November 28, 2008

நீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரிதான் எசமான்

அன்று
--------

கம்பெனியிலிருந்து இ-மெயில் : தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ஒரு நாள் தாமதமாக சம்பளம் கிரெடிட் செய்யப்படும்.


ரகு - What the hell? அவனவன் ஆயிரம் பிளான்ஸ் வச்சிருப்பான். கொஞ்சங்கூட பொறுப்பே இல்ல.


நேற்று
---------

கம்பெனியிலிருந்து இ-மெயில் : மும்பை அசம்பாவிதம் காரணமாக வங்கிகள் இயங்காததால் சம்பளம் திங்கள்கிழமை அன்று கிரெடிட் செய்யப்படும்.


ரகு - (பழைய சம்பவத்தை நினைத்து சிரித்தபடியே) சம்பளத்துக்காகவா வேல செய்றோம். நம்ம கம்பெனி. நம்ம பணம். நீங்க எப்ப வேணும்னாலும் குடுங்க. காசு உங்ககிட்ட இருந்தா என்ன எங்ககிட்ட இருந்தா என்ன:))

November 27, 2008

நல்லாருங்கப்பு

எழுத வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா தினகரன்ல அடிப்பட்ட அந்த குழந்தையின் போட்டோவ பார்க்கும்போது ஆத்திரமா வருது. யார் மேலயா. எல்லாம் என் மேல தான்பா. என் இயலாமையை நினைத்து.

மாலேகான் தீவிரவாத பிரச்சனையின் மூலம் நாட்டை துண்டாட பார்க்கிறது பா.ஜ.க என்று சோனியாவும், தீவிரவாதத்தை ஒடுக்க தவறிவிட்டது மன்மோகன் சிங் அரசு என்று பா.ஜ.கவும் ஒருத்தரை ஒருத்தர் வாழ்த்திக்கிறாங்க. நல்லாருங்கப்பு.

93ல நடந்த சம்பவத்துக்கே விசாரணை இன்னும் நடக்குது. இப்ப நடந்ததுக்கு நீங்க காரணகர்த்தாக்களை கண்டுபிடிச்சு, விசாரிச்சு...........நல்லாருங்கப்பு.

கண்டிக்கிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்னு ஒவ்வொரு சம்பவத்தின் போதும் தன் கடமையை சரியாக செய்துகொண்டிருக்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஸார் நீங்க மட்டும் ரொம்ப ரொம்ப நல்லாருங்கப்பு.

செத்தவன் மனுசன் இல்ல, சாவடிக்கிறவந்தான் மனுசன்னு தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்ற மனித (??????) உரிமை கமிசன் மெம்பர்களே நீங்களும் நல்லாருங்கப்பு.

எவன் செத்தா எனக்கென்ன? முதல்ல கட்சி அமைச்சர்கள காப்பாத்தனும்னு நினைக்கிற அரசியல்வாதிகளே நீங்களும் நல்லாருங்கப்பு. உங்க போதைக்கு அப்பாவி ஜனங்க சைடு டிஷ்ஷாயிட்டுரூக்காங்க.

சம்பவத்தைப் பார்த்து என்ன செய்யறதுன்னு புரியாம பதிவு எழுதி புலம்பிட்ருக்கற நான் ரொம்பவே நல்லாருப்பேன்:(

November 26, 2008

கார்க்கிக்கும் ராப்புக்கும் கண்டனக் கடிதம்

(தலைவர் மீது)அன்பேயில்லாத ராப் மற்றும் கார்க்கி,


உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்ல? அகிலாண்ட நாயகனின் ரசிகர் மன்ற தலைவிங்கர பேர்ல நீங்க என்ன செஞ்சிருக்கீங்க ராப்?? தலைவரின் ஒவ்வொரு மூவ்மெண்ட்டையும் அவர்களுடைய டை ஹார்ட் ஃபேன்ஸ்க்கு சொல்வது உங்கள் தலையாய கடமையல்லவா??


வீரத்தளப‌தியின் போர் படை தளப‌தி என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் கார்க்கியே நீயுமா அசட்டையாக இருந்துவிட்டாய்? தலைவிதான் அயல்நாட்டில் இருக்கிறார். நீ உள்ளூரில் தானேய்யா இருக்க. நீயாவது சொல்லிருக்கக்கூடாது. மன்றத்தை முந்திக்கொண்டு ஒரு பத்திரிக்கைக்காரன் செய்தி வெளியிடுகிறான். அந்த செய்தியை நீங்கள் உறுதிப்படுத்தவில்லை.


அகிலாண்ட நாயகனின் ரசிகப் பெருமக்களே,
மேட்டர் என்னன்னா தலைவர் அடுத்த படத்துக்கு கதை கேட்டு கன்பர்ம் பண்ணிருக்காருங்கோ. டைரக்டர் யார் தெரியுமா? இயக்கத்தின் திலகம் சுனாமி பேரரசுவின் தம்பி முத்துவடுகுதான். படத்துக்கு டைட்டில் "தளபதி".


ராப் & கார்க்கி ஒழுங்கா நீயுஸ கன்பர்ம் பண்ணி சொல்லுங்க. இல்ல மன்ற பொறுப்பிலிருந்து விலகிடுங்க. நாங்க பார்த்துக்கறோம்.


இப்படிக்கு,

வீரத்தளபதியின் தீவிர ரசிகை.

November 20, 2008

ம்மா

இரவு எட்டு மணி இருக்கும். ஜுனியரோடு விளையாடிக்கொண்டிருந்தேன். வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், பாஸ் குடுகுடுவென வாசக்கதவருகே ஓடிப்போய் ப்பா என்றார். ரகுவைப் பார்த்ததும் கைகள் ரெண்டையும் விரித்து தூக்கிக்கோ என்பதுபோல் சைகை செய்தார். அப்பாவைப் பார்த்ததும் அப்படி ஒரு குஷி. "அடப்பாவி நாள் முழுக்கப் பார்த்துக்கறது நான். அப்பாவைப் பார்த்தவுடனே என்னை விட்டுட்டா ஓட்ற" என்று முதுகில் (செல்லமாக) ஒன்று வைத்தேன். அந்தத் தருணம் சட்டென்று அம்மா நினைவுக்கு வந்தாள்.


பொதுவாகவே பெண் குழந்தைகள் அப்பாவிடமும், ஆண் குழந்தைகள் அம்மாவிடமும் அட்டாச்டாக இருக்கும் என்று சொல்வார்கள். நானும் இந்த விதிக்கு விதிவிலக்கல்ல. அம்மாவை வைத்துக்கொண்டே நான் அப்பா செல்லம் என்று சொல்லிருக்கேன். கூடவே அம்மா தப்பா எடுத்துக்கமாட்டாங்க என்ற பிட்டையும் போட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் உரைத்தது நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்று. பிறந்து ஒன்றரை வருடமே ஆன என் பையன் அப்பாவைப் பார்த்து ஓடும்போதே எனக்கு என்னமோ மாதிரி இருக்கே. 24 வருஷமா நான் அப்பாவைப் பிடிக்கும் என்று சொல்லும்போது (அந்தத்தருணத்திலாவது) அம்மா எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பாள். ஸாரிம்மா. இனிமே (நீ இருக்கும்போது) அப்பாவைத்தான் பிடிக்கும்னு சொல்லவேமாட்டேன். உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல்ல ஜூனியருக்கும் இதை சொல்லிக்கொடுக்கணும்.


டிஸ்கி : எழுதி முடிச்சதுக்கப்புறமா தான் கவனிச்சேன். இது என்னோட 25வது பதிவு. நானும் என் பதிவும் வெள்ளி விழா கொண்டாடுறோம். ஆகையால் அன்பு பெரியோர்களே அருமைத் தாய்மார்களே, இதுவரைக்கும் என் மொக்கைகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு எனக்கு ஆதரவளித்த உங்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். உங்கள் ஆதரவுக்கு என் அன்பு பரிசாக 2011ல் சரத்குமார் அமைச்சரவையில் எல்லாருக்கும் மந்திரி சீட் உண்டுங்கோ:)

November 17, 2008

உஷார் மேன் ஹை

மளிகைப் பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தேன். பாதி நாள் ஊரிலிருக்கப்போவதில்லை என்பதால் கொஞ்சம் குறைவாகவே வாங்கினேன். ஆனாலும் பில் கூட வந்திருப்பதாக சின்ன உறுத்தல். செக் பண்ணிப்பார்க்கையில் கிட்டத்தட்ட 150 ரூபாய்க்கு நான் வாங்காத பொருட்களையும் சேர்த்திருந்தார்கள். நான் சுட்டிக்காட்டியபோது அசடு வழிந்துக்கொண்டே ஸாரி என்றார்கள். இதில் காரில் உபயோகப்படுத்தப்படும் டிஷ்யூவும் அடக்கம். இதில் கொடுமை என்னன்னா என்கிட்டே காரே இல்லை. அப்புறம் கேஷ் திருப்பித்தரயிலாது. அந்தக் காசுக்கு ஈடா வேறெதாவது வாங்கிக்கோங்களேன் என்றார்கள். எனக்குத் தேவையானவை எல்லாவற்றையும் வாங்கிட்டேன். எனக்கு காச குடுங்க போதும் என்றேன். பெரிய வாக்குவாதத்திற்க்குப் பின் 150 ரூபாய் திருப்பித்தரப்பட்டது. எப்படியெல்லாம் பிளான் பண்றாங்கய்யா. ஆதலால் மக்களே என்னதான் தல போற காரியமாயிருந்தாலும் பில்லை செக் பண்ணுங்கோ.

November 15, 2008

வாரணம் ஆயிரம்

220 ரூபாய் கொடுத்து டிக்கெட் புக் பண்ணிட்டோமேங்கற குற்ற உணர்ச்சியும், பப்பு @ சஞ்சய் இல்லாம போறோமேங்கற பீலிங் ஒரு பக்கம். காலைல வேற அதிஷா பிளாக்ல நல்லால்லைன்னும், அருண் ஒகேங்கற மாதிரியும் எழுதிருந்தாங்க. எனக்கென்னவோ படம் நல்லாருக்குன்னு சொல்ல முடியல. ஆனா கண்டிப்பா நல்லாயில்லைன்னு சொல்லமாட்டேன். மூணே வார்த்தைக் கதையை (அப்பா மகன் உறவு) மூணு மணிநேரம் சொல்லியிருக்காங்க. சில இடங்களைத் தவிர படம் பார்க்குற மாதிரி தான் இருக்கு.
#டில்லியில் ஆங்கிலமும் ஹிந்தியும் பேசுவதை ஒற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் தேவையில்லாத இடங்களிலும் ஆங்கில வசனங்கள். அப்பா சூர்யாவும் தங்கை கேரக்டரில் வருபவரும் பீட்டரில் புரள்கிறார்கள். அதுவும் தங்கச்சி ஓவர் டோஸ். நைனா செத்துட்டாருன்னு சொல்லாம "he is no more" ன்னு சொல்லும்போது செவில்ல அடிக்கனும் போல் இருந்தது.


#டில்லிக் காட்சிகள் சவசவன்னு இருக்கு.


#சூர்யா திவ்யா ரொமான்ஸ் காட்சிகளும் திராபை. கிளைமாக்ஸ்க்கு வாங்கடான்னு கத்தனும் போல இருந்தது.


முதல்பாதி சூப்பர். இரண்டாவது பாதியில் யானை அங்கங்கு நொண்டுகிறது.


சூர்யா, பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவு தான் பலம்.


மொத்தத்தில் வாரணம் ஆயிரம் - பலம் போதவில்லை.

November 14, 2008

நீ இல்லாம கஷ்டமா இருக்குடா

ஏதோ எழுதுனம்னு வந்து உட்கார்ந்துட்டேன். ஆனா கமல் சொல்ற மாதிரி வார்த்தையே வரலை. என்னத்த சொல்ல. கடந்த ஒன்றரை வருஷமா அவன பிரிஞ்சு ஒரு நாள் கூட இருந்ததே இல்லை. வீட்டுக்கு வந்து எங்க பார்த்தாலும் அவன்தான் தெரியுறான். நீ இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்குடா செல்லம். இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்தேன்னா அழுதுடுவேன்னு நினைக்கிறேன். கலைக்க நீயில்லாமல் மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள், உன் உச்சாவின் ஈரம் படாமல் காய்ந்த தரைகள், நீ இல்லாத தைரியத்தில் தரையில் கிடக்கும் கேபிள் வயர்கள், உன்னால் கிழிக்கப்படாத நாளிதழ்கள், மேலேறி குதிக்க நீ இல்லாததால் தூசி படர்ந்திருக்கும் சோபா திண்டுக்கள் என வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளும் உன்னைத்தான் தேடுகின்றன.எல்லாம் எங்கம்மாவால் வந்த வினை. குழந்தை நான் இல்லாமல் இருந்து பழகனுமாம். ரெண்டு நாள் என்கிட்டயே இருக்கட்டும்னு என்னை மட்டும் தாம்பரத்திற்கு துரத்திட்டாங்க. குழந்தை ஞாயிறு காலைதான் வருவான். அய்யோ ஒரு மணி நேரமே ஒரு யுகம் மாதிரி போச்சே. இன்னும் ஒரு முழுநாளை எப்படி ஓட்டப்போரேனோ?நீ இல்லாம கஷ்டமா இருக்குடா:(

November 3, 2008

Cheers to Cedars

Last saturday ended up in home itself. Since Senior and Junior were a bit tired due to cold i surrendered my day in the kitchen. Sunday we planned for a good lunch. It was time since we tried a new cuisine and we wanted to do it now. We decided to check out Cedars in Kotturpuram.

When i called them up i was quite disappointed to know that they have only weekend Brunch Buffet(I'm a bit hesitant on buffet when it comes to an exclusive cuisine). But the food was excellent. Cedars is an exclusive middle eastern (Lebanese, more specifically) cuisine restaurant. They also serve french. The waiters are very friendly and they make sure that u r comfortable.


We started with fresh papaya juice and nut crusted cottage cheese. The starter was too good and i comitted sin by having a lot. Penne Basilico was just average. To my surprise they served a more dishes on the table. We had some excellent pancakes, french toasts. To mention in specific the Falafel served with pita breads were too good. Other than this the mix pepper bake, cream of garlic in olive oil and most importantly the hummus, corn and pepper salad were very delicious. The heavy meal ended up with a superb dessert named Mouhallabieh (errrr. how to call it??) made of milk and corn flour.


Location : Gandhi Mandapam Road, Kotturpuram (Opposite to Adayar Villa)

Cuisine : Flavours of mediterranenan

Note : Only brunch buffet during weekends

Cost : Brunch buffet costs Rs. 375 + taxes. I think the food makes u think that the prices are reasonable(Though, it wont hurt the customers if they reduce the prices:)).

November 1, 2008

வார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு

காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தேன். இரண்டாவது மாடியில் தங்கியிருக்கும் பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளிடமோ அவள்கூட தங்கியிருக்கும் மற்ற பெண்களிடமோ இதுவரை பேசியதில்லை. என்ன வேண்டும் என்று கேட்பதற்க்கு முன் அவளே பேச ஆரம்பித்தாள். முதல் வார்த்தைக்குப்பிறகு எனக்கு எதுவுமே காதில் விழவில்லை. எதுவுமே சொல்லாமல் பேயறைந்தால்போல் நான் வாசலிலேயே நின்றுக் கொண்டிருந்தது அவளுக்குக் குழப்பத்தை தந்திருக்கக்கூடும். என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் நின்றுவிட்டு அவள் மறைந்தாள்.பொத்தென்று சோபாவில் அமர்ந்த போது லேப்டாப்பில் தலையை புதைத்து வைத்திருந்த லைசன்ஸ் ஹோல்டர் என்னாச்சுன்னு கேட்டார். பதில் வாராதிருக்கவே திரும்பவும் அதே கேள்வி. இம்முறையும் நோ ரெஸ்பான்ஸ் என்பதால் லேப்டாப் மடி சிறையிலிருந்து விடுதலை ஆனது. நேரே கண்ணாடி முன் சென்று நின்றேன். தலைமுடியை சரி செய்துக்கொண்டேன். எனது செய்கைகள் அவருக்கு கவலை அளித்திருக்கக்கூடும். என்னதான் ஆச்சு ஏன் இப்படி நடந்துக்குற எனக் கேட்டார். பதில் சொல்லவே பிடிக்கலை. இது வேலைக்கு ஆகாது என்று திரும்பவும் லேப்டாப் சிறை சென்றது. இதற்கு மேலும் ரெஸ்பான்ஸ் வரலைன்னா மனுசன் எஸ்ஸாயிடுவார்ங்கற பயத்துல வாயைத் தொறந்தேன்."கல்யாணம் ஆனபோது எப்படி இருந்தேனோ அப்படியே தானே இப்பவும் இருக்கேன்?""உம்""கேட்டதுக்கு பதில் சொல்லு""உம் உம்""என்னைப் பார்த்தா மிடில் ஏஜ்டு லேடி மாதிரி தெரியுதா?""என்னக் கேட்ட?""என்னப் பார்த்தா என்ன ஏஜ்னு சொல்லலாம்"குழப்பமாய் "இப்போ எதுக்கு இந்த கேள்வி?""அவ என்ன வாடி போடின்னு கூட சொல்லிருக்கலாம்.""சரி விடு. இதெல்லாமா சீரியஸா எடுத்துப்பங்க??""அதெப்படி. எனக்கு இன்னும் 25 வயசுகூட ஆகல. ஒரு குழந்தை இருந்தா அப்படி சொல்லிடறதா?"(இதுக்குமேல போச்சுன்னா நம்ம தலை உருள ஆரம்பிச்சிடும்னு ஆள் எஸ்கேப்).சாயந்திரம் அவளைப் பார்த்தா தெளிவா சொல்லிடனும். இன்னொரு தடவை அப்படி சொல்லாதேன்னு. என் பேரை சொல்லியே கூப்பிடு. ஆண்ட்டின்னு கூப்பிடாத.டிஸ்கி : சத்தியமா இது என்னோட சொந்த அனுபவம் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும்.