February 17, 2011

நல்லா கத வுடறான்யா

ஜூனியர் இரண்டாவது டெர்மில் எல்லாவற்றிலும் Outstanding மற்றும் Very Good (A) க்ரேட் வாங்கியிருக்கிறார். ஸ்டோரி டெல்லிஙில் மட்டும் B. சாயந்திரமானாலே அவனுடைய புத்தகங்களை தூக்கிக்கொண்டு வந்து சொல்லித் தர சொல்லிக் கேட்பான். ஆல்ஃபபெட்ஸ், நம்பர்ஸ், பிக்சர் கான்வர்சேஷன், ரைம்ஸ் என டெர்ம் போர்ஷன்ஸ் ஒவ்வொன்றாக முடித்து ஸ்டோரிக்கு வரும்போது சார் எண்ட் கார்ட் போட்றுவார். அதென்னவோ புக்கிலிருந்து கதைப் படிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. ராஜகுமாரி, நீதிக் கதைகள் என எதையாவது ஆரம்பித்தால் “இது வேணாம்மா. லயன் ஸ்டோரி சொல்லு” என்கிறான். அதுவும் எப்படியாப்பட்ட லயன் ஸ்டோரி? ஒரு முறை சொன்ன கதை இன்னொரு முறை ரிப்பீட் ஆகக் கூடாது. கண்டிப்பாக சிங்கம் யாரையாவது கடிக்கவோ/மிரட்டவோ செய்ய வேண்டும். இவர் வந்து சிங்கத்தை வீழ்த்தி அந்த யாரையோ காப்பாத்த வேண்டும். ஸப்ப்ப்பா..

சென்ற வருட துவக்கத்தில் அம்மாவிற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அந்த ஒன்றரை மாதங்களும் அம்மாவுடன் தான் இருந்தான். நிறைய ஸ்லோகங்கள், பாடல்கள் கதைகள் ஆகியவை கற்றுக்கொண்டான். கடித்து துப்பி அவன் சொல்லும் கதைகளில் ஒன்று


வீடியோவிலிருப்பது

ஒரு ஊர்ல மைக் இருந்துச்சாம் (அம்மாவின் ஸ்டிக் மைக்காக மாறி, நரியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது). தொப்பை பசிச்சுச்சாம். காஆஆஆட்டுக்குப் போச்சாம். மேல பழம் இந்துச்சாம் (திராட்சை கொடுக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருந்ததால திராட்சை ஜெனரலைஸ்ட்டாக்கப் பட்டது). எட்டி எட்டி பாத்துச்சாம். எட்டவே முல்லையாம். உட்னே சீசீ இந்தப் பழம் புள்ள்க்கும் அப்படி சொல்லிட்டு குடுகுடு ஓடிப்போச்சாம். அவ்ளோதா கதை.

அவரின் லயன் ஸ்டோரி சாம்பிள் ஒன்று

ஒரு ஊர்ல லயன் இந்துச்சாம். தொப்பை பசிச்சுச்சாம். ராபிட் வந்துச்சாம். லயன் நான் உன்னை சாப்பிடப் போறேன்னு சொல்லிச்சாம். உடனே ராபிட் ஊஊஊ அழுதுச்சாம். லயன் ஆஆஆஆ சொல்லுச்சாம். உடனே ராபிட் சஞ்சு காப்பாத்து கத்திச்சாம். சஞ்சு ஓடிப்போய் லயன டிஷ்யூம் குத்தினானாம். ஏய் லயன் ஓடிப்போ இல்லன்னா டிஷ்ஷூம் அட்சிருவேன். நான் ஸ்ட்ராஆஆஆங்க் பாய் சொன்னானாம். லயன் பயந்து ஒடியேப்போச்சாம். அவ்ளோதான் கதை.

ஸ்கூலிலிருந்து கத்துக் கொண்டு வந்த இங்லீஷ் வெர்ஷன் ஒன்று

ஒன் டே லயன் வாஸ் ஸ்லீப்பிங் இண்டனன். மவுஸ் கேம் அண்ட் ப்ளேண்ட் ஆன் த லயன். லயன் காட் ஆஆங்கிரி (லொள்ளு சபா மனோகர் மாதிரி படிக்கவும்). லயன் செட் ஐ வில் ஈட் யூ. மவுஸ் செட் டோண்ட் ஈட் மீ. போதும்மா போரடிக்குது.

ஒரிஜினல் வெர்ஷன்

One day lion was sleeping in the den. A mouse came and played on the lion. Lion got angry. It said i will eat you. Mouse said "please dont eat me". இன்னும் கொஞ்சம் கதை பாக்கியிருக்கு. இந்த ரெண்டு லைனே அவனுக்கு போரடிக்குதாம். ஏன்னா ஆக்‌ஷன் இல்லைப் பாருங்க:)

வெரி இண்டலிஜண்ட் பாய். ஸ்டோரி தான் சொல்லவே மாட்டேங்கறான். நாங்க ”சொல்லிக்கொடுத்தாலும் நோன்னு சொல்றான். நீங்க கொஞ்சம் பாருங்க” என்றார் அவன் க்ளாஸ் டீச்சர். நீங்க ஏன் மேடம் மொக்கை கதையெல்லாம் போர்ஷன்ல சேத்தீங்க. ஆக்‌ஷன் ஓரியண்டட் கதைகளை சேர்த்துப் பாருங்க. எங்காளு கலக்குவாராக்கும் என சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை:)

February 11, 2011

Baan Thai

தாய் (Thai) உணவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. கமகமக்கும் உணவு. நாவில் நடனமாடும் சுவைகள். எனக்குத் தெரிந்து மலையாளிகளுக்குப் பிறகு தேங்காய் (தேங்காய்ப் பாலாக)அதிகம் பயன்படுத்துவது தாய்லாந்துகாரர்களாகத்தான் இருக்கும். சூப் முதற்கொண்டு ஸ்வீட் வரை எல்லாவற்றிலும் தேங்காய் பால். I just love the aroma of thai foods:)

நுங்கம்பாக்கத்தில் இருக்கும் Baan Thai உணவகத்திற்கு செல்ல முடிவெடுத்து கிளம்பும்போது நல்ல மழை. வெளில சாப்பிடறதுன்னு முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன். மழை பெஞ்சா என்ன? ஆட்டோல போவோம்ன்னு போய் இறங்கிட்டோம். நல்லாருக்குன்னு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்கன்னு சொல்லி போராடி ரங்க்ஸை கூட்டிக்கிட்டு போனா மதிமுக கட்சி ஆஃபிஸ் மாதிரி கடை காத்தாடுது. எங்க மூணு பேரைத் தவிர வேற யாருமே இல்ல. எப்படியிருக்கும். சரி வந்ததது தான் வந்துட்டோம். என்ன ஆனாலும் சரி ஒரு வாய் பார்த்துடுவோம்ன்னு உட்கார்ந்துட்டோம்.

ஒரு ஐட்டம் பேரும் வாய்ல நுழையாத மாதிரி ஒரு மெனு கார்ட். நல்ல வேளையா அந்தந்த ஐட்டம் கீழே அதப் பத்தின எக்ஸ்ப்ளனேஷன் இருந்தது. டாம் யூம் சூப் ஆர்டர் செய்தோம். தாய் ஸ்டைல் க்ளியர் சூப். லெமன் க்ராஸ் ப்ளேவரோடு, நிறைய காய்கறிகளோடு அட்டகாசமாக இருந்தது. Fried vegetable patties மற்றும் fried tofu ஆகியவற்றை ஸ்டார்டர்ஸாக ஆர்டர் செய்தோம். முதல் ஐட்டம் நம்மூர் வடை போலிருந்தாலும் டேஸ்ட் நன்றாக இருந்தது. இரண்டாவது செமத்தியான விக்கெட். வாயில் வைக்க வழங்கல:( ஆனால் இரண்டிற்கும் பரிமாறப்பட்ட டிப்பிங் சாஸ் ரொம்ப நன்றாக இருந்தது.Veg patties ரொம்ப ஹெவியாக போய்விட்டது. அதனால் மெயின் கோர்ஸிற்கு ஒரு ரைஸும், க்ரேவியும் மட்டுமே ஆர்டர் செய்தோம். Huge portions:) Thai style yello curry with vegetables மற்றும் Thai style fried rice with basil leaves ஆகியவை ஆர்டர் செய்தோம். ரெண்டுமே நன்றாக இருந்தது. ரைஸில் பேசில் (நம்மூர் துளசி மாதிரி ஒரு வஸ்து), கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தது. மற்றபடி இரண்டு ஐட்டங்களுமே flawless:)மெயின் கோர்ஸை ஒன்றோடு நிறுத்தியதற்கு இன்னொரு காரணம் டெசர்ட்ஸ்:) Desserts section in the menu was much inviting. நான் கேட்ட ஐட்டம் சீசனில்லாததால் இல்லையென்றுவிட்டார்கள். ஆனால் அதற்குப் பதிலாக ஆர்டர் செய்த இரண்டு டெசர்ட்டுமே செம்ம்ம்ம சூப்பர். Must try sweets. நம்மூர் பால் கொழுக்கட்டையின் தூஊஊஊஊரத்து சொந்தம் மாதிரி ஒரு ஐட்டம். Sticky rice dumplings in warm coconut milk. இன்னொன்னு water chestnut in chilled n sweetened coconut milk. Slurpppp:))மேலதிக தகவல்கள்

உணவகம் - Baan Thai
உணவு - Thai Cuisine. Veg/Non-veg
இடம் - Khader Nawaz Khan Road, Nungambakkam.
டப்பு - Complete Veg Meal for 2 costs 1000 + taxes. Benjorang உணவகத்தை ஒப்பிடும்போது இது கொஞ்சம் விலை கம்மி. ஆனால் டேஸ்ட்டில் Benjorang முந்திக்கொள்கிறது:)

பரிந்துரை - Thai உணவுகள் பிடிக்குமெனில் கட்டாயம் செல்லலாம். குறிப்பாக அந்த இரண்டு டெசர்ட்டுகளுக்காகவே நான் இன்னொரு முறை போகலாமென்றிருக்கிறேன்:) Otherwise can try. Neither bad nor too too good.

February 8, 2011

நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?

பொங்கல் எங்கடி வைக்கப் போற?

வெண்கலப் பானைலதான்.

##%^&*டொக்

#பொங்கலுக்கு ஊருக்குப் போறியான்னு கேக்காம என்னாதிது சின்னப்புள்ளத்தனமா.
*******************

அதான் குழந்தை ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டானே? எப்ப வேலைக்குப் போகப் போற?

வேலைக்குப் போயி?

நாலு காசு சம்பாதிக்கலாம்ல

நாலு காசு சம்பாதிச்சு (இந்த நாலு காசை ஏன் விடமாட்டேங்கறாங்க?)?

இல்ல. புள்ளைய நல்ல படிப்பு படிக்க வெக்கலாம்ல

படிக்க வெச்சி?

இல்ல உனக்கு ஒரு தெகிரியமா இருக்கும்ல?

தைகிரியம் வந்து?

லைஃப ஒரு தெம்பா ஃபேஸ் பண்ணலாம்ல

ஃபேஸ் பண்ணி?

நாலு பேர் மத்தில கௌரவமா இருக்கும்ல

இருந்து?

இல்ல சந்தோஷமா இருக்கலாம்ல

இப்பவும் சந்தோஷமத்தானே இருக்கேன்.

டொக்
*****************

அம்மா ஃபோன் செய்து, வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு

ஹேய் உன் மாமனார் மாமியார் ஃபோன் பண்ணாங்க.

என்னம்மா சொன்னாங்க?

ம்ம்ம்ம் நீ ரொம்ப நல்லவன்னு சொன்னாங்க.

(இன்னுமா இந்த உலகம் என்னை நம்பிகிட்டிருக்கு) அதான் எனக்கே தெரியுமே. மேல சொல்லு?

வெங்காய சாம்பார் செஞ்சியாமே. அவ்ளோ நல்லாருந்துதாமே. எங்கவீட்டு சமையலுக்கு நல்லா பழகிட்டான்னு உன் மாமியார் ஒரே புகழாரம் தான் போ. அதோட உன் மாமனார் மெட்ராஸ் வந்து தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு போகச் சொன்னேன்னு பெருமையா சொன்னார்.

விடு விடு. நல்ல விஷயங்களைப் பத்தி ரொம்ப நாள் பேசாம இருக்க முடியாது. அப்புறம் உனக்கு வெங்காய சாம்பார் ரெசிபி வேணுமா?

டொக்
********************

தோழிக்கு நான் எழுதிய கதையை??!! மெயிலில் அனுப்பி வைத்தேன்.

பத்தே நிமிடத்தில் கால் பண்ணி

சூப்பர்டி

நிஜமாத்தான் சொல்றியா?

சத்தியமாடி. அதுவும் அந்த சப்ஜெக்ட் சான்ஸே இல்லை

என் கதைல சப்ஜெக்டா? என்னடி உளர்ற?

இல்லடி சிறுகதைன்னு சப்ஜெக்ட் போட்டு அனுப்பினியே. அதுமட்டுமில்லன்னா இது கதைன்னே நான் நம்பிருக்கமாட்டேண்டி. என்கிட்டருந்து எடுத்துட்டு போன புக்கெல்லாம் நீயே வச்சுக்கோ. ஆனா தயவுசெஞ்சு இப்படி கதை எழுதறன்னு என் உயிர எடுக்காத.

ஹூம்ம். உனக்குப் பொறாமைடி. எங்க நான் பெரிய எழுத்தாளர் ஆயிடுவேனோன்னு பொறாமை.

$$##%% டொக்.
**************

பொறந்த நாளைக்கு கோயிலுக்குப் போனியா இல்லையா?

இல்லம்மா.

ஏண்டி நாளும் கிழமையுமா கோவிலுக்குப் போய் சாமியப் பார்த்து ஒரு அர்ச்சனைப் பண்ணிட்டு வரவேண்டியதுதான?

வீடே கோவில். கணவனே கண்கண்ட தெய்வம். தெய்வத்துக்கு தெனம் அர்ச்சனை நடக்குது.

டொக்.

டிஸ்கி : கூகிள் பஸ்ஸில் நான் போட்ட மொக்கை:))