சென்ற வருட துவக்கத்தில் தேவதை என்ற இதழுக்காக உங்கள் பதிவுகளை உபயோகிப்பதில் உங்களுக்கு சம்மதமா என பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்கள். நம்ம பதிவுகளைப் போய் கேக்கறாங்களே யாரோ விளையாடறாங்க போலிருக்கு என விட்டுவிட்டேன். அப்புறம் சக பதிவர்கள் (பெண்கள் மட்டும்) நிறைய பேரின் வலைப்பூ பற்றிய அறிமுகம் தேவதை இதழில் வரவும் அடடா மிஸ் பண்ணிட்டோமே என்று இருந்தது. இப்ப இந்த மாத இதழில் என் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளனர். முழுசா மூன்று பக்கத்துக்கு.
1. மூன்றெழுத்து பயம்2. க.மு Vs க.பி3. உறவினர்களை குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்ஆகிய மூன்று பதிவுகளும் துணுக்ஸிலிருந்து ஒரு பகுதியும் வந்திருக்கு.
தொடர்ந்து இயங்க ஊக்கமளிக்கும் சக பதிவர்களுக்கு என் நன்றிகள்.