ம்ம் என்ன எழுதலாம்? (நீ எது எழுதினாலும் மொக்கையாதான் இருக்கப்போகுது)
பிளாக் எழுத வந்த கதைய சொல்லலாமா? (திராபை மூவின்னு கிழிச்சு தொங்கவிட்ருவாங்க பரவாயில்லையா?)
சமூக அக்கறைக் கொண்ட பதிவு ஏதாவது (ஹூக்கும்)
பதிவர்கள் யார்கிட்டவாவது நம்ம பிளாகப் பத்தி எழுதச் சொல்லி கேட்டுப்பார்க்கலாம் (செல்ஃப் டேமேஜே மேல்)
சரி எதுவுமே எழுதத் தோணல. நன்றி மட்டும் சொல்லிடலாம். (இது தான் பெஸ்ட்)
ரொம்ப நேரமா யோசிச்சதன்??!! விளைவு தான் மேல நீங்க படிச்ச டயலாக்.
2007ல எழுத ஆரம்பிச்சு இப்பதான் 100வது பதிவு. குழந்தை, நேரமின்மை என்ற காரணங்களோடு சரக்கில்லை என்பது இன்னொரு முக்கியமான காரணம். பதிவுலகம் நிறையப் பாடங்களைக் கற்றுகொடுத்திருக்கிறது. நூறாவது பதிவாக ஸ்பெஷலாக எழுத எதுவும் தோணவில்லை. அதோடில்லாமல் வீட்டில் நிறைய வேலைகள். சரி நன்றி சொல்லி பதிவு போட்டுடலாம்ன்னு வந்துட்டேன். முதல்ல கொஞ்சமே கொஞ்சமாய் நேரத்த போனாப்போவுதுன்னு கொடுக்கிற ஜூனியருக்கு நன்றிகள் பல. மனிதர்களின் மனங்களைப் படிக்க உதவும் என் கணவருக்கு அடுத்தது. அப்புறம் போனாப்போகுதுன்னு என் இம்சையப் படிச்சு பாராட்டுற??!! உங்களுக்கும் டேங்யூ. டேங்யூ. இன்னும் நீண்ட நாட்களுக்கு எல்லாரையும் இம்சிக்கனும்னு ஆசையாயிருக்கு. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.......
Showing posts with label நூறாவது பதிவு. Show all posts
Showing posts with label நூறாவது பதிவு. Show all posts
June 15, 2009
Subscribe to:
Posts (Atom)