களை நீட்ட)
"அடப்பாவிகளா. கவிதை செலக்ட் பண்ணவா என்னிய கூப்புட்டீங்க. நானு ஏதோ கவிதாங்கற பொண்ண செலக்ட் பண்ண கூப்டீங்கன்னுல்ல நினைச்சேன்."
செந்தில் சிரிக்க

"ஏண்டா டமாரத் தலையா உனக்கு கவிதாவப் பத்தி என்னத் தெரியும்ன்னு நீ சிரிக்கிற?"

"அண்ணே கவிதைய கவிதைன்னு சொல்லலாம். கவுஜன்னு சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்ணே"

அடேய் என செந்திலைத் துரத்திக்கொண்டு கவுண்டர் ஓட அடுத்து நிற்பது மானாட மயிலாட குழு முன்பு.

"ம்ம். பின்னிட்டீங்க. ஆனா பாருங்க. இந்த கவிதைல ஒரு லைனுக்கும் இன்னொரு லைனுக்கும் நிறைய கேப் இருக்கு. அதனாலேயே கெமிஸ்ட்ரி மிஸ்ஸாகுது"

"சூப்பர். சூப்பர். ஒரு வரிக்கும் இன்னொரு வரிக்கும் இருக்கிற சின்க் நல்லா வந்திருக்கு. ஹாட்ஸ் ஆஃப்"

"ஓ மச்சான்ஸ் இது தமில்ல எளுதியிருக்குது. எனிக்கு புர்ய மாட்டேங்குது. மச்சான்ஸ் நீ நமீதா தமில்ல போடி வைக்குது. நான் ஜட்ஜ் ஆவுது"

மண்டை சுத்திய அடுத்து ஆஜராவது நீயா நானா செட்டிலிருக்கும் கோபிநாத்திடம்.

"வாவ். அடுத்த நீயா நானா போட்டிக்கு இந்த மேட்டரையே யூஸ் பண்ணிப்போம். கவிதைகள் Vs கவுஜைகள். யாரையும் முழுசா பேச உடமாட்டோம். கண்டிப்பா போட்டியாளர்கள்ல ஒரு 4 பேராச்சும் பிழிய பிழிய அழுவனும். நான் அவங்கள் ஆறுதல் பண்னி அவங்களுக்கே பரிசை கொடுத்துடறேன். இத வெச்சே நடந்தது என்ன? அப்படின்னு ஒரு ப்ரோகிராமையும் பண்ணிடலாம். முக்கியமான விஷயம் நீங்களும் கூட காம்பியரிங் பண்ணனும்னா கோட்டு போட்டுகிட்டு தான் வரனும். ஓகேவா?"

வேலைக்காவாது என ராணி ஆறு ராஜா யாரு டீமிடம் போகிறார்கள். பப்லு, அப்பாஸ் போன்றோர் கோரஸாக "செலக்ஷன் எல்லாம் பண்ணிடலாம். வெற்றி பெற்றவங்களை அறிவிக்கும்போது கண்டிப்பா கட்டிபிடிச்சு முத்தம் கொடுப்போம்".

ஒருவேளை பொம்பிளிங்கா கவுஜ ஒகேயாயிருச்சுன்னு வை செருப்ப கயிட்டி இறுக்குவாங்கோ மாரி. வா எஸ்ஸாயிரலாம்.

கடைசி முயற்சியாக டீ.ஆரிடம் போகிறது ம.அ.கோ. கவிதை அனைத்தையும் படித்து முடிப்பவர் சொடுக்கு போட்டபடியே "என்னய்யா எழுதறாங்க? பிரஞ்யை, அசூயை, ஆயாசம் பாயாசம்னு. கவிதன்னா இப்படி எழுதனும்யா." குனிந்து தலைமுடியை கோதிவிட்டவாறே டான்ஸ் ஆடிக்கொண்டே ஒரு கவிதை சொல்கிறார். அதைக் கேட்ட மன்னாரு மாமே என்க்கு கவுஜ வடிக்கிற ஆசையே பூட்ச்சுடா என சொல்லி எகிறி குதித்து ஒடுகிறார். அந்தக் கவிதை

இதில் கவிதையோடு ஆடலுடனான தற்காப்பு கலை

போனஸாக ஒரு இங்லீஸ் கவுஜ.

டிஸ்கி : இந்த இடுகை நகைச்சுவை நோக்கத்திற்காகவே எழுதப்பட்டது. யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

January 8, 2010

மார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ

டிஸ்கி 1: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யார் மனதாவது புண்படுமேயானால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
டிஸ்கி 2: எனக்கிருக்கும் அரைகுறை அறிவை வைத்து எழுதியிருக்கிறேன். ஏதாவது பிழை இருப்பின் அறியாச் சிறுமி தெரியாமல் எழுதிவிட்டதாய் நினைத்துக் கொள்ளவும்.

விடிகாலை 5 மணிக்கு எழுந்து வாசன் தெருவிலிருக்கும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு அப்படியே வெண்பொங்கலை ஒரு கை பார்த்துவிட்டு வரலாமென்று வீட்டை விட்டு கிளம்பிய அனந்தராமன் என்கிற அனந்து மாமாவை நான்காவது குறுக்குத் தெருவில் நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்தியது.

பின்மண்டையில் விண்ணென்று வலித்தது அனந்து மாமாவிற்கு. மெல்ல கண் திறக்க முயன்று தோற்றார். கிணற்றுகுள்ளிருந்து சில பேச்சுகுரல்கள் கேட்டன.

"மாமே பெர்சு முள்ச்சு முள்ச்சு பார்க்குதுடா. நீ ஒடிப்போய் மன்னார இட்டா"

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த சீனில் ஆஜரானான் மன்னாரு. சிகப்பு அண்ட்ராயர் தெரிய மடித்துக் கட்டிய வெளுத்த கைலியும், பச்சை ஜல்லடை பனியனும் அணிந்திருந்தான். விழிகள் ரெண்டும் எக்ஸ்ட்ரா சிகப்பாக மிரட்டின. நீட்டி, மடக்கி முறுக்கி விடப்பட்ட மீசையையும், தாடை வரை தொங்கிக்கொண்டிருந்த அருவாவெட்டு கிருதாவையும் கிட்டத்தில் பார்த்த அனந்து அலறி மயங்கிச் சரிந்தார். அடுத்த ஒரு மணிநேரமும் தன் டாவான செகப்பியைப் பற்றி மன்னாரு சிலாகித்துக்கொண்டிருந்ததை கூட இருந்த மாரியும், சோடாவும் கேட்டுக்கொண்டிருந்தனர். மீண்டும் அனந்து கண் திறந்தார். இம்முறை அவர் அலறுவதுக்கு முன் அவர் வாய் மூடப்பட்டது.

இந்தாரு ஐயரே. உன்னாண்ட காசு புடுங்க உன்ன இங்க இட்டார்ல்ல. உன்னால என்க்கு ஒரு வேலை ஆவனும்.

என்ன என்பது போல் பயந்த பார்வை பார்த்தார் அனந்து. இம்முறை வாய் மலர்ந்தது சோடா.

ஐயுரே எங்க தலைக்கு கன்னடத்து பாட்டு நாலு சொல்லிக் கொடுப்பியாம்.

நீங்க சொல்றது நேக்கு புரியலை.

அதான் ஐய்ரே. இந்த கல்யாண மண்டபம் மாரி இர்க்குமே. அங்கன மேல குந்திக்கினு மண்டைய மண்டைய ஆட்டிப் பாடுவாங்களே. அது மாரி நாலு பாட்டு மன்னாருக்கு சொல்லி கொடு.

கர்நாடக சங்கீதமா? உங்களுக்கா என மறுபடி மயங்கினார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுகையில் மன்னாரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.
மன்னிச்சுடுங்கோ சார்வாள். உங்களுக்கு கத்துக்கொடுக்கற அளவுக்கு நேக்கு ஞானமில்லை. நேக்கு அந்த பிராப்தமும் இல்லை.

தா. இப்படில்லாம் உதார் விட்டா நாங்க வுட்ருவோமா? ரெண்டு மாசமா உன்ன வாட்ச் பண்ணினுருக்கோம் ஐய்ரே. நீ பெருமாசாமி கோவில்ல பாட்டு படிச்சதெல்லாம் கேட்டுட்டு தான் உன்னிய தூக்கினு வந்தோம். தெருவுல போறவன புட்சாரதுக்கு நாங்க இன்னா லூசா?

அனந்து எவ்வளவு மன்றாடிப் பார்த்தும் மன்னாரு மசியவில்லை. கண்ணில் நீர் வர கேட்டுப் பார்த்தார். ம்ஹூம். விதி விட்ட வழியென்று பெருமாள் மீது பாரத்தைப் போட்டு விட்டு மன்னாருக்கு கற்றுத்தரும் மனதைரியத்தை வரவழைத்துக்கொண்டார்,

நாம ஸ்வரத்துல இருந்து ஆரம்பிப்போம்.

அய்ய. இது இன்னாடா வம்பாக்கீது. பாட்டு கத்துக்க ஜுரம் வர்ணுமா. இன்னா ஜுரம்பா? சாதா ஜூரம் போதுமா? இப்பத்திக்கு ஏதோ மர்மக் காச்சல்ன்னு சொல்றாங்கோ. அத வரவச்சிக்கனுமா?

பெருமாளே. ஜூரம் இல்லை. ஸ்வரம். சங்கீதத்தின் அடிப்படை. நான் பாடறேன். நீங்களும் என் கூட பாடுங்கோ.

டூயட்லாம் வேணாம் ஐயரே. ஸோலோதான் வேணும். ஈரோ எண்ட்ரி கொடுக்க சொல்ல பாடுவாங்களே. அந்த மாதிரி.

கடைசில நீங்கதான் தனியா பாடுவேள்.

ஆங். கடைசிலல்லாம் கெடியாது. முதல்ல இருந்தே நான் தனியா தான் பாட்டு படிக்கனும்.

சரிங்க. அதுக்கு நீங்க பாட்டு கத்துக்கனுமோன்னோ. இப்ப கத்துக்கறச்சே நான் பாட பாட என் பின்னாடி இருந்து பாடுங்கோ.

ஏன் ஐய்ரே உனக்கு பின்னாடி போய் பாடனும். உன் முன்னாடியே குந்திக்கினு பாட்றேனே.

பெருமாளே. ஏன் என்ன இப்படி சோதனை பண்ற? இங்க பாருங்க. நான் பாடற மாதிரியே பாடுங்க

எச்ச

ரி

ர்ரீ

க்கா

ம்ம்மா

சரி விடுங்க. இதெல்லாம் கத்துக்க ரொம்ப நாழியாகும். நான் பேசாம உங்களுக்கு நாலு ராகத்துல பாட்டு சொல்லித் தந்துடறேன்.

பேசாம எப்படி ஐய்ரே பாட்டு சொல்லுவ. மைண்ட் வாய்ஸா?

இதோ பாருங்க. முதல்ல கிண்டல் பண்றத நிறுத்திட்டு சம்மணம் போட்டு உட்காருங்கோ. பாரதியார் பாட்டு ரெண்டு பாடிக் காமிக்கிறேன்.

இதாண வேணாங்கறது. எனக்கு கன்னட பாட்டு தான் வேணும். பாரதியாரு தமில்லல்ல பாட்டு எளுதிருக்காரு.

இதுவும் கர்நாடக சங்கீதம் தான்.

சரி. டேய் சோடா போய் அந்த பொட்டிய எடுத்துனு வா. ஐய்ரு பாட்றத புட்ச்சி வச்சு கத்துக்கலாம்.

நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டேளே?

என்ன ஐய்ரே?

இப்ப எதுக்கு உங்களுக்கு இந்த விபரீத ஆசை?

அத்த ஏன் கேக்குற ஐய்ரே. நம்ம டாவு சேப்பியிருக்குதே. அதுக்கு இந்த மாதிரி பாட்டுன்னா உசிராம். உன்னால இப்படி பாட முடியுமான்னு கேட்டுச்சு. மண்டபத்துல பாடி அத அசத்துனும்னு தான்.

அது சரி. பாட்ட ஆரம்பிக்கிறேன். இப்போ பாடப் போற பாட்டு அம்சத்வானி ராகம்.

யோவ் அம்சாவோட தாவணி பத்தில்லாம் பாட்டு வுட்டா சேப்பி கோச்சுக்கும்யா.

அம்சாதாவணி இல்லீங்க. அம்சத்வானி.

அருள் புரிவாய் கருணை கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே

யோவ் இன்னாய்யா இது. அழுது வடிஞ்சிகினு இருக்கு. கொஞ்சம் இறக்கி குத்துறாப்புல பாட்டு சொல்லு ஐய்ரே.

கர்நாடக சங்கீதத்துல அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நீங்க இதக் கத்துக்கோங்கோ. அடுத்ததும் பாரதியார் பாட்டு தான். இது பகடி ராகம்.

கபடி விளையாண்ட்ருக்கேன். இதென்ன பகடி?

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதயே நந்தலாலா

அடுத்தது காம்போதி ராகம்.

யாருக்கு பேதி?

பெருமாளே. யாருக்கும் பேதி இல்லை. இந்த ராகம் பேரு காம்போதி. பாட்டக் கேளுங்கோ.

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே

இது பாட்டு ஐய்ரே. அப்படியே பாடிக்கினே சேப்பியை ரொமாண்டிகா ஒரு லுக் விட்டேன்னு வை சொக்கிருவா.

கடைசியா மஹா கணபதி பாடிடுங்கோ. இது நட்டை ராகம்.

நெட்டை ராகம்ன்னா பாட்டு பெர்சாருக்குமா?

நட்டை ராகம்.

மஹா கணபதிம்
மனசார ஸ்வராமி

சோக்கா பாட்ற ஐய்ரே. இந்த கேசட்ட கேட்டு நாலு நாள்ல கத்துக்கிறேன். ஆங். மற்ந்துட்டேன். அய்ரே உன்னாண்ட சிலுக்கு ஜிப்பா இருக்கா?

எதுக்கு?

இல்ல நாங்க பாத்த ஆம்பிளங்க அல்லாருமே சிலுக்கு ஜிப்பா போட்டுனு தான் பாடினாங்க. அதான்..

என் சைஸ் உங்களுக்கு பத்தாது.

அப்படீங்கற. மாரி இன்னாடா பண்றது. பேசாம கைலியோடவே போய்டவா?

வேணாம் மன்னாரு. நம்ம டெய்லராண்ட சொன்னா இரண்டு நாள்ல ரெடி பண்றுவான்.

அப்புறம் சுத்தி உக்கார நாலு ஆளுங்க வேணுமேடா. அதுக்கும் ஏற்பாடு பண்ணு.

அப்பால ஒரு டவுட் ஐய்ரே. இதெல்லாம் சாமீ பாட்டுங்க தானே. கவுச்சியெல்லாம் சாப்புட்லாமா?

குளிர்ச்சியா எதுவும் சாப்பிடாதீங்கோ. காலைல எழுந்து கழுத்தளவு தண்ணில நின்னுண்டு சாதகம் பண்ணுங்கோ. மிளகு தட்டி போட்டு பால் குடிங்கோ. மும்மூர்த்திகள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

ரொம்ப டாங்க்ஸ் ஐய்ரே. அப்பாலிக்கா டைம் கெட்ச்சா ஊட்டாண்ட வந்து பாடி காமிக்கிறன். டேய் மாரி. ஐய்ர ஆட்டோல இட்டுனு போய் வூட்ல வுட்டுட்டு வாடா. டேய் சோடா அந்த மண்டபம் மேனேஜரு வூட்ட வாட்ச் பண்ண ஆரம்பிடா.

October 7, 2009

விண்வெளியில் விசயகாந்த்

டிஸ்கி 1 : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. யார் மனது புண்படுமேயானால் கம்பேனி பொறுப்பேற்றுக்கொள்வதைப் பற்றி அப்பாலிக்கா யோசிக்கும்.

டிஸ்கி 2 : இந்தக் கதை நான் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும்போது சென்ற சுற்றுலாவின்போது உருவாக்கப்பட்டது. RT & SCR ராயல்டி என ஏதும் கிடைச்சால் ஷேர் பண்ணிக்கலாம். தர்ம அடின்னா அட்ரஸ் குடுங்க. அனுப்பி வைக்கிறேன்.

டிஸ்கி 3 : கதை எழுதும்போது??!! ரகுவரன் உயிருடன் இருந்ததால் அவரைத் தான் வில்லனாக்கினோம். இப்போது அந்த கேரக்டருக்கு மாற்றாக யாரையும் யோசிக்க முடியவில்லை:(

மஞ்சள் காமாலை புரொடெக்ஷ்ன்ஸ்
பெருமையுடன் வழங்கும்

CABTUN IN & AS

விண்ணரசு
- Saviour of earth.

கேப்டனுக்கு அப்பா மகன் என இரட்டை வேடம். இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஜெனிபர் லோபஸ் ஹீரோயினாக நடிக்கிறார். மேற்கொண்டு கதைக்கு போவோம்.

நாசாவில் வேலை பார்க்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் கான்பரன்ஸ் ஹாலில் குழுமியிருக்கிறார்கள். எல்லோர் முகத்திலும் பதற்றம். பிரச்சனை இதுதான். செவ்வாய் கிரகத்திலிருக்கும் இரு வேற்றுகிரகவாசிகளின் சம்பாஷணையை ஒட்டுக் கேட்டபோது, அவர்கள் பூமியை அழிக்க திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது. என்ன செய்வது என எல்லாரும் மண்டையப் பிச்சிக்கும்போது டீ சப்ளை பண்ற பையன் சொல்றான் "ஹ்ம்ம்ம்ம். இந்த உலகத்தை காப்பாத்த ஒருத்தரால தான் முடியும். அவர்தான் மண்ணரசு" (அப்பா கேப்டன்). எல்லாரும் ஏகமனதாக மண்ணரசுவை செவ்வாய்க்கு அனுப்ப முடிவு செய்து நாசா தலைம விஞ்ஞானி ரகுவரனை அணுகுகிறார்கள் (ரகுவரன் வில்லன் என சொல்லத் தேவையில்லை). ரகுவரனிடம் மண்ணரசுவின் வீர தீர பராக்கிரம செயல்களை சொல்லி சம்மதமும் வாங்குகிறார்கள்.

இப்போதான் அப்பா கேப்டனின் இண்ட்ரோ.

பேரரசுவின் பொன்னான வரிகளில், கண்ணம்மாபேட்டையில் ரிகார்டிங் செய்யும் ஸ்ரீகாந் தேவாவின் காதுக்கினிய இசையில் அட்டகாசமான இண்ட்ரோ சாங் வைக்கிறோம். மறக்காம கேப்டனின் கட்சி கொடியை க்ளோஸப்பில் காட்டுறோம். பாட்டு முடிஞ்சவுடனே பேமிலி செண்டிமெண்ட். மண்ணரசுக்கு ஏற்ற ஜோடியா அம்பிகா (முந்தைய படத்தில் இவங்க ஜோடிப் பொருத்தம் இன்னும் என் கண்ணுலயே நிக்குது). இவர்களின் மகனாக விண்ணரசு. வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி உடம்பெல்லாம் இளைக்க முடியாததனால வேற பையன நடிக்க வைக்கிறோம். இங்க ஒரு பேமிலி சாங். ஒரே இளநீர்ல ஸ்ட்ரா போட்டு குடிக்கறது மாதிரியான புதுமையான நிறைய காட்சிகள் இருக்கு.

இப்போ கதைய அடுத்த கட்டதுக்கு கிரேன் வச்சு தூக்குறோம் (கதையும் வெயிட்டு, கேப்டனும் வெயிட்டு. அடுத்த கட்டதுக்கு நகர்த்த முடியாதுல்ல. லாஜிக்! லாஜிக்!)

மண்ணரசு, ரகுவரன் மற்ற விஞ்ஞானிகளெல்லாம் கூடி கும்மியடிச்சு ஒரு முடிவுக்கு வர்றாங்க. மண்ணரசுவே செவ்வாய் கிரகத்துக்கு போய், ஸ்பெஷலா ப்ரோகிராம் செய்யப்பட்ட லேசர் கன்னை வச்சு ஏலியன்ஸை அழிக்கறதுன்னு முடிவு செய்யறாங்க. உடனே நம்ம கேப்டன் ஜிப் வச்ச ஷூவும், டார்ச் வச்ச தொப்பியும்(ஸ்பேஸ் டார்க்கா இருக்கும்ல. லாஜிக் இல்லன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க) போட்டுகிட்டு கிளம்புறாரு. போறதுக்கு முன்னாடி தாய்மார்களை கவரும் விதமா செண்டிமெண்ட் காட்சி. பொண்டாட்டியா பார்த்து இவர் கண் கலங்க அவிங்க அழ, படம் பார்க்குறவங்களும் கண்டிப்பா அழுவாங்க. இவர் கிளம்புறது தீபாவளி சீசன். அதனால புள்ளையாண்டானுக்கு லாரி லாரியா வெடி வாங்கிக் கொடுக்கிறாரு. அப்படியே ஷட்டில்ல கிளம்புறாரு. அங்க போய் லேண்ட் ஆனவுடனே அந்த லேசர் கன் தப்பா ப்ரோகிராம் பண்ணிருக்கறத நினைச்சு அதிர்ச்சியானலும், மேற்கொண்டு மெர்சிலாவாம அவருடைய ரிவர்ஸ் கிக்கினால் ஒரு 100 ஏலியன்ஸையும், மூஞ்சிய க்ளோஸப்ல காமிச்சு ஒரு 1000 ஏலியன்ஸையும், தேசபக்தி உபதேசத்தால ஒரு 10,000 ஏலியன்ஸையும் சாவடிக்கிறாரு. அவர் பேசிக்கிட்டிருக்கும்போது இரண்டு ஏலியன்ஸ் அவர பின்மண்டைல அடிச்சு ஒரு ஜெயில்ல அடைச்சு வக்கிறாங்க. அந்த ஜெயிலுக்கு கதவு கிடையாது. ஆனா வெளியே போகவோ, உள்ளே வரவோ முயற்சி செஞ்சா ஷாக்கடிச்சு சாவாங்க (Technology has improved so much u know).

அம்பிகா மண்ணரசு திரும்பி வருவாருன்னு காத்துக்கிட்டிருக்காங்க. வருஷங்கள் உருண்டோடுகின்றன. விண்ணரசு பெரிய்ய்ய்ய ஆளாகிறார். "அப்பா எங்கம்மா?" என அவரின் கேள்விக்கு அம்பிகா நடந்தவற்றை கூற தன் தந்தையை தேடி நாஸா செல்கிறார் (குருவில விஜய் மலேஷியா போவாரே. அது மாதிரி). ரகுவரனிடம் சென்று தந்தையை மீட்டு வர தன்னை செவ்வாய்க்கு அனுப்புமாறு கேட்க ரகுவரன் மறுத்துவிடுகிறார். ரகுவரனின் புது செகரட்ரியான ஜெ.லோ விண்ணரசுவின் அழகில் மயங்கி (வடிவேலு ஸ்டைலில் அல்ல), தன் பாஸ் தான் வில்லன் என்ற உண்மையை அவரிடம் சொல்கிறார். சினங்கொண்ட விண்ணரசு கண்கள் சிவக்க, கன்னத்து சதை துடிக்க தாயிடன் தானே செவ்வாய் கிரகத்துக்கு சென்று அப்பாவை கூட்டிவருகிறேன் என சபதம் செய்கிறார். செவ்வாய் கிரகத்துக்கு போவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கிறார். ஹெல்ப் பண்ண ஜெ.லோவும் வர்றாங்க. இப்ப ஒரு டூயட் சாங். "காதல் ஆராரோ"ன்னு நரசிம்மா படத்துல ரொமான்ஸ் பண்ணுவாரே அந்த மாதிரி ஒரு பாட்டு. கண்டிப்பா நாக்க மடிச்சு ஆடற சீன் உண்டு. பாட்டு முடிஞ்சவுடனே ஒரு ராக்கெட்ட காட்றோம். கேப்டன் அத எப்படி செஞ்சாருங்கறதையும் காட்றோம். அவங்க அப்பா தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்த பட்டாசில் இருக்கும் வெடி மருந்தெல்லாம் சேர்த்து வச்சு ராக்கெட் பண்றாரு (எப்பூடி).

விண்ணரசு ஜெ.லோவுடன் செவ்வாய் கிரகத்துக்கு போறாரு. அங்க இறங்கி யார் கண்ணுலயும் படாம ராக்கெட்ட ஒளிச்சு வெக்கிறாரு. அப்படியே ஒரு ஏலியன ஃபாலோ பண்ணி அப்பாவை அடைச்சு வச்சிருக்க ஜெயில கண்டுபிடிக்கிறாரு. மண்ணரசு ஜெயில் கதவ பத்தின மேட்டர சொன்னதும் விண்ணரசு அலட்டிக்காம அந்த ஜெயில் சுவற்றை ரெண்டு கையாலையும் பிடிச்சு உடம்ப ஷேக் பண்றாரு. கேப்டன் உடம்புல பாயற மின்சாரம் ஷார்ட் சர்க்யூட் ஆகி, மண்ணரசு தப்பிச்சிடறாரு. ரெண்டு பேரும் சேர்ந்து செவ்வாய் கிரகத்துல எல்லா இடத்திலயும் பாம் வைக்கிறாங்க. அது வரைக்கும் ஏலியன்ஸ் என்ன பண்ணாங்கன்னு யாரும் கேக்கக்கூடாதுல்ல. அதனால அப்ப ஜெ.லோவோட அயிட்டம் நம்பர் ஒன்னு இருக்கு (லாஜிக் மிக முக்கியம் அமைச்சரே). ஏலியன்ஸ் தாங்கள் முட்டாளக்கப்பட்டதை உணருவதற்குள் மூவரும் ராக்கெட் ஏறி தப்பிக்கிறாங்க. செவ்வாய் கிரகமும் வெடித்து சிதறுகிறது.

மண்ணரசு நேரா யு.எஸ் பிரசிடெண்ட் கிட்ட ரகுவரனப் பத்தி சொல்லி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கிறாரு. விண்ணரசு நாசாவோட புது தலைவராகறாரு. And they lived happily forever:)

July 9, 2009

வீடு...தேடு...இண்டர்வ்யூ படுத்திய பாடு

ஆபிஸில் இரண்டுமணிநேரம் பெர்மிஷன் கேட்டு கிடைக்காததால், பெரிய ப்ரோக்ராம் ஒன்றை இரண்டு மணிநேரம் ஒடும்படி டேட்டா செட் பண்ணிவிட்டு, கொலீக்கிடம் பார்த்துக்கொள்ளும்படி தாஜா பண்ணி, டேமேஜர் பார்க்காத மாதிரி, கேபினிலிருந்து எஸ்ஸாகி போய் முதல் முதல் வீடு பார்த்த அனுபவம் இன்னும் நினைவில். அதிர்ஷ்டவசமாக ஒரு மணிநேரத்திலேயே அற்புதமான வீடு அமைந்தது. கிட்டத்தட்ட இருபது மாதங்கள் கழித்து அடுத்த வீடு தேடும் படலம். இந்த முறை பொறுப்பு என்னிடம் மட்டும். ரொம்ப சிரமப்படவில்லையென்றாலும் இரண்டு மூன்று முறை அலைய வேண்டியிருந்தது. மறுபடியும் பதினைந்து மாதங்கள் கழித்து அடுத்த வீடு பார்க்கவேண்டிய கட்டாயம். இந்தமுறை நாக்கு வெளியே தள்ளிவிட்டது. அந்தளவுக்கு கஷ்டம்.

வேலைக்கு சேரக்கூட இந்தளவுக்கு இண்டர்வ்யூ செய்ய மாட்டார்கள். கன்சல்டன்ஸி நிறுவனங்களைப் போல ப்ரோக்கர்கள். எம்ளாயரை மீட் பண்ணுவதற்க்கு முன் இவர்களிடம் உங்கள் தேவைகளை சொல்லி ஒரு மினி இண்டர்வ்யூ அட்டெண்ட் செய்ய வேண்டும்.
"சார். என்ன பட்ஜெட்டில் பார்க்கறீங்க? (நாம சொல்றதை விட 3000 அதிகமாதான் வீடு கிடைக்கும் என்பார்கள்) எந்த ஏரியாவுல சார் வேணும்? (ஏரியா சொன்னதும் அங்க இந்த ரேஞ்சுக்கு சான்ஸே இல்ல சார். நீங்க பேசாம இந்த ஏரியாவுல பாருங்களேன் என்பார்கள்) கார் பார்க்கிங்கோடவா? அட்வான்ஸ் பத்து மாசம் சார். சூப்பர் வீடு. அருமையான லொக்கேஷன். மெயின் ரோட்டில் இருந்து 5 நிமிஷ நடை தான்."

சார் முதல்ல வீட்டை காட்டுங்க.

வாராய் நீ வாராய்ங்கற ரேஞ்சுக்கு வண்டில போகவே 20 நிமிஷம் ஆச்சு. ஒரு நேரத்துல ஒரு ஆள் தான் நடக்க முடியும்ங்கற மாதிரி ஒரு தெரு (அப்படி சொல்றதே பாவம்). நுழையறதுக்கு முன்னமே முடிஞ்சு போற ஹால். வெளிச்சம்னா என்னன்னே தெரியாத ரூம்கள். ஸ்ஸ்ஸப்பா.

"25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்".
"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க"
"என்ன விளையாடறீங்களா? நான் வாடகையத்தாங்க சொன்னேன். விலைக்குன்னா 87 இலட்சம் ஆகும்."
கிர்ர்ரடித்தது எனக்கு. யோவ் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால மெயின்ல 7500க்கு குடியிருந்தோம்யா.
நீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்பீங்க மேடம். (ஹுக்கும்)

ஒரு வழியா வீடு சுமாரா இருந்தா எம்ப்ளாயரிடம் டெலிபோனிக் இண்டர்வ்யூ.

"வீடு பார்த்தோம் சார். எங்களுக்கு ஓகே. வாடகை மட்டும்..."
"அதிருக்கட்டும். முதல்ல நீங்க எங்க வேலை செய்யறீங்க?"
"#$##@@%^& கம்பெனில"
"அப்படி ஒரு கம்பெனி கேள்விப்பட்டதே இல்லையே?"
"???!!!"
"ம்ம் நீங்க எத்தனை பேரு?"
"ரெண்டு பேர் தான் சார். இரண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு"
"அப்படியா சரி நேர்ல வாங்க பேசுவோம்"
"வீக்கெண்ட் ஓக்கேவா சார்"
"வீக்கெண்டா. நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க. வீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கு."
"சார் ஆபிஸ் இருக்கு சார்"
"அப்படியா. அப்ப உங்க இஷ்டம்"
டொக்..

ஒரு நாலு வீட கட்டிவிட்டுட்டு இவங்க பண்ற அளப்பறை இருக்கே. 3BR வீட்டுக்குண்டானா வாடகையாம். ஆனால் ஒரு ரூமைப் பூட்டி தான் வைத்திருப்பார்களாம். வீட்டுச் சாவி ஒன்றும் அவர்களிடம் இருக்குமாம். எப்ப வேணாலும் வந்து போவார்களாம். இந்த கஷ்டங்களை தாண்டி ஏரியா, வீடு செட்டாகி, டெலிபோனிக் இண்டர்வ்யூவை ஒரளவுக்கு தேத்தினா அடுத்தது நேர்முகத் தேர்வு.

வீட்டு ஓனர் அட்ரஸ மட்டும் தந்துட்டு இந்த டைமுக்கு வந்துடுங்க. ஏன்னா நான் இன்னிக்கு நைட்டே ஓபாமாவோட ஒரு கான்பரன்ஸ்ல கலந்துக்கப் போறேன்னு பில்டப்பு பண்ணுவாங்க. எங்கனோ மூலைல ஒளிஞ்சிட்டிருக்கிற அந்த வீட்ட கண்டுபிடிக்கறதுக்கு கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு. ஒரு வழியா ரோட்டுல போறவன் வர்றவனயெல்லாம் மடக்கி, அட்ரஸ் கேட்டு, கண்டேன் சீதையைங்கற கணக்கா வீட்டு வாசல்ல போய் பெல் அடிப்போம். கதவத் திறந்து நம்மள கேவலமா ஒரு லுக் விடுவாங்க. நாம யாருங்கறதை விளக்கினப்புறம் உள்ள வர சொல்லூவாங்க. மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி அவங்க காட்ற சோஃபால உட்காராம உட்கார்ந்த அப்புறம் ஆரம்பிக்கும் அக்கப்போரு.

"சொல்லுங்க. வீடெல்லாம் ஒகேவா?"
"வீடு பிடிச்சிருக்கு சார். ஆனா வாடகை தான்......"
"நீங்க ரெண்டு பேர்ங்கறதால தான் சார் உங்களுக்கு தர்றேன். இதைவிட அதிக வாடகை குடுத்து எடுத்துக்க ஆள் ரெடியா இருக்காங்க."
"அப்படியா சார். வாடகை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்களேன்"
"சரிங்க. நீங்க ரொம்ப வற்புறுத்தி கேட்கறதால ஒரு 500 ரூபிஸ் குறைச்சுகிறேன். ஆனா அட்வான்ஸ் பத்து மாசம் வாடகை. ஓக்கேவா"
"(அடப்பாவி அதுக்கு வாடகைய நீ குறைச்சிருக்கவே வேண்டாமே)இல்ல சார் பழைய வாடகையே ஒக்கே"
"ஆணியெல்லாம் அடிக்கக்கூடாது"
"ஹி ஹி. ஆணியப் புடுங்கிதான் சார் பழக்கம்"
"மறந்துட்டேனே நாந்வெஜ் சமைக்கக்கூடாது"
"நாங்க சுத்த சைவம் சார் (முட்டைய சைவம்ன்னு சொல்லியாச்சு. கூடிய சீக்கிரமே சிக்கனையும் சைவ லிஸ்டில் சேர்க்க போராட்டம் பண்ணனும்)"
"தண்னியெல்லாம் அநாவசியமா செலவு பண்ணக்கூடாது"
"ச்சே ச்சே. தண்ணி செலவே ஆகாது சார். நாங்க குளிக்கறதுகூட குறைச்சுக்குவோம்"
"மாசம் பொறந்து 4 தேதிக்குள்ள வாடகை குடுத்தடனும்."
"சரி சார். உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க. அதுக்கு நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிடறோம்"
"அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடுங்க. அப்புறம் கேஷாவே குடுத்துடுங்க. செக் வேண்டாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே. வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது. வீடு நாஸ்தியாகிடும் பாருங்க. அப்புறம் ...................................................."
"அய்யோ வீடே வேணாம். ஆள விடுங்க"

2 வாரம் அலைந்து, திரிந்து, சலித்துப் போன நிலையில் ரகுவின் கம்பெனியே வீடு பார்த்து தரும் பொறுப்பை எடுத்துக்கொண்டதால் நிம்மதியாய் இருக்கிறது. எங்கு அமைகிறதென பொறுத்திருந்து தான் பார்க்கனும்.

April 9, 2009

காலாண்டு முடிவுகள் - அதிக வருமானம் ஈட்டிய துறை

எல்லாரும் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில் அரசுத் துறை ஒன்று எப்போழுதும் இல்லாத அளவுக்கு பெரும் லாபம் ஈட்டி சாதனைப் படைத்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையே பங்கு சந்தையின் போக்கை தீர்மானிக்குமென பொருளாதார நிபுணர்கள் கூறிவந்த நிலையில் இந்தச்செய்தி எல்லாரையும் அதிர்ச்சியிலும்/ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தீவிரமான அலசலுக்கு பின் தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளும் வகையில் இன்ன்னொரு தகவலும் வெளியாகிவுள்ளது. அத்துறையின் இந்த மெகா லாபத்துக்கு முக்கியமான காரணம் தமிழகம் தானாம். சரி அது எந்த துறை என்று தானே யோசிக்கிறீர்கள்?

*******************

*******

**********

***********

*************

*************

**************

************

*****************

*****************

முக்கிய காரணகர்த்தவான கலைஞர் கருணாநிதியைப் பாராட்டி தந்தி தலை வெளியிடுவதென்றும், சைடு காரணமான இளையத் தளபதியை பாராட்டி அவரின் சமீப படத்தை அனைத்து தபால் துறை ஊழியர்களும் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும் என்ற சட்டம் இயற்றப்போவதாகவும் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

April 8, 2009

கஜினி அமீர்கானுக்கு சரியான போட்டி

டிஸ்கி (எ) எச்சரிக்கை : சங்கர் நேத்ராலயா/ அகர்வால் போன்ற கண் மருத்துவமனை பில்களையும், கண், இதயம் மற்றும் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்களின் செலவை கம்பெனி ஏற்றுக்கொள்ளாது.

கஜினி படத்தில் வரும் குஸாரிஷ் பாடலில் அமீர்கானின் கெட்டப்பைப் பார்த்த கோலிவுட்டின் பிரபல நடிகர் அந்த கெட்டப்பை தானும் போட வேண்டுமென்று ஆசைப் பட்டதோடில்லாமல், அமீர்கானை விட பெட்டராக இருக்கவேண்டும் என்று மெனெக்கெட்டாராம். விரைவில் திரையரங்குகளை ஆக்கரமிக்கவிருக்கும் அந்தப் படத்தில் குறிப்பிட்ட ஒரு பாடல் காட்சியை காஸ்டியூமிற்காகவே ஒன்ஸ் மோர் கேட்பார்கள் என கேள்விப்பட்டதாக கேபிள் சங்கர் கூறினார்.
இதைக் கேள்விப்பட்ட அமீர்கான் நடிப்பதையே விட்டுவிடலாமென முடிவெடுத்திருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள். மேலே உள்ள போட்டோவுக்கு டஃப் காம்படீஷனாக இருக்கப்போறவர்

.............

..........

...............

..............

..............

................

March 5, 2009

மூக்க பாத்தியா?

ரோல் நம்பர் 1 - பெரஸண்ட் சார்.
நம்பர் 2 - யெஸ் சார்.
நம்பர் 3 - ஹியர் சார்.

இது ஸ்கூலில் வகுப்பு ஆரம்பிக்கும்போது கேட்கும் சத்தம். பின்னாளில் எங்கள் பள்ளியில் கண்டிப்பாக பெயரைழைத்துதான் அட்டெண்டன்ஸ் எடுக்கனும் என்ற விதிமுறையை அமலுக்கு கொண்டுவந்தார்கள். It just gave us a great feeling.

காலேஜ் போனதுக்கப்புறம் ஒவ்வொரு வகுப்பிற்க்கு முன்னும் அட்டெண்டன்ஸ் எடுப்பது முதலில் வித்தியாசமாய் இருந்தது. இரண்டே வாரத்தில் ஏன் என அனுபவத்தில் தெரிந்தது:) ஏற்கனவே சொன்ன மாதிரி எங்க காலேஜில் வடமாநிலத்தவர் அதிகம். என் டிபார்ட்மெண்டில் 43 பேரில் 9 பெண்களில் மூன்று பேர் பெங்காளிகள். அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது செம காமெடியா இருக்கும். சில விரிவுரையாளர்கள் நான்கு வருஷமும் பெயர்களை (எவ்வளவோ எடுத்து சொல்லியும்) உச்சரிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள முயற்சி கூட செய்யவில்லை.

எங்கள் வகுப்பில் இருந்த பெங்காளி பெண் ஒருத்தியின் பெயர் ரிம் முக்கோப்பத்யாய் (Rim Mukopadhyay). Loveking அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது கூப்பிட்டது "ரிம் மூக்க பாத்தியா". மொத்த வகுப்பும் சிரித்துவிட இவளோ ஏன் சிரிக்கிறார்கள் என தெரியாமல் பக்கத்திலிருந்தவளிடம் கேக்க அவளும் விளக்க, அடுத்த தடவை அவள் நம்பர் வரும்பொழுது இவளே எழுந்து "ரிம் பிரசெண்ட் சார்" என்பாள். கொஞ்சம் அசந்தாலும் சார் மூக்க பாத்தியா நாக்க பாத்தியான்னு ஆரம்பிச்சிடுவாரு:) ஆனால் டிபார்ட்மெண்டில் முதல் வருடத்திலேயே (கல்லூரியின் 2ஆம் ஆண்டு) நிர்வாகம் அவள் சீட்டைக் கிழித்து அனுப்பிச்சிட்டாங்க. அம்மணி அதுக்கப்புறம் சத்யபாமாவில் குப்பை கொட்டினார் என்ற ஆச்சர்யமான தகவல் சமீபத்தில் நண்பனின் கல்யாணத்தில் கிடைக்கப்பெற்றது.

அடுத்த மாட்டிக்கிட்டு முழிக்கற பேர் ஷ்ரேயேஷி சாட்டர்ஜி (Shreyashi Chatterjee). Thermal's வகுப்பெடுத்த மெக்கானிக்கல் துறையைச் சேர்ந்த ஆசிரியர் கூப்பிடுவது "சிரியாசி". அவளும் சளைக்காமல் அந்த செமஸ்டர் முழுவதும் சொல்லுவாள் "Sir, i'm shreyashi". ஜிக்மே வாங்சூ (Jigme Wangchu) என்றழைக்கப்பட்ட நேபாளத்தைச் சார்ந்த பையனை almost எல்லாருமே "ஜிம்மி" எனதான் கூப்பிடுவார்கள். கடைசி ரோல் நம்பர் என்பதால் கூப்பிடுவதற்கு முன்னமே i'm here என்பான். ததாகத் கோஷ் (Thathagat Gosh) கொஞ்சம் கஷ்டமான பெயர்தானென்றாலும் அவனே விரிவுரையாளர்களிடம் என்னை கோஷ் என்றே அழையுங்களென சொல்லியிருந்தான். ஆனா Loveking மட்டும் அதை கேக்கமாட்டார். "தட்டகட்ட கோஷ்" ஒருகையால் தலையிலடித்துக்கொண்டு மறுகையைத் தூக்கி பிரசெண்ட் சொல்லுவான்.

வடஇந்திய பெயர்கள் தான் வாயில் நுழையாது. சில சமயம் சுலபமான பெயர்களைக்கூட ஸ்டைலாகக் கூப்பிடுகிறேன் பேர்வழி என இம்சையைக் கூட்டுவார்கள். உதாரணத்திற்க்கு சந்தீப் ரெட்டி (Sandeep Reddy) என்ற பெயர் "சாண்டீப்" என அழைக்கப்படும். எங்கள் HOD பெங்காளி. அவருக்கு(ம்) 'ச' வராது. சங்கீதா என்பதை "ஷொங்கீதா" என்றே அழைப்பார். ரமா என்ற பெண்ணை எல்லா விரிவுரையாளர்களும் default "ராமா" என்று தான் அழைப்பார்கள். ஒரு நாள் ரொம்ப நொந்துபோய் அவள் சொன்னது "தேடிப் பிடிச்ச பேர் வைச்ச எங்கப்பாவை ஒரு நாள் நல்லா குமுறனும்டி".